சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்
‘கடவுளுக்கு உண்மையாக, நேர்மையாக சங்கர மடத்தின் புனிதத்திற்கு எதிரான கிரிமினல்களின் சதிகளை அம்பலப்படுத்தியும் சேவை செய்த சங்கரராமனை கொன்றதாக, தமிழக அரசால் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரனுக்கு தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்’ என்றுதான் இந்த பக்தர்கள் கூட்டு பிரார்த்தனையை நடத்தியிருப்பார்கள்?
ஏனென்றால் ராஜிவ் கொலையில் மறைமுகமாக கூட தொடர்பு இல்லாத, பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து பலரும் போராடும்போது, அதற்கே எதிர்ப்பு தெரிவிக்கிற இவர்கள், அல்லது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள்;
சங்கரராமன் கொலையில் அக்யூஸ்ட் நெம்பர் -1 ஜெயேந்திரனாக இருக்கும்போது; நீதியும் நேர்மையும் தகுதியும் தரமும் அதைவிட ‘ஆச்சாரமும்’ நிரம்பியிருக்கிறவர்கள் ஒரு கிரிமனலுக்கு எப்படி ஆதரவாக இருப்பார்கள்?
இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும். இவர்களின் கூட்டு பிராரத்தனைக்கான பலன்.
ஒருவேளை ‘சங்கரராமன் தற்கொலை செய்து கொண்டார். அவரை யாரும் கொலை செய்யவில்லை. ஜெயேந்திரர் போன்ற புனிதமானவர்கள் இதுபோன்ற கொலையில் ஈடுபடுவார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது’ என்று தீர்ப்பு வந்தால், அதை எப்படி இந்தக் கூட்டு பிரார்த்தனைக்காரர்கள் தாங்கிக் கொள்வார்கள் என்பதுதான் நமது கவலையாக இருக்கிறது.
இளகிய மனம் படைத்த இவர்களுக்கு, எதையும் தாங்கும் இதயத்தை, அந்த எல்லாம் வல்ல இறைவன் அளிக்க வேண்டும், என்றுதான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பார்ப்போம். கடவுளின் கருணையை.
தொடர்புடயவை:
பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!(ஈழம்-பிரபாகரன் பற்றி..)
Periyavaaal acquitted.
//சங்கரராமன் கொலையில் அக்யூஸ்ட் நெம்பர் -1 ஜெயேந்திரனாக இருக்கும்போது//
இந்த வழக்கில் அரசுத்தரப்பால் சுமத்தப்பட்ட குற்றம் அப்படியே உண்மை.
//ராஜிவ் கொலையில் மறைமுகமாக கூட தொடர்பு இல்லாத, பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும்//
இந்த வழக்கில் அரசுத்தரப்பு சுமத்தும் குற்றம் பொய்.
இதற்குப்பின்னால் பகுத்தறிவு சார்ந்த லாஜிக் ஏதாவது இருந்தால் தெரியப்படுத்தவும்.
போலீசு எப்பவுமே பொய்க்கேசுதான் போடும் என்று முழங்குகிறவர்களுக்கு ஜெயேந்திரர் மீது குற்றம் சுமத்திய போலீசு மட்டும் அரிச்சந்திரனாகத் தோன்றுவதன் காரணம் என்ன? இரண்டு கேஸ்களிலும் முரண்படும் உரிமை உங்களுக்கு இருந்தால் எதிர்த்தரப்புக்கும் உண்டல்லவா?
” ராஜீவ் கொலையில் மறைமுகமாகக் கூடத் தொடர்பு இல்லாத” என்று உங்களுக்கு ஏன் தோன்றுகிறது? ஜெயேந்திரர் விஷயத்தில் போலீஸ் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் உங்களால் சாந்தன், பேரறிவாளன் விஷயத்தில் போலீஸ் சொல்வதை அப்படியே ஏன் ஏற்றுக்கொள்ள இயலவில்லை?
அதுபோல எதிர்த்தரப்புக்கும் ஜெயேந்திரருக்காகக் கூட்டுப்பிரார்த்தனை நடத்தலாம், மூவர் தூக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று தோன்றலாம் அல்லவா?
இது போன்ற விஷயங்களில் கூட்டுப்பிரார்த்தனை நடத்துபவர்களும் சரி, மூவர் தூக்குக்காகக் கூட்டம் நடத்தும் நீங்களும் சரி, எல்லாருமே அறிவின் அடிப்படையில் அன்றி சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஏதாவது ஒரு சார்பு நிலையைத்தான் எடுக்கிறோம். நீங்கள் கூட்டம் நடத்துகிறீர்கள். அவர்கள் கூட்டுப்பிரார்த்தனை நடத்துகிறார்கள். அவ்வளவே.
Tharumathin vaazhvuthanai soothu kavvum..dharmam marupadi vellum…poda pokka!
Mr Anandham
The author is criticising those people who advocates the capital punishment for the 3 accused (by the court) in the Rajiv’s murder case and praying to save the periyavaal.
But, I strongly believe that Periyavaal is innocent and never influenced anyone, directly or indirectly, to break the case against him. All these years ‘bhagavaan’ stood beside him and he finally was acquitted.
மதிமாறன் பாவம். எதிர்பாத்தது நடக்கலை. அதான் உளறல் ஜாஸ்தியா?
@M.Nithil
// The author is criticising those people who advocates the capital punishment for the 3 accused (by the court) in the Rajiv’s murder case and praying to save the periyavaal.// புரிகிறது. அதற்குத்தான் பதில் எழுதியிருக்கிறேன்.
தர்மம் வென்றது பெரியவாள் விடுதலை