ஜனவரி 1 பிப்பரவரி 14 மே 1
கிறிஸ்துமஸ் என்ன கிழமையில் வருகிறதோ அதே கிழமையில்தான் ஆங்கிலப் புத்தாண்டும் வரும். கிறிஸ்து பிறப்பு தொடர்பான நம்பிக்கைதான் ஆங்கிலப் புத்தாண்டும்.
கிறிஸ்துவ மதம் நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவ வடிவத்திற்கு மாறியப் பிறகு, கிறிஸ்துவமும் புத்தாண்டும் வர்த்தகமாக மாறிப்போனது.
ஜனவரி முதல் தேதியை மதச்சார்ப்பற்ற நாளாக மாற்றிய ‘பெருமை’ முதலாளித்துவத்தையே சேரும்.
புத்தாண்டை மதச்சார்பற்ற ‘கேளிக்கை’ நாளாக மாற்றியதின் மூலமாக மிகப் பெரிய சந்தை முதலாளித்துவ நிறுவனங்களுக்கு பரிசாக கிடைத்திருக்கிறது.
விழாக்களும் பண்டிகைகளும் முதலாளிகளின் வேட்டை நாய்கள் என்றார் காரல் மார்க்ஸ்.
அதனால்தான் மே 1 போன்ற தொழிலாளர்களின் விடுதலை நாளை விட, புத்தாண்டு ‘கேளிக்கை நாள்’ அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது; அதுவும் தொழிலாளர்களிடமே.
ஆனால், இந்து மற்றும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் இதை எதிர்ப்பது ‘பண்பாட்டுக்கு எதிரானது’ என்ற நிலப்பிரபுத்துவ கோமாளித்தனமான சிந்தனையில்.
ஜனவரி 1 பண்பாட்டுக்கு எதிரானது என்றால், ஒவ்வொரு ஆங்கில மாத முதல் தேதியிலும் சம்பளம் வாங்குவது பண்பாட்டை பாதுக்காக்கிற செயலா?
காதலர் தினம் கொண்டாடுவதால், பண்பாடு கெட்டுபோய்விட்டது என்ற மூடத்தனம்போல், ஆங்கிலப் புத்தாண்டிலும் பண்பாடு கெட்டுப்போகும் என்பதும்.
காதலை வலியுறுத்தி சினிமா எடுத்த இயக்குநர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, நிஜத்தில் காதலை எதிர்த்ததைப்போல்;
காதலர் தினம் விமர்சியாக கொண்டாடப்பட்ட பிறகுதான், காதலர்கள் அதிகமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். காதலர் தினம் உங்கள் ஜாதி மதப் பண்பாட்டில் தீ யையும் வைக்வில்லை; காதலர்களையும் வாழவைக்கவில்லை. அது வர்த்தக நாளாக, முதலாளிகளையே வாழ வைக்கிறது.
ஆங்கிலப் புத்தாண்டு அன்று இந்து கோயில்களுக்கு செல்வதால், உங்கள் ஜாதி வெறியை அது ஒழித்துவிடாது, ஏனென்றால் காலகாலமாக புத்தாண்டுக்கு ‘சர்ச்சு’க்குப் போகிறவர்களின் ஜாதிவெறியையே ஒழிக்க முடியாத புத்தாண்டு அது.
வரைமுறையற்று கேளிக்கை யில் ஈடுபடுவதால் 12 மணிக்கு மேல் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடாது. உங்களைப் போலவே உங்கள் பிரச்சினைகளும் தற்காலிக மயக்கத்திலும் மறதியிலும் இருக்கும்.
காதலர் தினமோ, புத்தாண்டு தினமோ கல்லாக் கட்டபோவது சுதேசிய முதலாளிகளும் சர்வதேசிய கம்பெனிகளும்தான்.
ஜனவரி 1 பிப்பரவரி 14 இவை பிரச்சினையை தீர்க்காது. மே 1, இதுவே ஆதிக்கங்களுக்கு முடிவைத் தரும். தொழிலாளர்களுக்கு விடிவைத் தரும்.
தொடர்புடையவை:
இளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்
காதலர் தின எதிர்ப்பு; கள்ளக் காதலர் தினம் கொண்டாட வேண்டிய அளவிற்கு பண்பாடு
///இஸ்லாமிய மத///
என்னங்க இது.. இந்துன்னு மட்டும் நிறுத்திக்ககூடாதா…?