வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு …
ஒரு வாரத்திற்கு முன்னால.. நம்ம குறும்புக்கார தம்பி அங்கனூர் தமிழன்வேலு எனக்கு போன் பண்ணி, ‘தோழர் நம்ம Don ஊர்ல இருந்து வந்துட்டாரு’ என்றார்.
‘டானா.. யாருங்க அது?’ என்றேன்.
‘என்ன தோழர் அதுக்குள்ள நம்ம டானை மறந்துட்டீங்க… அய்யா தமிழுருவி மணியன் தான்’ என்றார்.
ஆமாங்க.. எல்லோரும் அவரை சுத்தமா மறந்துட்டோம்.. இந்த நன்றி கெட்டத்தனதாங்க தமிழன் குணம். ஒரு ‘முக்கிய’ பிரமுகர் ‘முக்கியமான’ நேரத்தில காணாம போயிட்டாரே.. எவ்வளவு தமிழ் பகைவர்கள் அவருக்கு எதிராக இருப்பாங்க…என்ன ஆனாரு.. ஏதானாருன்னு ஒருத்தரும் கவலப் படல..
நம்மள விடுங்க… அவரு இல்லாதபோது அவரைப் போலவே பலர் நம்மள நல்லா எண்டர்டெய்ன்மெண்ட் பண்ணி சந்தோசமா வைச்சிருந்தாங்க..
பாவம் இந்த ஜுனியர் விகடனை நினைச்சாதான் பரிதாபமா இருந்தது.. அவரு எழுதாமல் சர்குலேசன் டவுனாகி படாதபாடு பட்டு இருப்பாங்க… நல்ல வேளை வந்து தூக்கி நிறுத்திட்டாரு…
ஜுனியர் விகடனை.
இனி இருக்கு தமிழ் பகைவர்களுக்கு.
‘அடி குடுத்த.. கை புள்ளைக்கே இவ்வளவு காயம்….’
*
டிசம்பர் 7 அன்று face book ல் எழுதியது
தொடர்புடையவை:
ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!
தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
Don என்றால் donkey என்பதன் சுருக்கமா