ஜனவரி 1 பிப்பரவரி 14 மே 1

Different

கிறிஸ்துமஸ் என்ன கிழமையில் வருகிறதோ அதே கிழமையில்தான் ஆங்கிலப் புத்தாண்டும் வரும். கிறிஸ்து பிறப்பு தொடர்பான நம்பிக்கைதான் ஆங்கிலப் புத்தாண்டும்.

கிறிஸ்துவ மதம் நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவ வடிவத்திற்கு மாறியப் பிறகு, கிறிஸ்துவமும் புத்தாண்டும் வர்த்தகமாக மாறிப்போனது.
ஜனவரி முதல் தேதியை மதச்சார்ப்பற்ற நாளாக மாற்றிய ‘பெருமை’ முதலாளித்துவத்தையே சேரும்.

புத்தாண்டை மதச்சார்பற்ற ‘கேளிக்கை’ நாளாக மாற்றியதின் மூலமாக மிகப் பெரிய சந்தை முதலாளித்துவ நிறுவனங்களுக்கு பரிசாக கிடைத்திருக்கிறது.
விழாக்களும் பண்டிகைகளும் முதலாளிகளின் வேட்டை நாய்கள் என்றார் காரல் மார்க்ஸ்.

அதனால்தான் மே 1 போன்ற தொழிலாளர்களின் விடுதலை நாளை விட, புத்தாண்டு ‘கேளிக்கை நாள்’ அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது; அதுவும் தொழிலாளர்களிடமே.

ஆனால், இந்து மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் இதை எதிர்ப்பது ‘பண்பாட்டுக்கு எதிரானது’ என்ற நிலப்பிரபுத்துவ கோமாளித்தனமான சிந்தனையில்.

ஜனவரி 1 பண்பாட்டுக்கு எதிரானது என்றால், ஒவ்வொரு ஆங்கில மாத முதல் தேதியிலும் சம்பளம் வாங்குவது பண்பாட்டை பாதுக்காக்கிற செயலா?

காதலர் தினம் கொண்டாடுவதால், பண்பாடு கெட்டுபோய்விட்டது என்ற மூடத்தனம்போல், ஆங்கிலப் புத்தாண்டிலும் பண்பாடு கெட்டுப்போகும் என்பதும்.

காதலை வலியுறுத்தி சினிமா எடுத்த இயக்குநர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, நிஜத்தில் காதலை எதிர்த்ததைப்போல்;

காதலர் தினம் விமர்சியாக கொண்டாடப்பட்ட பிறகுதான், காதலர்கள் அதிகமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காதலர் தினம் உங்கள் ஜாதி மதப் பண்பாட்டில் தீ யையும் வைக்வில்லை; காதலர்களையும் வாழவைக்கவில்லை. அது வர்த்தக நாளாக, முதலாளிகளையே வாழ வைக்கிறது.

ஆங்கிலப் புத்தாண்டு அன்று இந்து கோயில்களுக்கு செல்வதால், உங்கள் ஜாதி வெறியை அது ஒழித்துவிடாது, ஏனென்றால் காலகாலமாக புத்தாண்டுக்கு ‘சர்ச்சு’க்குப் போகிறவர்களின் ஜாதிவெறியையே ஒழிக்க முடியாத புத்தாண்டு அது.

வரைமுறையற்று கேளிக்கை யில் ஈடுபடுவதால் 12 மணிக்கு மேல் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடாது. உங்களைப் போலவே உங்கள் பிரச்சினைகளும் தற்காலிக மயக்கத்திலும் மறதியிலும் இருக்கும்.

காதலர் தினமோ, புத்தாண்டு தினமோ கல்லாக் கட்டபோவது சுதேசிய முதலாளிகளும் சர்வதேசிய கம்பெனிகளும்தான்.

ஜனவரி 1 பிப்பரவரி 14 இவை பிரச்சினையை தீர்க்காது. மே 1, இதுவே ஆதிக்கங்களுக்கு முடிவைத் தரும். தொழிலாளர்களுக்கு விடிவைத் தரும்.

தொடர்புடையவை:

இளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்

காதலர் தின எதிர்ப்பு; கள்ளக் காதலர் தினம் கொண்டாட வேண்டிய அளவிற்கு பண்பாடு

மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே!

g-ramakrishnan-jaya-tha-

திமுக; காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததும், பா.ஜ.க., வோடு கூட்டணி இல்லை என்று அறிவித்ததும் காங்கிரசுக்கும் பா.ஜ.க விற்கும் பிரச்சினையானதோ இல்லையே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

‘காங்கிரசு, பா.ஜ.க அணிகள் இல்லாத அணியில்தான் நாங்கள் இருப்போம்’ என்று இதுவரை சொல்லிவந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இப்போது திமுக வின் நெருக்கடியின் காரணமாக ‘அதிமுக இல்லாத அணியில் நாங்கள் இருக்க மாட்டோம்’ என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று (17.12.2013) செய்தியாளர்களிடம்,எந்தக் காரணம் கொண்டும் திமுகவுடன் தேர்தல் உடன்பாடு கிடையாது. ’ என்று திட்டவட்டமாக தீர்த்திருக்கிறார்.

‘காங்கிரசின் எல்லா மோசமான செயல்களுக்கும் திமுக விற்கு உடன்பாடு இருக்கிறது. வரலாறு காணாத ஊழல்.’ என்று அதற்கு அவர் காரணம் காட்டியிருக்கிறார்.

ஊழல் இல்லாத கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி வைக்க வேண்டுமென்றால், சி.பி.எம்., சி.பி.ஐ உடனோ, சி.பி.ஐ., சி.பி.எம் உடனோ கூட கூட்டணி வைக்க முடியாது.

ஆனால் இவர்கள் ஊழலுக்கு எதிராக அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறார்களாம். இவர்களை பற்றி மிக கடுமையான விமர்சனத்தை இவர்களின் அரசியல் நிலைபாடே அம்பலப்படுத்தும்போது, நாம் அதை விட கடுமையாக என்ன சொல்லிவிட முடியும்?

‘அம்மா பெங்களுருக்கு தனி நீதிமன்றத்தில் ஓய்வெடுக்கவா போகிறார்கள்?’ என்று கேட்டால் ‘ஆமாம்’ என்பார்கள் போலும்.

‘தனி நீதிமன்றத்திற்கு வருகைத் தரும் ஊழலை ஒழித்த தாயே.. வருக.. வருக..’ என்று கட்டவுட் வைப்பார்களோ?

அப்படியே கட்டவுட் வைத்தாலும் அம்மா இவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ‘சீட்டு’ கிடைக்கிறதுக்கு முன்னால போயஸ் தோட்டத்து ‘கேட்’ டையே தாண்ட முடியாது.

தேர்தல் நாட்கள் நெருங்கியாச்சு என்றால், பாவம் போயஸ் தோட்டத்தில் வாட்ச் மேனுக்கு வேலை போனாலும் போயிடும். அந்த வேலையை கூட்டணிக் கட்சி தலைவர்கள் பார்க்கும் போது, தேவையில்லாமல் எதுக்கு வாட்ச் மேன்?

அவுங்களுக்குத் தெரியாதது எதுவும் நமக்கு தெரியப்போறதில்லை.. அவுங்களுக்கு தெரிஞ்ச உலக விசயம் நமக்கு புரியப் போறதே இல்லை. அப்படிப்பட்ட திறமைசாலியான இவர்களுக்கு அதிமுகவிடம் மிகவும் பிடித்தது என்னவாக இருக்கும்?

சமச்சீர் கல்வியை தடுத்தாட் கொண்டதா? அதற்கு எதிராக போராடிய தங்களின் SFI., DYFI  மாணவர்களை ரவுண்டு கட்டி அடித்ததா? கல்வியை தனியார் மயமாக்குவதில் ஆர்வம் காட்டுவதா?

தமிழ்ப் புத்தாண்டை மாற்றி சமஸ்கிருத புத்தாண்டை மீட்டெடுத்ததா? ராமர் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று துணிந்து மத்திய அரசுக்கு எதிராக நின்றதா? இல்லை சிதம்பரம் உச்சிக்குடுமி தீட்சதர்களுக்கு ஆதரவாக தமிழுக்கும் தமிழனுக்கும் தடை போட்டதா?

அம்மாவின் எந்த அவதாரம் கம்யூனிஸ்ட்டுகளை ஆட்கொண்டிருக்கும்?

‘சரி அத விடுவோம். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் போல் மிக எளிமையானவர்கள் யாரும் கிடையாது. எங்க போனாலும் பஸ்லதான போவார்கள்.’

ஆமாம். ஆனால், பஸ்ல போறது முக்கியமில்லை. எங்க போறாங்க? அதுதான் முக்கியம்.

போயஸ் தோட்டத்துக்கு பஸ்ல போன என்ன? கார் ல போன என்ன? இல்ல அடிதண்டம் போட்டுக்கிட்டு போனதான் என்ன? அந்த எளிமையால் மக்களுக்கு என்ன பயன்?

ஆனாலும் தோழர் ஜி.ராமகிருஷ்ணனோட தைரியத்தை ஒருவகையில் நாம் பாராட்டிதான் ஆக வேண்டும். ‘அதிமுக வுடன் கூட்டணி’ என்று அவரே அறிவிக்கிறார். இது வெகுளித்தனமாக இருந்தாலும் இந்த துணிச்சல் பாராட்டப்படக் கூடியதுதான்.

ஏன் என்றால் இவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாமா என்பதற்கு முன், போயஸ் தோட்டத்திற்கு உள்ளே விடலாமா? என்பதை அம்மா தானே முடிவு செய்வார்.

குறிப்பு : இதில் சொல்லப்பட்டிருக்கிற செய்திகள் அனைத்தும் தோழர். தா. பாண்டியனுக்கும் பொருந்தும். ஜி.ராமகிருஷ்ணன் என்று வருகிற இடங்களில் தா. பாண்டியன் என்று மாற்றி படித்துப் பார்க்கவும். சரியாக இருக்கும்.

*

பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக ‘கருஞ்சட்டை தமிழன்’ இதழுக்கு 18.12.2013 அன்று எழுதியது.

தொர்புடையவை:

‘தமிழனா? மலையாளியா?’; சி.பி.எம் இனவாதம்

வாழ்க புரட்சித் தலைவி! வாழ்க அச்சுதானந்தன்! – What a trick?

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

கம்யுனிஸ்டுகள், தமிழ்த் தேசியவாதிகளை விட அதிமுகவே மேல்!

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் கொள்கை பயிலரங்கு

2195237_ambedkar_periyarB.H.E.L. தொ.மு. சங்க வளாகம், 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.

‘ஜாதி ஒழிப்பும் டாக்டர் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில், காலை 11 மணிக்கு நான் பேசுகிறேன். பிறகு கேள்வி நேரமும் உண்டு.
திருச்சி பகுதித் தோழர்கள் கலந்து கொள்ளவும்.

தொடர்புக்கு: தோழர். குணா 9865 596940

அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது

Wrap

கருப்பு ராஜாவால்
நன்மை பெற்ற கருப்பர்கள்
வெள்ளை ராஜாவுக்கு
விசுவாசமாகி
முதுகில் கத்தி வைக்கிறார்கள்.

விரோதிகளும் துரோகிகளும்
ஓரே அணியில்..
ஆனாலும் வீழ்த்த முடியாத வீரம்.

அவன் உயிர்..
அவன் பெயரிலோ
புகழிலோ இல்லை
எதிரிகளை அச்சம் கொள்ள வைத்த
அவனின் உண்மையிலிருக்கிறது.

எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும்
இந்த அசுரனின் தாடி மயிரைக்கூட
அசைக்க முடியாது.

ஏன்னெறால்
இவன்
எதிரிகளிடமே மண்டியிட்டு
தவம் செய்து
வரம் கேட்ட
மூட அசுரனல்ல.

எதிரிகளை துவம்சம் செய்து
துரோகிகளுக்கும்
அருளிய
கோபம் நிறைந்த
அன்பான அசுரன்.

-வே. மதிமாறன்.

விரைவில்…
*

அட்டை வடிவமைப்பு: தோழர் மணிவர்மா

பெரியார் படம் உதவி: பிரின்ஸ் என்னாரஸ் பெரியார்

வெளியீடு :
அபசகுனம் வெளியீட்டகம்
7- பிரியா காம்பளக்ஸ், கோபாலபுரம் 2 ஆவது வீதி, கோவை-641018 / 0422-2236300.

சென்னை – 9092390017 / கோவை – 9750871000

தொடர்புடையது

எனது புத்தகங்கள்

அய்யாவும் அண்ணலும்

15

பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘பெரியாரியல் பயிலரங்கம்’ இன்று புதுச்சேரியில் ‘ஒலாந்திரியா சமுதாயக் கூடம், அசோகன் தெரு, நேதாஜி நகர், உப்பளம் பகுதியில் நடைபெறுகிறது.

‘அய்யாவும் அண்ணலும்’ என்ற தலைப்பில் மாலை 3.30 மணிக்கு நான் பேசுகிறேன்.

முடிவில் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன.

த.வ. உதயக்குமார் தலைமை. வரவேற்புரை கோகுல் காந்திநாத்.

நிகழ்ச்சியை பெரியார் திராவிடர் விடுதலைக் கழக புதுவை மாநில செயலாளர் பூ .ஆ. இளையரசன் துவக்கிற வைக்கிறார். தொடர்புக்கு: 7502254877

புதுச்சேரி பகுதி தோழர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!

jesudas61475771_10201225875624230_2103532770_n

சைவ சமயத்தை சேர்ந்த ‘கிறிஸ்துவருக்கு’
இம்முறை சாகித்திய அகடாமி விருது
அருளப்பட்டிருக்கிறது.

‘ஆரூத்ரா தரசினம்’ நாளில் அறிவிப்பு வந்தது தற்செயலானதல்ல.

என்று சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பற்றி நேற்று face book ல் எழுதினேன்.

Tnfishermen Voices என்கிற பெயரில் பெரியார்-டாக்டர் அம்பேத்கர் கருத்துக்களை வீச்சோடு face book ல் எழுதும் விவாதிக்கும் தோழர், நான் எழுதியதை மறுத்து எழுதினார். பெரும்பாலும் எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான கருத்தொற்றுமை இருந்ததால் என் எழுத்துக்களுக்கு விரும்பம் தெரிவித்தே வந்திருக்கிறார். அநேகமாக நான் எழுதியதை அவர் மறுத்து எழுதியது இதுதான் முதல் முறை.

தோழர் Tnfishermen Voices அவர்களின் ஆதங்கமும் அது குறித்த என்னுடைய விளக்கமும்:

Tnfishermen Voices தோழர் அவரின் மண்ணின் மனம் மாறாத எழுத்தை தேடலை முதலில் பெரியாரிய சிந்தனையாளர் ஆகிய நீங்கள் பாராட்டுங்கள் பிறகு விமர்சனம் செய்யுங்கள் அவர் எங்கேயும் தன்னை பார்ப்பான்களின் பினாமி என்று தன்னை அழைத்து கொண்டாதாக நான் பார்கவில்லை

வே மதிமாறன் நான்கு மாதங்களுக்கு முன், காக்கைச் சிறகினிலே… இதழில் வந்த அவருடைய பேட்டியை படித்ததினால்தான் இப்படி குறிப்பிட்டு இருக்கிறேன்…
அந்தப் பேட்டி அவரை இன்னொரு ஜெயமோகனாக அடையாளம் காட்டியது.

Tnfishermen Voices ஈழ விடுதலையை பி ஜே பி மூலமாக பெற்று விட முடியும் என்கிற நம்பிக்கையில் முயற்சி செய்யும் தமிழீழ ஆதரவாளர்கள் போல் மீனவ விடுதலை பிராமிணர்கள் மூலம் கிடைக்கும் என நினைகிறாரோ என்னவோ.

வே மதிமாறன் இலக்கியத்தில் தனக்கான அங்கீகாரம் பார்ப்பன, இந்து ஆதரவில்தான் கிடைக்கும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார்.

Tnfishermen Voices எழுத்தாளர் என்கிற முறையில் முதலில் பாராட்டுங்கள் பிறகு விமர்சனம் செய்யலாம் என்பதே எம் வேண்டுகோள் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவரின் வழிகளில் விமர்சனம் இருக்கலாம் அவரின் தேடல் அவரின் எதிர்பார்ப்பு ஒன்றுதான் அது நெய்தல் நில மக்களின் விடுதலை

வே மதிமாறன் கர்நாடக சங்கீதத்தில் தனக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு ஜேசுதாசுக்கு தன் திறமை மட்டும் போதுமானதாக இல்லை. மாறாக அவர் ஒரு தீவிர இந்து இறைநம்பிக்கையாளராக அதை விட தீவிரமான பார்ப்பன ஆதரவாளராக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அதனாலேயே தன்னுடைய கிறிஸ்துவ இறைநம்பிக்கையை ரகசியமானதாக மாற்றிக் கொண்டார் ஜேசுதாஸ்.

ஜேசுதாஸ் என்கிற பெயரே இந்து பெயர் என்பதுபோல்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அவர் ஒரு சிறந்த அய்யப்ப பக்தராகதான் அடையாளமாகியிருக்கிறார்.

அவருடைய மகன் விஜய் ஜேசுதாசும் மாலைபோட்டு மலைக்கு போக வர இருக்கிறார்.

ஜேசுதாஸ் குருவாயூரப்பன் மீது அளவு கடந்த பக்தி கொண்டவராக அடையாளப்படுத்திக்கொள்கிறார்,

ஆனால் அவருக்கு அந்தக் கோயிலினுள் நுழைவற்கு அனுமதி கிடையாது.

ஒரு கிறிஸ்துவர் சர்ச்க்குப் போவது ரகசியமானதாகவும், இந்துக் கோயிலுக்குப் போவது பகிரங்கமாகவும் மாறியிருக்கிற அவலத்தில் இருக்கிறது, ஜேசுதாஸ் திறமைக்கான அங்கீகாரம்.

கர்நாடக சங்கீதத்திற்கும் ‘நவீன’ கலை இலக்கியத்திற்கும் இருக்கிற இந்த ஒற்றுமை தற்செயலானதல்ல; அதுதான் அந்த இலக்கிய, கலைகளுக்குள் இருக்கிற அரசியல்.

சுயமரியாதை வீரர் நாமகரிப்பேட்டை கிருஷ்ணன் போன்ற மேதைகளுக்கு கர்நாடக சங்கீதத்தில் கிடைக்காத மரியாதை, அதே இசை வேளாளர் சமூகத்தில் பிறந்த எம்.எஸ்.சுப்புலட்மிக்கு கிடைத்ததற்கான ரகசியமும் அதுவே.

ஜெயகாந்தினின் இலக்கிய ‘வெற்றி’க்குப் பின்னும் இதுவேதான் இருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை, பார்ப்பனிய ஆதரவோடு பெரியார் எதிர்ப்பு சேர்த்துக்கொண்டால், fast food பாணியில் மிக விரைவில் அங்கீகாரம் கிடைக்கும். அதை விட வேகமாக பிரபலமாகலாம்.

இவ்வளவு ஏன்?

இன்றுகூட புத்தக விற்பனை நிலையங்களும் பதிப்பகமும் நடத்துகிற ‘நவீன’ இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட  நண்பர்கள் face book ல் தங்கள் கடைகளின் விளம்பரங்களை  தொடர்ந்து வெளியிடுகிறார்கள்.

மறந்தும் பெரியார்-அம்பேத்கர் நூல்கள், அவர்களின் சிந்தனையை பின்னணியாக கொண்ட புத்தகங்கள் தங்கள் கடைகளில் கிடைக்கும் என்று ஒரே ஒரு புத்தகத்தைகூட அவர்கள் போடுவதில்லை.

ஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை;`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

கம்பராமாயணத்தில் அறிவியல்!

‘இவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள்’ ; நல்லாயிருக்கு ராஜா நியாயம்!

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

‘நீர்ப்பறவை’ : மீனவர் வழக்கா? தேவர் வழக்கா?

மலையாளத்து செம்மீனும் மணிரத்தினித்தின் கடலும்

அழகான பொண்டாட்டியும் அரசியல் பிரச்சினைகளும்

அன்பின் அழகியல்

1467250_556948164392765_997379026_nகருணை எப்போதும் அழகுதான். 
அன்பின் அழகியலில் 
கருணைக்கே முதலிடம்.
படம் எடுத்தவர் அதை ஒரே still -லில் 
அழகாக சொல்லியிருக்கிறார்.

ஆனால், ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ 
படத்தின் ஒட்டுமொத்தக் கதையும் இதுதாங்க.
இந்த still -ல் ஏற்படுத்துகிற உணர்வை 
அந்த முழுநீளப் படம் ஏற்படுத்தவில்லை.

*

நவம்பர் 20 ஆம் தேதி face book ல் எழுதியது படம் உதவி Deepa Vennila

தொடர்புடையவை:

ஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்

‘பீட்ஸா- 2 வில்லா’: இது, ‘வாந்தி-பேதி’க்கு எந்த வகையிலும் பொறுப்பல்ல..

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று?

It’s Spiritual

Quotes-by-Bhakti-Charu-Swami-on-Spiritual-Realization
‘உன்னையே நீ உணர்ந்திருக்கிறாயா.. நீ யார்?’
‘கொலைகாரன்’
‘அது மத்தவங்க உன்ன சொல்றது’
‘சட்டப்படி நீ யார்?’
’நிரபராதி’

ஆக மனதை ‘ஒரு’ நிலை படித்தினால்
எந்த நெருக்கடியிலும்
உண்மையை சொல்ல வேண்டிய
அவசியம் இருக்காது.
பொய்யின் மகத்துவத்தை
பரிபூரணமாக உணரலாம்.
கொலை செய்தாலும்
சட்டத்திலிருந்து தப்பிக்கலாம்.
அதுதான் ஆன்மீகத்தின் சூட்சமம்
சட்டத்தின் சூட்சமும் அதுவே.
அதுதான் உன்னையே நீ
அறிந்து கொள்வதின் நுட்பமும்.
That’s Spiritual life.

கந்தனோ – வடிவேலனோ – முருகனோ
சையத்தோ – சார்லஸோ..
பெயர்கள் தான் வேறு.. வேறு..
பணம் பொருள் ஒன்றுதான்..

மன்னிக்கவும்
பரம்பொருள் ஒன்றுதான்..

*

டிசம்பர் 4 ஆம் தேதி face book ல் எழுதியது

தொடர்புடையவை:

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்..

ஓரினச்சேர்க்கை: உறவல்ல, நோய்

Gay-Marriage lalogay

ஓரினச்சேர்க்கை; எதிர்பாலினத்தோடு உறவுகொள்ள வாய்பில்லாதவர்களால் அதிக அளவில் கடைபிடிக்கப்படுகிறது. சிறையில், ராணுவத்தில், ஒரே பாலினங்கள் மட்டும் தங்கும் இடங்களில்.

அதுபோலவே, பாலுறவு வேட்கையின் துவக்க நிலையில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்குள்ளும் உறவின் அறிமுகமாக ஓரினச்சேர்க்கையின் சீண்டல்கள் ஒரு சுயஇன்ப உணர்வுடனே நடக்கிறது.

அந்த நேரத்து தேவை, சூழல், மாற்று பாலினத்தோடு தன் உறவை பகிர்ந்து கொள்வதில் உள்ள அச்சம்; இவையே ஓரினச்சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பின்பு அதுவே பழக்கமாகி பாழய்போனவர்களும் இருக்கிறார்கள்.

உயிரனங்களின் இயல்புக்கு மாறான, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது ஒரு மனநோய். இந்த மனநோயை தன் இயல்பாக மாற்றிக் கொண்டவர்கள், உலக அளவில் பாசிஸ்டுகளாகவும் மாறியிருக்கிறார்கள்.
ஹிட்லர், முசோலினி போன்றவர்கள்.

ஓரினச்சேர்கையை ஆதரிப்பது புதுமையும் அல்ல, எதிர்ப்பது பழமையான மதவாதிகள் கருத்துமல்ல.
பைபிளின் பழைய ஏற்பாட்டிலேயே ஓரினச்சேர்க்கை நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்து மதம் ஓரினச்சேர்க்கையையும், விலங்குகளுடன் உறவு கொள்வதையும் நியாயப்படுத்தியிருக்கிறது. புனிதமான இந்து கடவுள்கள், ஓரினச்சேர்க்கையில் மட்டுமல்ல, விலங்குகளுடனும் உறவில் ஈடுபட்டவர்கள்தான்.

கடவுள்கள் அப்படி உறவில் ஈடுபட்டதினாலேயே, பிறந்த கடவுள்களும் இருக்கிறார்கள். அய்யப்பனை போல்.

ஓரினச்சேர்க்கையை இயல்பாக்கிக் கொண்டவர்களை குற்றவாளிகள் போல் பார்க்காமல், அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருதற்கு மருத்துவ ரீதியான மனநல ஆலோசனைகளுகளை செய்ய அரசு முன் வர வேண்டும்.

*

இன்று காலை face book ல் எழுதியது

தொடர்புடையவை:

பாலியல் தொழிலா? விபச்சாரமா?

பாலியல் முதலாளி

ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்

 மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

ஓமோ செக்ஸ்… சூப்பர்டா மச்சான்…

நம்ஸ்காரம்: பெரியவர ஸேவிச்சா…


1462858_10201148400534213_1937065937_n காலில் விழுகிற பழக்கம் இழிவானது என்பதே பெரியார் கொள்கை. திராவிட இயக்க கொள்கை. ஆனாலும் சில நேரங்களில் தன் காலில் விழுகிறவர்களை‘ ‘ஆசிர்வதித்திருக்கிறார்’ கலைஞர்.

பெரியார் இயக்கத்திற்கு நேர் எதிராக, பார்ப்பனர்கள் காலில் விழுவதை புண்ணியமாக, புனிதமாக கருதுகிறார்கள். அதுவும் மணமக்கள், வயதில் மூத்தவர்கள் காலில் விழுந்து ‘நம்ஸ்காரம்’ செய்வதை, தங்கள் திருமணங்களில் ஒரு முக்கிய சடங்காகவே வைத்திருக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களின் ஆசிர்வாதம் இவர்களை சிறப்பாக வாழ வைக்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நேற்று (டிச.6) நடந்த சோ மகனின் திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் கலைஞர் தான் மிக வயதானவர், அவர்தான் அங்கு மிகப் பெரிய பிரமுகர். காலில் விழுவதற்கான தகுதி என்று அவர்கள் வைத்திருக்கிற எல்லாமும் அவரிடம் இருக்கிறது.

சோ வின் மகனும் மருமகளும் கலைஞர் காலில் விழுந்தார்களா? விழவில்லை என்றால், அங்கு வந்த யார் காலிலும் விழவில்லையா? இல்லை கலைஞர் காலில் மட்டும் விழவில்லையா?

பார்ப்பன குடும்பத்து மணமக்கள், காலில் விழுவதற்கு வயதானவராக, பிரபலமாக, தலைவராக, முன்னால் முதல்வராக இருந்தால் மட்டும் போதாதா?
கூடுதலாக அந்தக் கால்கள் பார்ப்பன கால்களாகவும் இருக்க வேண்டுமா?

பல பார்ப்பன குடும்ப திருமணங்களில் முக்கிய விருந்தினராக கலைஞர் கலந்து கொண்டிருக்கிறார். அவர் காலில் மணமக்கள் விழுந்து ‘ஆசிர்வாதம்’ வாங்கியிருக்கிறார்களா?

இது பற்றி விவரம் தெரிந்தவர்கள் விளக்குங்களேன்.

*

டிசம்பர் 9 அன்று face book ல் எழுதியது

தொடர்புடயவை:

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

Bharatiya Janata Party மீது..?

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்..

god is great