சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

Dec-28-gஜெயலலிதா முதல்வராக இருந்தபோது துவக்கி வைத்த சங்கர ராமன் கொலை வழக்கை, அதற்குப் பிறகு முதல்வரான கருணாநிதி நினைத்திருந்தால் அப்போதே முடிந்து வைத்திருக்கலாம். நீதி வென்றிருக்கும்.

மாறாக, கருணாநிதி தலைமையில் அமைந்த திமுக அரசு ஆட்சியலிருக்கும் போதுதான், சங்கர ராமன் கொலை வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞம், சாட்சிகளும் ஜெயேந்திரனுக்கு ‘அப்ருவராக’ மாறினார்கள்.

ஜெமினி சர்க்கஸ், ஜம்போ சர்க்கஸ்களுக்கெல்லாம் சவால் விடும் அளவிற்கு அரசு தரப்பு சாட்சிகள் ‘பல்டி’ அடித்தார்கள்.
அதன் காரணத்தினாலேயே ‘ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்’ கொலை குற்றத்திலிருந்து இன்று விடுதலை ஆகியிருக்கிறார்.

இப்படி ஒரு தீர்ப்பு வருவதற்கு திமுகவின் ‘சூத்திர’ ஆட்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம்.

இப்போதும் கருணாநிதி ஒரு எதிர்கட்சியாககூட தமிழக அரசுக்கு எதிராக, ‘இந்த வழக்கில் ஜெயலலிதா அரசு மந்தமாக நடந்துகொண்டது. இந்த வழக்கை தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்’ என்று சொல்ல மறுக்கிறாரே அதற்குப் பின் இருக்கிறது, அவர் ஆட்சி காலத்தில் அவர் எப்படி இந்த வழக்கில நடந்து கொண்டார் என்பதற்கு சாட்சி.

‘கருணாநிதி இலங்கை பிரச்சினையில் துரோகம் செய்து விட்டார்’ என்று இன்றும் பேசுகிற தமிழ்த் தேசியவாதிகள், கருணாநிதியின் இந்த ஜெயேந்திர ஆதரவை பற்றி இப்போதுகூட வாய் திறக்கவில்லை.

தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்தால், ‘பெரியார் பிறந்த மண்ணில் நடக்கிறது.’ ‘இது தான் திராவிட இயக்கங்களின் யோக்கியதையா?’ என்று தலித் விரோத்தை ‘தந்திரமாக’ பெரியாரோடு கோர்த்து கடுமையாக விமர்சிக்கிற, பார்ப்பன அறிவாளிகள், பார்ப்பன மார்க்சிஸ்ட்டுகள்;

‘பெரியார் பிறந்த மண்ணில் சங்கராச்சாரியருக்கு ஆதரவாக நடந்து கொண்டது திமுக. மற்றும் திராவிட இயக்க அரசுகள். இதுதான் திராவிட இயக்கதின் யோக்கியதையா?’ என்று கண்டிக்காமல் இருக்கிறார்களே ஏன்?ஏனென்றால் கண்டிப்பதில் பார்ப்பன எதிர்ப்பு இருக்கிறது.

ஒரு பார்ப்பனரின் கள்ள மவுனத்திற்குப் பின் பார்ப்பன சிந்தனையும் பார்ப்பனரல்லாத தலைவர், அறிவிஜீவிகளின் அமைதிக்கு பின் பார்ப்பன ஆதரவும் அந்த மவுனத்திற்குப் பரிசாக கிடைக்கிற லாபமும் ஒளிந்திருக்கிறது.

*

நவம்பர் 28 அன்று face book ல் எழுதியது

தொடர்புடயவை:

கலைஞர்-இராம.நாராயணன்-எஸ்.வி.சேகர்

குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

Bharatiya Janata Party மீது..?

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

Prageeth.Eknelygoda.cartoon

பார்ப்பன பத்திரிகைகளில் தனது ஜனநாயக கடமையை ‘சிறப்பாக’ செய்து கொண்டே; தமிழ்த் தேசிய, பெரியாரிய, மார்க்சிய, பிரபாகரனிய, தலித்திய, புரட்சிகர அரசியல் கண்ணோட்டத்தோடு கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்நது தனது இணையப் பக்கங்களிலும் Facebook லிம் சிற்றிதழ்களிலும், பத்திரிகை நண்பர்கள் எழுதி வருவது நாம் அறிந்ததே.

‘ஈழப் பிரச்சினை, ஜாதியப் பிரச்சினை இவைகளுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் மட்டுமல்ல, பெரியார் கூட காரணம்.’ ‘பிரபாகரன் ஒருவர் தான் தலைவர்’ ‘இனி மார்க்சியம் எல்லாம் எடுபடாது’, ‘ஸ்டாலின் மனித குல விரோதி’ ‘பெரியார், அம்பேத்கர் அரசியல் சந்தர்ப்பவாதம். ஜாதி ஒழிப்புக்கு அவர்களிடம் ஒன்றுமில்லை.’ ‘புரட்சி ஒன்றுதான் தீர்வு’

‘பெரியார் தலித் விரோதி’ ‘பெரியாரை தவிர்த்து விட்டு தமிழ் நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது’ ‘பகுத்தறிவு’ ‘இனஉணர்வு’ ‘இந்துத்துவாவை வேரறுக்க மோடியை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்’ –
என்றெல்லாமும் இதுபோல் பொருள்படும்படியாகவும் ஆவேசத்தோடு எழுதிய நண்பர்கள்;

இன்று ஆப்ட்ரால், ஜெயேந்திரனுக்கு எதிராக ஒரு வார்த்தையை தங்களின் ‘டைரி’யில் கூட எழுத முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
Facebook ல் ஜெயேந்திரன் விடுதலையை எதிர்த்து அடுத்தவர்கள் எழுதியதை Like செய்தால்கூட அவர்களின் வேலைக்கோ உயிருக்கோ ஆபத்து நேரிடுமோ என்னமோ? இது மிகவும் கவலையளிக்கிறது.

அவர்களின் பரிதாப நிலைக்கு நமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வோம். அதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக சமரசமற்று தொடர்ந்து இயங்கிய, அவர்களின் கருத்தை கைது செய்து வைத்திருக்கிற பார்ப்பனப் பத்திரிகைகளின் நிர்வாகத்தை அம்பலப்படுத்தவோம்.

தங்கள் உயிரை துச்சமாக மதித்து, பார்ப்பனப் பத்திரிகைகளில் துணிச்சலோடு பணியாற்றும் முற்போக்காளர்களுக்கு நமது புரட்சிகர வணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்.

நவம்பர்27, 2013 எழுதியது

தொடர்புடயவை:

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

2961560161_1_5_fDgoeRmh

காஞ்சிபுரம் கோயிலில் சங்கர ராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு,
‘சங்கர ராமனின் சம்சாரம்’தான் காரணம் என்று சந்தேகிக்காமல் தீர்ப்பளித்த, நியாயத்தையும் பெண்ணை மதிக்கும் செயலையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

இது தாண்டா தீர்ப்பு.

**

சங்கர ராமன் எதனால் வெட்டி கொலை செய்யப்பட்டார்?
அவர் இந்து மத எதிர்ப்பும், பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் மறுப்பும் பேசிய பெரியாரின் தொண்டரா? இல்லை,
சங்கராச்சாரியராக ஒரு தலித் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தாரா?

இந்து கண்ணோட்டமும் சங்கராச்சாரியர்களுக்கே ‘ஆச்சாரத்தை’ போதித்த அல்லது சுட்டிக்காட்டிய தீவிரமான ஜாதி உணர்வு கொண்ட பார்ப்பனர்.

இப்படி பார்ப்பனியத்திற்கும் இந்து மதத்திற்கும் உண்மையாக இருந்த அவரை கொலை செய்ததை குறித்து, எந்த வருத்தமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை பிராமணர் சங்கமும், இந்து அமைப்புகளும்.

சரி. சங்கர ராமனை, ஜெயேந்திரனும் அவரின் கூட்டாளிகளும் கொலை செய்யவில்லை என்று கோர்ட் சொல்லிவிட்டது.

அப்படியானால் ‘உண்மை இந்துவான சங்கர ராமனை கொன்ற குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்’ என்ற கோரிக்கையை ஏன் பிராமணர் சங்கமும் இந்து அமைப்புகளும் எழுப்பவில்லை.

**

மனுஷ்யபுத்திரன் தன்னுடைய facebook ல் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்:
//சங்கரராமன் கொலை வழக்கில் நீதி வென்றிருக்கிறது.
யாருடைய நீதி என்பதில்தான் பிரச்சினை….//

இந்த வாக்கியம் அர்த்த மற்றதாக இருக்கிறது.

//சங்கரராமன் கொலை வழக்கில் நீதி வென்றிருக்கிறது.// என்று பிராமணர் சங்கம் அல்லது இந்து அமைப்புகள் சொல்வதில் அர்த்தமிருக்கிறது.

அதை கேள்விக்குட்படுத்துபவர்கள்..
//யாருடைய நீதி என்பதில்தான் பிரச்சினை….// என்று கேள்வி எழுப்புவது கோமாளித்தனமாக இருக்கிறது. இந்த தீர்ப்பில் எங்குமே நீதியில்லை.

‘யாருடைய நீதி என்றால்..’ சங்கராச்சாரி இந்து அமைப்புகளின் நீதியா வென்றிருக்கிறது? அப்படியானால் இந்த வழக்கில் அவர்களிடம் ‘நீதி’ இருந்ததா?

பதிலாக ‘அநீதி வென்றிருக்கிறது’ என்பதுதான் சரியாக இருக்கும்.
எதையாவது வித்தியாசமாக சொல்லவேண்டும் என்பதற்காக வெறும் வார்த்தை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இதுபோன்ற அபத்தங்கள் நிகழ்கிறது.

**

நேற்று (27-11-2013) Facebook ல் எழுதியது.

தொடர்புடயவை:

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்

 

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

FE_2711_MN_02_Cni5369

சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை ஒட்டி, நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கர மடத்தில் நடந்த கூ ட்டு பிரார்த்தனை. (படம்:தினத்தந்தி)
*

‘கடவுளுக்கு உண்மையாக, நேர்மையாக சங்கர மடத்தின் புனிதத்திற்கு எதிரான கிரிமினல்களின் சதிகளை அம்பலப்படுத்தியும் சேவை செய்த சங்கரராமனை கொன்றதாக, தமிழக அரசால் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரனுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்’ என்றுதான் இந்த பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையை நடத்தியிருப்பார்கள்?

ஏனென்றால் ராஜிவ் கொலையில் மறைமுகமாக கூட தொடர்பு இல்லாத, பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து பலரும் போராடும்போது, அதற்கே எதிர்ப்பு தெரிவிக்கிற இவர்கள், அல்லது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள்;

சங்கரராமன் கொலையில் அக்யூஸ்ட் நெம்பர் -1 ஜெயேந்திரனாக இருக்கும்போது; நீதியும் நேர்மையும் தகுதியும் தரமும் அதைவிட ‘ஆச்சாரமும்’ நிரம்பியிருக்கிறவர்கள் ஒரு கிரிமனலுக்கு எப்படி ஆதரவாக இருப்பார்கள்?

இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும். இவர்களின் கூட்டு பிராரத்தனைக்கான பலன்.

ஒருவேளை ‘சங்கரராமன் தற்கொலை செய்து கொண்டார். அவரை யாரும் கொலை செய்யவில்லை. ஜெயேந்திரர் போன்ற புனிதமானவர்கள் இதுபோன்ற கொலையில் ஈடுபடுவார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது’ என்று தீர்ப்பு வந்தால், அதை எப்படி இந்தக் கூட்டு பிரார்த்தனைக்காரர்கள் தாங்கிக் கொள்வார்கள் என்பதுதான் நமது கவலையாக இருக்கிறது.

இளகிய மனம் படைத்த இவர்களுக்கு, எதையும் தாங்கும் இதயத்தை, அந்த எல்லாம் வல்ல இறைவன் அளிக்க வேண்டும், என்றுதான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பார்ப்போம். கடவுளின் கருணையை.

தொடர்புடயவை:

பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?

யார்..?

Kerala_Police_Logo1 logo Karnataka-Police-

பரமக்குடி துப்பாக்கிச் சூடு முதல் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு வரை நடந்த வன்முறைகளை கண்டிப்பவர்கள், தமிழக காவல்துறையை மட்டும் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்.

அப்படி பார்க்கையில், காவல் துறையின் இந்த வனமுறைகளுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுபோல்தான் தெரிகிறது.
அப்படியானால், தமிழக காவல்துறை ‘தமிழர் விரோதம்’ கொண்ட கேரள அரசு அல்லது கர்நாடக அரசு கட்டுப்பாட்டில் இருக்குமோ?

முதல்வர் காவல் துறையின் இந்த பின்னணியை கண்டுபிடித்து நடவடிக்கை வேண்டும். இல்லை என்றால், முதல்வருக்கும் இதில் பங்கு இருக்கிறது என்ற பழிச்சொல்லுக்கு அவர் ஆளாக நேரிடும்.

**

23-11-2013 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!

Bharatiya Janata Party மீது..?

modi-karunanidhi

Bharatiya Janata Party யோடு
எக்காரணம் கொண்டும்
கலைஞர் கூட்டணி வைக்க மாட்டார்
என்ற நம்பிக்கை
‘நமக்கு’ இருக்கிறது.

ஆனால்..
கலைஞருக்குதான் இல்லை.

**

11-11-2013 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

தேர்தல்: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா?

தேர்தல் கூட்டணி முடிவாகிவிட்டது!

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

? ? ? ! ! !

money-bag-630 big-money-bagsஆடி முடிக்கையில் அள்ளி சென்றோர் யாருமுண்டோ..?

உண்டு.

சச்சின் டெண்டுல்கர்.

**

18-11-2013 அன்று இரவு face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

அடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’

உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

 

‘பீட்ஸா- 2 வில்லா’: இது, ‘வாந்தி-பேதி’க்கு எந்த வகையிலும் பொறுப்பல்ல..

20131115138448051661277

‘பீட்ஸா- 2 – வில்லா’ என்ற பெயரி்ல் ஒரு படம் வந்திருக்கிறது.

அது, ‘கோயில்களுக்கும் வழிபாட்டுத்தலங்களுக்கும் சென்றால்,  நமது மனதிற்கு பாஸிட்டிங் வைப்ரேஷன் ஏற்படும், அதுபோல சூனியம், மந்திரம் போன்றவை செய்யக்கூடிய இடத்திற்குச் சென்றாலோ அல்லது  செய்துவைத்துள்ள இடத்தில் இருந்தாலோ நமது மனதில் நெகட்டிவ் வைப்ரேஷன் ஏற்படும்.’  என்ற கருத்தை அறிவியலாக சொல்கிறதாம்.

“அதெல்லாம் உண்மடா மச்சான். ஆனா நீ நம்ப மாட்ட.. பகுத்தறிவுன்னு.. வௌக்கெண்ண நியாயம் பேசுவ.. ” என்று படம் பார்த்து வந்த 4 நண்பர்கள், படம் பாக்காத என்னை பாடாய் படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

அந்த நாலுபேரில் இரண்டு பேருக்கு இரண்டு நாளா வயிற்றுப் போக்கு. இன்னும் இரண்டு பேருக்கு வாந்தி. அதுக்குக் காரணம், ஒரே நாளில் ஏகப்பட்ட தீபாவளி பலகாரம் சாப்பிட்டது.

நான் கேட்டேன், “நீங்க நாலுபேரும் ஒண்ணாதான் அந்தப் படத்தை பாத்துட்டு வந்தீங்க.. உங்க நாலுபேருக்கும் பேதியும் வாந்தியும் வந்திருக்கு.. அதுக்குக் காரணம் ‘வில்லா படத்தின் மூலமாக உங்களுக்கு நெகட்டிவ் வைப்ரேஷன் ஆயிடுச்சுன்னு  சொன்ன ஒத்துக்குவீங்களா?” என்றேன்.

நண்பன் பிரசன்னா அவசரமாக சொன்னான், “ஆமான்டா மச்சான்.. நீ சொல்றது உண்மதான். நேத்து என் பிரண்டு ரெண்டு பேரு, அந்தப் படத்த பாத்திருக்கானுங்கடா.. அவனுங்களுக்கு வாந்தி-பேதி வந்து ஆஸ்பிட்டல்லா அட்மிட்’’ என்றான்.

அடப்பாவிகளா?

நமக்கு நம்பிக்கையில்ல..

வாந்தி-பேதிக்கு காரணம் திங்கிற தீனியும், சுகாதாரமற்ற சூழலும் தான்.

Toilet போயிட்டு வந்தா, கையை சோப்புப் போட்டு கழுவாதவர்கள் எல்லாம் ‘பேதி’க்கு பில்லி-சூனியத்தின் மேல் பழி போடுவது போல், ‘வில்லா’ திரைப்படமும் அப்படி ஏதோ ஒரு வைப்ரேஷன் காரணத்தை சொல்லியிருக்கும் போல..

கடைசியில.. வரம் கொடுத்த சிவன் தலையிலயே கைய வைச்சக் கதையா..? பில்லி-சூனியத்திற்கே பில்லி-சூனியம் வைச்சிட்டானுங்க என் நண்பர்கள்.

நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, கடவுள் தொல்லையும் இல்லை. பேய் தொல்லையும் இல்லை.

நம்பிக்கை இருக்கிறவங்க ஜாக்கிரதையா இருந்துக்குங்க..

வாந்தி-பேதி வந்துராம…

அதாங்க வில்லா பக்கம் போயிடாம…

தொடர்புடையது:

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

ஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ – காமெடி கலகம்

Rush: ஒளி ஒலியின் உன்னதம்

விரைவில்; ஆதிக்கங்களுக்கு எதிரான ‘அபசகுனம்’

ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..

தமிழருவி_மணியன்தமிழக அரசு, சரியா திட்டமிட்டு, காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் ஊர்ல இல்லாதபோது, முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருக்கிறது. அது மட்டுமல்ல, நெடுமாறன் அய்யாவையும் கைது பண்ணி சிறையில் அடைச்சிருச்சி.

அய்யா தமிழருவி மணியன் தமிழ்நாட்ல இருந்திருந்தால் இப்படி அராஜகத்தைச் செய்ய தமிழக அரசுக்கு துணிவு இருந்திருக்குமா?

ஊர்ல இருந்து தலைவர் வரட்டும், அப்புறம் இருக்குது… முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிச்சவங்களுக்கு.

சிங்கத்தை சீண்டி பாத்திடுச்சி தமிழக அரசு.. இனி நடக்கப்போற விளைவுகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு.

சிங்கம் கம்பீரமா காட்ல வேட்டையாடி பார்த்திருப்போம்… கம்பீரமா கர்ஜித்து பார்த்திருப்போம்…
ஆனால், சிங்கம் அறப்போராட்டம், சத்தியாகிரகம், உண்ணாவிரதம் இருந்து பாத்திருக்க மாட்டோம். பாப்போம்.

தமிழ்நாடு பற்றிய தகவலே வராத ஏதோ ஒரு இடத்தில தலைவர் இருக்கிறாரு. அதனால்தான் அவரால அறிக்கைக் கூட குடுக்க முடியல..

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பிசாங்களே.. ஒருவேளை அதல போனாலும் போயிருப்பாரு.. சும்மா சுற்றலா இல்ல.. தமிழனோட சுவடுகளை கண்டுபுடிக்க..

வரட்டும்.. அப்புறம் இருக்கு.
யாருக்கு?
யாருக்கோ..

*

நேற்று (17-11-2013) face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு …

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

அடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’

Tendulkar of India raises his bat in New Delhi sachin_adidassachin-last-match_505_111513043135

காலணியில் கம்பெனி,
கை பட்டையில ஒரு கம்பெனி,
சட்டையில் ஒரு கம்பெனி..
ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு
ஆடறதுக்கு அனுமதி இருந்தா..
ஜட்டி கம்பெனியிடமும் காசு வாங்கியிருக்கலாம்…

தேசப்பற்றை காட்டுவதற்கு
இதெல்லாம் போதாதுன்னு..
bat ல M.R.F – Adidas ஸ்டிக்கர் ஒட்டி
அதுலேயும் நல்லா கல்லாக் கட்டி…

கடைசி மேச்சுல மட்டும்
நாட்டுப்பற்ற தீவிரமா காட்ட..

தன் bat ல தேசியக் கொடிய ஒட்டி..
‘இந்த தேசப்பற்று இலவசம்..’ அப்படின்னு…

பாருங்க.. அதுக்குள்ள,
அதுக்கும் கெடச்சிது…
அடிச்சா மொத்தமா..
‘பாரத ரத்னா’

*

நேற்று (16.11.2013) face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்?

பாரத் மாத்தாக்கி ஜே…