பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

????????????????டென்னிஸ் போட்டியில் விளையாடும் ஆண்களின் படங்களை mid angle அல்லது mid Shot படங்களாக வெளியிட தெரிந்திருக்கிற பத்திரிகைகளுக்கு,

அதே டென்னிஸ் போட்டியில் விளையாடும் பெண்களை low angle, high angle படக் காட்சிகளாக மட்டும் ‘தேர்தெடுத்து’ கவர்ச்சி நடிகைகளை விட மிக மோசமாக,  ஜட்டி தெரிவது போலவும், மார்பகங்கள் தெரிவது போலவும் ‘விளையாட்டு’ படங்களின் மூலமாக கூட வாசக ஆண்களுக்கு ஆண்மையை தூண்டும் படங்களை வெளியிடும் பத்திரிகைகள் எழுதுகின்றன;

‘பெண்கள் பாலியல் வன்முறையிலிருந்து தப்ப கண்ணியமாக உடை உடுத்த வேண்டும். பாலியல் வன்முறை செய்யும் ஆண்களை தூக்கில் போடவேண்டும்.’ என்று.

தொடர்புடையவை:

பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

கடலை மன்னர்களின் உருவ வழிபாடு

செல்போனில் பெண்கள்….

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

17 thoughts on “பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

 1. ஒரு ஆன் ப்ரீ சைஸ் டி சர்ட்டும்,முக்கால் பேண்ட்டும் அணிந்து விளையாடி வெற்றி அடையும் போது.. பெண்கள் மட்டும் அப்படி அணியாமல் தன உள்ளாடையை காண்பித்தும் உள் உறுப்புக்களை காட்டியும் விளையாடினால் தான் வெற்றி பெற முடியுமா ? இன்னும் சொல்லப்போனால் இந்த உடைஅவர்களுக்கு அசவ்காரியமாகவே இருக்கும் . அவர்களின் கவனத்தை திசை திருப்பவே செய்யும். அதே போல் ஒரு ஆன் முழு கை சட்டையும், முழு கால் பேண்டும் அணிந்து கொண்டு முகத்தை மட்டும் தெரியும்படி எல்லா துறைகளிலும் வெற்றி பெரும்பொழுது பெண்கள் மட்டும் தன மார்பகங்களையும், இடுப்பையும், தொடைகளையும் தெரியும்படி உடை அணிந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா ? ஒரு பெண் ஆண்களை போல் முகத்தை மட்டும் தெரியும்படி உடை ( புருக்கா) அணிந்து எல்லா துறைகளிலும் வெற்றி பெற முடியாதா ? இதை சொன்னால் முஸ்லீம்கள் காட்டுமிராண்டிங்க பெண்களை கொடுமை படுத்துரானுங்கன்னு சொல்லுகிறார்கள். என்ன உலகமையா இது ?

 2. முன்னா அவர்களே…
  பெண்ணானலும் ஆணாலும் உடை அணிவது அவரிளின் தனிப்பட்ட சவுகரியம்.

  அதை கேட்க அடுத்தவர்க்கு உரிமை இல்லை. குறிப்பிட்ட இடங்களில் சில வழிகாட்டுதல்களை/கட்டுபாடுகளை வைக்கலாம். .. அதுவும் எந்த அளவு சரிப்படும் என்ப்தை சொல்ல இயலாது. உத.. பள்ளி கல்லூரி சீருடை…

  மதிமாறன் சொல்வதில் உடன்படுகுறேன்.. இது பத்திரிக்கைகள் பெண் என்றாலெ துளையாக மட்டும் நினைத்து செய்யும் பாலியல் வன்முறைதான்.

  ஆனால் விளையாடுபவர்களைபொறுத்தவரை உடை என்பது கூடுதல் சுமையே…
  சும்மா இருந்தாலும் நடந்தாலுக் இது தெரியாது.. ஆனால் டென்னீஸ் போன்ற விளையாட்டுகளில்.. நிச்சயம் கையில் கட்டும் ஒரு ரிப்பன் கூஎனக்க்டசுமையாகவே தெரியும். இதை நீங்கள் கிராஸ் செக் வேண்டுமானாலும் செய்யலாம்.

  ஆனால் புர்கா கோமாளித்தமானது… அதை ஏன் கொண்டுவந்து இங்க நுழைக்கிறீங்க? எது சவுகரிம் என்பதற்கு விவஸ்தை வேண்டாமா…

  1300 ஆண்டுக்கு முன் இருந்த விஷயத்தை.. அப்பட்யேதான் கடைபிடிப்பேன் என்பது யோசிப்பவர் செய்யும் செயலா?

  இசுலாம் மட்டுமல்ல இந்து, கிருத்தவம், எதுவானாலும் இன்றைய நடைமுறைக்கு எது சரிவருமோ அதை மட்டும் எடுத்துகோன்டு மற்றவற்றை ஒதுக்க வேண்டும்.

  அதை விடுத்து… இப்படி.. புர்காவை தூக்கிகொண்டு ஒடினால் .. உங்களையே .. ஏன் இசுலாமையே வெறுத்து ஒதுக்கிவுடும்.. காலம்..

  எனக்கென்னவோ.. எல்லா மதமும் ஒழிந்தால் தேவலாம் போல இருக்கு.

  நாமெல்லாம் பின்னுட்டதையே பல பக்கம் போடுரோம்.. இவரு.. பதிவையே.. பஸ் டிக்கடுல எழுதிர சைசுல போடுரரு..

 3. ஆண்களுக்கு மட்டும் முக்கால் பேண்டும், டி சர்ட்டும் சுமையாக தெரியவில்லை உங்கள் மூளைக்கு … ஆனால் பெண்களுக்கு மட்டும் அந்த உடைகள் சுமையாக தெரிகிறது. இங்கு தான் உங்களின் வக்கிரம் தெரிகிறது.
  ஆன் முகத்தை தவிர மற்ற பாகங்களை மறைத்து எல்லா துறைகளிலும் செயல் படும்போது பெண்களுக்கு மட்டும் அந்த உரிமையை ஏன் மறுக்கிறீர்கள் ? அது புர்கா என்று இல்லை முகத்தை தவிர மற்ற பாகங்களை மறைக்கும் எந்த ஆடையாக இருந்தாலும் சரி.

 4. // … ஆனால் பெண்களுக்கு மட்டும் அந்த உடைகள் சுமையாக தெரிகிறது. இங்கு தான் உங்களின் வக்கிரம் தெரிகிறது.//

  எதிர் கருத்தை எதிரி கருத்தாகவும் எதிர் கருத்துடையோரை எதிரியாகவும் தான் பார்ப்பீர் போல…

  நான் எந்த இடத்தில் பெண்களூக்கும் மட்டும் உடை சுமையாக இருக்கிறது என்று சொல்லி இருந்தேன்

  நான் சொன்னதொல்லாம்..

  //முன்னா அவர்களே…
  பெண்ணானலும் ஆணாலும் உடை அணிவது அவரிளின் தனிப்பட்ட சவுகரியம்.//
  ……….
  //ஆனால் விளையாடுபவர்களைபொறுத்தவரை உடை என்பது கூடுதல் சுமையே…//

  பெண்கள் மட்டுமே விளையாடுகிறார்கள் என்றாவது எங்காவது சொல்லி இருக்கிறேனா?

  அனைத்து விளையாட்டுகளுக்கும் இது போதுவே.. என்றாலும் டென்னீஸ், போன்ற விளையாட்டுகளில் ( டென்னிஸ், வாலிபால், ரிங்க் பால் போன்றவற்றிலும் .. ஆணாலும் , பெண்ணாலும் குறைந்த.. அதுவும் வியர்வை உறிஞ்சும் உடைகளையே அணிவர் என்பதை கவனிக்க…

  இதில் என் வக்கிரம் என்ன தெரிகின்றது? நான் யாரை அய்யா அவிழ்த்து பார்த்தேன்?

  நீர் தான் முகம் தவிர உடல் முழுவதும் மூடவேண்டும் என்ற முகமது நபியின் மொக்கை வாதத்தை திரும்ப திரும்ப கொண்டுவருகிறீர்..

  அதுவும் அதை மிக கவனமாக பெண்ணுக்குமட்டும் என்று சொல்லாமல் பெண் மீது சுமத்துகின்றீர்… நீர் உமது வாதத்தை நியாயமாக வைத்தால் அனைத்து மனிதர்களும், முகம் தவிர அனைத்தையும் மறைக்கவேண்டும்.. இது ஆணாலௌம் சரி பெண்ணாலும் சரி என்றல்லவா இருக்கவேண்டும்..?

  சரி ஆண் அரை குறை உடையில் இருந்தால், காம கிளர்ச்சி வக்கிரம் .. பெண்ணுக்கு வராதா…

  பெண்ணடிமையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பது என்னிடம்ம இல்லை உம்மிடமா ?

  //அது புர்கா என்று இல்லை முகத்தை தவிர மற்ற பாகங்களை மறைக்கும் எந்த ஆடையாக இருந்தாலும் சரி//

  முகத்தை தவிர மற்றவற்றை மறைக்கும் ஆடையுடன்.. குளிர் காலத்தில் வீட்டில் வேண்டுமானல் இருக்கலாம் .. விளையாடி ஜெயிக்க முடியாது..

  இன்னமும் சரியாக் சொன்னால், உண்மையான சுதந்திரம் என்பது தன் விருப்படி உடைஅணிவதும் தான்.

  ஆணோ , பெண்னோ… எந்த உடையுடனும்… ஏன் நிர்வாணமாகவும் விளையாடும் , வாழும் உரிமையில் , புர்காவுடன் இசுலாமின் பெயரிலானலும், சாக்கு பையுடன் சமூகத்தின் பெயரில் தலையிட்டாலும் அது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது..

  மட்டுமல்ல நீர் தெரிந்தோ .. தெரியாமலோ… புர்கா.. முகம் தவிர உடல் மூடும் உடை,, சாக்குபை என்று எதை திணீத்தாலும் அது ஒருபுரம் பெண்ணடிமை தனதை வளர்க்கிறது . தனி மனித சுதந்திரத்துகு எதிரானது மட்டுமல்ல…

  ஆணும் பெண்ணும் இயல்பாக சக உயிரனமாக பழகினால், அப்புரம் பெண்ணை வைத்து ஆணின் ஷேவிங் பிளேடானலும், டிராக்டர் ஆனாலும் , காரானாலும் பெண்ணை முக்கால் நிர்வாணமாக காட்டி செய்யப்படும் விளம்பரம் பயனற்று போகும்.

  ஒரு சேவிங்க் பிளேடை மக்கள் மனத்தில் நிற்க வைக்க.. ஜட்டியுடன் ஒரு பெண்ணை நிற்க வைத்தால் போதும் என்பது அப்புரம் முடியாமல் போகும். இது நடக்காமல் இருக்க பெண் எப்போதும் உடல் மட்டுமல்ல முகம் கூட மூடியே.. இருந்தால் தான் சாத்தியம்.

  மொத்த மீடியாவும் பெண் உடலை மையாமாக கொண்டு இயங்க முடியாது… குறிப்பாக சினிமா.. கவர்ச்சி கன்னி , ஐட்டம் நடிகை, என்பதெல்லாம் முடியாமல் போக்கும்..

  ஆக உமது வாதத்தில்..
  1) பெண்ணடிமை தனத்தை சுமத்துகின்றீர்.
  2) தனி மனித சுதந்திரத்தில் தலையிடுகிறீர்.
  3) முதலாளிகள் தங்கள் பொருட்களின் விளபரத்துக்கும் லாபத்துக்கும், சினிமா மீடியாவுக்கும் பெண் பலியாக..வேண்டும் என்கிறீர்..

  சரிதானே?

 5. நண்பர் வினோத் … உங்கள் வீட்டு பெண்கள் சகோதரியோ மனைவியோ டாப் லெஸ்ஸாக வருவதுதான் ஆண்களை போல் சுதந்திரமாக இருக்கிறது என்றால் அனுமதிப்பீர்களா ? அனுமதி இல்லை என்றால் நீங்கள் நிர்பந்தம் செய்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ?
  ஒரு ஆண் தன வீட்டில் தன சகோதரிகள் தாயார் முன்னிலையில் வெறும் அரைகால் ட்ரவுசரை போட்டுக்கொண்டு சகஜமாக இருக்க முடியும்.இப்படி ஒருபெண் இருக்க முடியுமா?ஆக இயற்கையே உடை அணிவதில் ஆண் பெண்ணுக்கு வித்தியாசம் இருக்கிறது என நமக்கு உணர்த்துகிறது.இப்படி அரை குறை ஆடைகளுடன் பெண்கள் திரிவதால் பெண்களுக்குத்தான் ஆபத்து. எவ்வளவோ ஈவ்டீசிங் பிரச்சனைகளை நாம் செய்திகளில் படிக்கிறோம்.ஒரு ஆணுக்கு இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டதாக நாம் செய்திகளில் படித்ததில்லை.ஒருஆண் அணியும் பேன்ட் முழு கைசட்டை அவன் உடலை எவ்வளவு மறைக்குமோ (முகம் முன் கைகள் தவிர)அதே அளவில்தான் இஸ்லாமிய பெண்களும் மறைக்கிறார்கள்.இப்படி மறைப்பதினால் எந்த ஆணும் தன்னுடைய முன்னேற்றம் தடைப்படுவதாக நினைப்பது இல்லை.இதுவே ஒருபெண் அணிந்தால் இது பெண் அடிமைத்தனம்,கொடுமை செய்கிறார்கள்,இப்படி உடை அணிந்தால் அவளின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று கூப்பாடு போடுகிறார்கள்.அலுவலகங்களில் பெண்கள் தன மார்பு பகுதியை,இடுப்பு பகுதியை தொப்புள் பகுதியை காண்பித்து அலுவல்கள் செய்தால்தான் பெண்கள் முன்னேறமுடியுமா?
  இயற்கையில் ஆண் இனத்தைவிட பெண் இனம் பலவீனமானது என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு ஆண் எந்த மாதிரி உடை அணிந்து சென்றாலும் அவனுக்கு எந்த ஒரு பெண்ணாலும் அல்லது பெண்களாலும் பாலியல் தீங்கு ஏற்படுத்திவிடமுடியாது. ஒரு ஆண் விரும்பி விறைப்பு தன்மை அடைந்து ஒரு பெண்ணோடு உறவு கொள்ள முடியுமே தவிர விருப்பமில்லாமல் விறைப்பில்லாமல் உறவுகொள்ள முடியாது. இதனால் ஆண்களின் உடையை நிர்ணயிக்க பெண்களுக்கு அவசியமில்லை. ஆனால் ஒரு பெண்ணின் நிலை அப்படி இல்லை. அவள் விருப்பப்படவில்லை என்றாலும் ஒரு ஆணோ இல்லை ஆண்களோ அவளை பாலியல் தீங்கு ஏற்படுத்திவிட முடியும்.ஆன் பார்த்தவுடன் கிளர்ச்சி அடையக்கூடிய உடற்பாகங்கள் கொண்டவளாகத்தான் பெண்ணின் இயற்கை உடலமைப்பு இருக்கிறது. ஆணுக்கு அப்படி இல்லை.ஆக பெண்ணுக்கு உடை கட்டுப்பாடு அவசியம் தான். பெண்ணின் நலனுக்காக. சமுதாயத்தின் நலனுக்காக. நன்றி.

 6. முன்னா அவர்களே…
  சில குறிப்புகளை மனதில் வைக்கவும்…

  சமுதாததை பற்றி யோசிக்கும்போது …
  1) சமுதாயம் இப்போ எப்படி இருக்கு… இதன் நன்மை தீமை என்ன..
  2) நன்மை நீடிக்க..தீமை குறைய செய்யவேண்டியது என்ன…
  ==============================================================
  சமுதாயம் இப்போது சமத்துவம் இல்லாமல் இருக்கு.. 80% வசதிகளை 20% மக்களும் .. 20% வசதிகளை 80% மக்களும் பயன் படுத்துகின்றனர்.

  சமுதாயத்தில் 50 சதம் இருக்கும் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தபடுகின்றனர். தனக்கான விஷயத்தை தானே தெரிவு செய்ய வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர்.

  இதை மேற்கண்ட சமன் பாட்டில் பொறுத்தினால் 20% வசதிபடைத்த கூட்டத்தை சேர்ந்த 10% ஆண்களின் கட்டுபாட்டில் உலகம் உள்ளது.

  80% வசதியற்ற மக்கள் மாக்களாக உயிர் வாழ்வதே மிகபெரும் சவாலாக வாழ்க்கைகாக போரடவேண்டியுள்ளது.

  அதில் 40 % மேற்கண்ட போராட்டத்தில் தான் செய்வது என்ன என்று தெரியாமல் போரடுகின்றானர்,

  மீதம் இருக்கும் 40% சதம் பெண்கள்.. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் இரூக்கின்றரர். தமது பிரச்சனைக்கு யார் காரணம் என்பது இவர்க்லுக்கும் புரியவில்லை.

  செய்யும் வேலைக்கு தகுந்த ஊதியமோ அங்கிகாரமோ இல்லை.

  ஆக மொத்ததில் அடக்குமுறையில் பெரும்பாலானவர்க்ள் தத்தளிக்கின்றனர். இதிலிருந்து மீள.. பிரச்சனைகளை சந்திக்கும் அனைவரையும் ஒன்றுபடுத்த வேண்டும்.

  உண்மையில் 80% மக்களும் ஒன்றுபட்டு போராடினால்.. போராட வேண்டாம் .. சவுண்டு கொடுத்தாலே.. போதும் ..

  தானாக கிடைக்கவேண்டியதெல்லாம் கிடக்கும்.

  பெண்விடுதலை, சமூக விடுதலை, சாதிய பிரச்சனை, வர்க்க வேறுபாடு எல்லாம் ஒரே பிரச்சனையின் வேறு வேறு வெளிப்பட்டுகல் தான்.

  ஒன்றுபட்டு மேம்பாட்டுகாக போராட 50% மக்கல் தொகயில் இருக்கும் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது…
  அதுவும் போரட்டதை முன்னேடுக்கும் அடுத்த தலைமுறை வளர்ர்பின் பெண்களின் பங்கு 100%..

  ஆண் பெண் இடையில் இப்படி போராடினால் சக்தி முழுமையும் தேவையற்ற போரட்டத்தில் செலவாகும். உண்மையான போரட்டம் , இல்லாமலே போகும்.

  4 வரியில் இரண்டு செய்திகளை பார்த்தால் சுருக்கமாம புரியும்.
  =======================================================
  செய்தி 1)
  முன்னா.. இன்றைக்கு சமையல் எரிவாயுவின் விலை வீட்டு சிலிண்டர் 450. அரசு மானியம்????? உடன். வெளிக்கடையில் 1500/.

  இனி வரும் காலத்தில் சிலிண்டர் விலை அரசு நிறுவனத்திலேயே.. 1000த்தை தொடும் என்கிறார்கள்….
  ======================================================
  செய்தி 2
  அம்பானி 4000 கோடியில் ஆண்டலியா மாளிகைகட்டி இருகிறார். அவருக்கு குடி நீர் வாரியம் 500000 லிட்டர் நீர் வழங்குகின்ரது..
  =====================================================
  செய்தி 3)
  அரசு 10 ரூப்பாயில் மலிவு விலை குடி நீர் வழங்குகின்தீது

  செய்தி 4)
  ரூபாய் – டாலர் விலை மாறுபாட்டால் பெட்ரோல் லிட்டருக்கு 1.89 உயர்ந்து லிட்டர் 79 ஆனது..

  செய்தி 5)
  கோதவரி நர்மதா பள்ளத்தாக்கில் அம்பானியின் ரிலையன்சு பெட்ரோல், கேஸ் உற்பத்தி நிறுத்தம். எரிவாயுவிற்கு அதிகவிலை கோரிக்கை.
  ======================================================
  இப்போது புரிகிறதா…எதற்காக .. யாருக்காக போராட வேண்டும்.
  எரிபொருள். நீர் எல்லாம் இயற்கை வளம்.. மக்கள் சொத்து. அதாவது உங்களுக்கும் எனக்கும் உரிமைஉள்லது..

  நமது சொத்தை நம்மிடமே விற்கும் வடிவெலு காமெடியை நடைமுறையில் செய்து நம்மை ஓட்டண்டியாக்கி பல ஆயிரம் கோடிகளை பலர் கொளையடிக்கின்றரர்.

  கோதவ்ரி ஆந்திராவில் உற்பத்தியாகும் பெட்ரோல் கேஸ்சுக்கும் டாலர் ரேட்டுக்கும் என்ன சம்பந்தம் ? ஏன் உள் நாட்டு பெட்ரோலை தனியாக விற்காமல் இறக்குமதி பெட்ரோலில் விலையில் வரியுடன் மக்களை சுரண்டுகின்றர.

  உமக்கு புரியவில்லையா?
  உமது வருமானம் போன வாரம் 1 லட்சம் என்றாலும் பெட்ரோல் விலை சுமார் 4 சதம் விலை ஏறும்போது.. உமது 1 லட்சம் என்பது 96 ஆயிரமாக மதிப்பிளக்கிறது .. அதாவது 4% குறைகிறது…

  நீர் கேட்கலாம்.. அது தான் எல்லா விலையும் ஏறுமே எனது வருமானமும் ஏறும் இல்லையா.. என.. அது அப்படி அல்ல.. எல்ல விலையும் தொடர் விளைவாக ஏறி.. அதன் தொடர்ச்சியாக உமது வருமானம் 1 லட்சது 2 ஆயிரம் ஆகும்..

  இப்போது அம்பானியின் வருமானம் 4 சதம் .. சில கோடிகள் கூடி இருக்கும் .. விலைகள் கூடி எல்லாருக்கும் செலவுகள் கூடி.. சொம்பானியின் வருமானம் கொஞ்சம் குறைந்தால் ..உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. திரும்ப பெட்ரோல் விலை உயரும்…

  2 வருடம் முன் பெட்ரொல் 5 வருடம் முன் 25 ரூபாய் .. 2 வருடம் முன் 50 ரூபாய்… யாருக்காவது 5 வருடம் முன் 10 ஆயிரம் வருமானம் இப்போது 40 ஆயிரமாக கூடி இருக்கிறதா?

  இல்லை அப்போது 25 ஆயிரம் இப்போது 1 லட்சம் ஆகி இருக்கிறதா?
  10 ஆயிரம் 13 -15
  25 ஆய்ரம் 28 -30

  இப்படி இருக்கையில் விலை மட்டும் ஏன் இப்படி ? ஏன் அம்பானி ஹெலிக்காப்டர் இறங்கும் வசதியுடன் மாளிகை கட்டுகிறார் என புரிகிறதா?

  இதை எல்லாம் விடுத்து.. பெண்கள் டாலெஸ் காக இருக்கலாம இல்லை ஜட்டி பிரா போடலாமா என்று விடாம்ல பேசுவது எப்படி பட்ட கோமாளித்தனம் ?.
  =====================================

  //…நண்பர் வினோத் … உங்கள் வீட்டு பெண்கள் சகோதரியோ மனைவியோ டாப் லெஸ்ஸாக வருவதுதான் ஆண்களை போல் சுதந்திரமாக இருக்கிறது என்றால் அனுமதிப்பீர்களா ? அனுமதி இல்லை என்றால் நீங்கள் நிர்பந்தம் செய்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ?..//

  பேக் டு பெவிலியன்….ஸ்டார்ட் ஃப்ரம் 00….. திரும்ப திரும்ப நான் சொல்லுறது என்னன்ன…

  நான் சொல்லி இருப்பது சொல்லுவது எல்லாம்…

  //பெண்ணானலும் ஆணாலும் உடை அணிவது அவரிளின் தனிப்பட்ட சவுகரியம்.

  அதை கேட்க அடுத்தவர்க்கு உரிமை இல்லை. குறிப்பிட்ட இடங்களில் சில வழிகாட்டுதல்களை/கட்டுபாடுகளை வைக்கலாம். .. //

  உடை தனி நபர் சுதந்திரம்… அதில் தலையிட அடுத்தவர்க்கு உரிமை இல்லை.
  ஆண் பெண் அனைவருக்கும் இந்த விஷயம் பொருந்தும்..

  எனக்கு மனைவி மகளாக.. தாயாக இருந்தாலும் நான் அவர்களின் உடை உட்பட எந்த சுதந்திரத்திலும் தலையிட கூடாது. சில வழிகாட்டுதல் தரலாம்.. அதுவுமே கூட தேவையற்றது தான். கட்டுபாடு கூடவே கூடாதது .

  டாப் லெஸ் மட்டுமல்ல எந்த விதமான நிர்பந்தமும் கூடாது ..எப்படி உடை அணிவது அல்லது அணிய கூடாது என்று முடிவேடுக்க வேண்டியது அவர்களே.

  கட்டுபாடு செய்தால்.. அதின் விளைவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும். ஒரு வகையில் கட்டுபாடுத்தப்டடுவது வேறு வகையில் வெளிப்படும்பொது அதை நீர் தான் தாங்கிகொள்ல வேண்டி இருக்கும்.

  நீர் யோசிகாமல் ஒரு வகையில் அடக்கினால் குறைந்த பட்சம்..42 இன்ச் டீவி.. 30 ஆயிரம் பட்டுபுடவை என்று கேட்டு அவளும் உம்மை கொடுமை படுத்துவாள் நீரும் தான் நிம்மதி இழப்பீர்.

  அதிக பிரச்சனையை சந்திப்பவர் பக்கத்து வீட்டுகாரருடனோ.. தபால் காரருடனோ ஓடுவதும் .. நீர் அறிந்தது தானே…

  உன் விருப்பபடி சுதந்தீரமாக இரு…இப்படி சொன்னவுடன் அனைத்து பெண்களும் உடனடியாக நிர்வாணமாம நடமாட ஆரம்பித்து விடுவார்களா? எது சரி என்பது தெரியாத முட்டள்களா என்ன?

  10 நாட்களுக்கு முன் கடைக்கு போயிருந்தபோது அங்கு வந்த முஸ்லீம் குடும்பத்தில் பார்த்தல் கையில் தூக்கி வரும் 2 வயது பெண் குழந்தைக்கு புர்க்கா போட்டிருக்கிறார்கள் .. இதை என்ன சொல்லுவது ?

  //ஆக இயற்கையே உடை அணிவதில் ஆண் பெண்ணுக்கு வித்தியாசம் இருக்கிறது என நமக்கு உணர்த்துகிறது.இப்படி அரை குறை ஆடைகளுடன் பெண்கள் திரிவதால் பெண்களுக்குத்தான் ஆபத்து.//

  கொஞ்ச நாளைக்கு டிஸ்கவரி சேனல் பாரும்.. வெப்ப மண்டல் தீவு மக்கள்.. யாரும் இடுப்புக்கு மேல் உடை அணிவதே இல்லை.. ஆன் பென் அனைவரும் டாப்லேஸ் தான்.. அங்கே அனைத்து பெண்களும் 24 மணியும் கற்பழிக்க படுகிறார்களா என்ன ?

  பல மேலை நாடுகளில் நிர்வாண கிளப்புகள் இருக்கின்றன.. வெயில் காய்வதற்காக நிர்வானமாக இருப்பதை ஒய்வு நாளின் ஒரு பகுதியாக வைத்திருக்கிறவர்கள் மத்தியில் இத்தனை விரசமும், சதை வியாபாரமும், கற்பழிப்பும் இல்லை.

  உமது கருத்துபடி மூடுவதால் பாதிப்பு அதிகரிக்கும் என்பதற்கு இதுவே அத்தாட்சி..

  //இப்படி உடை அணிந்தால் அவளின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என்று கூப்பாடு போடுகிறார்கள்.அலுவலகங்களில் பெண்கள் தன மார்பு பகுதியை,இடுப்பு பகுதியை தொப்புள் பகுதியை காண்பித்து //

  இடுப்ப்பை காண்பித்து இல்லை… இப்போதே.. கூட கணவர்./ காதலன்க்கு தெரியாமல் … மேலாளர்../ முதலாளியுடன்.. போய் ரூம் போட்டு .. அனைத்து சேவைகளூம் செய்து முன்னேறும் பெண்களும் இருக்கிறார்கள்..

  அதேபோல் கணவர் 2 வயது 5 வயது என குழந்தகளை விட்டு இறந்தும். தன் முயற்சியில் வேலை செய்து.. சேலை வியாபரம் பியூட்டி பார்லர் என்று செய்து குழந்தகளை இஞ்சினியர் ஆக்கிய பெண்ணையும் பார்த்திருக்கிறேன்.

  உமது கட்டுபாடுகள் . இதில் எதையும் நிறுத்தாது.. மிஞ்சிபோனால்.. சேர்ச்லை / சுடிதாரில் மானேஜருடன் செல்பவள்.. புர்காவில் செல்வ்ாள் அவ்வளவே..

  ============================
  //..ஒரு ஆண் விரும்பி விறைப்பு தன்மை அடைந்து ஒரு பெண்ணோடு உறவு கொள்ள முடியுமே ..//

  உடலுறவு ஆண் பெண் இருவரின் தேவைகளில் ஒன்று… சரியாக சொன்னால் ஒருவர் தனிப்பட்ட விஷயம். வாரம் அல்லது மாதம் சில முறை .. சில நிமிடங்கக்ள் இருப்பது வாழ் நாளக்கும் சில மணிகள் இருக்கலாம்..

  இதை காரணம் காட்டி வாழ் நாள் முழுவதும் கட்டுபடுத்துவது முழு முட்டள் தனம் இல்லையா?
  ===
  //..ஆன் பார்த்தவுடன் கிளர்ச்சி அடையக்கூடிய உடற்பாகங்கள் கொண்டவளாகத்தான் பெண்ணின் இயற்கை உடலமைப்பு இருக்கிறது…//

  கோவா உள்ளிட நமது நாட்டிலும், இன்னம் பல மேல் நாடுகளிலும் முழு நிர்வாணமாக பக்கதில் வெய்யில் காயும் பெண்ணை கண்டவுடன் பக்கதில் அதேபோல் இருக்கும் ஆண் கற்பழிப்பதில்லை.

  இது தான் ஆண்..இது தான் பெண்.. என இயல்பால பழகும் இடங்களில் பாலியல் தொல்லை பெரிதாக இல்லை.
  உமது புர்கா சிபாரிசை செய்தால் தான் .. கணுக்காலை பார்த்தாலே விரைப்பு எற்படும்.

  //..அவள் விருப்பப்படவில்லை என்றாலும் ஒரு ஆணோ இல்லை ஆண்களோ அவளை பாலியல் தீங்கு ஏற்படுத்திவிட முடியும்…//

  சோத்துகில்லாமல் பட்டினி கிடக்கும் ஆண் கற்பழித்தாக செய்தி வந்திருக்கிறதா ? பாலியல் தொல்லை. கற்பழிபு செய்பவர் கொஞ்சம் பணப்புழக்கம் உடையவரே.அதுவும் மது போதை பயன்படுத்துவொரும் தான்.

  இப்படி திமிரெடுத்து ரோட்டில் போகும் பெண்ணை எல்லாம் நான் கெடுப்பேன் என்பவர்களை குறித்து ஏதும் சொல்லாமல் ..

  பெண்ணிடம் நீ ..மூடு .. நீ மூடு என்பது என்ன வகை சமூக பொருப்பு…

  உடை கட்டுபாடு என்பத் திசை திருப்பும் வேலை..

  மீண்டும் மீண்டும் நீர் சொல்வது மூடு.. இது ஒன்றை தான். .. நான் கேட்கும் பல பல கேள்விக்ட்கு விடை இல்லை.

  1) 1300 ஆண்டுக்கு முன் இருந்த விஷயத்தை.. பாற்லை வனத்தில்.. படிப்பறிவற்ற மக்களுக்குகிடையில் இருந்தவர்.. அவர்களுக்கு சொன்ன விஷஅப்பட்யேதான் கடைபிடிப்பேன் என்பது யோசிப்பவர் செய்யும் செயலா?
  2) பெண்ணடிமை தனத்தை சுமத்துகின்றீர்.
  3) தனி மனித சுதந்திரத்தில் தலையிடுகிறீர்.
  4) முதலாளிகள் தங்கள் பொருட்களின் விளபரத்துக்கும் லாபத்துக்கும், சினிமா மீடியாவுக்கும் பெண் பலியாக..வேண்டும் என்கிறீர்..
  5) மொத்த வாழ்விலும் சில மணி நேரம் அனுபவிக்கும் உடலுறவுக்கு.. வாழ் நாள் முழுவதற்கும் கட்டுபாடு சுமத்துகின்றீர்.
  6) மிக முக்கியமாக .. பதிவில் சொல்லபடும் .. கூடியவரையில் எப்படி எப்படி எல்லாம் முடியுமோ அப்படி பெண்ணை துளையாக கண்பித்து மாமா வேலை பார்க்கின்றன பத்திரிக்கைகள்.. என்பதற்கு ..உமது பதில் ..

  திரும்ப பெண்ணை பார்த்து மூடு .. மூடு.. .. தான்..

  யார் என்ன செய்தாலும் பெண்தான் குற்றவாளீ இல்லையா ?

  சுருக்கமாம கூறின்… பெண் என்பவர்.. பெண்ணாக் .. உயிராக துணையாக.. உமக்கு வேண்டாம்..

  துளை மட்டும் போதும்.. அதுவும் நீர் கேட்கும் நேரத்தில் சொருக வசதியாக திறந்தால் போதும்.. இது தான உமது பிரச்சனை… மற்றவை எல்லாம் மூடி இருக்க வேண்டும் சரியா…

  இதில் சமுதாயத்துக்கு நல்லதாம்.. நல்ல காமெடி..

 7. இயற்கையே ஆன் பெண் உடல் அமைப்பின் காரணமாக உடை அணிவதில் வித்தியாசம் வேண்டும் என நமக்கு உணர்த்துகிறது என்பதை எதார்த்தத்துடன் நிகழ்வுகளை எடுத்து கூறியும் ஏற்க மறுக்கிறீர்கள்.

  “‘ உடை தனி நபர் சுதந்திரம்… அதில் தலையிட அடுத்தவர்க்கு உரிமை இல்லை.””””” சில நாட்களுக்கு முன் ஸ்ரீதேவி கவர்ச்சியாக உடை அணிந்து வந்த போது எதற்காக உங்கள் முற்போக்கு மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் எதிர்த்தார்கள் ?

  “””” எனக்கு மனைவி மகளாக.. தாயாக இருந்தாலும் நான் அவர்களின் உடை உட்பட எந்த சுதந்திரத்திலும் தலையிட கூடாது. சில வழிகாட்டுதல் தரலாம்.. அதுவுமே கூட தேவையற்றது தான். கட்டுபாடு கூடவே கூடாதது “””” முற்போக்குவாதி என்று காண்பிக்க தங்களை தாங்களே ஏமாற்றிகொள்ளும் கருத்து இது.

  “”” கட்டுபாடு செய்தால்.. அதின் விளைவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும். ஒரு வகையில் கட்டுபாடுத்தப்டடுவது வேறு வகையில் வெளிப்படும்பொது அதை நீர் தான் தாங்கிகொள்ல வேண்டி இருக்கும்””” 100 ல் ஒன்று நடப்பதற்கும், 100 ல் ஐம்பது நடப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பெரும்பானவைகளில் நடக்கும் காரணத்தை கவனியுங்கள்.

  “”””” நீர் யோசிகாமல் ஒரு வகையில் அடக்கினால் குறைந்த பட்சம்..42 இன்ச் டீவி.. 30 ஆயிரம் பட்டுபுடவை என்று கேட்டு அவளும் உம்மை கொடுமை படுத்துவாள் நீரும் தான் நிம்மதி இழப்பீர். “””” எதற்கு எதை நண்பரே முடிச்சி போடுகிறீர்கள். உடை விஷயத்தில் சுதந்திரம் அனுமதிக்கும் வீட்டில் இதெல்லாம் வாங்கி கேட்க மாட்டார்களோ ?

  “””” உன் விருப்பபடி சுதந்தீரமாக இரு…இப்படி சொன்னவுடன் அனைத்து பெண்களும் உடனடியாக நிர்வாணமாம நடமாட ஆரம்பித்து விடுவார்களா? எது சரி என்பது தெரியாத முட்டள்களா என்ன?””” இப்படி உங்களை போன்றவர்களின் நடத்தையால் 30 வருடங்களுக்கு முன் நம் பெண்களின் உடை அணியும் நிலையும் இன்று அணியும் நிலையம் எவ்வளவு வேருப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா ?

  “””” 10 நாட்களுக்கு முன் கடைக்கு போயிருந்தபோது அங்கு வந்த முஸ்லீம் குடும்பத்தில் பார்த்தல் கையில் தூக்கி வரும் 2 வயது பெண் குழந்தைக்கு புர்க்கா போட்டிருக்கிறார்கள் .. இதை என்ன சொல்லுவது ? “”””” எவ்வளவு பயங்கரமான விஷயமாக சொல்கிறீர்கள் இதை. 2 வயது குழந்தையை கூட கொடுமைபடுத்துகிறார்கள் என்று காட்ட முயலுகிறீர்கள். உங்கள் மனம் இஸ்லாமியத்துக்கு எதிராகவே யோசிக்கிறது. அது புருக்காவாக இருந்திருக்காது. தலையில் ஸ்கார்ப் போன்று அணிவித்திருந்திருப்பார்கள். இரண்டு வயது பெண்ணுக்கு சுடிதார் அணிவிக்கிரார்களே லட்சக்கணக்கானோர் அது தப்பா ? சுடிதாருக்கும், புருக்காவுக்கும் அப்படி என்னங்கய்யா வித்தியாசம் ?

  “”””” கொஞ்ச நாளைக்கு டிஸ்கவரி சேனல் பாரும்.. வெப்ப மண்டல் தீவு மக்கள்.. யாரும் இடுப்புக்கு மேல் உடை அணிவதே இல்லை.. ஆன் பென் அனைவரும் டாப்லேஸ் தான்.. அங்கே அனைத்து பெண்களும் 24 மணியும் கற்பழிக்க படுகிறார்களா என்ன ?”””” அவர்கள் வெப்ப மண்டலத்தில் இருப்பதால் தான் உடை அணிய மறுக்கிறார்களா என்ன ? அவர்கள் நாகரீகம் அடையாத காட்டுமிராண்டிகள் அய்யா…

  “”””” இடுப்ப்பை காண்பித்து இல்லை… இப்போதே.. கூட கணவர்./ காதலன்க்கு தெரியாமல் … மேலாளர்../ முதலாளியுடன்.. போய் ரூம் போட்டு .. அனைத்து சேவைகளூம் செய்து முன்னேறும் பெண்களும் இருக்கிறார்கள்..

  அதேபோல் கணவர் 2 வயது 5 வயது என குழந்தகளை விட்டு இறந்தும். தன் முயற்சியில் வேலை செய்து.. சேலை வியாபரம் பியூட்டி பார்லர் என்று செய்து குழந்தகளை இஞ்சினியர் ஆக்கிய பெண்ணையும் பார்த்திருக்கிறேன்.

  உமது கட்டுபாடுகள் . இதில் எதையும் நிறுத்தாது.. மிஞ்சிபோனால்.. சேர்ச்லை / சுடிதாரில் மானேஜருடன் செல்பவள்.. புர்காவில் செல்வ்ாள் அவ்வளவே..””””””””

  எல்லா நிலைகளிலும் கழிசடைகள் இருக்கத்தான் செய்யும்.
  நீங்கள் கூறுவது போல் நடக்கத்தான் செய்யும். விகிதம் இருக்கிறது அல்லவா… 2 சதவீதம் நடப்பதற்கும் 50 சதவீதம் நடப்பதற்கும் வித்தியாசம் புரியவில்லையா உங்களுக்கு ?

  “”””””” உடலுறவு ஆண் பெண் இருவரின் தேவைகளில் ஒன்று… சரியாக சொன்னால் ஒருவர் தனிப்பட்ட விஷயம். வாரம் அல்லது மாதம் சில முறை .. சில நிமிடங்கக்ள் இருப்பது வாழ் நாளக்கும் சில மணிகள் இருக்கலாம்..

  இதை காரணம் காட்டி வாழ் நாள் முழுவதும் கட்டுபடுத்துவது முழு முட்டள் தனம் இல்லையா?””””””

  நான் கற்பழிப்புக்காக இந்த கருத்தை சொன்னால் … நீங்கள் இவ்வளவு மன்குநியாக இருக்கிறீர்கள். செக்ஸ் தனிப்பட்ட விஷயம் தான். அப்படி இருந்தால் எல்லோருக்கும் நல்லதுதான். ஆனால் அடுத்தவன் அத்து மீறி நுழைவது தானே பிரச்னை. செக்சை மிக லேசாக எளிதாக சொல்லிவிட்டீர்கள். இன்றைக்கு நாளிதழ்களை பார்த்தால் பாதி கொலைகள் இதற்காகத்தான் நடக்குது. 2 வயது குழந்தையை கூட கற்பழிக்கிறார்கள். இதை படித்தவுடன் உங்களின் அடுத்த கேள்வி 2 வயது குழந்தைக்கும் புருக்கா போடணும்னு சொல்றீங்களான்னு கேட்பீங்க. சமுதாயம் அப்படி சீரழிந்திருக்கிறது நம் பெண்கள் கண்ணியமாக நடந்துக்கொண்டால் இது குறையும் என்றுதான் சொல்ல வருகிறேன்.
  “”””” சோத்துகில்லாமல் பட்டினி கிடக்கும் ஆண் கற்பழித்தாக செய்தி வந்திருக்கிறதா ? பாலியல் தொல்லை. கற்பழிபு செய்பவர் கொஞ்சம் பணப்புழக்கம் உடையவரே.அதுவும் மது போதை பயன்படுத்துவொரும் தான்.””””

  இது மடைமையான வாதம். இது உங்கள் அறியாமை.

  “”” 1300 ஆண்டுக்கு முன் இருந்த விஷயத்தை.. பாற்லை வனத்தில்.. படிப்பறிவற்ற மக்களுக்குகிடையில் இருந்தவர்.. அவர்களுக்கு சொன்ன விஷஅப்பட்யேதான் கடைபிடிப்பேன் என்பது யோசிப்பவர் செய்யும் செயலா?””””

  மொத்தத்தில் உங்களுக்கு நபி சொன்னதுதான் பிரச்னை. புரிகிறது.

  “””” பெண்ணடிமை தனத்தை சுமத்துகின்றீர்.””””

  பெண்களின் மறு மனத்தை இன்றைக்கு கூட மறுக்கும் சமுதாயத்தில் இருந்துக்கொண்டு நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. 1400 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு மறுமணத்தை வலியுறுத்தியது இஸ்லாம் தான். பெண்களுக்கு வரதட்சனை ( மஹர் ) கொடுப்பதை கட்டாயமாக சொன்னது இஸ்லாம் தான். இன்றைக்கும் சவுதியில் பெண்களிடத்தில் மஹர் கொடுக்க முடியாமல் பல ஆண்களுக்கு திருமணமே நடக்காமல் இப்போது சவுதி அரசே அதற்காக லோன் எல்லாம் கொடுக்கிறார்கள்.

  கடைசியாக உங்களுக்கு புரியும்படி சில கருத்துக்களை சொல்லி முடிக்கிறேன்..

  இன்றைக்கு நாட்டில் நடக்கும் கற்பழிப்பு மற்றும் கள்ளகாதல் கொலைகள் செய்திகளை எடுத்துப்பாருங்கள். இதில் எத்தனை சதவிகிதம் இஸ்லாமிய பெண்கள் சம்பந்தப்பட்டது என்பதை கவனியுங்கள் நண்பரே… மக்கள் தொகையில் 20% இருக்கும் முஸ்லீம்கள் என்றால் இந்த செய்திகளில் 20 % இடம் பெற்றிருக்க வேண்டுமல்லாவா ? ஆனால் 1 அல்லது 2 அல்லது அதிகபட்சமாக 3 சதவீதம் தான் முஸ்லீம் பெண்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

  உலகத்தில் எயிட்ஸ் பாதித்தவர்களில் இஸ்லாமியர்கள் 2 % தான் கனேக்கேடுப்பு சொல்கிறது. உலகத்தில் 25% க்கும் மேல் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.
  அதேபோல் இயற்கைக்கு ஆகாதா கேடான ஹோமோ, லச்பியன் செக்சிலும்..

  அதே போல் போதை பழக்கவழக்கங்களிலும், இதே போல் தான் விகிதாசாரம் இருக்கிறது.

  இஸ்லாமிய பெண்களுக்கு மன உளைச்சல் என்பது மிக மிக குறைவாக உள்ளதாம்.
  அதே போல் கடவுள் கொள்கையில் திருப்தி இல்லாமல் இஸ்லாத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இஸ்லாத்தில் இருந்து வெளியேறுவது மிக மிக குறைவாகவே உள்ளது.
  இஸ்லாமை அழிக்க மேற்கத்தியர்களுக்கு இதெல்லாம் கூட முக்கிய காரணங்கள் தான்.

  நீங்க olinepj தளத்திற்கு வந்தால் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் நீங்கும். நன்றி

 8. //நீங்க olinepj தளத்திற்கு வந்தால் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் நீங்கும்.//

  அல்லாவை காப்பாத்திகிட்டு இருக்குறது பீஜே தானா?

Leave a Reply

%d bloggers like this: