தமிழனா – தெலுங்கனா? தமிழனா – உருது இஸ்லாமியனா?

Kattabomman தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் இன்று (3-01-2014) என்றறொரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால்,

‘அவர் தமிழரல்ல, தெலுங்கர்’ என்கிறார்கள், பச்சைத் தமிழர்கள்.

கட்டபொம்மனை வெள்ளையனுக்கு காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை மன்னன் ராஜாதி ராஜா ராஜகுல விஜயரகுநாத தொண்டைமான், பச்சைத் தமிழன்தான்.

கட்டபொம்மன் தெலுங்கை தாய் மொழியாக கொண்டார் என்பதற்காக அவர் தியாகத்தை தள்ளி வைப்பதும், தமிழன் என்பதற்காக புதுக்கோட்டை மகாராஜாவின் துரோகத்தை கொண்டாடவும் முடியுமா?

முடியும் என்கிறார்கள் ஜாதி உணர்வாளர்கள்.
காட்டிக் கொடுத்த புதுக்கோட்டை ராஜாவையும் எதிர்த்து நின்ற மருது சகோதரர்களையும் ‘ஒரே ஜாதி’ என்பதாலும்

அதுபோலவே, கட்டபொம்மனையும் காட்டிக் கொடுத்த எட்டையப்பனையும் ‘ஒரே ஜாதி’ என்பதற்காகவும்,
துரோத்தையும் தியாகத்தையும் ஒன்று சேர்த்து மகிழ்கிறார்கள் அந்த அந்த ஜாதிக்காரர்கள்.

தமிழர்களான மருது சகோதரர்கள், தெலுங்கு பேசுகிறவர் என்பதற்காக கட்டபொம்மனை காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக ஊமைத்துறை, கட்டபொம்மன் சகோதரர்களுக்காக தன் ராஜ்ஜியத்தையும் தன் உயிரையுமே தியாகம் செய்தார்கள்; சின்ன மருது பெரிய மருது என்கிற அந்த வீர சகோதரர்கள்.

தன்னைப்போலவே தெலுங்கு பாளையக்கார மன்னன் என்பதற்காக கட்டபொம்மனை ஆதரிக்கவில்லை எட்டையப்பன். வெள்ளையனிடம் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தான் .
தூக்கு மேடை ஏறும்போது தன் இனத்தைச் சேர்ந்த எட்டையப்பன் முகத்தில் காரி உமிழ்ந்தான் மாவீரன் கட்டபொம்மன்.

தமிழன் புதுக்கோட்டை மகாராஜாவும் தெலுங்கன் எட்டையப்பனும் ஓர் இனம்.
தமிழன் மருது சகோதரர்களும் தெலுங்கன் கட்டபொம்மனும் ஓர் இனம்.
துரோகிகள் எப்போதும் இனம் மொழி பார்ப்பதில்லை. தியாகிகளும் அப்படித்தான்.

வெள்ளையனை எதிர்த்து தன்னையும் தன் குடும்பத்தையுமே தியாகம் செய்து மதத்தைத் தாண்டி மாவீரனாக நின்றான் திப்புசுல்தான். அவன் தான் நமது முன்னோர்.

அவன் காலத்திலே வெள்ளையனுக்கு காட்டிக் கொடுத்தார்கள் ஆற்காடு நவாப், ஹைதாரபாத் நிஜம் என்ற துரோகிகள்.

எந்த மொழி பேசினாலும் தியாகிகளே நமது முன்னோர்கள். சொந்த மொழி பேசினாலும் துரோகிகளே நமது எதிரிகள்.

maruthu tipu

3-01-2014 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையது:

காந்தி…?

7 thoughts on “தமிழனா – தெலுங்கனா? தமிழனா – உருது இஸ்லாமியனா?

  1. இப்ப என்ன சொல்ல வர்றிங்க.. ஒருவன் பார்ப்பனனா பொறந்தாலும் அவன சாதிய பாக்ககூடாது.. அது .. சாரி.. சாரி… அது இதுல பேசப்படாதுதுது… உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு…….என்னா சாரே ஒரே கொழப்பமா உந்தே…..

  2. face book நடந்த விவாதம்
    கம்பன் கழகம் பிரான்சு // எந்த மொழி பேசினாலும் தியாகிகளே நமது முன்னோர்கள். சொந்த மொழி பேசினாலும் துரோகிகளே நமது எதிரிகள்.//

    சரீங்க இப்ப கருணாநீதியும் வைகோவும் தமிழர்களுக்கு எதிர்களா ? நண்பர்களா ? தியாகிகளா ? அல்லது துரோகிகளா ?
    Yesterday at 9:48pm · Like · 4

    Lenin Lenin · 5 mutual friends
    periyar (VS) ma.po.se pola & Ambedkar( VS) m.C raja
    Yesterday at 9:49pm · Unlike · 1

    வே மதிமாறன் கம்பன் கழகம் பிரான்சு //சரீங்க இப்ப கருணாநீதியும் வைகோவும் தமிழர்களுக்கு எதிர்களா ?நண்பர்களா ? தியாகிகளா ? அல்லது துரோகிகளா ? //

    அவர்கள் மட்டுமல்ல, தமிழனத் துரோகி கம்பனும் அவனுக்கு கழகம் வைத்திருப்பவர்களும்தான்.
    Yesterday at 10:21pm · Like · 14

    Mathi Mathi ///வே மதிமாறன் கம்பன் கழகம் பிரான்சு //சரீங்க இப்ப கருணாநீதியும் வைகோவும் தமிழர்களுக்கு எதிர்களா ?நண்பர்களா ? தியாகிகளா ? அல்லது துரோகிகளா ? //

    அவர்கள் மட்டுமல்ல, தமிழனத் துரோகி கம்பனும் அவனுக்கு கழகம் வைத்திருப்பவர்களும்தான்.///

    இதைவிட ‘வேற அடி’ என்ன கொடுக்கணும்?

    ஆனா, திருத்திக்கப் போறதில்லை!
    Yesterday at 10:29pm · Like · 3

    கம்பன் கழகம் பிரான்சு // அவர்கள் மட்டுமல்ல, தமிழனத் துரோகி கம்பனும் அவனுக்கு கழகம் வைத்திருப்பவர்களும்தான்.//

    இது ரொம்ப நல்லா இருக்கு ! சரியான அடி ! உண்மையில் தாங்க முடியில !

    ஒரே ஒரு சந்தேகம், மூணு காசு பொறாத சினிமாவை விழுந்து விழுந்து விமர்சனம் செய்யும் நீங்கள், என் கம்பனை ஆழ படித்து, பிறகு ஒரு ஒரு பாட்டாக விமர்சிக்கக் கூடாது !
    பாரதியின் மறுபக்கத்தை நீங்கள் புரட்டிய விதம் மிகவும் தைரியமானது இல்லையா ?

    மீண்டும் ஒரு கீமாயணம் மதிமாறன் பாணியில் படைத்தது போலவும் இருக்கும்.

    சரி தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று சொன்ன ஒருவரை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் ? அல்லது அதற்கான சப்பைக்கட்டு தான் என்ன ?

    வழக்கம் போல் இதற்கு பதில் சொல்லத் தேவையில்லை !!!
    23 hours ago · Unlike · 1

    வே மதிமாறன் கம்பனை ஆதரிக்கிறவர்கள் எல்லாம் ஆழ்ந்து படிச்சுட்டுதான் ஆதரிக்கிறார்களா? கம்பன் கழகம் வைச்சிக்கிட்டு நீங்க தமிழன துரோகிகளைப் பற்றி பேசுவது வேடிக்கை.

    கம்பனை ஆழப்படித்தவர்கள் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்ல வக்கில்லை கம்பன் அடிபொடிகளிடம்..

    கம்பனை காறி உமிழ்ந்து, பெரியார் இயக்கம் கேட்ட கேள்விகள் பதில் சொல்ல நாதியற்று அப்படியேதான் இருக்கிறது..
    நீங்க வேணும்னா முயற்சி பண்ணுங்களேன்..
    23 hours ago · Like · 5

    கம்பன் கழகம் பிரான்சு அதானால் சொல்கிறேன், கண்டிப்பாக உங்கள் பார்வையில் கம்பனை விமர்சியுங்கள் என்று. கடந்த 100 வருட காலத்தில் மற்றவர்களால் பாரதியை பார்க்க முடியாத ஒரு கோணத்தில் உங்கள் பார்வை நோக்கியது. அது வெரும் பகுத்தறிவு பார்வை மட்டும் அன்று. உண்மையான ஒரு சமூக ஆர்வலரின் பார்வை.
    அவன் சொன்னான் இவன் சொன்னான் என்பதை விடுத்து ஏன் நீங்கள் விமர்சிக்கக் கூடாது என்பது தான் எங்கள் கேள்வி ?
    23 hours ago · Like · 1

    வே மதிமாறன் சும்மா எதையவாது சொல்லி சமாளிக்காதீங்க..
    23 hours ago · Like · 1

    கம்பன் கழகம் பிரான்சு பாரதியை ஒரு பக்தியோடு பார்த்த எங்களின் ஊனப் பார்வையை சரி செய்தவர் நீங்கள். அதே போல் கம்பனிடம் மயக்கம் கொண்டு சிக்கித்தவிக்கும் ஆயிரக்கணக்கான கம்பன் அடிப்பொடிகளில் ஒரு நூறு பேரையாவது நீங்கள் திருத்தக்கூடாதா ? சற்றே யோசியுங்கள் தோழரே !
    23 hours ago · Like · 1

    வே மதிமாறன் ரைட். நீங்க போய் கம்ப ராமாயணத்தை படிங்க.. எனக்கு வேலை இருக்கு..
    23 hours ago · Like · 3

    கம்பன் கழகம் பிரான்சு முடிந்தால் உங்களை நேரில் வரும் வாரம் வந்து சந்திக்கிறேன்.
    22 hours ago · Like · 1

    வே மதிமாறன் நல்வரவு.
    22 hours ago · Like · 2

    Lenin Lenin · 5 mutual friends
    anna kattaboomanum hindutva vadhithaane….thanga oosiyai yeduthu kanula kuthikka mudiyuma.
    21 hours ago · Edited · Like

    Kothergani Buhari · Friends with Babu Tvl and 5 others
    Well said
    19 hours ago · Like

    Samy Samy · Friends with Veera Venthan and 4 others
    ரைட். நீங்க போய் கம்ப ராமாயணத்தை படிங்க.. எனக்கு வேலை இருக்கு..
    16 hours ago · Like

    Pandurangan Selvan Senthamizh அப்பறம் திராவிடம் கசக்குதா ?
    14 hours ago · Like

    Meetchi Ethaz சும்மா சுத்த தமிழ்த் தேசியம் பேசுகிறேன் என்று யார் தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்ப்பவர்கள் எனப் பிரித்தறிய இயலாத பதர்களிடம் பேசி என்ன பயன்?
    13 hours ago · Unlike · 3

    Arunachalam Subramaniyan · 62 mutual friends
    ஆங்கில ஆட்சிக்கு காவடித் தூக்கிய நீதிக்கட்சியினரை எந்த வகையினராக சேர்ப்பது?
    13 hours ago · Like

    வே மதிமாறன் டி.எம்.நாயரும் தியாகராயரும் நடேசனும் நீதிக்கட்சியை ஆரம்பித்து தங்களின் நலனை பெருக்கிக் கொள்ளவில்லை. மாறாக அவர்கள் தனிப்பட்ட முறையில் நஷ்டமே அடைந்தார்கள்.
    பார்ப்பனரல்லாதர் கல்வி, வேலை வாய்ப்பையே அவர்கள் ஆங்கில ஆட்சியிடம் கோரினார்கள்.
    அவர்களை முற்றிலுமாக புறக்கணித்தால் கடுமையாக விமர்சித்தால் பெரியார்-டாக்டர் அம்பேத்கரைகூட ஆதரிக்க முடியாது.

    கட்டபொம்மனையும் மருது சகோதரர்களின் தியாகம் பற்றி பேசும்போது அவர்களை ஜாதி வெறியர்கள் என்று விமர்சிப்பதும், நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதர் இடஓதுக்கீடுக்காக ஆதரிக்கும்போது் அவர்களை வெள்ளைக்காரர்களின் எடுபிடிகள் என்று விமர்சிப்பது பச்சையான பார்ப்பனியம்.
    13 hours ago · Like · 6

    Arunachalam Subramaniyan · 62 mutual friends
    நீதிக்கட்சி எந்த படையைக் கட்டி எவ்வளவு உயிர்தியாகங்கள் செய்தது? யாரிடமிருந்து என்ன எனன உரிமைகளை பொராடி பெற்றுக்கொடுத்துள்ளது? இடஓதுக்கீடு,இடஓதுக்கீடு என்று பேசி தமிழரின் இடத்தைப்பிடிங்கிக்கொண்டது திராவிடம்.
    13 hours ago · Like

    வே மதிமாறன் //யாரிடமிருந்து என்ன எனன உரிமைகளை பொராடி பெற்றுக்கொடுத்துள்ளது? ///
    என்பது கூட தெரியாமல் விமர்சிக்கிறீர்கள்?
    13 hours ago · Like · 1

    Arunachalam Subramaniyan · 62 mutual friends
    தெரியாமல்தான் கேட்கிறேன். பட்டியலிட்டு சொன்னீர்கள் என்றால் தெரிந்துக்கொண்டு கருத்தை மாற்றிக்கொள்கிறேன்.
    13 hours ago · Like

    வே மதிமாறன் தெரியாமலே யாரையும் திட்டுவீங்க…
    அவர்கள் என்ன செய்தார்கள் என்று அரசு ஆணையுடன் நிறைய புத்தகங்கள் வந்திருக்கிறது… தேடிப் படியுங்கள்.
    13 hours ago · Like · 2

    Arunachalam Subramaniyan · 62 mutual friends
    புத்தகங்கள் பெயர்கூட கூற இயலாதா? திராவிட அரசு ஆணையுடன் வந்தவையா?
    13 hours ago · Like

    வே மதிமாறன் முன் முடிவோடு அணுகுகிற நீங்கள் படித்தும் பிரயோஜனம் இல்லை.
    //திராவிட அரசு ஆணையுடன் வந்தவையா?// என்கிற கேள்வி நீங்கள் என் நேரத்தை வீணாக்க விரும்புகிறீர்கள் என்பதையே காட்டுகிறது. நன்றி.
    13 hours ago · Like · 2

    Arunachalam Subramaniyan · 62 mutual friends
    ’’எனக்கு முட்டாள்கள்தான் தேவை ’’ என்று பெரியார் கூறியதுபோன்று உள்ளது ‘’ நீங்கள் படித்தும் பிரயோஜனம் இல்லை.’’ என்று நீங்கள் கூறுவது. நன்றி.
    13 hours ago · Like

    Vijayaraj Cholan எந்த மொழி பேசினாலும் தியாகிகளே நமது முன்னோர்கள். சொந்த மொழி பேசினாலும் துரோகிகளே நமது எதிரிகள்.
    12 hours ago · Like · 3

    Asan Raja ungaluku venna sethupiga vennana vidiveduviga apadithana
    10 hours ago · Like

    வே மதிமாறன் யார?
    10 hours ago · Edited · Like · 2

    Asan Raja ungalatha solran . ungaluku venum na thilugana tamilanu soluviga muslima tamilanu soluviga , vennana tamilanaga iruthalum avana tamilanu illanu soluviga
    10 hours ago · Like

    வே மதிமாறன் அப்படியா?
    10 hours ago · Like · 2

    மாவோவின் மாணவன் மன்னனாக இருந்தாலும் சரி அது அண்ணனாக இருந்தாலும் சரி அவர்கள் எந்த வர்க்கத்திற்காக, எந்த மக்களுக்காக உறுதியாக இருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டுமே ஒழிய அவர்கள் தமிழனா,தெலுங்கனா,கன்னடனா என்று பார்க்கக் கூடாது அந்த வகையில் கட்டபொம்மனின் வீரம் போற்றத்தக்கதே .
    9 hours ago · Unlike · 5

    Abdul Qayyoom · Friends with யுவான் சுவாங் and 16 others
    அருமை மதிமாறன்
    9 hours ago via mobile · Unlike · 1

    Prathap Brandy //எந்த மொழி பேசினாலும் தியாகிகளே நமது முன்னோர்கள். சொந்த மொழி பேசினாலும் துரோகிகளே நமது எதிரிகள்./// seamaaaa.. kalakunringa sir…
    5 hours ago · Unlike · 1

    வைகறை ம.கு திருவள்ளுவரைப் போற்றும் நாம் கம்பனின் துரோகத்தை சொல்லாமல் இருக்கமுடியாது. தியாகிகள் தியாகிகளே..துரோகிகள் துரோகிகளே…
    5 hours ago · Unlike · 3

    Paul Jeeva · Friends with Selva Kumar G and 3 others
    Jathi veariyarghal, Nattin muneattrathukku, muttuksttaighal.
    2 hours ago via mobile · Like

    Muthu Amalraj கட்டபொம்மன் தெலுங்கர் என்பது ஒருபுறம் இருக்கட்டும் .அவர் விடுதலைப் போராட்ட வீரரே அல்ல என்பதே உண்மை.அவன் ஒரு கொள்ளைக்காரன்.அவன் விடுதலைக்காகப் போராடவேயில்லை. ஏன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடவேயில்லை.அப்படி ஒரு எண்ணமே அவனுக்கு இல்லை.வரி, கிஸ்தி தரமாட்டேன…See More
    2 hours ago · Like · 3

    வே மதிமாறன் Muthu Amalraj அவ்வளவுதானா? இன்னும் இருக்கா?
    கட்டபொம்மனை பற்றிய மதீப்பிட்டை நாம் உருவாக்கவில்லை. அவனை தூக்கிலிட்ட வெள்ளையர்களே அதை ஆவணப்படித்திருக்கிறார்கள்.
    9 minutes ago · Like · 1

  3. ஆனால் தமிழுக்கு தொண்டு செய்தாலும்,வெள்ளையனை எதிர்த்தாலும் பார்ப்பணராக மட்டும் பிறந்து விட்டால் அவர் நிச்சயமாக துரோகிதான்.சரிதானே மதிமாறன் அவர்களே?
    ஆகவே வீட்டுக்குள் எப்போதாவது பாம்பு நுழைந்துவிட்டால் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி அருகில் பார்ப்பணர் யாராவது இருந்தால் அவரை அடித்துவிட்டு வரவும்.

  4. ///அருகில் பார்ப்பணர் யாராவது இருந்தால் அவரை அடித்துவிட்டு வரவும்.//////
    MR duraicool அதுவும் அயோத்ய மண்டபத்து வாசல்ல பூணுல் விக்கிற அர வயித்த பாப்பான அடிக்கணும்..அதுவும் ஆஸ்பத்ரிக்கு போவகூட காசு இல்லாதவனா பாத்து அடிக்கணும்… அத விட்டு BMW காரு வச்சுருக்குற வேணுசீனிவாசன் கிட்ட ஹிஹினு தலய சொறியணும்ல… அதான் பெரியாரு சொல்லிக்குடுத்தது…

Leave a Reply

%d bloggers like this: