இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

2961560161_1_5_fDgoeRmh

காஞ்சிபுரம் கோயிலில் சங்கர ராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு,
‘சங்கர ராமனின் சம்சாரம்’தான் காரணம் என்று சந்தேகிக்காமல் தீர்ப்பளித்த, நியாயத்தையும் பெண்ணை மதிக்கும் செயலையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

இது தாண்டா தீர்ப்பு.

**

சங்கர ராமன் எதனால் வெட்டி கொலை செய்யப்பட்டார்?
அவர் இந்து மத எதிர்ப்பும், பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் மறுப்பும் பேசிய பெரியாரின் தொண்டரா? இல்லை,
சங்கராச்சாரியராக ஒரு தலித் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தாரா?

இந்து கண்ணோட்டமும் சங்கராச்சாரியர்களுக்கே ‘ஆச்சாரத்தை’ போதித்த அல்லது சுட்டிக்காட்டிய தீவிரமான ஜாதி உணர்வு கொண்ட பார்ப்பனர்.

இப்படி பார்ப்பனியத்திற்கும் இந்து மதத்திற்கும் உண்மையாக இருந்த அவரை கொலை செய்ததை குறித்து, எந்த வருத்தமோ கண்டனமோ தெரிவிக்கவில்லை பிராமணர் சங்கமும், இந்து அமைப்புகளும்.

சரி. சங்கர ராமனை, ஜெயேந்திரனும் அவரின் கூட்டாளிகளும் கொலை செய்யவில்லை என்று கோர்ட் சொல்லிவிட்டது.

அப்படியானால் ‘உண்மை இந்துவான சங்கர ராமனை கொன்ற குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்’ என்ற கோரிக்கையை ஏன் பிராமணர் சங்கமும் இந்து அமைப்புகளும் எழுப்பவில்லை.

**

மனுஷ்யபுத்திரன் தன்னுடைய facebook ல் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்:
//சங்கரராமன் கொலை வழக்கில் நீதி வென்றிருக்கிறது.
யாருடைய நீதி என்பதில்தான் பிரச்சினை….//

இந்த வாக்கியம் அர்த்த மற்றதாக இருக்கிறது.

//சங்கரராமன் கொலை வழக்கில் நீதி வென்றிருக்கிறது.// என்று பிராமணர் சங்கம் அல்லது இந்து அமைப்புகள் சொல்வதில் அர்த்தமிருக்கிறது.

அதை கேள்விக்குட்படுத்துபவர்கள்..
//யாருடைய நீதி என்பதில்தான் பிரச்சினை….// என்று கேள்வி எழுப்புவது கோமாளித்தனமாக இருக்கிறது. இந்த தீர்ப்பில் எங்குமே நீதியில்லை.

‘யாருடைய நீதி என்றால்..’ சங்கராச்சாரி இந்து அமைப்புகளின் நீதியா வென்றிருக்கிறது? அப்படியானால் இந்த வழக்கில் அவர்களிடம் ‘நீதி’ இருந்ததா?

பதிலாக ‘அநீதி வென்றிருக்கிறது’ என்பதுதான் சரியாக இருக்கும்.
எதையாவது வித்தியாசமாக சொல்லவேண்டும் என்பதற்காக வெறும் வார்த்தை விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இதுபோன்ற அபத்தங்கள் நிகழ்கிறது.

**

நேற்று (27-11-2013) Facebook ல் எழுதியது.

தொடர்புடயவை:

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்