கதரும் மில்லும்; காந்தி நடத்தும் நாடகம்

???????????????????????????????தர் துணி, மில் துணி இவை இரண்டில் எது சவுக்கியமான விலைக்குக் கிடைக்கிறதோ, அதை அணிவதால் தான் ஏழைகள் தற்காலப் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க முடியுமென நாம் கருதுகின்றோம். ஆகையால்தான் கதரை விட மில் துணிகளை ஆதரிப்பது நலமெனக் கூறுகின்றோம்.

காங்கிரஸ் மில் துணிகளையும் ஆதரித்து, கதரையும் போற்றி வருவதிலிருந்தே கதர் ஒழிந்துவிடுமென்பது விளங்கவில்லையா? இன்னும் சில காலங்களுக்குப் பின்னால் எல்லோரும் செய்யப் போவதை சுயமரியாதை இயக்கம் இன்றே செய்து முடித்துவிட வேண்டுமென்று கூறுகின்றது.   ……………………………………………………………

ஆகவே இந்தியாவை ஓர் நாடக மேடையாக்கி தோழர் காந்தி அவர்கள் கதாநாயகனாய் சாத்வீக வேடந்தாங்கி, கதர், மதுவிலக்கு, சத்தியாக்கிரகம் என்னும் பாட்டுக்களைப் பாடி வைதீகத் திரை மறைவில் நின்று கொண்டு விடுதலை நாடகம் நடிக்கின்றார். இந்தப் பொருத்தமற்ற வேடத்தைக் கண்டு காந்திக்கு ஜே போட ஆரம்பித்து விட்டனர். இதுதான் காங்கிரசின் இன்றைய நிலை.

-பெரியாரின் தளபதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி.

1931 ஆம் ஆண்டு திருவாரூரில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேசியதின் சிறிய பகுதி.

தொடர்புடையவை:

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

பூணூல் Vs துண்டு – பார்ப்பனியம் Vs திராவிட இயக்கம்

மனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை

manoramaதிரைப்பட நடிகர்களைப் பற்றி அதிகம் சொல்கிறீர்கள். நடிகைகளைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லையே?

-சி.பாக்யலட்சுமி, சென்னை.

சொல்லியிருக்கிறேன். மீண்டும் அதை அழுத்தத்தோடு சொல்வதற்கான வாய்ப்பாக உங்கள் கேள்வியை பயன்படுத்திக் கொள்கிறேன். மனோரமா, ஒட்டுமொத்த நடிகர்களின் திறமையையும் ஊதி தள்ளிய நடிகை. உலகத் தரம் வாய்ந்த ஒரே இந்திய நடிகை.

ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில் போன்ற இந்தியாவின் சிறந்த நடிகைகளை விடவும் சிறந்த நடிகை. இந்த இருவரிடமும் மேற்கத்திய நடிகர்களின் தாக்கம் அல்லது மேற்கத்திய மேனரிசங்கள் நிறைந்திருக்கும். திறமை வாய்ந்த இயக்குநர்கள் மூலம் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியவர்கள்.

ஆனால் மனோரமா ஒரு சுயம்பு. மிக மட்டமான இயக்குநர்களிடமும், கதாநாயகி அந்தஸ்த்தில் இல்லாதபோதும் தனக்கு வழங்கப்பட்ட குறைந்த வாய்ப்பில் நிறைவாக செய்தவர். மொழியை அவர் பயன்படுத்திய லாவகம், அவரின் உடல் மொழி, முழுக்க முழுக்க சுயமான ஒரு தமிழ் அடையாளம்.

அதுபோல் கதாநாயகிகளில் ஸ்ரீதேவி. எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் கைதேர்ந்த முழுமையான நடிகை.

திறமையான கதாநாயகர்கள் கூட ஸ்ரீதேவியுடன் நடிக்கும் போது நிறைய குறைபாடுகள் உள்ளவர்களாக தெரிவார்கள். குறிப்பாக கமல்ஹாசன்; ஸ்ரீதேவியின் முன் அவரின் நடிப்புத் திறமை, திக்கித் திணறுவதும் (சிப்பி இருக்குது.. முத்து இருக்குது.. பாடல் காட்சி) – ஸ்ரீதேவியின் நடன நளினத்தின் முன் கதாநாயக அந்தஸ்தோடு கமல் ஆடுகிற நடனம்,  ஒரு கோமாளி கூத்தைப்போல் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை. (வாழ்வே மாயம் படத்தில் “தேவி.. ஸ்ரீதேவி..” “மழைக்கால மேகமொன்று..” பாடல் காட்சி)

‘மூன்றாம் பிறை’ படத்திற்கு ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது கிடைக்காமல், கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் விருது  கிடைத்தது. இது சிவாஜிக்கு  சிறந்த நடிகர் விருது தராமல், ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் ‘சிறப்பாக நடித்ததற்காக’ எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது தந்தது போன்ற தமாசு.

Sridevi

வழக்குரைஞர் கு. காமராஜ் நடத்திய ‘சமூக விழிப்புணர்வு’2007 செப்டம்பர்   மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து…

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

தமிழ் சினிமாவின் முதல் நவீன நடிகர்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

ஐ.டி. கம்பெனி ஊழியர்களும் டீக் கடை ஊழியர்களும்

teashopஐ.டி. கம்பெனிகளின் சம்பளத்தைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது, இவ்வளவு நாள் இந்திய முதலாளிகள் நம் தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு குறைவானது என்று?

-க.சத்தியமூர்த்தி, சேலம்.

உண்மையில் ஐ.டி கம்பெனிகள் தருகிற சம்பளம் குறைவானது. ஒப்பிட்டளவில் இதே வேலையை பார்க்கிற அமெரிக்கர், ஐரோப்பியர்களுக்குத் தருகிற சம்பளத்தில் பாதிதான் இந்தியர்களுக்குத் தரப்படுகிறது. இந்த குறைந்த சம்பளத்திற்காகத்தான் இந்தியர்களுக்கு அன்னிய நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை தந்தது கோடி கோடியாய் கொள்ளை அடிக்கின்றன.

கிராமப்புறத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கு, சென்னை துணிக்கடை ஒன்றில் வேலை கிடைத்தால், அது சிரமமான வேலையாய் இருந்தாலும் மாதச் சம்பளமும் நகர வாழ்க்கையும் அவருக்கு ஒரு அந்தஸ்தையும் மயக்கத்தையம் தரும் அல்லவா? அதுபோல் ஒரு மயக்கத்தில் இருக்கிறார்கள் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.

உலக தொழிலாளர்கள் அனைவருக்காகவும் எட்டு மணி நேர வேலை திட்டத்தை,  எந்த அமெரிக்க தொழிலாளர்கள் தங்கள் ரத்தத்தையும் உயிரையும் சிந்தி பெற்றுத் தந்தார்களோ? அதே அமெரிக்காவில் இருந்துதான் 12 மணி நேர வேலைத் திட்டம் உலகம் முழக்க பரவிக் கொண்டிருக்கிறது.

டீக் கடையில் வேலை செய்கிற தோழர், எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய சொன்னால், முடியாது என்று மறுத்துவிடுவார். முடியுமா, ஐ.டி. கம்பெனி ஊழியர்களால்? (ஐ.டி. கம்பெனில வேலை பாக்குற தீவிர கம்யுனிஸ்ட்டால் கூட முடியது. அவரு கம்யுனிஸ்ட் என்பதை காட்டிக்கொண்டால் வேலையில இருக்கவே முடியாது. அப்புறம்..)

*

வழக்குரைஞர் கு. காமராஜ் நடத்திய ‘சமூக விழிப்புணர்வு’2007 செப்டம்பர்   மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து…

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையவை:

அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?

துணிக்கடைகளை, நகைக்கடைகளை நகருக்கு அப்பால் மாற்ற வேண்டும்!

தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்

‘மெக்காலே’ வின் கல்வியும் ‘தினமணி’ யின் தகுதி, திறமையும்

macaulayந்தியக் கல்விமுறை மனப்பாடம் செய்யும் முறையாக இருப்பதும், மாணவர்களின் தனித்தன்மையை ஊக்குவிக்கும் முறையாக சமூக பொறுப்பை, எளிய மக்களின் பால் அக்கறையை ஏற்படுத்துகிற கல்வியாக இல்லாமல் இருப்பதும் பெரும் குறைதான்.

வெள்ளைக்காரர்கள் தங்களுக்கு குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காக கொண்டு வந்த கல்விமுறை இது. சரியாக சொல்ல வேண்டுமானால் அடிமைகளை உருவாக்க வந்த கல்விமுறை. பிறகு அந்தக் கல்வியில் எப்படி விடுதலை உணர்வை எதிர்பார்க்க முடியும்?

ஆனாலும், வெள்ளை மெக்காலே கொண்டு வந்த இந்த அடிமைக் கல்வியை; இன்னொரு கோணத்தில் புரட்சிகர கல்வி என்றும் அழைக்கலாம்.

குருகுலக் கல்வி, ஆதிக்க ஜாதிக்கார்களுக்கு மட்டும் கல்வி, பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்ட இந்திய இந்து சமூகத்தில், எல்லோருக்குமான ஒரே கல்வி என்று வந்தது மெக்காலேவின் கல்வி திட்டம்.

அதுவரை இந்து புராணங்களையும், பார்ப்பன ஆதிக்கத்தையும், ஜாதி வேறுபாட்டையும் நியாயப்படுத்தி வந்த கல்விமுறையிலிருந்து அறிவியல்  அடிப்படையில் வந்த மெக்காலே கல்வி முறையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் மெக்காலேவின் கல்விமுறை புரட்சிகரமானதுதான்.

ஆனாலும் குருகுலக் கல்வியை எப்படி பார்ப்பனர்கள் மட்டுமே படித்து, மற்றவர்களுக்கு படிப்பதற்கு தடை வித்திருந்தார்களோ, அதுபோலவே மெக்காலே கல்வி முறையிலும் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல், அதையும் சுற்றி வளைத்து அபகரித்தார்கள். இதிலும் ‘தனக்கு மட்டுமே’ என்று ‘பென்ஞ்சை’ தேய்த்தது பார்ப்பனியம்.

அதனால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு மெக்காலே கல்வி முறையை படிப்பதற்குகூட இடஒதுக்கிடு தேவைப்பட்டது.

அப்படி மூன்று தலைமுறைக்கு முன்பு படிக்க ஆரம்பித்த மக்கள், இப்போதுதான் தங்கள் கல்வியின் உயரங்களை தொட முயற்சித்திருக்கிறார்கள்

மற்றவர்களுக்கு படிக்க வாய்ப்பைத் தராமல், அப்படி மீறி படித்தால், நாக்கை அறுப்பேன், கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவேன் என்று மிரட்டிய பார்ப்பனியம்; ‘நாங்கள்தான் அதிகம் படித்தவர்கள்’ என்று கூச்சமில்லாமல் அலட்டிக் கொண்டதைப்போல், வெள்ளைக்கார கல்வித் திட்டத்திலும் தன் கணக்கை கூட்டிக் கொண்டே போனது.

பல நூற்றாண்டுகளாக நிறையப் படித்த பார்ப்பனப் பரம்பரையின் தகுதி, திறமைக்கான ரகசியம் இதுதான். இந்த தகுதி, திறமைக்கு வேட்டு வைக்க வந்தது இடஒதுக்கிடு.

அந்த இடஒதுக்கிடுக்கு வேட்டு வைக்க வந்தது தனியார் கல்வி.

‘தனியார் கல்விமுறையில் பணம் கொடுத்தால் குறைந்த மதிப்பெண் எடுத்தவன் மட்டுமல்ல, பெயிலானவன் கூட உயர்கல்வி படிக்கலாம்’ என்ற முறைக்கு ஆதரவு தெரிவித்தனர் இடஒதுக்கிடால் தகுதி, திறமை போய்விடும் என்று கூச்சல் போட்ட பார்ப்பனர்கள். காரணம் தனியார் கல்வி, இடஒதுக்கிடுக்கு எதிரானது என்பதினாலேயே. இதுதான் பார்ப்பனியத்தின் நீதி, நேர்மை, தகுதி, திறமை.

இப்படியான சூழலில், கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவந்த சமச்சீர் கல்வி முறையால், தனியார் கல்வி வேறுபாட்டை பள்ளிக் கல்வியில் குறைந்த அளவிலாவது குறைக்க முடிந்தது.

அதன் விளைவாக, முந்தைய கல்வியாண்டில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 86 சதவீதம் தேர்ச்சி அடைந்திருந்தார்கள். இந்தக் கல்வியாண்டில் அதைவிட 3 சதவீதம் கூடுதலாகப் பெற்று 89 சதவீதம் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதில் மகிழ்ச்சியானது இது மட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவிற்கு முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்று நிறைய மாணவர்கள் வந்திருப்தோடு;

சமூக அறிவியல், அறிவியல், கணக்கு இந்த மூன்று பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 87,739. சமூக அறிவியல் பாடத்தில் 38,154. கணிதத்தில் 29,905. அறிவியலில் 19,680. இதுபோக ஆங்கிலத்திலும் நிறைய மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.

(கடந்த ஆண்டு  15 ஆயிரம்.)

அது மட்டுமல்ல, முதல் இரு இடங்களை பிடித்த 61 பேரில் 58 பேர் பார்ப்பனரல்லாத மாணவர்கள்.

இது போதாதா பார்ப்பனர்கள் புரட்சிகர வேசம் போடுவதற்கு.

சங்கரமட சாயலில் அரசியல் மனோபாவம் கொண்டவர்கள், பெரியாரை திட்டுவதற்காகவே திடீரென்று கம்யுனிஸ்டு ஆனவர்கள் அல்லவா? அவர்களுக்கு அவதாரம் எடுப்பதற்கு சொல்லியா தரவேண்டும்.

மெக்காலேவின் வெள்ளைக்கார கல்வியை நன்றாக படித்து பட்டம் பெற்று ஆங்கில அறிவால் வெள்ளைக்காரனுக்கு எதிரான ‘விடுதலை உணர்வும்’ இன்னொரு புறம் அதிகாரத்தில் வெள்ளைக்காரனோடு ஆட்சியில் ‘பங்கும்’ பெற்ற பார்ப்பனர்கள்; அதே கல்வியை படிக்க பார்ப்பனரல்லாதவர்கள் இடஒதுக்கிடு கோரிக்கை வைத்தபோது, ‘ச்சீ  வெள்ளைக்காரனுக்கு அடிமை வேலை பார்ப்பவர்கள், தேச துரோகிகள்’ என்று புரட்சியாளர்களாக வெகுண்டெழுந்ததைப்போல்,

பார்ப்பனரல்லாத மாணவர்களின் இன்றைய கல்வியெழுச்சியைப் பார்த்து, ‘ச்சீ.. இது ஒரு கல்வி.. இந்தக் கல்விமுறையையே மாற்ற வேண்டும்’ என்று சமூக அக்கறையுடன் பொங்கி இருக்கிறது தினமணி.

பெரியாரின் தளபதிகளில் ஒருவரான குத்தூசி குருசாமி, ‘மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு’ என்று இந்து நாளிதழை குறிப்பிடுவார். அதுபோல் ‘அம்பத்தூர் அய்யரான’ தினமணி, தன் தலையங்கத்தில் இப்படியெல்லாம் சபித்திருக்கிறது:

“மாணவர்களே, தங்களுக்குள் பாராட்டிக்கொள்ளும்போது, “எப்படிடா? எனக்கே தெரியவில்லை!’ என்று பூரிப்பார்கள் என்றால், எங்கேயோ பிழை இருக்கிறது என்பதைத்தான் உணர முடிகிறது.”

…. .. .. …………

எல்லா மாணவர்களும் தேர்ச்சிபெற வேண்டும், எல்லாரும் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக வினாத்தாளை மிக எளிமையாக அமைப்பதும், மாதிரி வினாத்தாளில் பயிற்சி கொடுத்துவிட்டு அதையே மீண்டும் பொதுத்தேர்வில் எழுதச் சொல்வதும், மாணவர்களின் மதிப்பெண்களை 90 சதவீதத்துக்கும் மேலாக உயர்த்த வேண்டுமானால் உதவலாமே தவிர, மாணவரின் அறிவுத்திறனை அறிய உதவாது. இப்படி ஒரு தேர்வை நடத்துவதைக் காட்டிலும் தேர்வு நடத்தாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி அளித்துவிடலாம்.

 கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெறுவதுகூட சில மாணவர்களால்தான் முடியும் என்றிருந்த காலம் ஒன்று உண்டு. விடை சரியாக இருந்தால்கூட முழு மதிப்பெண் வழங்கமாட்டார்கள்.”

…. .. .. …………

அள்ளித் தரப்பட்ட மதிப்பெண்களால் மகிழ்ச்சி அடைவது பேதைமை!

 கல்வி இலவசமாக இருக்கலாம்; இருக்க வேண்டும். ஆனால் தேர்ச்சி என்பது கடுமையாகத்தான் இருந்தாக வேண்டும். தேசிய அளவில் மேற்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அதிக மதிப்பெண்கள் உதவலாமே தவிர தேர்வுபெற உதவாது. தரம் குறைந்த கல்வியால் தங்கள் குழந்தைகளுக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தலைகுனிவுதான் ஏற்படும் என்பதை ஏனோ யாரும் உணர்வதாகவே தெரியவில்லை.”

தினமணியின் இந்தக் கோபத்தை வரிக்கு வரி நாம் கேள்விக்குட்படுத்தி விசாரிப்பதைவிட, ஒரே ஒரு எதிர் கேள்வி கேட்டு அம்பலப்படுத்தலாம்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கே ‘அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது தமிழ்ச் சமூதயாத்திற்கே தலைக்குனிவு’ என்று எழுதுகிற தினமணி;

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் – 98.76 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதை இந்தியாவிற்கு ஏற்பட்ட அவமானம் என்று ஏன் எழுதவில்லை?

அதில்தான் இருக்கிறது தினமணியின் தகுதி, திறமைக்கான ரகசியம்.

*

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை  கு. ராமகிருட்டிணன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக ‘பெரியார் பாதை’ இதழுக்கு 11.5.2013 அன்று எழுதியது.

தொடர்புடையவை:

மழலையர் கல்வியை தடை செய்ய வேண்டும்!

தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ

சமச்சீர் கல்வியா? சர்ச் பார்க் கல்வியா?

பெண்கள் இருக்கைகளை மாற்றுங்கள்; மாணவர்கள் உயிரை காப்பாற்றுங்கள்

தமிழகரசின் பள்ளி நேர மாற்றம்; மாணவர்களை மயக்கமடைய செய்யும்

ஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..

‘இந்த ரணகளத்திலேயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேட்குது’; தமிழக அரசின் கல்வித் திட்டம்

தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்

தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

 பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

ஆனந்த விகடன் ஜாதி எக்ஸ்பிரஸ்: சின்ன விளக்கம் பெரிய திருத்தம்

1003443_10151472126886104_1120411068_n

ஜாதி வெறியர்கள் இந்தப் படத்தில் காட்டுவது போன்று கொடூரமான முகத்தோடு இல்லை. அவர்கள் பார்ப்பதற்கு சாதுவாக நன்கு படித்த டாக்டர்களாக இருக்கிறார்கள். கண்ணில் ஞானஒளி தெரிகிற சங்கராச்சாரியார்களாக இருக்கிறார்கள்.

கெட்டவர்கள் என்றால் அவர்கள் வேட்டி, லுங்கி கட்டிக் கொண்டு கறுப்பாக இருப்பார்கள் என்பது கால காலமாக நம் பொதுப்புத்தியில் ஊறிப்போன சிந்தனை.  ‘சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’  ‘அழகா இருக்கிறவன் அறிவாளியா இருப்பான்’ என்பதுபோல், ஆதிக்க  ஜாதிக்காரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள், பணக்காரர்கள்  பண்பாளராக இருப்பார்கள் என்பதும்.

ஜெயேந்திரன் கொலை செய்த பிறகும், பல பணக்காரர்கள் தன் மனைவியை தந்தூரி அடிப்பில் வேகவைத்து கொன்ற பிறகும்கூட ஊடகங்கள் ஆதிக்க ஜாதிக்காரர்களை, பணக்காரர்களை  கொடூரத்தின் குறியீடாக கார்ட்டூன் வரைவதில்லை. ஜோக்கும் வெளியிடுவிதில்லை.

பஸ்சில் பொது இடங்களில் திருடுபவர் டிப்டாப்பாக உடையணிந்து இருந்தால், லுங்கி கட்டி இருப்பவரை சந்தேகப்படுவதும், அவர்தான் திருடினார் என்று அடிப்பதைப்போலதான் ஊடகங்கள் நடந்து கொள்கின்றன.

எளிய மக்களின் பண்பாடு, உடை, உருவம் அநீதிகளின் குறியீடாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதுவேதான் தலித் மக்களுக்கு எதிரான குறியீடுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

எளிய மனிதர்களைப் பற்றிய இந்தப் பார்வை ஜாதிய வர்க்க கண்ணோட்டம் கொண்டது. இதை பலர் திட்டமிட்டு செய்யவதில்லை. திட்டமிட்டு ஆதரிப்பதும் இல்லை.

ஏனென்றால் அது அவர்களின் இயல்பாகவே இருக்கிறது. அதனாலேயே அது அவர்களுக்கு தவறாகவும்   தெரிவதில்லை.

தொடர்புடையவை:

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

ஊடகங்கள்; ஆண்களின் சிட்டுக்குருவி லேகியங்கள்

 பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் வளர்த்து ஜாதி காத்தார்

Daugherty_17b

சுவடிகள் இணைக்கப்பட்டது  ‘நூலால்’. எந்த நூல்? அதாங்க அந்த ‘நூல்’தான்

*

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் பரிமள ராசன் தனது  facebook ல்  ஜூலை 4 ம் தேதி தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் தமிழ் மரபு பற்றி குறிப்பிட்டு இருந்ததை விவாதத்திற்காக வெளியிட்டிருந்தார். அதையும் அதில் நான் எழுதியதையும் சேர்த்து வெளியிடுகிறேன்.

பரிமள ராசன் :

‘தமிழ் மரபு’ குறித்து தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் கூறுகிறார்,
‘ஏழை வேலைக்காரனிடம், “சோறு தின்றாயா?” என்று கேட்பது மரபு.
கனவானிடம் இப்படிக் கேட்பது மரபன்று.
“போஜனம் ஆயிற்றா? நிவேதனம் ஆயிற்றா?” என்பதுதான் தமிழ் மரபு.’

வே. மதிமாறன் :

சோறு தமிழ்ச் சொல். இன்னும் சரியாக சொன்னால் உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட மக்களின் சொல். அவர்கள் சாதம் என்கிற சொல்லை பயன்படுத்த மாட்டார்கள்.
சாதம்,  பிரசாதம் என்பதின் தொடர்ச்சி. அதுவேதான் போஜனம். இவைகள் எல்லாம் சமஸ்கிருதம்.

தமிழ் அல்லாத இந்த வார்த்தைகளை பார்ப்பனர்களும் பார்ப்பன மனோபாவத்தில் இருக்கிற பிள்ளைமார்களும் முதலியார்களும் செட்டியார்களும்தான் பயன்படுத்தவர். இவர்கள் தங்கள் வீடுகளில் ‘சோறு’ என்று சொல்ல மாட்டார்கள். ‘சாதம்’ என்றே சொல்வார்கள்.

//கனவானிடம் இப்படிக் கேட்பது மரபன்று.// என்று தாத்தா குறிப்பிடுகிற கனவான்கள் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிக்காரர்கைளயும்தான்.
//‘ஏழை வேலைக்காரனிடம், “சோறு தின்றாயா?” என்று கேட்பது மரபு.// ஏழை வேலைக்காரர்கள் என்பது தாழ்த்தப்பட்ட மக்கள்.

தாத்தா ஜாதி வேறுபாடுடன் மட்டுமல்ல வர்க்க வேறுபாடுடனும் தமிழ் சேவை செய்திருக்கிறார்.

ஆனால் பொதுவாகவே மலையாளிகள் ‘சோறு’ என்கிற தமிழ்ச் சொல்லே பயன்படுத்துகிறார்கள்.  ‘ஊண்’ என்கிற தனித் தமிழ்ச் சொல்லை முதன்மை படுத்தி ‘சாப்பிட்டாச்சா’ என்பதை ‘ஊணு கழிஞ்சோ’ என்று பேசுகிற முறையும் மலையாளிகளிடம் இருக்கிறது.

ஆனால் ‘தமிழர்கள்’ என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள்தான், “போஜனம் ஆயிற்றா?” என்கிற தமிழ் விரோத மொழியான சமஸ்கிருதத்தை பயன்படுத்துவதையே  ‘தமிழ் மரபு’ என்கிறார்கள்.

அது மட்டுமல்ல உ.வே.சா. தன்னிடம் தமிழ் படிக்க வந்த ஒரு பார்ப்பனரல்லாவருக்கு ஜாதியின் காரணமாக தமிழ் சொல்லித் தர மறுத்தார். ஆனால் அவர் மட்டும் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்தார்.

அது பற்றி வ.உ.சி என்று நினைக்கிறேன், ‘நீங்க மட்டும் பார்பனரல்லாதவரிடம் தமிழ் படிக்கலாமா?’ என்று கேட்டார்.

சுதந்திரப் போரட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு ராஜ துரோகியாக, அரசு விரோதியாக வ.உ.சி கடும் சிறையில் இருந்தபோது திருக்குறளின் அறத்துப்பாலுக்கு உரை எழுதினார். அதில் ஏற்பட்ட சந்தேகத்தை கேட்பதற்காக அவர் உ.வே.சா விற்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தை உ.வே.சா வெள்ளைக்கார கவர்னரிடம் கொண்டு போய் கொடுத்து ‘நான் இதற்கு என்ன செய்வது?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த கவர்னர் ‘பதில் எழுதுங்கள்’ என்று சொன்ன பிறகே பதில் எழுதினார்.

தாத்தா எவ்வளவு உஷார்..?

தொடர்புடையவை:

 பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

சென்னை தமிழா.. பார்ப்பனத் தமிழா; எது இழிவானது அல்லது உயர்வானது?

நாறும் தமிழ் மூச்சும் மணக்கும் சமஸ்கிருத‘வாயு’த் தொல்லையும்’ இதுதான் ஞானக்கூத்து!

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

Salesman

இளவரசன் – திவ்யா திருமணம். தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பா.ம.க வன்னிய ஜாதி வெறியர்களின் தாக்குதல்.

அதே கும்பல் மற்றும் நீதிமன்றம், ஊடகங்கள் இளவரசனிடமிருந்து திவ்யாவை திட்டமிட்டு பிரித்தனர். அதன் தொடர்ச்சியாக இளவரசனின் மரணம்.

இவ்வளவு நடந்த பிறகும்கூட இதை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னிய ஜாதி வெறியர்களின் தாக்குதலாக கண்டிக்காமல்,

‘இது காதலுக்கு ஏற்பட்ட பின்னடைவு’. ‘ஜாதி காதலர்களை பிரித்துவிட்டது’ ‘காதலர்கள் நிம்மதியாகவே வாழ முடியாதா?’ ‘‘திவ்யா இனி என்ன செய்யப் போகிறார்?’ ‘உன்னத காதலின் முடிவு’ என்று சோக ரசம் சொட்டும் சுவாரஸ்யமான காதல் கதையாகவும்,

இளவரசனின் கடிதத்தை வைத்துக்கொண்டு,

‘திவ்யா உனக்கு ஒண்ணு தெரியுமா? நீ என்னோட எல்லா விஷயத்திலும் சேர்ந்திருந்த! ஆனா இப்போ நீ என் கூட இல்ல… ரொம்ப கஷ்டமா இருக்குடா… என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா என்னை மன்னிச்சிடு …’ என்று இளவரசனின் மரணத்தை வெறும் காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையாக திசை திருப்புகிற தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளும், அந்த பத்திரிகையின் செய்தியையே தன் செய்தியாக இணையத்தில் பரப்பி, பத்திரிகை நிர்வாகத்திடம் நல்ல பெயர் பெறத் துடிக்கிற பத்திரிகையாளர்களும்.. ச்சீ என்ன பிழைப்பு இது?

இதை விட மோசமாக,

‘பிராமணர்கள் சிறப்பானவர்கள், இந்து மதம் சிறப்பானது, பகவத் கீதை கருத்தே ஜாதி ஒழிக்க வழி, இது மனுவோ மனுவாதிகளோ (பார்ப்பனர்கள்) செய்த தப்பல்ல. பிராமண ஆழ்வார்களும், நாயன்மார்களும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சேவை செய்தவர்கள்’ என்று எழுதி, ஜூனியர் விகடனில் இன்னும் தொடர்ந்து எழுதுவதற்கு இளவரசன் பிணத்தின் மூலமாக ‘சீட்’  பிடித்து வைக்கும் தமிழருவி மணியன் போன்றவர்களின் இழிவான செயல்,

இவர்களையெல்லாம் பார்க்கும்போது, பா.ம.க.வும், காடுவெட்டி குருவுமே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

‘உத்தர்காண்ட் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம்’ என்ற பெயரில் அங்குள்ள பிணங்களிலிருந்த உடமைகளை கொள்ளையடித்தவர்களுக்கும்

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை, வெறும் காதல் பிரச்சினையாக சுருக்கி பிணத்தை வைத்து கல்லா கட்டும் இந்த ஊடகங்களுக்கும், அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளுக்கும் என்ன வித்தியாசம்?

*

ந்தக் கடிதம் இளவரசன் எழுதியதுதானா என்கிற சந்தேகம் இருக்கிறது. அதில் உள்ள கையெழுத்து பெண்ணின் கையெழுத்தைப் போல் இருக்கிறது. அதுபோக அந்தக் கடிதங்கள் சொல்ல வருகிற சாரம் ‘திவ்யா, இளவரசனை மறந்து விட்டார்’ என்பதையே அழுத்தி சொல்கிறது.

கடிதம் போட்ட மூடிச்சுகளே, இளவரசனின் மரணம் பற்றிய மர்மங்களை அவிழ்க்கும். எதிர்பார்க்காத சதிகளை அம்பலப்படுத்தும். விசாரனை நேர்மையாக நடக்குமாயின்.

தொடர்புடையவை:

காதல் – ‘ஜாதியை’ ஒழிக்காது!

வன்கொடுமை தடுப்புச் சட்டமும் பிற்படுத்தப்பட்டவர்களும்

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

world-war-z

ஹாலிவுட் படங்கள் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைய வளர்ச்சியடைய அதோட நம்பகத்தன்மையை அது இழந்துக்கிட்டு வருது. குறிப்பாக Computer Graphics (CG) வந்ததற்குப் பிறகு மிகப் பெருபான்மையான ஹாலிவுட் படங்கள் ‘விந்தை’ காட்டுகிற தன்மைக்கு மாறியிருக்கிறது. பார்வையாளனை முட்டாளாக கருதுகிற முறை அதிகமாகி இருக்கிறது.

ஸ்டுடியோவிற்கு உள்ளிருந்த சினிமா வெளி உலகத்திற்கு சிறகடித்ததும், பிறகு வெளி உலகில் இருந்த சினிமா, மந்திரவாதியின் குட்டி குடுவைக்குள் அடைப்பட்ட பூதம் போல் இப்போது ஒரு சின்ன கம்பியூட்டர் டப்பாவுக்குள் desk work ஆக சுருங்கிப் போனது.

இன்றைய அதி நவீன தொழில்நுட்ப சினிமாவாக இருக்கிற ஹாலிவுட் படங்கள் எவ்வளவு பிரம்மாண்டமான காட்சிகளை CG யில் உருவாக்கினாலும், 1959 ஆம் ஆண்டு வெளிவந்த Ben Hur  படத்தில் வரும் chariot race சை வெல்ல முடியவில்லை. காரணம் அதன் நம்பகத் தன்மை. Ben Hur – பிரம்மாண்டத்தின் உன்னதம். மிகைப்படுத்தப்பட்ட சில சம்பவங்களோடு திரைக்கதை இருந்தாலும் அது காட்சியாக்கப்பட்ட விதம் அதன் கேமரா கோணங்கள் முழுக்க முழுக்க மனிதர்களாலே செய்யப்பட்டது. அதுதான் இயந்திரங்களால் வெல்ல முடியாத பிரம்மாண்ட அழகிற்கு காரணம்.

ஒரு கீ போர்டு எழுப்புகிற வயலின் ஓசைக்கும், ஒரு வயலின் மேதை வாசிக்கிற  இசைக்கும் வித்தியாசம் உண்டு. அந்த வித்தியாசம் உணர்வுகளை உருக்குகிற உன்னதம். Ben Hur வயலின் மேதையால் வாசிக்கப்பட்ட இசை.

‘நடிகர்’ Arnold Schwarzenegger ; Conan the Barbarian  – Kindergarten Cop – True Lies – Terminator போன்ற படங்களில் தனது திடகாத்திரமான, பிரமாண்டமான உடலாலும் முறுக்கேறிய கைகளினாலும் காட்டிய வீரத்தை விட, சிரியா நாட்டை பூர்வீகமாக கொண்ட சிரியன் அமெரிக்கரான இயக்குனர் முஸ்தபா அக்காட் இயக்கிய Lion of the desert (omar mukhtar) திரைப்படத்தில் ஒமர் முக்தர் வேடத்தில் வயதானவராக நடக்க முடியாமல் குனிந்து நடந்த Anthony Quinn – கூன் முதுகில் இருந்தது வீரம்.

அழகியலை இயந்திரங்களால் உருவாக்க முடியாது. அதை மனிதர்களால்தான் உருவாக்க முடியும். கலை வடிவங்களில் யதார்த்தமோ – யாதர்தத்தை மீறியதோ (சாப்ளின்) எதுவுமே மனிதர்களின் நுட்பமே கலையின் நுட்பமும்.

ஆனாலும் அன்றைக்கு இல்லாத ஒரு சிறப்பு இன்றைய சினிமாவின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கிடைத்திருப்பது ஒலி. sound system. மிகத் துல்லியமான ஒலிப்பதிவு. யார் எங்கிருந்து பேசுகிறார்களோ அங்கிருந்து மொழி, அத்திசையிலிருந்து ஒலி. dolphy, dts போன்ற இந்த முறைகள் சினிமாவை மட்டுமல்ல, இசையையே இன்னொரு கட்டத்திற்கு உயர்த்தி இருக்கிறது. யதார்த்தமாக நம்பகத் தன்மையுடன் இனிமையாகவும் இருக்கிறது.

Dolphy Sound system முறையில் முதலில் வந்தப் படம் மெல்கிப்சன் இயக்கி நடித்த Brave Heart.  அந்தப் படத்தின் பல சிறப்புகளில்  Sound முதன்மையான சிறப்பு. அதற்காகவே Best Sound Editing  ஆஸ்கர்  விருதையும் வென்றது.

சரி.

World War Z – என்னுடைய மகன் கவின், இந்தப் படத்தை பார்த்தே ஆகணும்ன்னு அவன்தான் என்னையும் கூட்டிக்கிட்டுப் போனான். படம் வருவதற்கு முன்பே பத்திரிகைகள் பார்க்கச் சொல்லி பரிந்துரை செய்ததையும் சொன்னான்.

வெளியாவதற்கு ஒருவாரத்திற்கு முன் இந்த படத்தின் official trailer ரையும் You Tube ல் காண்பித்தான். சரி நல்லாதானே இருக்கு அப்படின்னு நானும் நம்பி அவன்கூட படம் வெளியான முதல் நாளே (21.06.2013) போனேன்.

பிரச்சினை தியேட்டர் உள்ளே போகும்போதே ஆரம்பிச்சிடுச்சி. 3 D  படம். அதனால் கண்ணாடி போட்டுப் பார்க்க வேண்டிய கட்டாயம். மூன்றாம் உலகப்போர் பற்றிய படம் என்ற நினைப்பில் நானும் பொறுத்துக் கொண்டு ஆர்வத்தோடு இருந்தேன்.

‘அந்தக் காலத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மனித வாழ்க்கையை மேம்படுத்திய விஞ்ஞானிகளை  மதவாதிகளோடு இணைந்து மக்கள் கல்லால் அடித்தார்கள். அது மக்களின் மூடநம்பிக்கை.

துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், அணுகுண்டையும் கண்டுபிடித்து மனிதர்களை கொன்று குவிக்கிறார்கள் நவீன விஞ்ஞானிகள். இந்த விஞ்ஞானிகளை கல்லால் அடிப்பதுதான் பகுத்தறிவு’ என்றோ நண்பர் ஒருவர் சொன்னது, இரண்டாம் உலகப்போரில் நடந்த அட்டூழியங்களை படிக்கையில் அது எவ்வளவு உண்மை என்பதை உணர்த்தியது.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜி படைகள் செய்த கொடுமைகளுக்கு இணையாக அல்லது அதைவிட கூடுதலாக, அமெரிக்கவும் செய்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் அமெரிக்கப் படைகள் வீசிய அணுகுண்டு மனிதகுல விரோதத்தின் சாட்சியாக ஜப்பானிய நகரங்கள் ஹிரோஷிமா, நாகசாகி இன்னும் நடுங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்த வரலாற்றுப் பின்னணியோடு, ‘மூன்றாம் உலகப் போர் ஒன்று நடந்தால் எப்படி இருக்கும் அதன் கொடூரம்?’ என்பதை இந்தப் படம் விளக்கும் என்று எதிர்ப்பார்த்து போனேன்.

ஆரம்பம் எல்லாம் அமர்க்களமாகத்தான் இருந்தது. அதுக்குப் பிறகுதான் கடிக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க. வெறிபிடித்த தெரு நாய்கள் போல் பாக்கறவனை எல்லாம் கடிக்கிறதுதான் உலகப் போர் என்று படம் சொல்லியது. மூன்றாம் உலகப்போர் நடந்தால் இப்படி கொடிய கிரிமிகளை பரப்புவதின் மூலம்தான் நடக்கும் என்பதுதான் அதன் செய்தி. இப்படி மனிதர்களை மனிதர்களே கடிக்கிறவர்களுக்கு பேரு Zombies. (World War Z என்கிற பெயரில் 2006 ல் வந்த நாவலைத்தான் படமாக்கி இருக்கிறார்கள். இது எனக்கு முதலிலேயே தெரியமா போச்சு.)

ஆனாலும் இதுவும் ஹாலிவுட்டுக்கு புதியது இல்லை. சில வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு படத்தின் பிரச்சினையும் இதே ‘கடி’ தொல்லைதான். அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஒரு வீட்டில் ஆரம்பித்து அந்தக் குடியிருப்புகள் முழுவதும் கடித்துக் கொண்டே இருப்பார்கள். கடித்து, கடித்து விடிவதற்குள் படம் முடிந்துவிடும்.

அடுக்குமாடி குடியிருப்பில் மட்டும் நடந்த கதையை உலகம் முழுவதும் நடப்பதுப்போல் விரிவாக்கி காட்டியிருக்கிறார்கள் World War Z ல். இதுக்கு அடுக்குமாடி ‘கடி’ யே எவ்வளவோ பரவாயில்லை.

எப்போதுமே ஹாலிவுட் படங்களில் அமெரிக்கா மீது கொடூரத் தாக்குதல்களை நடத்துவது, வேறு ஒரு நாடாக காண்பிக்க மாட்டார்கள். காரணம், அமெரிக்காவை தாக்குகிற அளவிற்கு எந்த நாடும் வலுவாக இல்லாததால், அதைப் பார்க்கிற அமெரிக்க பார்வையாளர்களுக்கு பரபரப்பு இருக்காது. வில்லன் கதாநாயகனைவிட சக்தி உள்ளவனாக இருந்து அவனை வீழ்த்துவதுதானே நாயகனுக்கு அழகு.

அதனால்தான் வேற்றுக் கிரகவாசிகள், டைனோசர், மனிதக் குரங்கு, அனகோண்டா போன்றவைகளோடும்; spiderman, badman போன்ற படங்களில் வருகிற விசித்திர வில்லன்களுடனும் இப்படியான கற்பனை எதிரிகளோடு கட்டிப் புரண்டு அவைகளை வெற்றிக் கொள்கிற கோமளித்தனங்களைத்தான் ஹாலிவுட்டில் படமாக்குவார்கள். அதைத் தான் அறிவாளி அமெரிக்க மக்களும் கைதட்டி ரசித்து மகிழ்கிறார்கள்.

ஏனென்றால், ஹாலிவுட் திரைப்படத்தில் அமெரிக்க நகரத்தை தாக்குகிற குரங்கு போல், நிஜத்தில் உலக நாடுகள் பலவற்றை தாக்குகிற குரங்குதானே அமெரிக்கா. அதை ரசிக்கிற மனோபாவம்தான் இதையும் ரசிக்க வைக்கிறது.

இந்தப் படமும் அதே பாணிதான். படம் ஆரம்பத்திலிருந்து முடியும்வரை ஒரே சம்பவத்தை வேறு வேறு சூழலில் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொரிய நாடுகளுக்கு எதிரான அரசியல் என்பதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சுவாரஸ்யத்திற்கு மட்டும் என்று படம் பார்க்க முயற்சித்தாலும் முடியவில்லை.  அப்படி ஒரு மரண மொக்கை. எனக்கு மட்டுமல்ல, என் மகனுக்கும் பிடிக்கல.

அது மட்டுமல்ல  Zombies கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை சரியில்லாத நபர்களின் நடை உடை பாவனைகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது பயம் வரவில்லை, பரிதாப உணர்வே எழுகிறது.  பரிதாபத்திற்குரியவர்களைக் கொடூரமாக கொல்கிற காட்சிகள் அதிர்ச்சியை தருகிறது.

இதுபோன்ற ‘அறிவியில்’ ரீதியான புரளிகள் பரவுமானால், சாலைகளில் சுற்றித் திரிகிற மனநிலை பாதிக்கப்பட்டவர்களை,  Zombies என்று பலர் அடித்தே கொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

இரவு படம் பார்த்துவிட்டு வரும்போது, கலிபோர்னியாவிலிருக்கும் (ஹாலிவுட்டுக்கு பக்கத்துலதான்) அன்பிற்கினிய நண்பன் சிவகுமார் போனில். மழை.. என்னால பேசமுடியில.. அதனால் காலையில் திரும்பவும் கூப்பிட்டான். ‘இரவு பேச முடியாததற்கு காரணம், உங்க ஊர்ல இருந்து இப்படி ஒரு கொடுமையான படத்தை எடுத்து விட்டுறுக்கானுங்களே அதனால்தான்…’ என்றேன்.

அதற்கு அவன், ‘அட நீ வேற.. படம் பரவாயில்லை. இங்க நிலமை அதவிட மோசம், Zombies வந்து கடிச்சிடப்போகுது என்று வீடு வாசல வித்து துப்பாக்கியும் நிறைய தோட்டக்களையும் வாங்கி வைச்சிக்கிட்டு, பல நாட்களுக்கான உணவோடு ‘வீட்டுக்குள்ள’ பல அமெரிக்கர்கள் பதுங்கி இருக்காங்க..’ என்றான்.

எத்தனை மனநிலைப் பாதிக்கப்பட்டவர்களை இந்த ‘பைத்தியக்காரர்கள்’ கொல்லப்போகிறார்களோ?

அங்கேயே இப்படியா?

பெரியார் ஒரு முறை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது ஒரு தொண்டர் வேகமாக பெரியாரிடம் வந்து ‘அய்யா, இந்த பேப்பர பாருங்க, என்ன அநியாயம்? ஜப்பான்ல கூட அலகு குத்திக்கிட்டு சாமியாடுறாங்களாம்’ என்று பதட்டப்பட்டிருக்கிறார்.

அதற்கு பெரியார், ‘ஏன் பதட்டப்படுறீங்க, உலகத்துல இருக்கிற ஒட்டுமொத்த மூடத்தனமும் தமிழனுக்கு மட்டும்தான் சொந்தமா?’ என்றாராம்.

தமிழனுக்கும் ஜப்பான்காரனுக்கும் மட்டுமல்ல, அமெரிக்காகாரனுக்கும்  சொந்தம். அதாங்க மூடநம்பிக்கை. கடவுள் இருக்கிற ஊர்ல எல்லாம் சாத்தானும் இருப்பான் என்பதுபோல, நிச்சயம் இறைநம்பிக்கையோடு தொடர்புடையதுதானே மூடநம்பிக்கையும்.

சாத்தானே இல்லை என்றால் யாராவது கடவுளா மதிப்பாங்களா?

ஆக, கடவுள் பாதி சாத்தான் பாதி கலந்து செய்த கொடுமை World War Zஇந்தப் படத்தோட கதையை ஒன்லைனில் சொல்லனும் என்றால், நிஜமாவே ஒரே ஒரு வரியில் சொல்றேன்,

படத்துல Zombies பலரை கடிக்குது. படமோ Zombie யை விட மோசமா படம் பாக்குறவன கடிக்குது.

எச்சரிக்கை:

படம் வெளியாவதற்கு முன்பே p.r.o வின் சிறப்பான கவனிப்பால் படத்தைப் பாராட்டி பத்திரிகையில் விரிவாக   தண்டோரோ போட்டவங்களை சும்மா விடக் கூடாது.

என்ன பண்ணலாம்?

Zombie ஆக மாறி கடிக்க வேண்டியதுதான்.

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

தமிழ் முகங்கள் Set property போல்தான் பாரதிராஜாவிற்கு…

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

சினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin