ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..
தமிழக அரசு, சரியா திட்டமிட்டு, காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் ஊர்ல இல்லாதபோது, முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருக்கிறது. அது மட்டுமல்ல, நெடுமாறன் அய்யாவையும் கைது பண்ணி சிறையில் அடைச்சிருச்சி.
அய்யா தமிழருவி மணியன் தமிழ்நாட்ல இருந்திருந்தால் இப்படி அராஜகத்தைச் செய்ய தமிழக அரசுக்கு துணிவு இருந்திருக்குமா?
ஊர்ல இருந்து தலைவர் வரட்டும், அப்புறம் இருக்குது… முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிச்சவங்களுக்கு.
சிங்கத்தை சீண்டி பாத்திடுச்சி தமிழக அரசு.. இனி நடக்கப்போற விளைவுகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு.
சிங்கம் கம்பீரமா காட்ல வேட்டையாடி பார்த்திருப்போம்… கம்பீரமா கர்ஜித்து பார்த்திருப்போம்…
ஆனால், சிங்கம் அறப்போராட்டம், சத்தியாகிரகம், உண்ணாவிரதம் இருந்து பாத்திருக்க மாட்டோம். பாப்போம்.
தமிழ்நாடு பற்றிய தகவலே வராத ஏதோ ஒரு இடத்தில தலைவர் இருக்கிறாரு. அதனால்தான் அவரால அறிக்கைக் கூட குடுக்க முடியல..
செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பிசாங்களே.. ஒருவேளை அதல போனாலும் போயிருப்பாரு.. சும்மா சுற்றலா இல்ல.. தமிழனோட சுவடுகளை கண்டுபுடிக்க..
வரட்டும்.. அப்புறம் இருக்கு.
யாருக்கு?
யாருக்கோ..
*
நேற்று (17-11-2013) face book ல் எழுதியது.
தொடர்புடையவை:
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு …
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!
தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
Really great comment with comedy. Very Good Brother!!
Super…
அட, தல செவ்வாய் கிரகத்துல, வெளிக்குக்கு போகமுடியாம இருக்குது,அது தமிழ் நாட்டுக்கு வந்திரச்சுன்னா,சும்மா பீச்சி அடிக்க போகுது,
Super, Mr. Mathimaran only can write like this.
ஒருவேளை அருவி வற்றிப் போயிடுச்சா ?
மிகவும் ரசித்தேன், பார்க்கலாம் சிங்கம் என்ன செய்யப்போகிறது என்று!!
//தமிழ்நாடு பற்றிய தகவலே வராத ஏதோ ஒரு இடத்தில தலைவர் இருக்கிறாரு. அதனால்தான் அவரால அறிக்கைக் கூட குடுக்க முடியல.//.
தமிழ் பரதேசிகல நீங்கள் இப்படி இருக்கிறதலததான் இந்த நிலமை உங்களுக்கு.