பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

Prageeth.Eknelygoda.cartoon

பார்ப்பன பத்திரிகைகளில் தனது ஜனநாயக கடமையை ‘சிறப்பாக’ செய்து கொண்டே; தமிழ்த் தேசிய, பெரியாரிய, மார்க்சிய, பிரபாகரனிய, தலித்திய, புரட்சிகர அரசியல் கண்ணோட்டத்தோடு கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்நது தனது இணையப் பக்கங்களிலும் Facebook லிம் சிற்றிதழ்களிலும், பத்திரிகை நண்பர்கள் எழுதி வருவது நாம் அறிந்ததே.

‘ஈழப் பிரச்சினை, ஜாதியப் பிரச்சினை இவைகளுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் மட்டுமல்ல, பெரியார் கூட காரணம்.’ ‘பிரபாகரன் ஒருவர் தான் தலைவர்’ ‘இனி மார்க்சியம் எல்லாம் எடுபடாது’, ‘ஸ்டாலின் மனித குல விரோதி’ ‘பெரியார், அம்பேத்கர் அரசியல் சந்தர்ப்பவாதம். ஜாதி ஒழிப்புக்கு அவர்களிடம் ஒன்றுமில்லை.’ ‘புரட்சி ஒன்றுதான் தீர்வு’

‘பெரியார் தலித் விரோதி’ ‘பெரியாரை தவிர்த்து விட்டு தமிழ் நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாது’ ‘பகுத்தறிவு’ ‘இனஉணர்வு’ ‘இந்துத்துவாவை வேரறுக்க மோடியை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்’ –
என்றெல்லாமும் இதுபோல் பொருள்படும்படியாகவும் ஆவேசத்தோடு எழுதிய நண்பர்கள்;

இன்று ஆப்ட்ரால், ஜெயேந்திரனுக்கு எதிராக ஒரு வார்த்தையை தங்களின் ‘டைரி’யில் கூட எழுத முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
Facebook ல் ஜெயேந்திரன் விடுதலையை எதிர்த்து அடுத்தவர்கள் எழுதியதை Like செய்தால்கூட அவர்களின் வேலைக்கோ உயிருக்கோ ஆபத்து நேரிடுமோ என்னமோ? இது மிகவும் கவலையளிக்கிறது.

அவர்களின் பரிதாப நிலைக்கு நமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வோம். அதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக சமரசமற்று தொடர்ந்து இயங்கிய, அவர்களின் கருத்தை கைது செய்து வைத்திருக்கிற பார்ப்பனப் பத்திரிகைகளின் நிர்வாகத்தை அம்பலப்படுத்தவோம்.

தங்கள் உயிரை துச்சமாக மதித்து, பார்ப்பனப் பத்திரிகைகளில் துணிச்சலோடு பணியாற்றும் முற்போக்காளர்களுக்கு நமது புரட்சிகர வணக்கத்தை தெரிவித்துக்கொள்வோம்.

நவம்பர்27, 2013 எழுதியது

தொடர்புடயவை:

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !

ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?