நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று?

6846680097_993cb47839_mஇந்து தமிழ் நாளிதழ் தங்க மீன்கள் படத்தை ‘நொந்த மீன்கள்’, என்று விமர்சித்ததைக் கண்டித்து இயக்குநர்  ராம்:

‘தந்தைப் பெரியாரிடம், “ஆங்கிலப் பத்திரிக்கை ஆரம்பிக்க சொல்கிறீர்களே அய்யா…செய்திகளுக்கு எங்கே போவது?” என ஒருமுறை கேட்டார்களாம். அதற்கு அவர், ‘செய்திக்கா பஞ்சம்…? இன்னத்த ‘இந்து’ பேப்பர் வாங்கீட்டு வா…அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ, அதையெல்லாம் தப்புன்னு எழுது…எதத் தப்புன்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் சரின்னு எழுது…’ என்றாராம்.

அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது….’ – என்று துவங்கி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தை தோழர் ராகு. சரவணக்குமார் facebook ல்  Share செய்திருந்தார். அதன் மீது நான் எழுதியது:

‘தனிப்பட்ட முறையில் தன்னைப் பற்றி குறை சொல்லி எழுதினால் மட்டும் இந்துவை பற்றி கருத்துச் சொல்ல சொல்லி பெரியார் சொல்லவில்லை.

தி இந்து தமிழ் இதழ்; முதல் நாள் சிறையில் உள்ள ராஜிவ் கொலைக்குற்றவாளி முருகன் பற்றிய செய்தியும்,
தீவிரமான இந்துக் கண்ணோட்டமும் மோடியின் புகழும் பாடியபோது அமைதியாக இருந்து விட்டு, தன்னை விமர்சனம் செய்யும்போது மட்டும் பெரியாரை துணைக்கு அழைத்துக்கொண்டு இந்துவை விமர்சிப்பது பச்சையான சந்தர்ப்பவாதம்.

முதல்நாளே தமிழர் விரோத போக்குடனும், ‘மோடி’ ரசிகர் மன்ற பத்திரிகையாய் வெளிவந்தபோது, அதைக் கண்டித்து facebook உட்பட்ட இணையங்களில் கடுமையான கண்டனங்களை பல தோழர்களும் எழுதினர்.

பிரச்சினை தீவிரமாக இருந்த அப்போது, ஓரமா ஒக்காந்து ‘மிக்சர்’ சாப்ட்டவங்க… இப்ப திடீரென்று ‘தி இந்து’வை தனிப்பட்ட முறையில் கண்டிப்பது என்ன நியாயம்?
(‘நமக்கு எழுத எப்பவாவது வாய்ப்புக் கொடுப்பான்.. எதுக்கு தேவையில்லாம..’ என்று தமிழ்த் தேசியம், பெரியாரியம் எழுதுகிற சில; சில என்ன, பல எழுத்தாளர்கள் கள்ள மவுனம் காத்தார்கள்)

ஒரு வேளை இந்து தமிழ் நாழிதழ், ‘தங்க மீன்கள் மிகச் சிறந்த படம் இதுவரை தமிழில் இதுபோல் வந்ததில்லை’ என்று எழுதியிருந்தால், இயக்குநர் ராம் க்கு பெரியார் தேவைப் பட்டிருக்க மாட்டார்.
அப்போது அவருக்கு ‘தி இந்து’ தான் பெரியதாய் தெரிந்திருக்கும்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் பாராட்டுகிறது.’ என்று ‘தங்க மீன்கள்’ விளம்பரங்களில், ‘தி இந்து’ விற்கு விளம்பரம் கிடைத்திருக்கும்.
இப்போது ‘தி இந்து’ வை கண்டிக்கிற அவருடைய கடிதம், பாராட்டி, நன்றி சொல்லி வியந்திருக்கும்.

பார்ப்பனர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் நன்மை செய்யும்போதும், பார்ப்பன நிறுவனங்களில் நல்ல நிலையல் வேலையில் இருக்கும்போதும் ஒட்டுமொத்தமாக பார்ப்பனர்களை புகழ்வதும், ‘பார்ப்பானர்’ என்று கூட சொல்ல மறுப்பதும், ‘பிராமினை மட்டும் குறை சொல்றீங்க… மத்த ஜாதிகாரன் யோக்கியமா?’ என்று விசுவாசமாக பேசுவதும்;
அதே தனிப்பட்ட பார்ப்பனரோடு விரோதம் ஆகும் போது, ‘இந்த பாப்பார பசங்களே இப்படித்தான்’ என்று பார்ப்பன எதிர்ப்பு பேசுவதும், அப்போது மட்டும் பெரியாரை புகழ்வதும்; பல நபர்களிடம் இதை பார்த்திருக்கிறேன்.

பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பும், ‘தி இந்து’ பத்திரிகை உட்பட்ட பார்ப்பன பத்திரிகைகளின் எதிர்ப்பும்; தன் விருப்பு, வெறுப்பு, தனக்கான முக்கியத்துவமின்மை, தனிப்பட்ட பார்ப்பனர்களின் மீதானா காழ்ப்புணர்ச்சி இதன் பின்னணியில் எழுந்ததல்ல;

அது ஒரு விடுதலை அரசியல்.

19-9-2013 அன்று facebook ல் எழுதியது.

தொடர்புடையது:

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

10 thoughts on “நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று?

 1. சேரன் தன் மகளின் காதலை எதிர்த்து செயல்பட்டார். அப்போது 20 நாட்களுக்கு மேலும் தொலைக்காட்சி, இதழ்களில் சேரனின் பேட்டி ஒளிபரப்பானது. பரபரப்பாக பேசப்பட்டது. எல்லோரும் அது பற்றி கருத்து சொன்னார்கள். சேரனின் காதல் எதிர்ப்பை கண்டித்து எழுதினார்கள். ஆனால் நீங்கள் ஒருவர்தான் சேரனின் காதல் எதிர்ப்பை பற்றி ஒன்றுமே எழுதவில்லை.

  மற்ற விஷயங்களைப் பற்றி எல்லோரையும் முந்திக்கொண்டு கருத்து சொல்லிய நீங்கள் அது பற்றி எல்லோரும் கண்டித்த போதும்கூட ஒன்றுமே சொல்லவில்லை? ஏனென்றால் உங்களுக்கு சேரன் தெரிந்தவராக இருக்க வேண்டும் இல்லையென்றால் அவரிடம் நீங்கள் நன்கொடை வாங்கியிருக்க வேண்டும்.
  இயக்குநர் ராமுவை நீங்கள் காரணமில்லாமல் தொடர்ந்து அவருக்கு எதிராக எழுதுவதற்கு காரணம்… அவர் உங்களுக்கு தெரிந்தவராக இல்லை. அவர் மூலமாக உங்களுக்கு எந்த லாபமும் இல்லை. நீங்கள் அவருடன் கதை விவாதத்தில் கலந்து கொண்ருந்தாலோ உங்களுக்கு நெருக்கமானர்கள் தங்க மீனில் பணி புரிந்திருந்தாலோ அந்த படத்தை நீங்கள் வானளவு பாராட்டி எழுதியிருப்பீர்கள். என்ன செய்வது உங்களுக்கு நன்கொடை தருகிற அளவிற்கு இயக்குநர் ராமிடம் பணம் இல்லை. இயக்குநர் ஆன பிறகும் கூட அவர் பணம் நெருக்கடியில்தான் இருக்கிறார்.

  சுகுமாரன்-சுகுமாரன்

 2. சூப்பர் ஜெயகுமார். இது போன்ற மறுமொழிகள் எனக்கு அமைதி தருகின்றன. நேரிடையாக பேசும் விவாத முறை.

 3. மதி அய்யா.. எங்களை கடுமையாக ஏமாற்றி விட்டீர்கள்.. உங்கள் பேச்சு கா….
  ஏன்..? என்னங்க தமிழ்நாட்லதான் இருக்கிங்களா.. இந்திய சினிமா விழா நடந்திருக்கு.. அதுல மத்த நடிகர் விடுங்க.. அதாங்க ஒங்க ஜென்ம விரோதி கமல நம்ம அம்மா போய் பி ன்னால உக்கார வச்சுட்டாங்கன்னு கலைஞர் தாத்தா ஓன்னு அழுவுறாரு.. சந்தோசமா அம்மாவுக்கு வாழ்த்துப்பா பாடி பதிவ எதிர்பார்த்தேன்.. சே.. சே.. சே.. (ஒரு வேள மத்த நடிகர அப்படி செஞ்சதால வருத்தப்பட்டிங்ளோ)

 4. நீங்க தங்க மீன் படத்தை வெளியிடும் முன்பே, அந்த அபத்தமான வசனத்த வச்சு இயக்குனரின் புத்தியை காய்ச்சியை எடுத்தீங்க.. ஆனா நீங்க சேர்ந்து இயங்கிய மகவின் இணையதளம் ’வினவு’ அந்த படத்தை புகழ்ந்து எழுதியிருக்கே??? இதைப்பத்தி நீங்க எதுவும் சொல்லக்காணோம்! வினவு வாசிச்சா ஸ்வரம்.. நாங்க வாசிச்சா அபஸ்வரமா.. என்ன சார் நியாயம் இது?

  //நீங்கள் அவருடன் கதை விவாதத்தில் கலந்து கொண்ருந்தாலோ உங்களுக்கு நெருக்கமானர்கள் தங்க மீனில் பணி புரிந்திருந்தாலோ அந்த படத்தை நீங்கள் வானளவு பாராட்டி எழுதியிருப்பீர்கள். என்ன செய்வது உங்களுக்கு நன்கொடை தருகிற அளவிற்கு இயக்குநர் ராமிடம் பணம் இல்லை. // சரி.. இது யாருக்கான பஞ்ச் ஏன் இலைமறைக்காய் மறையாய் சொல்றீங்க.. நேரடியாவே சொல்லுங்க.. நாங்க எத்தன பேரைத்தான் Assume பண்றது??

  இப்படிக்கு

  -பரட்ட (எ) பரட்டைதலையன்

 5. நீங்க தங்க மீன் படத்தை வெளியிடும் முன்பே, அந்த அபத்தமான வசனத்த வச்சு இயக்குனரின் புத்தியை காய்ச்சியை எடுத்தீங்க.. ஆனா நீங்க சேர்ந்து இயங்கிய மகவின் இணையதளம் ’வினவு’ அந்த படத்தை புகழ்ந்து எழுதியிருக்கே??? இதைப்பத்தி நீங்க எதுவும் சொல்லக்காணோம்! வினவு வாசிச்சா ஸ்வரம்.. நாங்க வாசிச்சா அபஸ்வரமா.. என்ன சார் நியாயம் இது?

  @சுகுமாரன் – கீழே நான் சுட்டிக்காட்டிய யாருக்கான பஞ்ச் ? ஏன் இலைமறைக்காய் மறையாய் சொல்றீங்க.. நேரடியாவே சொல்லுங்க.. நாங்க எத்தன பேரைத்தான் Assume பண்றது??

  //நீங்கள் அவருடன் கதை விவாதத்தில் கலந்து கொண்ருந்தாலோ உங்களுக்கு நெருக்கமானர்கள் தங்க மீனில் பணி புரிந்திருந்தாலோ அந்த படத்தை நீங்கள் வானளவு பாராட்டி எழுதியிருப்பீர்கள். என்ன செய்வது உங்களுக்கு நன்கொடை தருகிற அளவிற்கு இயக்குநர் ராமிடம் பணம் இல்லை. //

  இப்படிக்கு

  -பரட்ட (எ) பரட்டைதலையன்

Leave a Reply

%d bloggers like this: