ஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர்…

stalin-kissஇன்று (5.9.2013) காலை 7.15 மணிக்கு தஞ்சையிலிருந்து இனிய நண்பர் ரவிச்சந்திரன் செல்போனில். அவர் தமிழாசிரியரும்கூட ‘இன்றைய தினத்தந்தியில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையை குடந்தை பாலு என்பவர் எழுதியிருக்கிறார். அதில் ரஷ்ய அதிபர் ஸ்டாலின் பற்றிய செய்தி வந்திருக்கிறது. அதை பாருங்கள் என்றார். பார்த்தேன்:

 ‘ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவரை மருத்துவமனையில் சென்று பார்த்த ராதாகிருஷ்ணன், அவரை அன்புடன் வருடிக் கொடுத்தார். உலககையே நடுங்க வைத்த ஸ்டாலின் கண்களில் கண்ணீர் பெருகியது. ‘என்னை மனிதன் என்று எண்ணிப்பழகிய முதல் மனிதர் நீங்கள்தான்’ என்று நெகிழ்ந்தார் ஸ்டாலின்.’ என்று குடந்தை பாலு என்பவர் ராதாகிருஷ்ணனுக்கு கைகுட்டை எடுத்து கொடுத்தவர் போல் எழுதியிருக்கிறார்.

ஒரு இந்தியத் தூதர் என்கிற முறையில் ராதாகிருஷ்ணன், ஸ்டாலினை சந்தித்தார். நலம் விசாரித்தார் என்றால் நம்ப முடியும். ஆனால், பிம்சிங், கே.எஸ். கோபாலகிருஷ்ணன் படத்தில் வருவதுபோல் கண்ணீர் மல்கும் சென்டிமெண்ட் சீன்போல் எழுதினால்?

// உலகையே நடுங்க வைத்த ஸ்டாலின்// என்கிறார் பாலு. ஸ்டாலினா உலகையே நடுங்க வைத்தார்? உலகை நடுங்க வைத்த ஹிட்லரிடமிருந்து உலகை காத்தவர் ஸ்டாலின்.

மார்க்சிய லெனினிய சிந்தனைகளில் ஊறியவரும் தத்துவ தெளிவும் அறிவியல் கண்ணோட்டோத்தோடு அனைத்தையும் பார்த்த ஸ்டாலின்;

உழைக்கும் மக்கள் அரசியல் பற்றி எந்த தத்துவ தெளிவுமற்ற இந்து ஆன்மீகவாதியான ராதாகிருஷ்ணன் போன்ற பதவி மோகிகள் சொன்ன ஆறுதலுக்கு ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார் என்பது எவ்வளவு பெரிய பொய்.

அது பொய்தான் என்பதற்கு சாட்சியாக அதிலேயே, ‘என்னை மனிதன் என்று எண்ணிப்பழகிய முதல் மனிதர் நீங்கள்தான்’ என்று ஸ்டாலின் சொன்னதாக ராதாகிருஷ்ணன் சொன்னாரோ இல்லியோ குடந்தை பாலு சொல்கிறார்.

தலைவர் ஸ்டாலினுக்காக தன் உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்கு கம்யுனிஸ்ட் கட்சியில் மட்டுமல்ல, ரஷ்ய மக்களும் தயாராக இருந்தார்கள். உலகெங்கிலும் உள்ள கம்யுனிஸ்டுளின் அன்பிற்கு உரிய தலைவர் ஸ்டாலின், ஏதோ அநாதைபோல் இருந்ததாக சித்தரிக்கிறது அந்த வரிகள்.

இது எப்படி இருக்கிறது என்றால், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் ஈழத்துக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ‘தைரியம்’ சொன்னார்கள், என்பதுபோல்.

**

தனது பள்ளிப் படிப்பை ‘லூத்தரன் மிஷன் உயர் நிலைப் பள்ளியிலும்’ தனது பட்டப் படிப்பை வேலூர் ஊரிஸ் கல்லூரியிலும், சென்னை தாம்பரத்திலுள்ள கிறிஸ்துவர் கல்லூரியிலும் பயின்று, இந்து தத்துவங்களின்மேல் அளவு கடந்த ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார் ராதாகிருஷண்ன்.
(‘ஆரம்பத்தில் கிருத்துவ மிஷனரிகள், பார்ப்பனர்களை மதம் மாற்றி விட்டால், அவர்களைப் பார்த்து மற்ற ஜாதியினரும் கிறித்துவத்திற்கு வந்துவிடுவார்கள் என்று தனது கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களுக்கே முக்கியத்துவம் தந்தார்கள். ஆனால் பார்ப்பனர்கள் மிஷனரிகளை ஏமாற்றி விட்டார்கள்’ என்பார் டாக்டர் அம்பேத்கர்.)

இந்தியாவின் மிகப் பெரிய படிப்பாளியான டாக்டர் அம்பேத்கர், இந்து வேதங்களை, இதிகாசங்களை, புராணங்களை, மனு தர்மத்தை அம்பலப்படுத்தி அது பார்ப்பன மேன்மையும் நாலு வர்ணமும் ஜாதி வெறியும் கொண்டது என்று உலகெங்கும் பிரச்சாரம் செய்து அம்பலப்படுத்திக் கொண்டிருந்த அதே நாட்களில்,

நிறைய படித்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்.  ‘இந்தியா என்றால் இந்து. இந்து என்றால் இந்தியா’ என்பது போல் உலகெங்கும் இந்து மத வேதங்களை, புராணங்களை, இதிகாசங்களை இந்திய தத்துவங்களாக பிரச்சாரம் செய்தவர். அதனாலேயே அவர் தத்துவமேதை என்று கொண்டாடப்பட்டவர்.

அவர் ஆசிரியராகவும் வேலை பார்த்தவர். அவரின் பிறந்தநாளை தான் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறார்கள். அவர் பெரிய தத்துவமேதை என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் சொந்தமாக என்ன தத்துவம் சொன்னார் என்பதை மட்டும் இன்று வரை யாரும் சொல்லவில்லை.

ஆனால், ஒரு முறை அவர், ‘எவ்வளவோ எதிர்ப்புகளைத் தாண்டியும் இந்துமதம் பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அதை அழிக்க யாராலும் முடியாது. அது மிக புனிதமானது’ என்ற தத்துவத்தை உதிர்த்தார்.

அதற்கு தந்தை பெரியார் இப்படிக் கேட்டார்,
‘பல எதிர்ப்புகளுக்கு பிறகு பல ஆண்டுகளாக  உயிருடன் இருப்பதனாலேயே ஒரு விசயம் உயர்வாகி விடுமா? கொசு, மூட்டை பூச்சி போன்றவைகள் கூட பல எதிர்ப்புகளுக்கிடையே பல்லாயிரம் ஆண்டுகளாக உயிருடன் இருக்கிறது. அவைகள் எல்லாம் இந்து மதத்தை விட புனிதமானதா?’

பெரியார் கேட்ட கேள்விக்கு தத்துவமேதை ராதாகிருஷ்ணனிடம் பதில் இல்லை. இன்றுவரை பெரியாரின் அந்தக் கேள்வி, அப்படியேதான் இருக்கிறது.
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் அது அப்படியேதான் இருக்கும்.

voc‘இந்தியா’ துரோகிகளின் தேசம். துரோகிகள் துரோகிகளைத்தான் கொண்டாடுவார்கள் என்பதுபோல், துரோகம் செய்தவர்களை தியாகிகளாக போற்றுவதும் தியாகிகளை துரோகிகளாக சித்தரிப்பதும், புறக்கணிப்பதும் பிறகு வீரவேசமாக நாட்டுப் பற்று பற்றி பேசுவதும் இந்திய சிந்தனை மரபு.

ஆம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியதை எதிர்த்து அர்பணிப்போடு போராடிய வ.உ.சி யின் 142 ஆவது பிறந்த நாள் இன்று. ஆசிரியர் தினத்தில் மறக்கடிக்கப்பட்டது.

5.9.2013 எழுதியது.

தொடர்புடையவை:

இதுதான் அறிவு நாணயமா?

ஸ்டாலினும் பெரியாரும்

6 thoughts on “ஆசிரியர் தினம்: ராதாகிருஷ்ணனின் கருணையும் ஸ்டாலினின் கண்ணீரும்; பெரியார்-டாக்டர்…

  1. இப்படி தான் நம் படித்த சமூக “இளம்” சிந்தனையாளர்கள் பார்பனர்களை தூக்கி பிடித்து,பாராட்டி மகிழ்ச்சி அடைகிறார்கள். சமூக வரலாற்றை அறியாமல்
    facebook ல்
    https://www.facebook.com/SasidharanGS
    சசிதரன் என்பவர் பதிவு, இவர்களுக்கு முதலில் இருந்து பாடம் நடத்துவது யார்? இந்த கேள்விக்கு நமது வீரமிக்க சிந்தனையாளர்கள் பதில் சொல்ல முடியாமல் தவிப்பு. இதையே கேள்வியாக்கி நீங்கள் பதில் தந்தால் நன்றாக இருக்கும்.இதற்கு முன்பே பலவாறு இதுபோன்ற கேள்விகளுக்கு நீங்கள் விரிவாக பதில் எழுதி இருக்கிறீர்கள், இருப்பினும் உங்கள் எழுத்தில் உள்ள வீரியம் மீண்டும் நம் சமூகத்திற்கு பயன்உள்ளதாக இருக்கட்டுமே…….
    ” சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90 க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினருக்கு தந்தவர் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் “உ. வே. சாமிநாதன்” என்பவர் பார்பனர், தமிழையே தன் உயிர் மூச்சாக நினைத்த “பாரதி” ஒரு பார்பனர்.சோழர்களின் வரலாறு மட்டுமலாமல் பல தமிழர்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்த நீலகண்ட சாஸ்திரி ஒரு பார்பனர். இது போன்று ஏகப்பட்ட நல்ல உள்ளங்கள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுபட்டுள்ளது. இவர்களை எல்லாம் மட்டும் ஏன் பார்பனர்கள் என்று ஒதுக்கவில்லை?”

  2. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் ஈழத்துக்குச் சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ‘தைரியம்’ சொன்னார்கள், என்பதுபோல்.))))))))))

    அட்டைக்கத்திக்கு அட்டைக்கத்திகள் தானே ஆலோசனை தர முடியும். . வீணா போனவருக்கு வீணா போனவன்ங்க தானே ஆலோசனை தர முடியும். .

  3. இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், “எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்” என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1087&cat=9

Leave a Reply

%d bloggers like this: