‘தி இந்து’ ஜெயகாந்தன் தரும் தமிழர்களுக்கான அறிவுரை; ‘புத்தி சொல்றாராமா..!’

Vasantha_Maligai
‘நடிகர் திலகம்’ என்று தமிழர்களால் கொண்டாடப்படுபவர்; ஆனால் அவருக்குப்  போட்டி திரையுலகில் இல்லை.
*

இந்து நாளிதழுக்காக அதன் செய்தியாளர் சம்ஸ் எடுத்த ஜெயகாந்தன் பேட்டியை ‘தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்’ என்ற தலைப்பில் தன் இணையப் பக்கத்தில் வெளியிட்டதை Facebook ல் share செய்திருந்தார்.

‘ஜெயகாந்தன் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பேச்சும் அப்படித்தான். முதுமை நிறைய தளர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால், எந்தச் சூழலிலும் சிங்கம் சிங்கம்தான். பேட்டி என்றதும் “வேண்டாம்” என்றவர், “ஐந்தே நிமிஷம்” என்றதும் சம்மதித்தார்.’ என்ற பெருமையோடு துவங்கிறது நேர்காணல்.

அதில், ‘காந்தி, நேரு, தேசப்பற்று’ என்று ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் பாணியில் இருவரும் உரையாடுகிறார்கள்.

இடதுசாரிகளுக்கு அறிவுரையும் இருக்கிறது. ‘இடதுசாரி இயக்கத்தைச் சுயநலம் செல்லரித்துவிட்டது’ என்கிறார் பொதுவாழ்க்கைக்காக தன்னையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட தியாகி ஜெயகாந்தன்.

அதில் இன்னொரு கேள்வி, பேட்டியாளர் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பிரதிநிதியாக தன்னை தானே நியமித்துக் கொண்டு, தமிழர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு ஜாதியின் காரணமாக மறுக்கப்பட்டபோதும், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் பொங்கி எழுந்த போராடிய ஜெயகாந்தனிடம்,

தமிழ்ச் சமூகம் முக்கியமாக எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?” என்று கேட்கிறார். அதற்கு தியாகி ஜெயகாந்தன்,

குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனைய சமூகங்களின் ஆக்கபூர்வ விஷயங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்.

என்று பரந்த மனப்பான்மையோடு தமிழர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்.

//ஏனைய சமூகங்களின் ஆக்கபூர்வ விஷயங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்.// என்று அவர் சொல்லியிருக்கிற ‘ஏனைய’ என்பது பார்ப்பனர்கள்தான் என்று நினைக்காதீர்கள். ‘பிற மொழிக்காரர்கள்’ என்று  அதற்கு அர்த்தம். அப்போ சம்ஸ்கிருதத்தை உயர்வாக மதிக்கிறவங்ககிட்ட இருந்தா..?’ அப்படின்னு கேப்பீங்களா? கேட்டுக்குங்க..

ஆனால், நான் அதை கேட்கவில்லை.

சம்ஸ் Facebook ல் நான் கேட்டது:

//தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்//

தமிழ் வெறி இன்னைக்கு யார்கிட்ட இருக்கு?

தமிழ் வழிக் கல்விக்கு வழியில்லை. ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்குகிறது அரசு. நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இல்லை. கோயில்களில் தமிழ் தீட்டு மொழியாக அவமானப்படுத்தப்படுகிறது. இன்னும் நிறைய சொல்லலாம்.

இந்தச் சூழலில் தமிழ் உணர்வே சந்தர்ப்பவாதத்தில் சிக்கித் தவிக்கிறது. இதில் தமிழ் வெறி எங்கிருக்கிறது..?

இல்லாத ஒன்றை கண்டிப்பதில்தான் ஜெயகாந்தன் மாவீரர்.

ஜெயகாந்தினிடம் நான் கேட்டுக் கொள்வது, உங்களுக்கு தமிழ் உணர்வு இல்லாவிடினும் பரவாயில்லை.

தமிழை நீச மொழியாக பார்க்கிற சமஸ்கிருதத்தை தமிழை விட உயர்வாக மதிப்பது, பார்ப்பனர்களோடு ஒப்பிட்டு, தமிழ் அறிஞர்களை இழிவாக பேசுவது போன்ற உங்களின் பார்ப்பன அடிமைத்தனத்தை விட்டொழியுங்கள்.

நிகழ்கால லாபங்களுக்காக வரலாற்றை திரிக்காதீர்கள். இன்னும் காலம் கடந்து விடவில்லை. உங்கள் கருத்துகளை பரிசீலனை செய்து பரிகாரம் தேடுங்கள்.

பார்ப்பனர்களும் உங்களைப் போலவே பார்ப்பன மனோபாவம் கொண்டவர்களும் இன்றைய உங்களின் இந்த அடிமைத்தனத்தை வீரமாக சித்திரிப்பார்கள். சிங்கம் என்று வர்ணிப்பார்கள்.

ஆனால், வரலாறு உங்கள் எழுத்தாற்றலையும் தாண்டி, ‘துரோகி’ என்று உங்களை அசிங்கமாக குறித்து வைத்துவிடும்.

தொடர்புடையவை:

பாரதி + ஜீவா = ஜெயகாந்தன்

நாறும் தமிழ் மூச்சும் மணக்கும் சமஸ்கிருத‘வாயு’த் தொல்லையும்’ இதுதான் ஞானக்கூத்து!

‘வீடு’; இளையராஜா-ஜெயகாந்தன் – ‘பெரியார் என்கிற பேய்’

எழுத்தாளன் என்பது தகுதியும் அல்ல; எழுதுவது திறமையும் அல்ல

நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று?

6846680097_993cb47839_mஇந்து தமிழ் நாளிதழ் தங்க மீன்கள் படத்தை ‘நொந்த மீன்கள்’, என்று விமர்சித்ததைக் கண்டித்து இயக்குநர்  ராம்:

‘தந்தைப் பெரியாரிடம், “ஆங்கிலப் பத்திரிக்கை ஆரம்பிக்க சொல்கிறீர்களே அய்யா…செய்திகளுக்கு எங்கே போவது?” என ஒருமுறை கேட்டார்களாம். அதற்கு அவர், ‘செய்திக்கா பஞ்சம்…? இன்னத்த ‘இந்து’ பேப்பர் வாங்கீட்டு வா…அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ, அதையெல்லாம் தப்புன்னு எழுது…எதத் தப்புன்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் சரின்னு எழுது…’ என்றாராம்.

அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது….’ – என்று துவங்கி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தை தோழர் ராகு. சரவணக்குமார் facebook ல்  Share செய்திருந்தார். அதன் மீது நான் எழுதியது:

‘தனிப்பட்ட முறையில் தன்னைப் பற்றி குறை சொல்லி எழுதினால் மட்டும் இந்துவை பற்றி கருத்துச் சொல்ல சொல்லி பெரியார் சொல்லவில்லை.

தி இந்து தமிழ் இதழ்; முதல் நாள் சிறையில் உள்ள ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன் பற்றிய செய்தியும்,
தீவிரமான இந்துக் கண்ணோட்டமும் மோடியின் புகழும் பாடியபோது அமைதியாக இருந்து விட்டு, தன்னை விமர்சனம் செய்யும்போது மட்டும் பெரியாரை துணைக்கு அழைத்துக்கொண்டு இந்துவை விமர்சிப்பது பச்சையான சந்தர்ப்பவாதம்.

முதல்நாளே தமிழர் விரோத போக்குடனும், ‘மோடி’ ரசிகர் மன்ற பத்திரிகையாய் வெளிவந்தபோது, அதைக் கண்டித்து facebook உட்பட்ட இணையங்களில் கடுமையான கண்டனங்களை பல தோழர்களும் எழுதினர்.

பிரச்சினை தீவிரமாக இருந்த அப்போது, ஓரமா ஒக்காந்து ‘மிக்சர்’ சாப்ட்டவங்க… இப்ப திடீரென்று ‘தி இந்து’வை தனிப்பட்ட முறையில் கண்டிப்பது என்ன நியாயம்?
(‘நமக்கு எழுத எப்பவாவது வாய்ப்புக் கொடுப்பான்.. எதுக்கு தேவையில்லாம..’ என்று தமிழ்த் தேசியம், பெரியாரியம் எழுதுகிற சில; சில என்ன, பல எழுத்தாளர்கள் கள்ள மவுனம் காத்தார்கள்)

ஒரு வேளை இந்து தமிழ் நாழிதழ், ‘தங்க மீன்கள் மிகச் சிறந்த படம் இதுவரை தமிழில் இதுபோல் வந்ததில்லை’ என்று எழுதியிருந்தால், இயக்குநர் ராம் க்கு பெரியார் தேவைப் பட்டிருக்க மாட்டார்.
அப்போது அவருக்கு ‘தி இந்து’ தான் பெரியதாய் தெரிந்திருக்கும்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் பாராட்டுகிறது.’ என்று ‘தங்க மீன்கள்’ விளம்பரங்களில், ‘தி இந்து’ விற்கு விளம்பரம் கிடைத்திருக்கும்.
இப்போது ‘தி இந்து’ வை கண்டிக்கிற அவருடைய கடிதம், பாராட்டி, நன்றி சொல்லி வியந்திருக்கும்.

பார்ப்பனர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் நன்மை செய்யும்போதும், பார்ப்பன நிறுவனங்களில் நல்ல நிலையல் வேலையில் இருக்கும்போதும் ஒட்டுமொத்தமாக பார்ப்பனர்களை புகழ்வதும், ‘பார்ப்பானர்’ என்று கூட சொல்ல மறுப்பதும், ‘பிராமினை மட்டும் குறை சொல்றீங்க… மத்த ஜாதிகாரன் யோக்கியமா?’ என்று விசுவாசமாக பேசுவதும்;
அதே தனிப்பட்ட பார்ப்பனரோடு விரோதம் ஆகும் போது, ‘இந்த பாப்பார பசங்களே இப்படித்தான்’ என்று பார்ப்பன எதிர்ப்பு பேசுவதும், அப்போது மட்டும் பெரியாரை புகழ்வதும்; பல நபர்களிடம் இதை பார்த்திருக்கிறேன்.

பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பும், ‘தி இந்து’ பத்திரிகை உட்பட்ட பார்ப்பன பத்திரிகைகளின் எதிர்ப்பும்; தன் விருப்பு, வெறுப்பு, தனக்கான முக்கியத்துவமின்மை, தனிப்பட்ட பார்ப்பனர்களின் மீதானா காழ்ப்புணர்ச்சி இதன் பின்னணியில் எழுந்ததல்ல;

அது ஒரு விடுதலை அரசியல்.

19-9-2013 அன்று facebook ல் எழுதியது.

தொடர்புடையது:

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

பெரியார் எதிர்ப்பும் பெரியார் மறுப்பும் ஜாதி வெறியே

1236279_630579856974336_661979726_nதொடர்புடையவை:

டாக்டர் அம்பேத்கர் மன்றம் நடத்தும் பெரியார் பிறந்தநாள் விழா

‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை

நடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம்

கடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?

‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்

பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

cartoonரேந்திர மோடி இஸ்லாமிய எதிர்ப்பாளர், தீவிர இந்துக் கண்ணோட்டம் கொண்டவர், குஜராத்தில் இஸ்லாமியர்களை கொன்று குவித்தவர், ‘இஸ்லாமியர் எதிர்ப்பு’ அமெரிக்காகாரனே கட்டம் கட்டும் அளவிற்கு அவருடைய இஸ்லாமியர் எதிர்ப்பு உலகப் புகழ் பெற்றது.

ஆனால், ‘அவருதான் அடுத்த பிரதமர்’ என்று இந்தியாவையே குஜராத்தாக மாற்ற முயற்சிக்கிறார்கள் பார்ப்பன, பார்ப்பன மனோபாவம் கொண்ட ஊடகங்கள்.

நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து பி.ஜே.பி. வெற்றி பெற்று விட்டதைப் போல, ‘பிரதமராக அத்வானியா – மோடியா?’ என்பதாக அரசியல் நடத்துகிறது பி.ஜே.பி. அதற்கு தோதாக இந்த ஊடகங்களும் ஊதுகின்றன.

‘தமிழ்நாட்டில் மோடி போட்டியிடுவார்’ என்று தங்கள் விருப்பங்களை செய்திகளாக வெளியிடுகின்ற பத்திரிகைகள். அதற்கும் வாய்ப்பிருக்கு. ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் அவர் ‘குஜராத் – தமிழ்நாடு’ இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். அதன் மூலமாக தமிழகத்தில் பி.ஜே.பி.க்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்தலாம் என்பது அவர்கள் திட்டமாககூட இருக்கலாம்.

எது எப்படியோ?

மோடி இனி புதியதாக எந்த மோசமானதையும் செய்யப் போவதில்லை. குஜராத்தில் செய்தவைகளை விரிவுபடுத்தும் வேலையைதான் செய்வார். அதனால் தன் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக எந்த பொய்யும் சொல்லுவார். சொல்வார்கள்.

அதில் ஒரு திட்டமாக, இலங்கைத் தமிழர்கள் துயரம் பற்றியும், அதையும் தாண்டி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவர் புகழுரைக்காமல் இருந்தால் அதுவே அவர் தமிழர்களுக்கு செய்யும் பெரிய உதவி.

அப்படி பேசி விட்டால், அவர் தமிழனக் காவலராக அவதாரம் எடுப்பதை, யாராலும் தடுக்க முடியாது. பிறகு அவரை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல; ஒத்துக் கொள்ளாதவர்களை கூட தமிழன விரோதிகளாக, துரோகிகளாக சித்தரித்து விடுவார்கள்.

ராஜபக்சே ஆதரவிற்காக ‘தி இந்து’ நாளிதழை கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த் தேசிய கண்ணோட்டம் கொண்டவர்கள். ‘இந்து’வின் மோடி ஆதரவை கண்டிப்பதில்லை. இந்த ‘அறிகுறி’ இவர்களும் ‘தி இந்து’வைப் போலவே ‘மோடியை ஆதரிப்பார்கள்’ என்கிற அடையாத்தையே காட்டுகிது.

ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கும் ‘நல்லவராய்’ ஒரே சமயத்தில் மோடியால் எப்படி இருக்க முடியும்? இரண்டில் ஒன்று பொய்யாகத்தான் இருக்கும். அந்தப் பொய் ஈழ ஆதரவுதான்.

மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டதை ‘ஒரு பார்ப்பனரல்லாதவருக்கு ஆதரவு’ என்கிற முறையில் அவரை எப்படி ஒரு பெரியார் – அம்பேத்கர் தொண்டர்கள் ஆதரிக்க முடியாதோ,
அதுபோலவே தான் ‘காங்கிரஸ் எதிர்ப்பு துருப்புச் சீட்டாக’ தமிழர்களிடம் செல்வாக்கு பெறுவதற்கு அவர் ஈழத் தமிழர்களின் பிரச்சினையை ஓட்டுக்காக பயன்படுத்தினால் ஆதரிக்க முடியாது. கூடாது.

நரேந்திரமோடி ஒரு இந்திய ராஜபக்சே!

எதன் பேரினாலும் நரேந்திர மோடியை ஆதரிப்பது தமிழன விரோத ராஜபக்சேவை ஆதரிப்பது போன்றதே.

**

14-9-2013 அன்று எழுதியது. வேறு கட்டுரைகள் பிரசுரிக்க வேண்டியிருந்ததால் தாமதமாக..

தொடர்புடையவை:

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை

bagat பக்தர்களுக்கு கோயில் உள்ளே நுழையவே தடை இருந்தது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ‘பள்ளன்-பறையன்-சாணான்-சக்கிலி நுழையத் தடை’ என்று 70 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வைத்திருந்தார்கள். அதை எழுதி வைத்தது நாத்திகர்கள் அல்ல; முருகனுக்கு நெருக்கமாக இருந்த பக்தர்கள்.
தமிழ்க் கடவுள் ‘பச்சைத் தமிழர்களை’ உள்ளேயே விடல.

பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த நாத்திகர்கள் தான் போராடி அதை அகற்றி, முருகனை வழிபடும் உரிமையை பெற்றுத் தந்தந்தார்கள்.

இதுல, நாத்திகர்கள் கோயில் சொத்துக்களைப் பயன்படுத்த தடையாமா…

**

‘சிவன் சொத்து குலநாசம்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது பக்தர்களிடம். ஆனாலும் பிரபல பக்தர்கள், ஆதினங்கள், சங்கராச்சாரியார்கள் – கொஞ்சம் கூட சிவனிடம் பயமில்லாமல் துணிச்சலா கொள்ளையடிக்கிறார்கள்.
முன்னாள் மந்திரியும் இப்போதும் தீவிர பக்தராக இருக்கிற கம்பன் மீது காதல் கொண்ட ஒருத்தர் திருச்செந்தூர் முருகன் வேலை தூக்கிட்டு போயிட்டாரு என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.

பக்தனாக இருந்து கோயில் சொத்துக்களை கொள்ளையடிக்கலாம். மடத் துறவியா இருக்கிறவன் கோயில் பிரகாரத்திலேயே கொலை செய்யலாம். குருக்களாக இருக்கிறவன் கோயில் கருவறையையே கரு உண்டாக்கும் அறையாக பயன்படுத்தலாம்.
ஆனால், நாத்திகன் முறையாக வாடகை கொடுத்து கோயில் சொத்துக்களை பயன்படுத்தக் கூடாது. நல்லா இருக்கு நியாயம்.

எனக்கு ஒரு சந்தேகம், உண்மையிலேயே யாரு நாத்திகர்?
முறையா வாடகை கொடுக்கிறவனா, இல்லை கோயிலை கொள்ளையடிக்கிறவனா?

சரி. நாத்திகர்கள் கோயில் சொத்துக்களை பயன்டுத்த தடையை எப்படி அமல் செய்வார்கள்? நாத்திகர்களை எப்படி அடையாளம் காண்பார்கள்? அப்படியே அடையாளம் கண்டாலும், தன் குடும்ப உறுப்பினராக இருக்கிற பக்திமான் கோயில் சொத்துக்களை பயன்படுத்த உரிமை இருக்கும்போது அவரிடமிருந்து அல்லது அந்தக் குடும்பத்திலிருந்து நாத்திகர்களை எப்படி தனிமைப் படுத்துவார்கள்?

ஒருவேளை நாத்திகர்களை கோயில் உள்ளே அல்ல, குடும்பத்திடமிருந்தே வெளியேற்றி விடுவார்களோ?

கொலை-கொள்ளை-விபச்சாரம் செய்தவர்கள் கோயில் சொத்துக்கள் மட்டுமல்ல, அரசின் அனைத்து சொத்துக்களையும் பயன்டுத்தத் தடை என்றால் சரி. ஆனால்..

தமிழ் நாடு இந்தியாவிலேயே நம்பர் ஒன்னா வரும். வரும் என்ன… வந்தாச்சு…

**

செப்டம்பர் 13 அன்று.. facebook ல் எழுதியது.

தொடர்புடையவை:

கண்ணதாசனும் கடவுள் ஆகலாம் பச்சை தண்ணியும் போதையாக்கலாம்

கனிமொழியை ‘காப்பாற்றிய’ கடவுள்!

கடவுள் நம்பிக்கையும் முற்போக்கானதுதான்…

நடிகர் சிவகுமார் பெரியார் தொண்டன் காலில் விழ வேண்டாம்

கடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?

இயேசுவே ஆண்டவர்

இயேசுவின் மூன்றாவது வருகை

‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

the  hindu tamilநேற்றைய (16-09-2013) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் பக்கத்திற்கு பக்கம் மோடியின் புகழும், இந்துக் கண்ணோட்டமும் நிரம்பி வழிந்ததை, அடையாளம் கண்டு, இணையத்தில் அம்பலப்படுத்தியன் காரணமாக, இன்றைய (17-09-2013)   ‘தி இந்து’ வில் ஒரு இடத்தில் கூட மோடி பற்றிய செய்தி இல்லை.

மாறாக, தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் முக்கியம் இல்லாத, அல்லது தமிழ் பத்திரிகைக்கு தலைப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாத, உத்திரப் பிரதேசத்தில் தலைப்பாக வரவேண்டிய, .பி. கலவர பூமியில் சிங், சோனியா, ராகுல்’ – ‘பாதிக்கப்பட்டவர்களிடம் நிவாரணத்துக்கு உறுதி.’ என்று காங்கிரஸ் ஆதரவு செய்தி முதல் பக்க தலைப்பாக வந்திருக்கிறது. (பேலன்ஸ் பண்றாங்களாமா! இந்திய செய்திகள் பக்கத்தில் 3 காலம் வரவேண்டியது தலைப்பாக… )

மூடநம்பிக்கைகளை ஒழிக்க அவசரச் சட்டம்’ – ‘இது மகாராஷ்டிர மாநிலத்தில் என்ற தலைப்பில் பகுத்தறிவுக் கட்டுரை வேறு.

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் 135 வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வேளையில்,’ – தி.க. வின் விடுதலை நாளிதழில் வரும் கட்டுரையின் ஆரம்பம் போல் துவங்கிறது ‘தி இந்து’ வில் அந்தச் செய்திக் கட்டுரை.

அது மட்டுமல்ல, குறுக்கெழுத்து போட்டியில் பெரியார் படத்தை வைத்து, போட்டி வேறு. முடியில.

இதெல்லாம் பத்தாதுன்னு, மோடியை விமர்சனம் செய்து ‘ஞாநி’ யின் சிறப்புக் கட்டுரை. (அதுகூட ‘அவுங்க’ கிட்டதான் வாங்கு வாங்க போல.. அதையே நம்ம கொடுத்தா போடுவாங்களா? ஜனநாயகம், கருத்து சுதந்திரம், தேசப்பற்று இதெல்லாம் ராஜாஜி, சுப்பிரமணிய பாரதி, ஞாநி இவுங்ககிட்டதானே ஏராளமா இருக்கு.)

நேத்து, அவசர அவசரமா ‘ஞாநி’ யை எழுதச் சொல்லி வாங்கியிருப்பாங்களோ?

அது எப்படி புதுசா டி.வி வந்தாலும், பத்திரிகை வந்தாலும் ‘டக்’ னு ஞாநி போன்றவர்களிடம் கருத்து வாங்கி வெளியிடுறாங்க.

இவுங்களா வாய்ப்புக் கேட்டுப் போறங்களா, அவுங்களா தேடி வர்றாங்களா?

நாம கதை சொல்றதுக்கு முன்னாடி.. அடச்சே..  கட்டுரை எழுதறதுக்கு முன்னாடி அத கண்டுபுடிக்கணும்.

**

இன்று (17-09-2013) மாலை 3 மணியளவில் facebook ல் எழுதியது.

தொடர்புடையது:

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

Lord Vishnuதினமலரும் தினமணியும் கலந்து செய்த கலவை. தமிழில் இன்னொரு ‘இந்து’ நாளிதழ்.

‘தமிழால் இணைவோம்’ எதுக்கு ‘மோடி’யை பிரதமராக்கவா?

‘இந்து’ வாக இணைந்து கொண்டு ‘தமிழால் இணைவோம்’ என்று பொருந்தா வசனம். ஆனாலும் இந்த தமிழ்த் தேசிய ‘டச்சஸ்’ ‘சிச்சுவேசனுக்கு’ப்  பொருத்தமா, நல்லா ‘எடுப்பா’ இருக்கு.

‘தமிழர்கள் இந்து’ அல்லது ‘இந்துக்கள் தான் தமிழர்கள்’ என்கிற இந்த அடையாளம்; ஏற்கனவே பல தமிழ்த் தேசியவாதிகளிடம், உள் அரசியலா ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்கு ‘தோதா’ இந்த ‘இந்து’ தமிழ் தாத்தா.

‘அரசுப் பேருந்துகளில் குடிநீர் ரூ. 10க்கு ஒரு லிட்டர் பாட்டில்’ இது நேற்று தலைப்பாக பல நாளிதழ்களில் வந்த செய்தி. ஆனாலும் முதல் நாள் முதல் தலைப்பு பழைய செய்தியாக இருந்தாலும் ‘தமிழக அரசுக்கு ஆதரவான செய்தியாக இருக்க வேண்டும்’ என்கிற அந்த உணர்வு, செய்திகளை முந்தி தருகிற வேகத்தையும் ‘தி இந்து’ வின் நடுநிலையையும் ‘பச்சை’ யாக அடையாளம் காட்டுகிறது.

இந்துவின் ‘இந்து’ உணர்வையும் முதல் நாள் இதழிலேயே, பக்கத்து பக்கம் மோடியை பிரதமராக்க வேண்டும் என்கிற அந்த ‘இந்து’க் கனவையும் ஒரு ‘பருந்து’ பார்வையில் பார்போம்:

முதல் பக்கத்தில், ‘சிறைக்குள் செல்போன்!’ செய்திக் கட்டுரை இப்படி தொடங்குகிறது. ‘அந்தப் புகைப்படத்தில் இருப்பது ராஜிவ் கொலைக் குற்றவாளி முருகன்தான். அதில் சந்தேகப்படுவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை’ என்று துவங்கி, ‘இவை எல்லாம் குற்றாலம் விருந்தினர் விடுதியில் எடுக்கப்பட்ட குதூகலப் புகைப்படங்கள் இல்லை.’ என்று வர்ணிக்கிறது.

குற்றால விருந்தினர் விடுதியில் இருப்பவர்களை விட சிறையிலிருப்பவர்கள் அதுவும் ராஜிவ் கொலைக் குற்றவாளிகளாக இருப்பவர்கள் மிகுந்த உல்லாசமாக இருக்கிறார்கள் என்கிறது ‘தமிழால் இணைவோம்’ என்கிற ‘இந்து’.

அடுத்து அதற்கு கீழ் ‘பா.ஜ.க. நோக்கி.. எடியூரப்பா புதுக் கணக்கு’ என்ற செய்தி கட்டுரைக்கு ஹைலைட்டாக, ‘தனிக்கட்சி தொடங்கியதால் பலன் ஏதும் இல்லை என்பதை உணர்ந்துள்ள எடியூரப்பா, பா.ஜ.க.வோடு கைகோத்தால்தான் ‘தலை தப்பிக்கும்’ என எண்ணுகிறார். மோடியின் கை வலுப்பதும் இதில் ஒரு காரணம்’ என்று உளவியல் மருத்துவரைப்போல் எடியூரப்பா மனுசுக்குள் புகுந்து மோடியின் புகழ் எழுதப்பட்டிருக்கிறது.

2 ஆம் பக்கத்தில் ‘இன்றுதான் மலேசியா உதித்தது’ என்ற தகவலில், ‘பிற்பகுதியில் மலேசியா ஸ்ரி விஜயப் பேரரசின் ஆட்சின்கீழ் இருந்திருக்கிறது. பதினைந்தாம் நுற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள், ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசனான பரமேஸ்வரன் மலாயத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர ராஜ்ஜியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியத்தை நிறுவினான். பரமேஸ்வரன் முஸ்லிமாக மதம் மாறினான். இக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமயம் தீவிரமாக பரவியது’

‘ஆதாரத்தோடு’ மலேசியா பூர்வீகத்தில் இந்து மன்னனால் ஆளப்பட்ட இந்து நாடு என்று நிறுவ முயல்கிறது மதசார்பற்ற அகண்ட இந்து ராஜ்ஜியத்தை விரும்புகிற ‘இந்து’.

3 ஆம் பக்கத்தில், ‘ஜெயலலிதாவுடன் சோ திடீர் சந்திப்பு’ செய்தியில், ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், தன்னுடன் சுமுகமான உறவைப் பேணிவரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தனது கட்சிக்கு ஆதரவு தரக்கோரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.’ என்று தன் விருப்பத்தை ‘சோ’ வுக்கே யோசனை சொல்லியிருக்குமோ என்கிற அளவிற்கு ‘இந்து’ கருத்து சொல்கிறது.

அதற்குக் கீழ், ‘களைகட்டிய ஓணம் பண்டிகை’ தலைப்பில்… ‘ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னையில் என்ன சிறப்புகள் ஏற்பாடாகியிருக்கிறது..’ என்ற செய்தியாக இருக்கும் என்று பார்த்தால்.. அது மகா விஷ்ணுவின் பெருமையை, புகழை செய்தியாகவே சொல்கிறது. ஒரு புராணக்  கதையையே செய்தியாக வெளியிட்ட பெருமை தமிழ் இந்துவுக்குதான் சேரும்.

நடந்த எதையும் அதுபோலவே செய்தியாக மட்டும் வெளியிடாமல், அந்த செய்தியின் மீது தன் அரசியலை கருத்தை ஏற்றி வெளியிடுகிறது ‘இந்து’. இதுக்கு பெயர்தான் செய்தியில் நேர்மை.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவிற்கு ஆப்கான் மன்னன் அமீர் வந்தபோது, அவனை வரவேற்று பாரதியார் செய்திக் கட்டுரை எழுதினார்:

‘டில்லியில் பக்கிரீது பண்டிகைக்கு (ஆப்கான் அமீரை) மகமதியர்கள் அழைத்தார்கள். அப்போது முகமதியர் பசுக்களைக் கொல்லும் பஷத்தில் தாம் வரமுடியாதென்று அமீர் சொல்லிவிட்டார். பசுக்களை வெட்டுவது ஹிந்து ஜனங்களுக்கு மனஸ்தாபம் உண்டுபண்ணக் கூடுமாதலால் அதற்கு பதிலாக ஆடுகைள வைத்துக்கொண்டால் மட்டுமே தாம் வரக்கூடுமென்று அமீர் தெரிவித்தார். ஹிந்து ஜனங்களுக்கும் மகமதியர்களுக்கும் எவ்விதத்தாலும் மனஸ்தாபமிகுதியடையலாகதென்ற விஷயத்தில் இவருக்குள்ள அபிப்பிராயத்தை எல்லா முகமதியர்களும் நன்கு தெரிந்து கொண்டு நலம் பெறுவார்களென் நம்புகின்றோம்.’ – பாரதி.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்போடு வாழவதென்றால் எப்படி அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை அன்றே குறிப்பால் உணர்த்தினார் பாரதி. அதே பாரதியின் பாணியில்,

4 ஆம் பக்கத்தில், ‘விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம் இளைஞர்கள்’ என்ற செய்தியில் ‘திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலை பெரிய மசூதி தெருவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம் இளைஞர்களும் கலந்து கொண்டு, விநாயகர் சிலை முன்பாக ஆட்டத்துடன் சென்றனர்.

மேலும், அவர்கள் வடிவமைத்திருந்த விநாயகர் சிலை கையில் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தப்படி இருந்தது.’ என்று நவீன பாரதியாக ‘இந்து’ செய்தி வெளியிட்டிருக்கிறது.

12 ஆம் பக்கத்தில், ‘மோடியின் இலக்கு 272’ என்ற செய்தியில், ‘எப்போதும் விறைப்பான நடை, உடை, பாவனைகளுடன் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் எவ்வாறு இருக்க முடிகிறது என்ற கேள்வி  அவரைப் பார்க்கும் அனைவருக்கும் எழுவது இயல்பானதுதான். தான் அணியும் உடையும் தனது கம்பீரத்துக்கு ஏற்றவகையில் அவர் தேர்ந்தெடுக்கிறார். உடை விஷயத்தில் அவருக்கு மிகுந்த அக்கறை உணடு. இளைஞராக இருந்தபோது, ஏழ்மையான சூழ்நிலையிலும் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தனது உடையை இஸ்திரி செய்துகொள்வாராம்.’

எல்லோரும் சுடு தண்ணிலதான் இஸ்திரி பண்ணுவாங்க ஆனால் மோடி தண்ணிரிலேயே அதை செய்திருக்கிறார். ‘இந்து’ தருகிற பெருமைமிகு இந்த அரிய தகவலை படிக்கும்போது, நமக்கே ‘மோடிக்கு ஓட்டுபோடலாமே’ என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இந்த அரிய செய்தியை எழுதுனவரு பெயர் ஏகலைவன். ‘விதுரன்’ என்றால் பொருத்தமாக இருந்திருக்கும்.

16 ஆம் பக்கத்தில், ‘புதையும் வரலாறு’ என்ற தலைப்பில் சமஸ் என்பவர் ஒரு Assignment செய்திருக்கிறார். அதில் அதிரடியாக, ‘இந்தியாவின் வரலாறு எங்கே ஒளிந்திருக்கிறது? கொஞ்சம் வரலாறு தெரிந்தால், சிறுவர்கள்கூட சொல்வார்கள்… ‘கோயில்களில்’ என்று.’ துவங்குகிறார்.

‘கோயில்களில் ஒளிந்திருக்கிறது’ என்கிறார். பிறகு ‘கொஞ்சம் வரலாறு தெரிந்தால், சிறுவர்கள்கூட சொல்வார்கள்…’ என்கிறார். அப்புறும் எப்படி அது ‘ஒளிந்திருக்கிறதாக’ அர்த்தமாகும்? ‘ஒளிந்திருந்த வரலாறு’ என்று சொன்னாலாவது சரியாக இருக்கும்.

ஆனால், கோயில்களில் ஒளிந்திருந்த வரலாறு கொலைக்கார வரலாறு. மன்னர்களும் பிரபுக்களும் பார்ப்பனர்களும்; உழைக்கும் மக்கள், பெண்கள் மேல், சமண, பவுத்த சமயங்களின் மேல் நடத்திய அந்தக் கொலைக்கார வரலாற்றை, வீதியில் இழுத்து வந்து அம்பலப்படுத்தியது பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் மார்க்சிய ஆய்வாளர்களும்தான்.

செய்தியாளரோ, இதற்கு நேர் எதிராக, கோயில்களில் ஒளிந்திருக்கிற வரலாறை புனித வரலாறாக பார்க்கிறார்:

‘அண்ணாந்து பார்த்து வணங்கிய நம் கோயில்கள் எல்லாம் இப்போது தலைகுனிந்து பார்க்க வேண்டிய நிலையை நோக்கிச் செல்ல என்ன காரணம்? எளிய பதில்: வளர்ச்சியின் பெயரால், அறியாமையால் நாம் ஆடும் ஆட்டம்.’ என்கிறார்.

‘அறியாமை’ என்றால் என்ன? ‘நாம்’ என்பது யார்? என்பதற்கு அவர் விடை தேடியிருந்தால், அதை படிக்கிற நம்மையும் அவருடன் கூட்டு சேர்த்திருக்க மாட்டார்.

கடைசியல் அதற்கு தீர்வாக சொல்ல வருகிற சம்ஸ்,

‘மறைந்த எழுத்தாளர், சுந்தர ராமசாமி சொல்வார்: “இல்லாமைகூடப் பிரச்சினை இ்லை. அது இல்லை என்கிற பிரக்ஞைகூட நம்மிடம் இல்லை என்பதுதான் பெரிய பிரச்சினை” என்று.’

எழுத்தாளர் கேள்விப் பட்டிருக்கிறேன் அது என்ன ‘மறைந்த எழுத்தாளர்?’ Invisible Man ஆ சுந்தர ராமசாமி? அவரு சொன்னதா இவுரு சொல்றாரே அது அவரு சொந்தமா சொன்னது இல்ல. சுப்பிரமணிய பாரதி சொன்னது,

‘கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இதுவெனும் அறிவுமிலார்’ இதான் அது.

சுந்தர ராமசாமி சொன்ன ‘பிரக்ஞை’ என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு  நடிகர் விசு பாணியில் சிலம்பம் விளையாடி இருக்கிறார் ‘இந்து’ செய்தியாளர்:

‘எப்படி பிரக்ஞை இல்லாமல் சாலைகள் அமைக்கப்படுகின்றனவோ, எப்படி பிரக்ஞை இல்லாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ அப்படியே நம் யாருடைய பிரக்ஞையும் இல்லாமல் மண்ணுக்குள் புதைகிறது வரலாறு.’

அதுபோல் இந்த Assignment ம் படிக்கிறவங்களோட பிரக்ஞை இல்லாமல் முடிகிறது.

முதல் நாள், ஒரே நாள் இதழிலேயே.. அதுவும் மேலோட்டமாக வாசித்ததற்கே இவ்வளவு என்றால்…?

**

பார்ப்பன, பார்ப்பன மனோபாவம் கொண்ட அறிவாளிகளுக்கு இன்னுமொரு அட்சய பாத்திரம் தமிழ் இந்து. ‘தினமணி’ யுடன் – ‘தமிழ் இந்து’ விலும் இனி சிறப்புக் கட்டுரைகள் எழுதி, ‘இந்து தமிழர்’ களின் அறிவை விரிவாக்கலாம்.

எது எப்படியோ, சரியான நேரத்திற்குதான் ‘தமிழ் இந்து’ வந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவாக இன்னொரு ‘இந்து’ பத்திரிகை.

‘மவுண்ட்ரோடு மகா விஷ்ணு’ தமிழில் பேசினால் மட்டும், பார்ப்பனியத்தை பேசாமல் பகுத்தறிவா பேசுவாரு?

**

இன்று (16-09-2013) காலை 8 மணியளவில் facebook ல் எழுதியதின் விரிவு.

தொடர்புடையவை:

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

நரேந்திர மோசடி

பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

????????????????டென்னிஸ் போட்டியில் விளையாடும் ஆண்களின் படங்களை mid angle அல்லது mid Shot படங்களாக வெளியிட தெரிந்திருக்கிற பத்திரிகைகளுக்கு,

அதே டென்னிஸ் போட்டியில் விளையாடும் பெண்களை low angle, high angle படக் காட்சிகளாக மட்டும் ‘தேர்தெடுத்து’ கவர்ச்சி நடிகைகளை விட மிக மோசமாக,  ஜட்டி தெரிவது போலவும், மார்பகங்கள் தெரிவது போலவும் ‘விளையாட்டு’ படங்களின் மூலமாக கூட வாசக ஆண்களுக்கு ஆண்மையை தூண்டும் படங்களை வெளியிடும் பத்திரிகைகள் எழுதுகின்றன;

‘பெண்கள் பாலியல் வன்முறையிலிருந்து தப்ப கண்ணியமாக உடை உடுத்த வேண்டும். பாலியல் வன்முறை செய்யும் ஆண்களை தூக்கில் போடவேண்டும்.’ என்று.

தொடர்புடையவை:

பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

செல்போனில் பெண்கள்….

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

‘அப்புறமா.. செவ்வாய் கிரகத்தில் வாழலாம்;அதற்கு முன் இப்ப இங்க செத்து செத்து விளையாடலாம்’

mars-one-brian
வைகுண்டம், சிவலோகம் வழியாக சொர்க்கத்தை கடந்து, பரலோகம் பக்கத்தில் செவ்வாய் கிரகத்தில் குறைந்த விலையில் வீட்டு மனை. (சென்னை கண்ணம்மா பேட்டையிலிருந்து‘ம்’ நேரடி போக்குவரத்து வசதியுண்டு.)
*

‘செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம்.’

இந்திய விஞ்ஞானிகள்.

அது சரி. இங்கேயே வாழ முடியல. போயிட்டாங்க… செவ்வாய் கிரகத்துக்கு. விலைவாசி உயர்வால் சோத்துக்கு இல்லாமல் சாக வேண்டியுள்ளது. அப்படியே சோறு கிடைச்சாலும், ஜாதி வெறி, மத வெறி தாக்குதல்களில் தப்ப முடியல. கடல்ல மீன் புடிக்க போனா சுட்டுக் கொல்றான். மழை, பனி காலங்களில் ஒதுங்குவதற்கு சின்ன இடம் கூட இல்லாமல் கை குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் குளிர் நடுக்கத்தில் சாகிறார்கள். பெண்கள்; சிறுமிகளாக இருந்தாலும் 90 வயது கிழவியாக இருந்தாலும் பாலியல் வன்முறை செய்து கொலை செய்கிறார்கள்.

அதுக்கு பஞ்சாயத்து பேசுறவன் குழந்தைகளையும் கிழவிகளையும் குற்றவாளியாக்கி, ‘மொதல்ல நீங்க ஒழுங்கா டிரஸ் பண்ணுங்க..  கவர்ச்சியா உடை உடுத்தாதிங்க’ என்று தீர்ப்பு வழங்குறான்.

ஒருவேளை ‘செவ்வாய் கிரகத்துலேயும் நல்லா வாழலாம்’ என்று முடிவுக்கு வந்தாலும், இங்க எவனெல்லாம் அடுத்தவனைக் கெடுத்து நல்லா வாழறானோ அவன்தான் அங்கபோயும் வாழ்வான்.

இதில் செவ்வாய் என்ன திங்கள் என்ன?

தொடர்புடையது:

போலி மருந்து:பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை குடி வைச்சக் கதை