‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

tharamanai

ராம்-राम-Ram ன் அடுத்த படம் ‘தரமணி’ என்று (30-8-2013) நாளிதழில் விளம்பரம் வந்திருக்கிறது. அதில் இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு புதுமை நடந்திருக்கிறது.

தமிழ் ‘இந்தி’ ஆங்கிலம் மூன்று மொழிகளில் ‘தரமணி’ என்று அறிவித்திருக்கிறார்கள்.தமிழ் உணர்வு அதிகமானால் இப்படியெல்லாம் ஆகுமோ? ஒரு வேளை, தரமணி ரயில் நிலையத்தில் நடைபெறும் காதல் கதையோ?

‘ரயில் நிலையத்தில் எழுதப்பட்ட இந்தி தமிழுக்கு எதிரானது’ என்று திராவிட இயக்கத்தவர்கள் ‘ரயில் நிலைய இந்தி எழுத்தின் மேல்’, தார் பூசினார்கள். அவர்களை கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த் தேசியவாதிகள் இந்தி பெயரிலேயே படம் எடுக்கிறார்கள். (யதார்த்தம் முக்கியம் அமைச்சரே)

தமிழுக்கு எதிராக இருந்தாலும் யதார்த்ததை கை விடாத படைப்பாளர்கள், காதலை யதார்த்தமாக பார்ப்பதில்லை. அந்த விளம்பரத்தின் கடைசியில் சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம்காதல்என்ற அந்தப் படத்திற்கான ‘பஞ்ச்’ வந்திருக்கிறது.

‘சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி’ இதெல்லாம் ஒண்ணுதானே;. எதுக்கு தடகள ஓட்டம் போல் இத்தனைத் தாண்டல்?

‘காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் ‘காதல்’ இப்படி மட்டும் சொல்லியிருக்கலாம். ‘கா’ வுக்கு ‘கா’ எதுகை மோனையோடு எடுப்பா இருந்திருக்கும்.

சரி. அதென்ன சினிமா எடுக்கிற எல்லோரும் ‘காமத்தைத் தாண்டிய காதல்’ என்கிறார்கள்.

காமத்தை எதுக்கு தாண்டனும்? காமத்தை தாண்டி எதுக்கு காதலிக்கனும்? காமம் இல்லாமல் காதலிக்க முடியுமா? முடியுமென்றால், ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் ஏன் காதலிக்க வேண்டும்? எதாவது மரம், செடி, கொடியை காதலிச்சிட்டு போலாமே?

சஞ்சரிக்கும் தவம்காதல்’. தவம் சாமியார்தான் செய்வான். காதலர்களுக்கு எதுக்கு?

காமத்தைத் தாண்டினால், கத்தோலிக்க பாதிரியாகலாம். இந்து சாமியாராகலாம். ஆனால், அவர்களில் பலரே ரிவர்ஸ் கீர் போட்டு, காமத்திற்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.

கெழட்டு சாமியார்களுக்கே காமம் வேண்டும் எனும்போது, இளைஞர்களான காதலர்களுக்கு காமம் வேண்டாம் அல்லது காமத்தைத் தாண்ட வேண்டுமென்றால், இது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்.

காமம் தாண்டிய காதல், கல்யாணத்தில் முடிந்தால்; ஹனிமூனுக்கு போக முடியாது. பலனா ‘டாக்டர்’ சேலம் சித்த வைத்தியர் சிவராஜீடம்தான் போகனும்.

காமத்தைத் தாண்டி காதலித்தால் அது காதலை வாழ வைக்காது, கள்ளக் காதலைதான் வாழவைக்கும்.

காதல் எப்படி ஒரு கவுரமான உணர்வோ அதுபோலவே காமமும்.
காதலும்-காமமும் காதலர்களின் உரிமை. அதில் அடுத்தவர்கள் எட்டிப் பார்ப்பதும் தலையிடுவதும் ‘பஞ்சாயத்து’ செய்வதும் தான் அநாகரீகம்.

tharamanai

மத்திய அரசின் தமிழ் விரோதப் போக்கு
*

Facebook ல் நேற்று (30-8-2013) எழுதியது

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று?

கண்டிப்பா அவர பாராட்டிதாங்க ஆகனும்; சாதாரண விசயமா அவுரு பண்ணது?

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

OLYMPUS DIGITAL CAMERA‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று’- இந்த அபத்தமான வரிகள் தான் தங்கமீன்கள் படத்தை பார்ப்பதற்கு  பரிந்துரைக்கப்பட்ட வாக்கியம்.

அப்படியானால், ‘மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று’- இப்படியும் சொல்லாம்.

மகள்களை பெறாதா அப்பாக்களும், மகன்களை பெறாதா அம்மாக்களும், குழந்தையே இல்லாத தம்பதிகளும், திருமணமே ஆகாத ஆண்களும் பெண்களும்; முத்தத்தை முழுக்க காமத்திற்கு மட்டுமா பயன்படுத்துகிறார்கள்? இல்லை, அவர்கள் குழந்தைகளை முத்தமிடுவதே இல்லையா?

‘ குழந்தைகளை முத்தமிடுகிற எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரிந்திருக்கும் குழந்தையை முத்தமிடுவது காமத்தில் சேர்ந்ததில்லை என்று’– இதுதான் சரியானது.

குழந்தை ஒரு உன்னதம். முன்பின் தெரியாதவர்கள்கூட முத்தமிட முடியும் என்றால் அது குழந்தைகளை மட்டும்தான். மனித அன்பின் உச்ச வடிவம் குழந்தைகளை கொஞ்சுவதும் முத்தமிடுவதும். அந்த முத்தத்திற்கு பாலின பாகுபாடு கிடையாது. அது ஆணின் முத்தமும் இல்லை பெண்ணின் முத்தமும் இல்லை. அன்பின் முத்தம்.

உறவுகளை குறுகிய வட்டத்திற்குள் சுருக்கிப் பார்ப்பதால், மற்ற மனிதர்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்துகிற வடிவத்திற்கு மாறிவிடுகிறது.

ஆனாலும், முத்தத்தை அப்பா கொடுத்தாலும் ஆயா கொடுத்தாலும் குழந்தைகளுக்கு சுகாதாரக் கேடும் தொற்றுநோய் அபாயமும் ஏற்படும் என்பதால், முத்தத்தை குழந்தைகளிடம் பெறுவதோ தருவதோ தவிர்ப்பதே பகுத்தறிவு.

இதுபோன்ற அபத்தமான வாக்கியத்தை விட, ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்’ என்பது போன்ற கோமாளித்தனமான  ‘பஞ்ச் டயலாக்’ எவ்வளவோ பரவாயில்லை.

*

ங்கமீன்கள் திரைப்படம் வெளியாகாமல் இருப்பதைக் குறித்து நான் எழுத வேண்டும் என்று, எட்டு கேள்விகளும் மூன்று பரிந்துரைகளும் எனக்கு வந்தருக்கிறது.

தங்கமீன்கள் பற்றி ஏன் எழுத வேண்டும்?

‘அது தரமானப் படம். அதனால்.’

தரமானப் படம் என்பதை பார்த்து தெரிந்துக் கொண்டவர்களைவிட, கேட்டுத் தெரிந்து கொண்டவர்களே அதிகம். இதில் கூடுதலாக, விஸ்வரூபம் பற்றி நான் எழுதிய விமரசனம், ‘படம் வருவதற்கு முன்பே அதை பார்க்காமல் எப்படி எழுதலாம்?’ என்று கேட்டவர்களும் உள்ளடக்கம்.

‘தங்கமீன்கள்’ பார்க்காமல் அது நல்லப் படம் என்று முடிவுக்கு வந்ததற்கு, இயக்குநர் ராம் நடிக்காமல், இயக்குநராக மட்டுமிருந்து எடுத்த ‘கற்றது தமிழ்’ படம் காரணமாக இருக்கலாம்.

‘தங்கமீன்கள்’ படத்தை நான் ஆதரித்து எழுதாமல் இருப்பதற்குக் காரணமும், அதே ‘கற்றது தமிழ்’ தான்.

இப்போது போலவே; தரமான சினிமா விரும்பிகள், தமிழ் உணர்வாளர்கள், அறிவாளிகள் பரிந்துரையை நம்பி ‘கற்றது தமிழ்’ படம் பார்த்தேன்.

தமிழ் உணர்வாளர்கள், அறிவாளிகள், தரமான சினிமா விரும்பிகள் எனக்கு பொய் தகவல் சொல்லி ஏமாற்றி விட்டதாகவே படம் பார்த்தப் பிறகு உணர்ந்தேன்.

மனநிலை பாதிக்கப்பட்டவரை வைத்து திரைக்கதை பண்ணிய சிறந்த படங்களைப் பார்த்திருக்கிறேன்.
ஆனால், ஒரு திரைக்கதையே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், மிகுந்த எரிச்சலும், மன உளைச்சலுக்கும் உள்ளானேன், கற்றது தமிழால்.

சரி. தங்கமீன்கள் மிகச் சிறந்த படமாகக்கூட இருக்கலாம்.

இன்று தங்க மீன்கள் வெளியாகாததற்கு வருத்தப்பட்டவர்களில் யாரும் டாக்டர் அம்பேத்கர் படம் 10 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தற்கு வருத்தப்படவில்லை.

சினிமாவிற்கு வெளியில் இருப்பவர்களால்தான் அம்பேத்கர் படம் வெளியானது. அன்பிற்குரிய வழக்கறிஞர் சத்தியச் சந்திரன் நீதிமன்றத்தின் மூலம் அதை முடிவுக்கு கொண்டு வந்தார்.

சினிமாவில் இருக்கிற முற்போக்காளர்கள் யாரும் அதற்கு முயற்சி செய்யவில்லை. படம் வந்த பிறகும்கூட அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
அதுபற்றி எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல், தன் படம் வெளியாகாமல் இருப்பதை சமூகத்திற்கு ஏற்பட்ட சாபம் போல் பேசுகிறார்கள் முற்போக்கு இயக்குநர்கள். இவர்களுக்கும் கமல்ஹாசனுக்கும் விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

திரையுலகிலிருந்து எடிட்டர் லெனின் மட்டும் டாக்டர் அம்பேத்கர் படம் வெளிகொண்டு வரும் முயற்சிக்கு பெரிதும் உதவினார். அவரால் முடிந்த அளவிற்கு பணம் தருவதற்கும் தயாராக இருந்தார்.

ஜபார் படேல் இயக்கிய, டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் அம்பேத்கரின் அரசியலை சரியாக, நல்ல சினிமாவிற்குரிய நேர்த்தியோடு அழகியலாக சொன்னப் படம். Shyam Benegal போன்ற உலகப்புகழ்பெற்ற இந்திய சினிமா மேதைகளின் பங்களிப்போடு உருவான படம்.

நல்ல சினிமா ரசிகர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களில் பலர், அம்பேத்கர் படத்தை ஒரு நல்ல சினிமாவாகக்கூட பரிந்துரைக்கவில்லை. (புதுப்படங்களைப் பாராட்டினால், அந்த இயக்குநர்களிடம் நடிக்க வாய்ப்பு கிடைக்கலாம்.  உதவி இயக்குநராக சேரலாம். வசனம், பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கலாம். இது எதுவும் இல்லாட்டிக்கூட அவர்கள்கூட பழகுறதே பாக்கியம். அம்பேத்கர் படத்தை பரிந்துரைப்பதால் என்ன பயன்? நஷ்டதான். ஜாதி உணர்வு கொண்ட நண்பர்களோடு ‘கருத்து’ வேறுபாடு. நட்பு  ?)

ஒரு தலைவரின் வாழக்கையிலிருந்தும் அவரின் அரசியலிலிருந்தும் சம்பவங்களை தேர்ந்தெடுத்து எப்படி நேர்த்தியாக திரைக்கதை அமைப்பது, அவரின் எழுத்துக்களிலிருந்தே படத்திற்கான வசனங்களை எப்படி எழுதுவது என்பதை கற்றுத் தந்தது, டாக்டர் அம்பேத்கர் திரைப்படம். திரைப்பட இயக்குநர்கள் மிக குறிப்பாக சமூக அக்கறை உள்ள திரைப்பட இயக்குநர்கள் பார்க்க வேண்டிய படம்.

ஆனால், டாக்டர் அம்பேத்கர் படம், வெளிவருதற்கு முன்பும் வெளியான பிறகும் பல சமூக அக்கறையுள்ள இயக்குநர்களின் ‘சமூக அக்கறையை’ அம்பலப்படுத்தியது.

கமர்சியல் படம், கலை படம், மிடில் சினிமா, ஜாதி உணர்வோடு படம்  எடுக்கிறவர்கள், ஜாதி உணர்வற்ற நிலையிருந்து படம் எடுக்கிறவர்கள்; இவைகளை இவர்களின் படங்களை எல்லாம் ‘மயிர்’ பிளக்கும் விவாதங்களோடு ரசிக்கிறவர்கள், விமர்சிக்கிறவர்கள் எல்லோராலும் சேர்த்து புறக்கணிக்கப்பட்டது டாக்டர் அம்பேத்கர் படம்.

போகட்டும்.

**

பொதுவாக தமிழ் சினிமாவில் தமிழ் உணர்வு, ஜாதி பிரச்சினை, தொழிலாளர் போராட்டம் போன்ற பல நல்ல உள்ளடக்கத்தை; சுவராஸ்மற்ற, பொறுப்பற்ற திரைக்கதை மற்றும் அந்தப் பிரச்சினைகளைக் குறித்த தங்களின் அறியாமையின் மூலம் படத்தை தோற்கடித்துவிட்டு, ‘கடைசியில் நான் நல்ல படம் எடுத்தேன். அதை தமிழர்கள் ஆதரிக்கவில்லை.’ என்று அப்போதுகூட தன் தவறை உணராமல், தன்னை தியாகியாகவும், அறிவாளியாகவும் சித்தரித்துக்கொண்டு மக்களை முட்டாளாக குற்றம்சாட்கிற இயக்குநர்களும் இருக்கிறார்கள்.

இவர்களால் அடுத்து இதுபோன்ற நல்ல உள்ளடகத்தை கொண்டு படம் செய்ய வருகிறவர்களின் முயற்சிகளை, அந்தப் படங்களை காட்டிய மூடுவிழா நடத்திவிடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இயக்குநர்களுக்கு தியாகி பட்டமும், பார்வையாளர்களுக்கு துரோகி பட்டமும் கிடைத்ததை தவிர…

தொடர்புடையவை:

குழந்தைக்கும், தகப்பனுக்குமான உறவு குழந்தையின் ஆரோக்கியமான நேரங்களில் குழந்தையை கொஞ்சுவது, குழந்தையோடு விளையாடுவது என்பதாகவே இருக்கிறது.குழந்தையைக் கொஞ்சுவதால் தகப்பனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தன் மகிழ்ச்சிக்காகவே அவன் குழந்தையைக் கொஞ்சுகிறான்’.

இரவுகளில் குழந்தையின் அழுகைச் சத்தம் தாயைப் பதட்டப்படுத்திவிடும். ஆனால், தந்தையோ எரிச்சலடைவான்.குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கெடுக்காத கணவன்; மனைவியுடனான மணமுறிவின் போது மட்டும் குழந்தை மீது அதிக உரிமை கொண்டாடுபவனாகக் காட்டிக் கொள்கிறான். தன் மனைவியின் உயிர் ஆதாரம் குழந்தைதான் என்பது அவனுக்குத் தெரியும். மனைவியின் மீது வெறுப்புக் கொண்ட கணவன், உளவியல் ரீதியாக அவளைத் துன்புறுத்த, குழந்தைகளை அவளிடம் இருந்து பிரிக்க பெரிதும் முயற்சி எடுத்து … குழந்தையிடம் தாயைப் பற்றி மிக மோசமான .. விரிவாக வாசிக்க..  ..அப்போ அத ‘நீங்க’ செய்ய வேண்டியதுதானே?

அம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி

60 லட்சத்தை எடுத்து வச்சிட்டு, அம்பேத்கர் படத்தை எடுத்துக்கிட்டுபோ…

டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: வழக்கறிஞர் சத்தியசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கும் நன்றி

இன்றுமுதல்….

அம்பேத்கர் திரைப்படம்: காணக் கிடைத்த விடுதலை ஒளி

‘மவுனத்திற்கு’ பின் ‘சம்மதமாக’ மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள்

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

தியாகராஜ சுவாமிகள் சக்கிலியராகவோ, நாயுடுவாகவோ இருந்திருந்தால்…?

pancharathna

this program sponsored by ‘இசைமேதை’ கருப்பையா   ‘சாஸ்திரிகள்’-( போட்டுக்கலாம்னு  ஆசைதான்  கடைசிவரை முடியலையே)

பூணூல் போட்டவா யாரும் மேளம் அடிக்க மாட்டா, மேளம் அடிக்கிறவா யாரும் பூணூல் போட மாட்டா, அதனாலேயே தோளில் துண்டும் போட விட மாட்டா 

*

கருநாடக இசைக்கு மொழியில்லை ஜாதி இருக்கிறது அதுதான் சுருதி சேர்க்கிறது லயமாகவும் பின் தொடர்கிறது

*

பாடல்களில் மொழியை விட இசையே சிறப்பு. இசை தான் வார்த்தைகளைத் தாண்டிய உணர்வுகளை பிரதிபலிக்கும் என்று அடிக்கடி எழுதுகிறீர்கள். அதைத்தான் பார்ப்பனர்களும் சொல்கிறார்கள். “கர்நாடக சங்கீதத்தை தமிழில் பாடு” என்றால், “இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை” என்கிறார்கள். உங்களின் இசை பற்றிய கருத்து தமிழ் விரோதமும் பார்ப்பன தன்மையும் உள்ளதாக இருக்கிறது. அவர்களுக்கும், இசை பற்றிய உங்களின் புரிதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை?

-வீரபாண்டியன்.

நிச்சயம் இருக்கிறது.
வார்த்தைகளால் பாடுவதைவிட வாத்தியக் கருவிகளால் இசைக்கப்படுகிற இசையே உன்னதம். அது தருகிற உணர்வுகளை ஒரு போதும் மொழியால் முடியவே முடியாது, என்பதை இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்கிறேன். பாடலில் கூட ‘சந்தம்’ தான் உங்களை முதலில் ஈர்க்கிறது. மொழி இரண்டாம் பட்சம்தான்.

இதை நீங்கள் திரை இசை, கருநாடக சங்கீதம், மேற்கத்திய இசை இவைகளோடு ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதல்ல, தமிழர்களின் வாழ்க்கையோடு கலந்த பறை, தவில், நாதஸ்வரம் இவைகளே அதற்கு சாட்சி. இவைகளில் குரலிசை பாடல் என்பதே இல்லை. இசை மட்டும்தான். பறையும் நாதஸ்வரமும் தவிலும்; துக்கம், மகிழ்ச்சி, எழுச்சி இன்னும் பல உணர்வுகளை நம் உள்ளமெங்கும் அள்ளித் தெளிக்கும்.

பறை இசைக் கலைஞர், நாதஸ்வரம்-தவில் கலைஞர்கள் சொல்லலாம், “இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை” என்று.

ஆனால், கருநாடக சங்கீத வித்துவான்கள் அப்படி சொல்வதற்கு தகுதியற்றவர்கள், அருகதையற்றவர்கள். ஏனென்றால் கருநாடக சங்கீதத்தில் பிரதானமே குரல் தான். அங்கு வாத்தியங்களுக்கு பெயரே பக்க வாத்தியம்.

கருநாடக சங்கீதத்தில் உள்ள பிரச்சினை, மொழியல்ல; அதில் ஜாதிய கண்ணோட்டம் நிறைந்த அரசியல் இருக்கிறது. ‘தமிழை விட சமஸ்கிருதம் உயர்ந்தது’ என்பது போலவே ‘கருநாடக இசைக்கு தெலுங்குதான் பொருத்தமானது’ என்கிற எண்ணமும்.

அதற்குக் காரணம் அவர்களுக்கு தெலுங்கு மேல் உள்ள ஈடுபாடல்ல;
தியாகராஜர் ஒரு தெலுங்கு பார்ப்பனர். அவர் கீர்த்தனைகளை தெலுங்கில்தான் பாடியிருக்கிறார். தியாகராஜர் மீது உள்ள ஈடுபாடுதான் தெலுங்கின் மீது உள்ள ஈடுபாடு போல் பிரதிபலிக்கிறது. தியாகராஜர் தெலுங்கு பேசிய நாயுடுவாகவோ, இன்னும் குறிப்பாக சக்கிலியராகவோ இருந்திருந்தால்…? ‘அப்படி ஒருத்தர் இருந்தாரா?’ என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.

தியாகராஜர் நம்பூதிரியாக இருந்து மலையாளத்தில் பாடியிருந்தால் இவர்களுக்கும் மலையாள உணர்வு பொங்கி வழிந்திருக்கும்.

அதனால்தான் தெலுங்கு கீர்த்தனைகளுக்கு முன்பே தமிழில் கீர்த்தனைகள் பாடிய அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை இவர்களை விட தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் இவர்களின் தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகள் ‘அவர்களுக்கு’ பிடிக்கிறது என்பது மட்டுமல்ல உயர்வாகவும் தெரிகிறது.

காரணம் ‘அவர்கள் தமிழில் பாடினார்கள்’ என்பதினால் அல்ல, அவர்கள் பெயருக்கு பின் ஜயர், சாஸ்திரிகள், தீட்சிதர் என்ற பெயர் இல்லாததினால்தான்.

அப்படி இருந்திருந்தால், தெலுங்கு கீர்த்தனைகளை மட்டும் விரும்பி பாடுகிற ‘தமிழர்களான இவர்களுக்கு’ தமிழ் உணர்வும் நிறைந்திருக்கும். ‘தியாகராஜருக்கு முன்பே கீர்த்தனைகளைப் பாடியவர்கள் இவர்கள்தான்’ என்று அவர்களுக்குரிய மரியாதையும் முறையாக கிடைத்திருக்கும்.

இன்னும் நெருக்கிப் பார்த்தோமானால், அதை நிரூபிப்பது போல் இன்றைய சாட்சியாகவும், அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை இவர்களின் கீர்த்தனைகளை, தமிழ் பாடல்கள் பாடும்போது கூட ‘அவர்கள்’ பாடுவதில்லை.

மாறாக, கோபால கிருஷ்ண பாரதியார், பாபநாசம் சிவன்,  சுப்பிரமணிய பாரதியார் பாடல்களை தான் உணர்ந்து, உருகி தமிழ் உணர்வாக வெளிபடுத்துகிறார்கள். காரணம் ‘இவர்கள்’ பெயருக்குப் பின்னால் ‘அது’ இல்லாவிட்டாலும் பெயருக்குள் ‘அது’ தானே இருக்கிறது.

‘நாதஸ்வர-தவில்’ இசை மிக துல்லியாமான செவ்வியல் இசை வடிவம்.  அது தியாகராஜர் காலத்துக்கு முன்பிருந்த அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை காலத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே இருக்கிறது.

‘இவர்கள்’ பாடுகிற எல்லா கீர்த்தனைகளையும் நாதஸ்வர இசையில் வாசிக்கிறார்கள். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலையோடு வளர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து இசைப் பாடலையும் நாட்டியத்தையும் தங்களின் கண்டுபிடிப்பாக, தகுதி திறமையாக அடையாளப்படுத்திக் கொண்ட ‘இவர்கள்’,
ஏன் ‘நாதஸ்வர-தவில்’ வாசிப்பில் இன்றுவரை ஒருவர்கூட பங்கெடுக்கவில்லை? தோளில் வைத்து வாசிக்க வேண்டிய மேற்கத்திய இசையின் வாத்தியக் கருவியான, வெள்ளைக்காரனின் violin – னை குழந்தையை போல் மடியில் வைத்து கர்நாடக சங்கீதத்திற்கு பயன்படுத்துகிற இவர்கள் ஏன் நாதஸ்வரம்-தவில் வாசிப்பதில்லை?

இந்தக் கேள்வியோடு தமிழ் இசை-கருநாடக சங்கீதம் இவைகளுக்குள்ள அரசியல் பிரச்சினையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

‘கருநாடக சங்கீதத்தை தமிழில் பாடு’ என்றால், ‘இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை’ என்கிறார்கள், பல நேரங்களில் அவர்களாகவும் சில நேரங்களில் இவர்களாகவும் திடீரென்று சிவலிங்கத்தைப் போல் ‘அரூபமாக’வும் காட்சித் தருகிற ‘அவர்கள்-இவர்கள்’.

அதையே நான் இப்படி கேட்கிறேன்,
‘இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை. அப்போ தெலுங்குல மட்டும் எதுக்குப் பாடனும்?

thyagarajaதொடர்புடையவை:

எது அநாகரீகம்?

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

பார்ப்பன எதிர்ப்பா?இளையராஜா மீதான வெறுப்பா?

பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்

20130726_160240சென்னை குளோபல் மருத்துவமனையில் 26-07-2013 அன்று முதல் சிகிச்சை முடிந்து, ‘நான் குணமாகிவிட்டேன்’ என்று மகிழ்ச்சியோடு பேராசிரியர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டபோது, அவருடன் நான். செல்போனில் படம் எடுத்தது அவரின் மகன் சுரதா.

*

பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.

‘எங்கள் தந்தை மருத்துவக் கல்லூரிக்கு தன் உடலை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்’ என்று அவரின் மகன்கள் வளவனும் சுரதாவும் கேட்டுக் கொண்டதை சந்தேகிக்கமால் முழுமையாக நம்பி,

‘குடும்பத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்’ என்று இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட விதமும் ‘எங்களுக்குத் தொழுகை நடத்துவதற்கு மட்டுமாவது அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்ட முறையும் ‘இஸ்லாமியர்களிடம் ஜனநாயகம் என்பதே துளியும் இல்லை’ என்று அவதூறு பேசுகிற இஸ்லாமிய எதிர்ப்பு அறிவாளிகளை அம்பலப்படுத்தியது.

25 ஆண்டுகளாகப் பேராசிரியர் அப்துல்லாஹ் குடும்பத்து நண்பன், இதை நேரிலிருந்து பார்த்தவன், இந்தப் பிரச்சினைக்கு இடையில் பயணித்தவன் என்கிற முறையில் இதை நான் பதிவு செய்கிறேன்.

அண்ணாசாலையில் அமைந்த மெக்கா மசூதியில் ஆயிரக்கணக்காணவர்கள் கூடி நடத்திய சிறப்புத் தொழுகை மற்றும் இரங்கல் கூட்டத்தில், பேராசிரியர் அப்துல்லாஹ் குறித்துப் பேசியதும், அவருக்காகவும் அவரின் குடும்பத்தின் மன அமைதிக்காவும் அவர்கள், அல்லாவிடம் வேண்டிக் கொண்ட விதமும் எல்லையற்ற அன்பால் நிறைந்து வழிந்தது.

பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்காக நடந்த அந்தத் தொழுகை அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அங்கிருந்த இஸ்லாமியர்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதாக இருந்தது, அன்பால் நிறைந்த அந்தத் தொழுகை.

தொடர்புடையவை:

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல

Vijaiஸ்லாமியர் எதிர்ப்பு படமான கமலின் விஸ்வரூபத்திற்கு கண்டனம் தெரிவித்த இஸ்லாமியர்களை அதிமுகவின் அடியாளாகவும்,

கமலின் மதவாததிற்கு எதிரான போராட்டம் ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது என்றும்,

தமிழக அரசை கண்டித்தும் போர்க்குரல் எழுப்பிய கருத்து சுதந்திர ‘ஞாநி’ கள் ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட ‘தலைவிதி’ யை மாற்ற சொல்லி கருத்து சொல்லியிருக்கிறார்களா?

 கமல் ‘நான் நாட்டை விட்டே போகிறேன்’ என்று சொன்னபோது, ‘போகாதே.. போகாதே என் கணவா?’ என்கிற பாணியில் புலம்பி, ‘ஒரு கலைஞன் இந்த அளவிற்கு மனம் வெறுத்துப் போனதற்கு, தமிழக அரசும் காரணம்’ என்று ரத்தக் கொதிப்பான ‘ஞாநி’கள், தலைவா  பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்? எங்கிருக்கிறார்கள்?

ஒருவேளை ‘தலைவா’ படம் வெளியாகாத தமிழ்நாட்டில் நான் இருக்க மாட்டேன்’ என்று வெளிநாடு போய்விட்டார்களோ?

தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்கிறேன். கண்டுபிடித்தவர்கள் சொல்லவும். ‘ஞாநி’ களை அல்ல;  அவர்களின் ‘கருத்தான’ கருத்தை. அதனால்தானே அவர்கள் ஞாநிகள்.

தொடர்புடையவை:

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

சின்மயி விவகாரமும் ஞாநியின் பஞ்சாயத்தும்

ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

யார் வெறி நாய்?

விஸ்வரூப தந்திரம்

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

மலையாள விஜயும் தமிழ் மோகன்லாலும்

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

மலர்ந்தும் மலராத ‘பாசமலர்’

pasamalar‘மலர்ந்தும் மலராத… பாதிமலர் போல..’ கேட்பவர்களுக்கு சிறகு முளைக்க வைக்கும் அதிசியப் பாடல். நூற்றாண்டின் உன்னதங்களில் ஒன்று.

விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இந்தப் பாடலை தன்னால் முடிந்தவரை  இசை கெடாமல், கண்ணிரும் – குழந்தையின் சிரிப்புமாக படமாக்கியிருப்பார் பீம்சிங். சிவாஜிக்கு பின்னால் இருக்கும் புத்தர் சிலை இந்தப் பாடல் தரும் மன நிறைவையும் சோகமான சூழலிலும் நம்மை ஆறுதல்படுத்துகிற  உணர்வை கூடுதலாக்கும். சாவித்திரி – சிவாஜி இருவருக்கும் இடையில் மாறுகிற காட்சிகளில் இசையின் உன்னதம் கெடாத ‘டிசால்வ்’ அழகு.

இந்தப் பாடலில் சிவாஜி கை, கால்களை நீட்டி நடிக்காமல், மிதமான முகபாவங்களை மட்டும் காட்டி நடிக்க வேண்டிய நிலையை விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையே செய்திருக்கிறது.

குழந்தையுடன் சாவித்திரி பிரம்மாண்டமான  சிவாஜி படத்தின் முன் இருக்கும் காட்சியும், குழந்தையுடன் சிவாஜி படுத்திருக்க,  மேலிருந்து வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட ‘ஷாட்’டுகளும் அழகு.

*

சிவாஜி நடித்த பாசமலர் தமிழில் ஒரு குறிபிடத்தக்கப் படம்தானே?
-டி.சிவராமன், நன்னிலம்.

பாசமலர் படத்தை தமிழ் தெரியாத ஒரு நபர் பார்த்தால், ‘அந்தக் காதலனும் காதலியும் கடைசி வரைக்கும் ஒன்னு சேராம போயிட்டாங்களேன்னு’ ரொம்ப வருத்தப்படுவார்னு, எப்பவோ என் நண்பருக்கு நண்பர் ஒருவர் சொன்னதா ஞாபகம்.

தமிழ் சினிமாவில் ரொம்ப அருவருக்கதக்க முறையில் ஒரு உறவு கொச்சைபடுத்தப்பட்டது என்றால், அது அண்ணன்-தங்கை உறவுதான். எம்.ஜி.ஆர். தன் படங்களில் கதாநாயகியை விட தங்கச்சியைத்தான் அதிக அளவுக்கு கட்டிப் பிடித்து ‘பாசத்தை’ வெளிகாட்டுவார்.

இப்படி தமிழ் சினிமா நாயகர்கள் தங்கச்சிகளை கட்டிபிடிச்சி நடிக்கிறதை பார்க்கிற பார்வையாளர்கள் தப்பா நினைக்க போறங்க அப்படிங்கறதுக்காகத்தான், ‘தங்கச்சி, தங்கச்சி’ என்று வசனம் பேச வைச்சாங்க போலிருக்கு.

நடைமுறையில் எந்த அண்ணனும் தன் தங்கைகளை, தம்பிகளை ‘தங்கச்சி’ ‘தம்பி’ என்று அழைக்க மாட்டார்கள். பெயர் சொல்லிதான் அழைப்பார்கள். முன் பின் தெரியாத வயது குறைந்த நபர்களைதான் ‘தம்பி’ என்று அழைப்பார்கள். ‘தங்கச்சி’ என்கிற வார்த்தை அதற்குக் கூட பயன்படுவதில்லை. ‘இது என் தங்கச்சி’ என்று சுட்டிக் காட்டுவதற்குதான் பயன்படுகிறதே ஒழிய, விளித்தலுக்கு அல்ல.

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல்தான் இன்றுவரைக்கும் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். படம் எடுத்தவங்க, நடிச்சவங்க எல்லாம் நிஜ வாழ்க்கையில் அக்கா-அண்ணன்-தங்கை-தம்பியா இருக்கிறவங்கதானே. அப்புறம் சினிமா அப்படின்னா மட்டும் எங்கிருந்துதான் இப்படி பொத்துக்கிட்டு வருதோ பாசம்?

*

வழக்குரைஞர் கு. காமராஜ் நடத்திய ‘விழிப்புணர்வு’2007 ஆகஸ்ட்   மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

சென்னையில் மீண்டும் ‘பாசமலர்’

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து… என்னுடைய பிற புத்தகங்களுக்கும்..

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையவை:

பக்தி படங்களின் மதநல்லிணக்கமும்; சமூகப் படங்களின் மதவெறியும்

ஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

‘கர்ணன்’ பிரம்மாண்ட திரைப்படம்; புராணத்திற்குள் (இதிகாசம்) மறைந்திருக்கும் அரசியல்

காதலுக்கு ‘ஆதரவானவர்’களையும் அம்பலப்படுத்துகிறது காதல்

love-cartoons16 வயதுகூட நிரம்பாத சிறுமியை கதாநாயகியாக ஆடை குறைத்து, கிழவர்களுக்கு ஜோடியாகவும் அதைவிட மோசமாக கவர்ச்சி உடையில் பாலியல் பொருளாகவும் காட்டுகிறவர்கள் சொல்கிறார்கள்:

“அந்தப் பொண்ணுக்கு 20 வயது. அதுக்கு என்ன விவரம் தெரியும்? பெத்தவனுக்கு இல்லாத அக்கறையா?”

*

ன்னுடைய தந்தை மேல் காவல்துறையில் புகார் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு பெண்ணிற்கு தைரியம் இருக்கும்போது, தன் தந்தையை மீறி தன் காதலனை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்? கல்யாணம் ஆகி இருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காது.

தன் தந்தையை கிரிமினலாக குற்றம்சாட்டி புகார் கொடுப்பதை விட, தன் மனதுக்கு பிடித்தவனை தந்தைக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வது தவறில்லை. அதுவே தந்தைக்கு காட்டும் மரியாதையும்கூட.

ஏன் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை? அதைத் தடுத்தது, தடுப்பது யார்? இந்த முடிச்சை அவிழ்த்தால், இதன் குற்றவாளிகள் யார் என்று தெரியும்?

*

ல்லவேளை இந்த பையன் தலித்தா இல்ல. இந்நேரம் தலித்தா இருந்தா…. அது அந்த பையனோடு மட்டும் முடியமா, ஒட்டுமொத்த தலித் மக்களை பற்றியும் இழிவா பேசியிருப்பாங்க.

ஆனா பாருங்க ஒருவன் தலித் இல்லைன்னு தெரிஞ்சா போதும், மத்தப்படி அவன் என்ன ஜாதின்னு யாருக்கும் தெரிய வேண்டியதில்ல. ஒரு தலித் செய்கிற ஒவ்வொன்றுக்கும் அவன் ஜாதியோடு முடிச்சுப்போட்டு பார்க்கிற மனோபாவமே நீக்கமற பரம்பொருளைப் போல் எங்கும் நிறைந்திருக்கிறது.

இதுதாங்க ஜாதி உணர்வற்ற சமூகம் (மணமகன் தேவை: ஜாதி தடையில்லை SC., ST நீங்கலாக)

*

‘இயக்குநர்கள் எல்லாம் இப்ப நடிகர்களாக மாறி இருக்கிறார்கள்.’

ஆமா டீ.வில பாத்தேன். ரொம்ப யதார்த்தமா, இயல்பான நடிப்பு. தமிழ் சினிமாவை இன்னொரு கட்டத்திற்கு உயர்த்தி விட்டார்கள்.

இத பாத்து அந்த ‘பொறுக்கி’ பையன் பயந்து இருப்பானோ இல்லையோ, நிச்சயம் தமிழ் முன்னணி நடிகர்கள் நடிங்கிருப்பாங்க.

*

யது வந்த ஆணும் பெண்ணும் ‘காதலுக்கு எதிர்ப்பு காப்பாற்றுங்கள்’ என்று போனால், அதுவும் வசதியான வீட்டு காதல் பிரச்சினையாக இருந்தால் உடனே காவல்துறை ‘கவுன்சிலிங்’ பண்ண ஆரம்பிச்சிடுறாங்க.

கவுன்சிலிங் தேவைதான். அது காதலர்களுக்கு இல்ல. காவல்துறைக்கு.

பொதுமக்களிடம் மரியாதை குறைவாக பேசாமல்; வர்க்க வேறுபாடு, ஜாதி வேறுபாடு இல்லாமல்; சட்டப்படியும் நியாயப்படியும் எப்படி வேலை பார்ப்பது, அப்படின்னு.

*

துல, சமூக பொறுப்புள்ள கோபக்கார அந்த டைரக்டர்கள் மட்டும் இல்லிங்க… ஹாலிவுட்ல இருந்து Steven Spielbergக கூட கூட்டி வரட்டும். அதனால என்ன பிரயோஜனம்?

பொண்ணு நம்ம பக்கம் இல்லியே?

பெத்தமகளே அப்பனுக்கும் ஆதரவா இல்லாபோது, இதுல மத்தவங்க ஆதரவுதான் ரொம்ப முக்கியமோ?

*

உரிய வயது வந்த காதலர்கள் சேர்ந்து வாழவோ, பிரிந்து போகவோ முடிவெடுத்தால், அவர்களை கட்டாயப்படுத்தி பிரித்து வைக்கவோ, சேர்ந்தே வாழ வேண்டும் என்று தொல்லை செய்யவோ பொற்றோர்களுக்கே உரிமையில்லை.

ஆனால், அவர்களை பிரித்து சட்டத்திற்கு புறம்பாக, நியாயத்திற்கு எதிராக அதில் தீவிரமாக பஞ்சாயத்து பேசுகிற அநாகரீகமாக கருத்துச் சொல்கிற ‘கந்தசாமி’கள் மற்றும் ‘கண்ணமா’க்களின் தொல்லை தாங்க முடியில.

அதிலும் கூடுதல் கொடுமை;  ‘அது அவரின் தனிப்பட்ட பிரச்சினை அதில் கருத்துச் சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை’ என்று கறாரா கருத்துவேறு சொல்கிறார்கள்.

அடப்பாவிகளா, அதை நாங்க சொல்லணும்.

அடுத்தவன் வசனத்தை பேசுறத இங்க குட் பெர்பாமென்ஸா அங்கிகரிக்கப்படுகிறது.

தொடர்புடையவை:

காதல்: ஆச்சாரமான அப்பாக்களும் தமிழ்த் தேசிய தந்தைகளும்

காதல் – ‘ஜாதியை’ ஒழிக்காது!

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?

காதல்: ஆச்சாரமான அப்பாக்களும் தமிழ்த் தேசிய தந்தைகளும்

love ன் மகள் தன்னை மீறி காதலுக்கு முக்கியத்துவம் தருகிறாள் என்றவுடன், ஜாதி உணர்வும், மத உணர்வும் நிறைந்தவர்கள் ‘இதுக்குமேல போன அசிங்கம்’ என்று விலகி வழிவிட்டு விடுகிறார்கள்.

‘எனக்கொரு பொண்ணு இருந்தா அவ இனிமே இல்லையின்னு தல முழுகிட்டேன்’ என்று ஆச்சாரமான அப்பாக்களும்,

‘என் பொண்ணு செத்துப் போயிட்டா’ என ஜாதி உணர்வு கொண்ட கோபக்கார அப்பாக்களும்  பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.

‘இவை எல்லாவற்றிற்கும் காதல்தான் காரணம், காதல ஒழிச்சாதான் நாடு உருப்படும்’  என்று காதலை சபித்துக் கொண்டே, காதலுக்கு வழிவிட்டு ஒதுங்கி ஓரம்போகிறார்கள்.

இப்படி ஆச்சாரமும் – ஜாதி தீவிரமும் கொண்ட பிற்போக்கான அப்பாக்களையே, முற்போக்காளர்களாக மாற்றி விட்டார்கள்;

தமிழ்த் தேசிய உணர்வும், பிரபாகரனை தன் தலைவராக ஏற்று ஈழப் பிரச்சினைக்காக களம் இறங்கி போராடிய, ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான படம்’ என்று கேள்வி பட்டாலே எதிர்ப்பு தெரிவிக்கிற, கலைக் கண்ணோடு வாழ்க்கையை பார்க்கிற மிக குறிப்பாக ‘காதலுக்கு நான் எதிரியல்ல’ என்று காதலைக் கொண்டுகிற அப்பாக்கள்.

தொடர்புடையவை:

காதல் – ‘ஜாதியை’ ஒழிக்காது!

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?

‘ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை

சாராய வியாபாரிகள்-சாராய ஒழிப்பு வீரர்கள்; முதலாளித்துவ குட்டையில் ஊறிய மட்டைகள்

Capitalism -1முதலாளித்துவம் மிக மோசமானது என்று சொல்கிறீர்கள். ஆனால் முதலாளித்துவ நாடுகள்தான் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடிப்படை உணவு வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி போன்றவற்றை செய்கின்றன. இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருத்துவ வசதி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் இவற்றிற்கெல்லாம் கோடிக்கணக்காக பணம் தருகிறார்கள். அப்புறம் எப்படி முதலாளித்துவம் மோசமானதாக இருக்கும்?
– ஜெனிபர் வில்சன், நாகர்கோவில்.

ஆப்பிரிக்க நாடுகள் அதோ கதிக்கு ஆனதிற்குக் காரணமே, முதலாளித்துவ நாடுகள்தான். உலகிற்கு மிக அதிகமாக தங்கத்தை தருகிற தென்ஆப்பிரிக்காவை சூறையாடின முதலாளித்துவ நாடுகள். தங்கத்தின் மீதும் பகட்டான வாழ்க்கையின் மீதும் விருப்பமற்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அப்பாவிகளான அந்த ஆப்ரிக்க நாட்டு மக்களை, அடிமைகளாக நடத்தியது வெள்ளைக்கார முதலாளித்துவ நாடுகள். தனது திருட்டுத்தனத்தை மறைத்துக் கொள்வதற்கும், அதை தொடர்ந்து செய்வதற்கும் எப்போதுமே ‘தர்ம பிரபு’ வேடத்தையே கையாள்வார்கள் கொள்ளைக் கூட்டத்தார்.

கள்ளச்சாராயம் விற்று சம்பாதித்த பணத்திலும், கல்லூரிகள் கட்டி கொள்ளையடித்தப் பணத்திலும் இன்னும் ஊரை ஏமாற்றி சேர்த்த சொத்திலும் கால் துளியை எடுத்து கோயில் திருவிழா, ஏழைகளுக்கு இலவச திருமணங்கள், ஊனமுற்றவர்களுக்கு சைக்கிள் ரிக்ஷா என்று வாரி வழங்குபவர்கள் எப்படி கருணை உள்ள தொழில் அதிபர்களாக பார்க்கப்படுகிறார்களோ, அதுபோல்தான் முதலாளித்துவ நாடுகளும் தங்களை காட்டிக் கொள்கின்றன.

முதலாளித்துவத்தின் இந்த மோசடியை 150 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, தங்களது கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் அம்பலப்படுத்திருயிருக்கிறார்கள் மார்க்சும் எங்கல்சும்.

முதலாளித்துவ சோசலிசம் என்று தலைப்பிட்டு இப்படி ஆரம்பித்திருக்கிறார்கள்:

“முதலாளித்துவ வர்க்கத்தில் ஒரு பகுதி, முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து நிலவும்படி உறுதி செய்து கொள்ளும் பொருட்டு சமூகக் குறைபாடுகளை அகற்ற விரும்புகிறது.

பொருளியலாளர்களும், கொடை வள்ளல்களும், மனிதாபிமானிகளும், உழைப்பாளி மக்களுடைய நிலைமையை மேம்படுத்துவோரும், தருமப் பணித் துறையாளரும், ஜீவகாருண்ய சழூகத்தாரும், மதுக் குறைப்பு வீரர்களும் இன்னும் எல்லாவிதமான துக்கடாச் சீர்திருத்தக்காரர்களும் இந்தப் பகுதியை சேர்ந்தவர்களே.”

இப்படிச் சொல்லி கொண்டே வந்து இறுதியாய் முதலாளிகள் தங்கள் வாழ்க்கையை தொழிலாளர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள், என்று கூட சொல்வார்கள் என்கிற அர்த்தப்படும்படி இப்படிச் சொல்கிறார்கள்,

‘முதலாளித்துவ சோக்ஷலிசத்தைச் சுருக்கமாய் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம், “முதலாளி முதலாளியாய் இருப்பது, தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே.”

*

வழக்குரைஞர் கு. காமராஜ் நடத்திய ‘சமூக விழிப்புணர்வு’2007 ஜுலை  மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து….

புத்தக தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச: 9444 337384

தொடர்புடையவை:

பணமா? பாசமா?

திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்

எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்

தமிழனத் துரோகி.. ஜாதி வெறியன்..

????????????????????????????????????????

தமிழனத் துரோகி, ஜாதி வெறியன் இவர்களில் யாரை முதன்மையாக எதிர்க்கவேண்டும்.?

எம். முருகன்

இரண்டும் கலந்தவைகளாகத்தான் இருக்கிறார்கள் பலரும்.

ஆனால் சரியாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமென்றால், சந்தேகமே இல்லாமல் ஜாதிவெறியனைதான்.

தமிழனத் துரோகியாக இருக்கிற ஒருவன்; தன் ஜாதிக்காரனாக இருந்தால் ஆதரிப்பதும் அல்லது விமர்ச்சிக்க மறுப்பதும் இங்கு தமிழ் உணர்வாக குவிந்து கிடக்கிறது.

அதனால்தான்,விடுதலைப் புலிகளை தீவிரமாக ஆதரிக்கிற தலைவர்களின் ஆதரவாளர்களே, ‘நீ யோக்கியமா?’ அவரு யோக்கியமா? ‘இவரு மட்டும் என்ன பண்ணாரு?’ ‘உன் தலைவன் யோக்கியதை தெரியாதா’ ‘எவன்டா யோக்கியம்?’ என்று தெருச் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு தமிழர்கள் குவியலாக கொல்லப்பட்டபோது, ‘யாருக்கு விடுதலைப் புலிகளிடம் அதிக உரிமை’ என்கிற பாணியில் நடந்த வார்த்தை வீச்சுகளையும் பச்சைத் துரோகங்களையும், பல்லாயிரம் தமிழர்களை பலிக் கொடுத்து உணர்ந்தோம்.

‘தமிழன்’ என்கிற உணர்வை ஜாதி உணர்வே தீர்மானிப்பதால்தான், இந்திய தேசியத்திற்காகவே தன் காலம் முழுவதும் வாழ்ந்த தலைவர்களைப் பற்றிய சின்ன விமர்சனம்கூட இல்லாமல், எந்தக் குற்ற உணர்வுமற்று அவர்களை ஒப்பற்றத் தலைவர்களாக கொண்டாடுகிற குற்றத்தைச் செய்கிறார்கள்.

ஜாதி வெறியே தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரி. தமிழனத் துரோகிகளுக்கு நண்பன்.

தொடர்புடையவை:

பெரியார் மீது அவதூறு;‘தில்’ இருந்தா காமராஜரை, முத்துராமலிங்கத்தை, ராமதாசை விமர்சிக்கட்டும்!

‘ஜாதி உணர்வை தன் ஜாதிக்காரனிடமும், தமிழ் உணர்வை அடுத்த ஜாதிக்காரனிடமும் ஊட்டு’

தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்