பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

531815_478006805575500_383249206_n

‘பெரியாரை செருப்பால் அடிப்பேன்’ என்று பா.ஜ.க. எச் ராஜா பேசியிருக்கிறார். பெரியாருக்கு பதில் பிரபாகரன் என்று சொல்லியிருந்தால் நடக்கிறதே வேற..

தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்ல, பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே சும்மா விட்டிருக்க மாட்டாங்க… தலித் இயக்கங்களும் புறப்பட்டு இருப்பாங்க.. ஜுனியர் விகடனில் கூட கண்டித்து கவர் ஸ்டோரி வந்திருக்கும்.

அவ்வளவு ஏன்..? தன்னை திராவிட இயக்க தலைவராக அடையாளப்படுத்திக் கொள்கிற வைகோ, பிரபாகரனை பற்றி எச். ராஜா இப்படி பேசியிருந்தால், மறுநாள் அவருடன் சிரித்து சிரித்துப் பேசி கூட்டணி முடிவு செய்திருப்பாரா?

இதற்கு முன் எழுத்தாளர் சிவகாமி விவகாரத்திலும் இதைப் பார்த்தோம்.

சிவகாமி பெரியாரை பற்றி அவதூறாக பேசியபோது வராத எதிர்ப்பு, புலிகள் பற்றி பேசியபோதுதான் மிக மோசமான வசவுகளை அவர் சந்திக்க நேர்ந்தது. அதற்கு பிறகு அவரை எந்த ஊடகங்களிலும் பார்க்க முடியவில்லை.

இப்படி இருந்தால்.. எச். ராஜா என்ன.. இன்னும்..?

பெரியார் எதிர்ப்பு தமிழ்த் தேசியவாதிகள், பெரியாரை இழிவாக பேசிய, பெரியார் சிலையை இடித்த இந்துமத தலைவர்கள் உடன் இணைந்து, ‘தமிழ் உணர்வை’ ஊட்டுகிற வேலையை பெரியார் இயக்கங்கள் செய்யாமல் இருந்தாலே அதுவே பெரியாருக்கு செய்கிற பெரிய பணிதான்.

*

ஜனவரி 24 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்

மூவரை விட மு.க. முத்துவே முற்போக்கு

1459810_10201150933357532_1742181858_n

மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், கனிமொழி இவர்கள் மூவரும் சோ மகன் திருமணத்தில் ஒற்றுமையாக மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்கள். அஞ்சா நெஞ்சன் மு.க. அழகிரி தன் மனைவியுடன் சென்று சிறப்பித்திருக்கிறார்.

வில்லுப் பாட்டுக் கலைஞரும், நடிகரும், சிறந்த பாடகருமான கலைஞரின் மூத்த மகன் மு.க. முத்து, தீவிரமான மது பழுக்கத்திற்கு அடிமையாகி, பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார்.

இன்றைய சூழலில், கூட்டி கழிச்சிப் பாத்தா, இந்த நான்கு பேரில் இவரே சிறப்பானவராக தெரிகிறார்.

சில நேரங்களில், மதுவிற்கு அடிமையாவதுகூட எவ்வளவு முற்போக்கானதாக இருக்கிறது?

*

டிசம்பர் 8 அன்று face book ல் எழுதியது

தொடர்புடயவை:

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..

கடவுள் அல்ல; களவாணி

nataraja

“நந்தா, நீ என்ன தில்லை வாழ் அந்தணனா? உன் பக்தி எவ்வளவு சக்தி உள்ளதாக இருந்தாலும் உன்ன நான் உள்ள விட மாட்டேன். அப்படியே வெளியில் நின்று ‘சல்யூட்’ அடிச்சிட்டு போயிகிட்டே இரு..” ( சிவனின் மைண்ட் வாய்ஸ்)

“தில்லை வாழ் அந்தணர்களே… இத நந்தனிடம் சொல்லிடுங்க.. அவன் தொல்லை தாங்க முடியல.. நான் அவனிடம் நேரில் சென்றல்ல, கனவில் செனறு சொல்லவதற்குகூட அவன் ஜாதி தடையாக இருக்கிறது. என்பதையும் புரிய வையுங்கள்.”

“டேய் தமிழா…? அர்ச்சனைக்கு உகந்தது தமிழா..? அது நடுத் தெருவுல.. ரோட்ல.. கும்பலா நீ்ங்க கூடியிருக்கிற இடத்துல.. தமிழ் மட்டுமே தெரிந்த பரதேசிகளிடம் என்னைப் பற்றி புகழ்ந்து பாட சொன்னா..
அத ஏண்டா என்னோட ‘ரூம்’ (கவருறை) உள்ளே வந்து பாட விரும்புறீங்க..? தமிழ் என்ன பெரிய சமஸ்கிருதமா?”

“நீ பட்டினியா கிட… பல்டி அடி.. தீட்சிதர்களிடம் அடி வாங்கு… சுப்ரீம் கோர்ட்டுக்கு கூட போ… என்ன ததிங்கிணத்தோம் போட்டாலும் உன்னயும் உன் மொழியையும் உள்ளே விட மாட்டேன்”
என்று ஒற்றைக்காலில் நின்று அடம் பிடிக்கிறான் தில்லை அம்பல நடராஜன்.

அவன் கடவுள் அல்ல; களவாணி. கூட்டுக் களவாணி.
அந்தக் காலத்தில் தில்லைவாழ் அந்தணர்களோடும், இந்தக் காலத்தில் தீட்சிதர்களோடும்.

*

08-01-2014  அன்று face bookல்  எழுதியது.

தொடர்புடையவை:

தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’

  சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும் (இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக் கூடாது…) 

சிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்?

K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!

சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..

Rio-Jesus1

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக, திமுக பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது. ‘கூட்டணி’ என்ற வார்த்தையை அதிமுக உச்சரிக்கக்கூட மறுக்கிறது.

திமுக தலைவர், தங்களுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்த் உட்பட பலரை, ‘வாங்க வாங்க நேரா டெல்லிதான் வழியில எங்கேயும் நிக்காது.’ என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு நேர் எதிராக அதிமுக தலைவர், தங்களிடம் கூட்டணி அமைக்க ஆர்வம் கொண்ட கட்சிகளை ‘ஏண்டா கொரங்கே?’ என்றுகூட கேட்க மறுக்கிறார்.
குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேரார்வம் கொண்ட, பாராம்பரியம் மிக்க கம்யுனிஸ்ட் கட்சிகளை கூட ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை.

திமுகவின் கூட்டணிக்குள் திருமாவளவன் இருக்கிறார். கிருஷ்ணசாமியும் ஆதரவை அறிவித்திருக்கிறார் விஜயகாந்த் வருவது உறுதியாகி இருக்கிறது. இன்னும் யாரும் வரலாம். கோபாலபுரம் பா.ம.க வை கூட சேர்த்துக் கொள்ளலாம். கலைஞர் பிரேசில் நாட்டின் இயேசு சிலையைபோல் இரண்டு கைகளையும் விரித்தபடி கூட்டணிக்குள் யார் வந்தாலும் தழுவிக் கொள்ள தயாராயிருக்கிறார்.

இதற்கு நேர் எதிராக போயஸ் தோட்டத்தின் கதவுகள் பூட்டி இருப்பது மட்டுமல்ல; அதன் சாவி தூர வீசப்பட்டிருக்கிறது. கூட்டணிக்கு முயற்சிப்பவர்கள் ‘கேட்டு’க்கு வெளியேயும் கொடநாடு தேயிலைத் தோட்டங்களிலும் ‘சாவி’யை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சாவி கிடைக்கும்போது.. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விடும்.
காரணம், சாவியை கண்டுபிடிப்பவர்களால் வீட்டு உரிமையாளருக்கு எந்த உதவியும் இல்லை. கண்டுபிடிப்பவர்களுக்குத்தான் லாபம். இவர்களுக்கு பயந்துதான் சாவியே தூர வீசப்பட்டிருக்கிறது.

‘சாவியை தேடுபவர்களுக்கு.. தலா ஒரு சீட்டு ரெண்டு சீட்டு கொடுப்பதினால் அவர்கள் எம்.பி ஆவார்கள். ஆனால் நமக்கு..?’

‘இந்த செல்வாக்கற்ற கட்சிகளை சுமந்து கொண்டு போய் டெல்லியில் சேர்ப்பதற்கு பதில், டெல்லியையே நாம் கைப்பற்றினால்…?’

அதற்கு, ‘நாற்பதும் நமக்கே’ என்ற திட்டமே அம்மாவிடம் இருப்பதாக தெரிகிறது.

ஆக, ‘அம்மா திமுக’ வின் கூட்டணி, தேர்தலுக்கு பிறகுதான்.

காங்கிரஸ் – பி.ஜே.பி. இவர்களில் யார் வெற்றி பெற்று வருகிறார்களோ அவர்களுடனே ஆட்சியிலும் கூட்டணி. இதுவே அம்மாவின் தேர்தல் வியூகமாக இருக்கும்.

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் திமுக அமைச்சரவையில் இடம் பெறும். அதிமுக வெற்றி பெற்றால், மத்தியில் ஆட்சியை அமைக்கும் கட்சியில் இரண்டாவதாக இருக்கும்.
அப்படியானால் பிரதமர் பதவியும் இரண்டாக இருக்கலாம்.

அப்போ வைகோ?
End கார்டு போட்டு எகத்தாளம் பண்ணலாம்னு நினைக்காதீங்க..
அடுத்து நயன்தாரா..

images

 26-01-2014  அன்று face bookல்  எழுதியது.

தொடர்புடையவை:

தேர்தல்: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா?

தேர்தல் கூட்டணி முடிவாகிவிட்டது!

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

மூலதனமும் நீயே.. மூலப்பொருளும் நீயே.. அன்புடன் ஆட்கொள்வாய் கூட்டணித் தாயே!

மெல்லிசை மன்னருக்கு விருது இல்லை; அந்த விருதுகளுக்கு தகுதியுமில்லை

mathi

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று பல விருதுகளை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள், அந்த விருதுகளை விட தகுதி குறைந்தவர்களும்.

ஆனாலும் இந்த விருதுகளை விட தகுதியான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு இதுவரை எந்த விருதும் தரவேயில்லை.

*

நேற்று (26-01-2014) face bookல்  எழுதியது.

தொடர்புடையது:

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

எஸ். ராமகிருஷ்ணன் என்பவருக்கு நன்றி

Full-HD-Indian-Flag

எஸ். ராமகிருஷ்ணன் என்பவர், ‘எனது இந்தியா’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
அவருக்கு நம் நன்றியை சொல்ல வேண்டும்.

நம்மையும் கூட்டு சேர்த்து, ‘நமது இந்தியா’ என்று தலைப்பு வைக்காமல் விட்டதற்கு.

தொடர்புடையவை:

பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!

எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்

தெய்வங்களை ‘கற்பழிக்கும்’ பக்தர்கள்

guru startoondநம் நாட்டில் நதிகள் மற்றும் தெய்வங்கள் பெண் பெயர்களிலும், வடிவங்களிலும் இருப்பது போல் இந்திய பொருளாதாரமும் பெண்ணியம் கொண்டதாக இருக்கிறது.

ஆன்மிகத்திலும் பெண்கள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பது சிறப்பு தன்மையாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் சென்று பேசும் போது கூட கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றிலும் பெண்களை மையமாக வைத்து தான் வழிபடுகிறோம் என்ற கருத்தையும் வலியுறுத்தினேன்.

ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி, இன்றைய தினத்தந்தியில்.

**

மேற்கு வங்காள மாநிலத்துக்கு உட்பட்ட பிர்பும் மாவட்டத்தின் சுபல்பூர் பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், வேறு சாதி வாலிபரை காதலித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, இளம்பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆனால் இளம்பெண்ணின் குடும்பத்தினரால் இந்த தொகையை செலுத்த முடியவில்லை.

எனவே அந்த இளம்பெண்ணை கற்பழிக்குமாறு ஊர் பெரியவர்கள் உத்தரவிட்டனர். அதன்படி, அந்த கிராமத்தை சேர்ந்த 13 பேர் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆபத்தான நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
‘என் தந்தை வயதில் இருந்தவர்கள்கூட அதில் இருந்தார்கள்’ என்று அந்தப் பெண் கூறினார்.

-இதுவும் இன்றைய தினத்தந்தியில்

*

இன்று காலை face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

‘தினகரன்’ மாற்றம், நம்ப முடியாத அளவிற்கு உண்மையாக இருக்கிறது

dinakaran

‘ஆறுதல் அளித்த மரணம்’ என்று தலைப்பிட்டு
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டபோது அதை ஆதரித்து தலையங்கம் எழுதிய ஒரே தமிழ நாளிதழ் ‘தினகரன்’.

அதுமட்டுமல்ல, ‘இன்னும் உயிருடன் இருக்கிறார்களே’ என்ற தொணியில் ‘ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்றுபேர் 21 ஆண்டுகளாக காவலில் இருக்கிறார்கள்.’ என்றும் கொலை வெறியோடு எழுதியது.
அப்போதே அதைக் கண்டித்து நான் எழுதினேன். அந்தக் கட்டுரை ‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ என்ற என் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.

நிர்வாகத்தின் நிலையே, ‘தூக்கு தண்டனையை ஆதரிப்பது’ என்பதாகவும் இல்லை. அவர்களின் சன் நியுஸில்  செய்தி ஆசிரியராக ராஜா இருந்தபோது, தூக்கு தண்டனைக்கு எதிராக விவாதங்கள் நடத்தப்பட்டது.

அஜ்மல் கசாப் தூக்கை கண்டித்தும் விவாதம் செய்தார்கள். ‘தினகரன்’ தான் தூக்கை வரவேற்று எழுதியது.

அப்போது அப்படி எழுதிய அது, இப்போது, ‘சபாஷ்! சரியான தீர்ப்பு’ என்று தலைப்பிட்டு வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று எழுதியிருக்கிறது.

‘இதன் மூலம் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் மற்றும் காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்தர்பால் புல்லருக்கும் தண்டனை குறைப்பு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.’ இன்று தினகரன் எழுதியிருக்கிற இந்த வரிகள் நம்ப முடியாத அளவிற்கு உண்மையாக இருக்கிறது.

22-11-2012 அன்று அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை ஆதரித்தும் ‘ராஜிவ் கொலை குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்தும் எழுதிய தினகரனின் இந்த மாற்றம், அப்போதைய பொறுப்பாசிரியர் கதிர்வேல் மாறிபோனதால் ஏற்பட்ட மாற்றமா?

எப்படியோ, இந்த மாற்றம் வரவேற்க கூடியதாக இருக்கிறது. இப்படி ஒரு தலையங்கம் எழுதிய தினரனுக்கு நம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

*

இன்று காலை face book ல் எழுதியது.

தொடர்புடையது:

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

பிரபலங்களையும் புறக்கணிப்புகளையும் உள்குத்துக்களையும் தாண்டி..

fish-swimming

பிரபல பத்திரிகைகளிலும் அவர்கள். சன் டி.வி. விஜய் டி.வி. கலைஞர் டி.வி. புதிய தலைமுறை இதிலெல்லாமும் இன்னும் வரபோகிறவற்றிலும் அவர்கள்.

அதுபோக நேரடியாக தங்கள் புத்தக விற்பனைக்கு அதே ஊடகங்களில் புத்தகக் காட்சியை ஒட்டி அவர்கள் வாயாலேயே அவர்கள் போட்டுக் கொள்ளும் விளம்பரம்.

‘பிரபலங்களின்’ பிரபலத்தன்மையை ‘பயன்’படுத்திக் கொள்ள தோழமையானவர்களும் கொள்கையாளர்களை விட பிரபலங்களுக்கே முக்கியத்துவம்.

போதாக்குறைக்கு சினிமா, அரசியல் பிரபலங்களை வைத்து அதிலும் தனக்கும் தன் புத்தகங்களுக்கான விளம்பரமோ விளம்பரம்.

ஆனாலும்..?

இதுபோல வாய்ப்புகள் எனக்கு கெடைச்சா.. வருசம் ஒரு லட்சம் பிரதிகள் வரை என் ஒவ்வொரு புத்தகங்களையும்…

வெகு ஜன பத்திரிகைகளில் நூல் அறிமுகப் பகுதிகளில் கூட தவிர்க்கப்பட்டு, சிற்றிதழ்களில் கூட சின்னதா செய்தி வெளிவராமல்…

இயக்கங்கள், கழகங்கள் இன்னும் ‘தோழமை’ யானவர்கள் நடத்துகிற பத்திரிகைகளிலும் புறக்கணிக்கப்பட்ட பிறகும்…‘நூலக ஆர்டர்’ இல்லாமலும்.. எழுத்தாள நண்பர்களின் உள் குத்துக்களைத் தாண்டியும்…

என்னுடைய புத்தகங்கள் ஒவ்வொன்றும் 1200 பிரதிகள் வரை அச்சடித்து, ஒரு ஆண்டில் இரண்டு பதிப்புகள் இரண்டாண்டில் மூன்று பதிப்புகள் வரை கூட வந்திருக்கிறது. (நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை)

காரணமான தோழமைகளுக்கு நன்றி.

**
சென்னை புத்தகக் காட்சியில்…கருப்பு பிரதிகள் 287 – கீழைக்காற்று – 369-370 பனுவல் – 605, 606 அகநாழிகை 666 – 667 கடைகளில் என் புத்தகங்கள் கிடைக்கும்.

**
சென்னை புத்தகக் காட்சியில்…கருப்பு பிரதிகள் 287 – கீழைக்காற்று – 369-370 பனுவல் – 605, 606 அகநாழிகை 666 – 667 கடைகளில் என் புத்தகங்கள் கிடைக்கும்.

தொடர்புடையவை:

இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்

தமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா

‘ஜனாதிபதி முன்பு, துணைவேந்தரை செருப்பாலடித்த மாணவர்கள்..’ வரலாற்று நிகழ்வு

சென்னை புத்தகக் காட்சியில்..

‘ஜனாதிபதி முன்பு, துணைவேந்தரை செருப்பாலடித்த மாணவர்கள்..’ வரலாற்று நிகழ்வு

1525670_10202217936422721_1433482175_n

“சர் சி.பி.இராமசாமி அய்யர், அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு துணைவேந்தராக வந்த உடனேயே அவரது அணுகுமுறை, பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதர் என்ற வித்தியாசம் எல்லா மட்டத்திலேயும் அதிகமாக வந்துவிட்டது. அப்போது அங்கே தி.க மாணவர் யூனியன் இருந்தது. அந்தச் சூழலில் அதிலேயே பதினாலு பேர் ஒரு செட் சேர்ந்தோம்.

அந்த சமயத்திலே கான்வகேஷன் – பட்டமளிப்பு வந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி பாபு ராஜேந்திரப்பிரசாத் வருகிறார். அப்போது நல்ல கூட்டம் வரும். அந்த கான்வகேஷன் அன்னிக்கு சர் சி.பி. இராமசாமியை செருப்பாலடிப்பது என்று எங்கள் செட்டில் முடிவுசெய்கிறோம்.

பட்டமளிப்பு விழா நடக்கப்போவது சாஸ்திரிஹாலில், பார்வையாளர்களுக்கான பட்டியல் உண்டு. அதிலும் ஜனாதிபதி வருகின்றார். எல்லோரையும் உள்ளே விடமாட்டான். ஆகவே, நாங்கள் பின்பக்கத்து தண்ணீர் குழுாய் வழியாக மேலே மாடிக்குப்போய் அங்கிருந்து கீழே இறங்கினால் நேரே நிகழ்ச்சி நடக்கிற மேடைக்கு வந்திடலாம். நாங்கள் பதினாலு பேரும் அப்படிப் பொவதுன்னு பிளான் பண்ணி நிகழ்ச்சி அன்று அதுபோலவே மேடையில் இறங்கிட்டோம்.

ஜனாதிபதி உட்பட எல்லோரும் மேடையில் இருக்கிறார்கள். சர் சி.பி. வரவேற்பு நடத்திக் கொண்டு இருக்கிறார். அவரை சுற்றி வளைச்சோம். செருப்பால் அடித்தோம். திரும்பிப்போக வழியில்லை. அதனால் பார்வையாளர்கள் மத்தியிலே நடந்து வந்தோம். அவர்…”

‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் நினைவுகளும் நிகழ்வுகளும்’ என்ற நூலிலிருந்து…
தொகுப்பும் பதிவும் : பசு. கவுதமன்.

சென்னை புத்தகக் காட்சியில்…
இராஜேஸ்வரி புத்தக நிலையம்  : 1 – 2 – கருப்புப் பிரதிகள்  எண் : 287 – புதுப்புனல் 666 கடைகளில் கிடைக்கும்.

வெளியீடு : ரிவோல்ட் பதிப்பகம், சாக்கோட்டை, கும்பகோணம் – தொடர்புக்கு : 9884991001

தொடர்புடையவை:

இந்திய வரலாற்றை திருத்தி எழுதிய திரைப்படம்

தமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா

சென்னை புத்தகக் காட்சியில்..

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்