அடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’

Tendulkar of India raises his bat in New Delhi sachin_adidassachin-last-match_505_111513043135

காலணியில் கம்பெனி,
கை பட்டையில ஒரு கம்பெனி,
சட்டையில் ஒரு கம்பெனி..
ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு
ஆடறதுக்கு அனுமதி இருந்தா..
ஜட்டி கம்பெனியிடமும் காசு வாங்கியிருக்கலாம்…

தேசப்பற்றை காட்டுவதற்கு
இதெல்லாம் போதாதுன்னு..
bat ல M.R.F – Adidas ஸ்டிக்கர் ஒட்டி
அதுலேயும் நல்லா கல்லாக் கட்டி…

கடைசி மேச்சுல மட்டும்
நாட்டுப்பற்ற தீவிரமா காட்ட..

தன் bat ல தேசியக் கொடிய ஒட்டி..
‘இந்த தேசப்பற்று இலவசம்..’ அப்படின்னு…

பாருங்க.. அதுக்குள்ள,
அதுக்கும் கெடச்சிது…
அடிச்சா மொத்தமா..
‘பாரத ரத்னா’

*

நேற்று (16.11.2013) face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தாக்குதல் – யார் காரணம்?

பாரத் மாத்தாக்கி ஜே…

8 thoughts on “அடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’

 1. கவிதயெல்லாம் வினவு கம்பெனி பாணியில் எழுதியிருக்கிறீர்கள்..
  உங்கள் பார்வையில் இந்தியாவில் (பெரியார் தவிர) யாருக்கும் ரத்னா தரமுடியாது

 2. http://youtu.be/ZB9nk24nrq0

  வீட்டிலிருந்தபடியே தையல் கலை கற்று கொள்ள எங்கள் இணைய தளத்தை பார்வை இடவும் .இணைய முகவரி http://jayamdesigner.blogspot.in/ .இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் share செய்யவும் . நன்றி

 3. பொதுவாக இந்தியாவில் கொடுக்கப்படும் எந்த விருதும் திறன் சார்ந்து கொடுக்கப்படுவதில்லை.எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது.அதுவும் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவை அந்நிய நாடுகளுக்கு விற்கும் வணிக அரசியல் வந்த பிறகு, இதில் வணிகமும் சேர்ந்துகொண்டது.மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அவர்கள் கையிலெடுத்துப் போராடிவிடக்கூடாது என்பதற்காகவே இங்கே கிரிக்கெட் ஊக்குவிக்கப்படுகிறது.அதன் ஓர் உச்சகட்ட முயற்சிதான் சச்சினுக்கு வழங்கப்படும் பாரத ரத்னா.இதன் மீது எந்த மரியாதையும் வைக்கவேண்டிய அவசியமில்லை.மதிமாறனின் கருத்தில் முழுக்க உடன்படுகிறேன்.

 4. நீங்க மதிமாறன் மனசுல எடம் புடிங்க…
  ஆனா மக்கள் எல்லாரும் கிரிக்கெட் மனசுல எட புடிச்சுட்டாங்க..
  என்னா பண்றது…?

Leave a Reply

%d bloggers like this: