சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

FE_2711_MN_02_Cni5369

சங்கரராமன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதை ஒட்டி, நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்கர மடத்தில் நடந்த கூ ட்டு பிரார்த்தனை. (படம்:தினத்தந்தி)
*

‘கடவுளுக்கு உண்மையாக, நேர்மையாக சங்கர மடத்தின் புனிதத்திற்கு எதிரான கிரிமினல்களின் சதிகளை அம்பலப்படுத்தியும் சேவை செய்த சங்கரராமனை கொன்றதாக, தமிழக அரசால் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரனுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்’ என்றுதான் இந்த பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையை நடத்தியிருப்பார்கள்?

ஏனென்றால் ராஜிவ் கொலையில் மறைமுகமாக கூட தொடர்பு இல்லாத, பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து பலரும் போராடும்போது, அதற்கே எதிர்ப்பு தெரிவிக்கிற இவர்கள், அல்லது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள்;

சங்கரராமன் கொலையில் அக்யூஸ்ட் நெம்பர் -1 ஜெயேந்திரனாக இருக்கும்போது; நீதியும் நேர்மையும் தகுதியும் தரமும் அதைவிட ‘ஆச்சாரமும்’ நிரம்பியிருக்கிறவர்கள் ஒரு கிரிமனலுக்கு எப்படி ஆதரவாக இருப்பார்கள்?

இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும். இவர்களின் கூட்டு பிராரத்தனைக்கான பலன்.

ஒருவேளை ‘சங்கரராமன் தற்கொலை செய்து கொண்டார். அவரை யாரும் கொலை செய்யவில்லை. ஜெயேந்திரர் போன்ற புனிதமானவர்கள் இதுபோன்ற கொலையில் ஈடுபடுவார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது’ என்று தீர்ப்பு வந்தால், அதை எப்படி இந்தக் கூட்டு பிரார்த்தனைக்காரர்கள் தாங்கிக் கொள்வார்கள் என்பதுதான் நமது கவலையாக இருக்கிறது.

இளகிய மனம் படைத்த இவர்களுக்கு, எதையும் தாங்கும் இதயத்தை, அந்த எல்லாம் வல்ல இறைவன் அளிக்க வேண்டும், என்றுதான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பார்ப்போம். கடவுளின் கருணையை.

தொடர்புடயவை:

பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?