‘தி இந்து’ ஜெயகாந்தன் தரும் தமிழர்களுக்கான அறிவுரை; ‘புத்தி சொல்றாராமா..!’

இந்து நாளிதழுக்காக அதன் செய்தியாளர் சம்ஸ் எடுத்த ஜெயகாந்தன் பேட்டியை ‘தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்’ என்ற தலைப்பில் தன் இணையப் பக்கத்தில் வெளியிட்டதை Facebook ல் share செய்திருந்தார்.
‘ஜெயகாந்தன் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பேச்சும் அப்படித்தான். முதுமை நிறைய தளர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால், எந்தச் சூழலிலும் சிங்கம் சிங்கம்தான். பேட்டி என்றதும் “வேண்டாம்” என்றவர், “ஐந்தே நிமிஷம்” என்றதும் சம்மதித்தார்.’ என்ற பெருமையோடு துவங்கிறது நேர்காணல்.
அதில், ‘காந்தி, நேரு, தேசப்பற்று’ என்று ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் பாணியில் இருவரும் உரையாடுகிறார்கள்.
இடதுசாரிகளுக்கு அறிவுரையும் இருக்கிறது. ‘இடதுசாரி இயக்கத்தைச் சுயநலம் செல்லரித்துவிட்டது’ என்கிறார் பொதுவாழ்க்கைக்காக தன்னையே முழுமையாக அர்பணித்துக் கொண்ட தியாகி ஜெயகாந்தன்.
அதில் இன்னொரு கேள்வி, பேட்டியாளர் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பிரதிநிதியாக தன்னை தானே நியமித்துக் கொண்டு, தமிழர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு ஜாதியின் காரணமாக மறுக்கப்பட்டபோதும், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் பொங்கி எழுந்த போராடிய ஜெயகாந்தனிடம்,
“தமிழ்ச் சமூகம் முக்கியமாக எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?” என்று கேட்கிறார். அதற்கு தியாகி ஜெயகாந்தன்,
“குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனைய சமூகங்களின் ஆக்கபூர்வ விஷயங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்.”
என்று பரந்த மனப்பான்மையோடு தமிழர்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்.
//ஏனைய சமூகங்களின் ஆக்கபூர்வ விஷயங்கள் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்.// என்று அவர் சொல்லியிருக்கிற ‘ஏனைய’ என்பது பார்ப்பனர்கள்தான் என்று நினைக்காதீர்கள். ‘பிற மொழிக்காரர்கள்’ என்று அதற்கு அர்த்தம். அப்போ சம்ஸ்கிருதத்தை உயர்வாக மதிக்கிறவங்ககிட்ட இருந்தா..?’ அப்படின்னு கேப்பீங்களா? கேட்டுக்குங்க..
ஆனால், நான் அதை கேட்கவில்லை.
சம்ஸ் Facebook ல் நான் கேட்டது:
//தமிழ் வெறியை விட்டொழிக்க வேண்டும்//
தமிழ் வெறி இன்னைக்கு யார்கிட்ட இருக்கு?
தமிழ் வழிக் கல்விக்கு வழியில்லை. ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்குகிறது அரசு. நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இல்லை. கோயில்களில் தமிழ் தீட்டு மொழியாக அவமானப்படுத்தப்படுகிறது. இன்னும் நிறைய சொல்லலாம்.
இந்தச் சூழலில் தமிழ் உணர்வே சந்தர்ப்பவாதத்தில் சிக்கித் தவிக்கிறது. இதில் தமிழ் வெறி எங்கிருக்கிறது..?
இல்லாத ஒன்றை கண்டிப்பதில்தான் ஜெயகாந்தன் மாவீரர்.
ஜெயகாந்தினிடம் நான் கேட்டுக் கொள்வது, உங்களுக்கு தமிழ் உணர்வு இல்லாவிடினும் பரவாயில்லை.
தமிழை நீச மொழியாக பார்க்கிற சமஸ்கிருதத்தை தமிழை விட உயர்வாக மதிப்பது, பார்ப்பனர்களோடு ஒப்பிட்டு, தமிழ் அறிஞர்களை இழிவாக பேசுவது போன்ற உங்களின் பார்ப்பன அடிமைத்தனத்தை விட்டொழியுங்கள்.
நிகழ்கால லாபங்களுக்காக வரலாற்றை திரிக்காதீர்கள். இன்னும் காலம் கடந்து விடவில்லை. உங்கள் கருத்துகளை பரிசீலனை செய்து பரிகாரம் தேடுங்கள்.
பார்ப்பனர்களும் உங்களைப் போலவே பார்ப்பன மனோபாவம் கொண்டவர்களும் இன்றைய உங்களின் இந்த அடிமைத்தனத்தை வீரமாக சித்திரிப்பார்கள். சிங்கம் என்று வர்ணிப்பார்கள்.
ஆனால், வரலாறு உங்கள் எழுத்தாற்றலையும் தாண்டி, ‘துரோகி’ என்று உங்களை அசிங்கமாக குறித்து வைத்துவிடும்.
தொடர்புடையவை:
நாறும் தமிழ் மூச்சும் மணக்கும் சமஸ்கிருத‘வாயு’த் தொல்லையும்’ இதுதான் ஞானக்கூத்து!
இந்த சிங்கம் (அ)சிங்கம் ஆகி பல பத்து ஆண்டுகள் ஆயிற்றே!
ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளனா? அவன் எழுதிய கதைகள் எல்லாமே அழுகிணி ரகம். யதார்த்தம் மீறிய பைத்தியக்காரர்களை வைத்து கதை படைப்பவன். அதுவும் அரைகுறை வேக்காடாக. இயக்குநர் பாலா போன்ற மனவக்ரம் பிடித்த பாத்திரங்களைப் படைத்தவுடன் அவன் உலக மகா எழுத்தாளன் என்ற எண்ணம் பல தமிழர்களுக்கு. இவர்கள் முதலில் ரஷ்யா, ஸ்பெயின் இலக்கியங்களைப் படித்திருந்தால், ஜெயகாந்தனின் எழுத்துகள் கத்துக்குட்டி ரகம் என்பது புரிந்திருக்கும்.
செயகாந்தன் உமக்கு பிடிச்ச மதத்த சேர்ந்தவரா இருந்து, அப்பவும் இதே மாதிரி பேசி இருந்தா, அப்போ உன்ரகிட்ட இருந்து இதே மாதிரி ஒரு பதிவு வந்திருக்குமா. தொடைச்சு போட்டு தூக்கி போட்டுட்டு போய்க்கிட்டே இருந்திருக்க மாட்டே. இதெல்லாம் ஒரு பொழப்பு.
பார்ப்பனீயத்தின் நகலான உயர்ஜாதி மனநிலை கொண்டவர் ஜெயகாந்தன்.அவரது வீரமெல்லாம்,பார்ப்பனரல்லாதவர்களிடம் மட்டும்தான்.ஒரு போதும் பார்ப்பனர்களைக் கோவிக்க மாட்டார்.இந்தக் காலத்து கம்பன் அவர்.
oh no…. poorlakshmi…..u have confused with jeyamohan and jeyakanthan…..anyhow your option is shit as this site….but don’t this much “vayathu eruchal’…..
பார்ப்பனீயம் இந்தியாவின் சாபக்கேடு.
“ஜெயகாந்தன் அருமையாக கதை எழுதக்கூடியவர். இந்தியாவின் சிறுகதை மன்னர் ஜெயகாந்தன்தான். புதுமைப்பித்தனுக்குப் பிறகு, சிறுகதையை உலகதளத்திற்கு எடுத்துச் சென்றிருப்பவர் ஜெயகாந்தன்தான். இவருடைய யாருக்காக அழுதான்? ஒரு நடிகையின் கதை, சில நேரங்களில் சில மனிதர்கள் – எல்லாமே அற்புதமான படைப்புகள். ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ் கூட ஜெயகாந்தனின் முன்னால் கத்துக்குட்டி. மக்சிம் கார்க்கியின் தாய் காவியத்தை விட, ஜெயகாந்தனின் படைப்பு ஒவ்வொன்றும் காவியம்.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்பது, ஒரு நடிகையின் கதை’ என்பதாக பிழையாக தட்டச்சு செய்யப்பட்டு விட்டது. மன்னிக்கவும்.
jayakanthan did not say anything against papans. he never praised islam.
so he should be defamed, condemened, censured. if md maran wants he can be executed also.
மதிமாறன் சார் என்கிட்டே ரெண்டு கேள்வி இருக்கு அதுக்கும் சேத்து பதில் சொல்ரீங்கள …வழக்கு குறை ஞர் தெலுங்கன் பிரசன்னா ——————————————…நன் கடந்த 5 வருடங்களாக திராவிட பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதிகிறேன்.இப்போது போதிய விற்பனை இல்லாததால் எனக்கு மாதம் 3000 ரூபாய் மட்டுமே கிடைக்கின்றது .இது என் வாழ்கையை ஓட்ட கடினமாக இருக்கின்றது ..தாங்களும் திருமுருகன் காந்தி போன்றோரும் இணையத்தளத்தில் திராவிடம் பற்றியும் பார்ப்பனீயம் பற்றி கேவலமாக மஞ்சள் பத்திரிக்கை தரத்தில் எழுதி விட்டு கொலைஞர் ராசா கனி மாரன் ப்ரோதேர்ஸ் பற்றி எழுதுவதை தவிர்த்தால் தற்போது நல்ல காசு ஒரு கட்டுரைக்கு 10 000 ரூபாய் கொடுகிறார்கள் என்று கேள்விபட்டேன். தி மு க அனுதாபிகளான வீரமனி வழக்குரைஞர் பிரசன்னா போல நல்ல வசதியாக கோட் சூட் எல்லாம் போல போட்டு வாழலாம் என்ற ஆசை எனக்கு உள்ளது 5 வருட மஞ்ச பத்திரிக்கை எழுதும் அனுபவம் உள்ளதால் நன் தங்களை போல எழுதும் திறமை கொண்டவன் தினமும் உங்களுக்கு பார்பனியத்தை பற்றி கில்மாவாக எழுதி தருகிறேன்…பாதி அமௌண்ட் தருவீர்களா