தூத்துக்குடியில் ஆயுதக் கப்பல்; சென்னையில் அகிம்சை கப்பல்

ship

க்டோபர் 12-ஆம் தேதி இந்திய கடல் பகுதிக்குள் தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் அனுமதியின்றி நுழைந்ததாக அமெரிக்காவின் அட்வன்போர்டு என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான “சீ மேன் கார்டு’ கப்பல் கடலோரக் காவல் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டது. க்யூ பிரிவு போலீஸார் கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பாதுகாவலர்களைக் கைது செய்தனர்.

அது போன மாசம்.

அமெரிக்க கடற்படையின் போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். மெக்கேம்ப்பெல் (டிடிஜி.85) சென்னை துறைமுகத்துக்கு இந்திய அரசின், மாபெரும் வரவேற்புடன் நேற்று (4-11-2013) வந்துள்ளது. இது இந்த மாசம்.

இதுபற்றி அமெரிக்க துணை தூதரக அதிகாரி ஜெனிஃபர் மெசின்டையர் : போர்க் கப்பல் வருகையின் மூலம் இரண்டு தரப்பும் இணைந்து போர் பயிற்சி செய்தல், தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்ளுதல், அமைதியை மேற்கொள்வதற்கான பயிற்சி முகாம்கள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், வல்லுநர்கள் பரிமாற்றம், தீவிரவாத ஒழிப்பு பயிற்சிகள், ஆகியவை நடைபெறும்.

என்று சொல்லியிருக்கிறார். நல்லது.

இதுபோன்ற பயிற்சிகளை இந்திய கடற்படை, அமெரிக்க கடலில் போய் செய்வதற்கு ஒரே ஒருமுறையாவது  வாய்ப்புக் கிடைக்குமா? அங்குதான் தீவிரவாதம் தலைவிரித்தாடுது. ஏரோபிளேனையே பெரிய… கட்டடத்திலேயே உட்டு ஆட்டிட்டாய்ங்க…

**

இப்போது வந்திருக்கிற, அமெரிக்க கடற்படையின் போர்க் கப்பலில் உள்ளவைகளின் பட்டியலைப் பார்த்தால், பயிற்சிக்கு வந்தானா? Bom’ போட வந்தானா? என்று…. உங்களுக்கும் தோன்றும்.

கப்பலின் நீளம் 510 அடி. மொத்த எடை 9,296 டன். இந்த கப்பல் 30 நாட்டிக்கல் மைல் வேகத்தை விட அதிகமாக செல்லும். குண்டு வீசும் பீரங்கிகள், ஏவுகணைகள் எந்த பக்கம் வந்தாலும் தாக்கி அழிக்கும் வசதி கொண்ட பீரங்கிகள். பல்வேறு நவீன ஆயுதங்களுடன் ஏவுகணைகளும் உள்ளன.  நீருக்கு அடியில், தொலைவில் நடப்பவைகளை  கண்டறியும் அதிநவீனரேடர்கள், மின்னணு தொழில்நுட்ப வசதிகள் இந்த கப்பலில் உள்ளன.

அடப்பாவிகளா;

இப்படி செட்டா வந்திருக்கிறவனை உள்ள விட்டுட்டு, தூத்துக்குடி துறைமுகத்துல யாரோ சேவிங் பண்ணாதாவங்களைப் புடிச்சி வைச்சிகிட்டு, ‘சீமேன்கார்டு ஓகியா கப்பலில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 35 பேரும் என்ன நோக்கத்திற்காக வந்தார்கள் என்பது தெரியவில்லை.  இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம்’ என்கிறார்கள்.

என்ன கொடுமை சார் இது?

சந்தேகம் :

இன்னைக்கு அகிம்சை ஆயுதங்களுடன் ‘செட்டா’ வந்திருக்கிறவர்கள், அன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்களை ‘பயிற்சி’ முடிஞ்சு போகும்போது கூட்டிக்கிட்டு போயிடுவாங்களோ?

ஆதங்கம் :

பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் எதிராக குமுறுகிற நம்ம அக்மார்க் ‘இந்து’ தேசப்பற்றாளர்கள்கூட, நேற்று வந்திருக்கிற அமெரிக்க போர்கப்பல் பற்றி,   வாய்திறக்க மறுக்கிறார்கள். வாய் திறந்தால்..
‘அந்தக் கப்பலில் இந்திய முனையை கட்டி, அப்படியே இழுத்துக்கிட்டு போய் அமெரிக்ககூட சேர்த்திட்டா..

நினைச்சிப் பாக்கவே…எவ்வளவு நல்லாயிருக்கு.. வாய்ப்பிருக்கா..?’

தொடர்புடையது:

சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்

தீ வெட்டியுடன் நிற்கும் அமெரிக்க ‘சுதந்திர’ தேவி

அமெரிக்காவின் அப்துல்கலாமே…வெள்ளை மாளிகையின் கறுப்பு புஷ்ஷே… வருக வருக

திருவள்ளுவரின் சர்வதேசியமும், காரல் மார்க்சின் தமிழ்த் தேசியமும்

பின்லேடன்-அமெரி்க்கா சண்டையும் இந்தியா,பாகிஸ்தான் விசுவாசமும்

இலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே !