தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’
ஏதோ தீட்சிதர்கள் மட்டும் தான் சிதம்பரம் கோயில் விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக இருப்பதுபோல் காட்சி உருவாக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த பார்ப்பனர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
பொது விவாதங்களில்… தீட்சிதர்கள் வந்து கலந்து கொள்வதில்லை…அவர்களின் சார்பாக அய்யர், அய்யங்கார்களே கலந்து கொண்டு கடுமையாக பேசுகிறார்கள்.
பிராமணர் சங்கத் தலைவரே அவர்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார்.
இன்றைய நிலையே இப்படி இருக்க… 1922 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த, நீதிக்கட்சியை சேர்ந்த பனகல் அரசர் ராமராய நிங்கர் ‘இந்து பரிபாலன சட்டம்’ கொண்டு வந்து திருப்பதி உட்பட எல்லாக் கோயில்களையும் அரசுடமை ஆக்கியபோது அவரை என்ன பாடுபடித்திருப்பார்கள்?
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் எம்.ஜி.ஆர் பங்களிப்பை பற்றியெல்லாம் அழுத்தமாக குறிப்பிட்டு எழுதுகிறவர்களும் பேசுகிறவர்களும் கோயில்கள் அரசுடமை ஆனதை குறிப்பிடும்போது, ஏன் பனகல் அரசர் பெயரை சொல்வதைக்கூட தவிர்க்கிறார்கள்?
நேற்றைய கேப்டன் டி.வி.யில் நடந்த சிதம்பரம் கோயில் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியை சேர்ந்த தோழர் வெங்கட்ராமன், சிதம்பரம் கோயில் பூர்வீக நிர்வாகம், பிச்சாவரம் ஜமீன் பெயர் உட்பட பலரின் பெயர்களையும் சம்பவத்தையும் ஆதாரத்தோடு குறிப்பிட்டு சிறப்பாக பேசிய அவர், ‘1922 ல் கோவில்கள் அரசுடமை ஆக்கப்பட்டது..’ என்று போகிற போக்கில் சொன்னார்.
பவுத்த, சமண சமயங்களின் எதிரியும் சைவ சமயத்தின் பார்ப்பனியத்தின் அடியாளுமான ராஜராஜ சோழனைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு பேசியவர்,
நீதிக்கட்சியையும் பனகல் அரசர் பெயரையும் சொல்லாமல் தவிர்த்தார்.
ஏன்?
1925 – ஆம் ஆண்டு கோடிக்கணக்கான சொத்து மதிப்புக் கொண்ட, இந்து கோயில்கள் ‘இந்துமத பரிபாலனச் சட்ட மசோதா’ என்கிற சட்டத்தின் மூலம் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அறநிலையத்துறையும் அப்போதுதான் உருவாக்கப்பட்டது.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு நிறையப் பாடுபட்டிருக்கிறார் பனகல் அரசர். 1922 – ஆம் ஆண்டு இந்துமத பரிபாலன சட்ட மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். இதை சமூகத்திலும், சட்டசபையிலும் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் பார்ப்பனர்கள்.
இதை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்கிற திட்டத்தில், இந்த மசோதா மீது மொத்தம் 800 திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் 500 க்கும் மேற்பட்ட திருத்தங்களைத் தீவிர பார்ப்பன உணர்வாளரான சத்தியமூர்த்தி அய்யர் மட்டுமே கொண்டு வந்திருக்கிறார்.
கடைசி ஆயுதமாக, இந்தச் சட்டத்தில் இருந்து திருப்பதி கோயிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, கோரி பனகல் அரசருக்கு ரூ. 5 லட்சம் லஞ்சம் தர முயன்று இருக்கிறார்கள்.
இவற்றை புறக்கணித்து, எதிர்ப்பை முறியடித்து மூன்றாண்டுகள் போராடி, இந்தச் சட்டத்தை அமல் படுத்தினார் பனகல் அரசர்.
நேற்றைய (06-01-2014) கேப்டன் டி.வி விவாதத்தில் பா.ஜ.க ராமநாதன் என்பவர், சத்தமாக பேசி அடுத்தவர்கள் பேச முடியாத படி செய்வதே தன் பேச்சு என்று சாதித்தார். அப்படி செய்ததின் மூலம் அவரை நோக்கி கேட்கப்பட்ட என் கேள்வியை தவிர்த்தார்.
முன்னதாக, அவருக்கு விளக்கம் கொடுத்த தோழர் வெங்கட்ராமன், தேவார பதிகங்கள் பாடிய சுந்தரரை தீட்சிதர் இல்லை. பிராமணர் இல்லை என்றார்.
அவர் தீட்சிதர் இல்லை என்பது உண்மைதான். ஆனால் சுந்தரர் பார்ப்பனர். சமயக் குறவர்கள் நால்வரில் திருநாவுக்கரசைத் தவிர மற்ற மூவரும் பார்ப்பனர்களே.
அது மட்டுமல்ல, ‘பெரிய புராணத்தில் வருகிற தில்லைவாழ் அந்தணர்கள் தீட்சிதர்கள் அல்ல அவர்கள் பிரமணர்களும் அல்ல. ஆதி சைவர்கள்’ என்றார் வெங்கட் ராமன்.
தில்லை வாழ் அந்தணர்கள் தீட்சிதர்கள் அல்ல, ஆனால், பார்ப்பனர்கள்தான். அதுவும் ஜாதி வெறிகொண்ட பார்ப்பனர்கள். அவர்கள்தான் நந்தனை சிதம்பரம் கோயில் உள்ளே விட மறுத்தது. தீயில் இறக்கிக் கொன்றது.
பெரியபுராணமே சமண, பவுத்த சமயங்களின் எழுச்சியிலிருந்து சைவ சமயத்தை மீட்டெடுக்க எழுதப்பட்டதுதான்.அதானல்தான் அதில் எல்லா ஜாதிக்காரர்களுக்கும் ஒரு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டது.
அதன் நோக்கம் வெளியில் இருக்கிற பார்ப்பனரல்லாதவர்களை சைவ சமயத்தை நோக்கி கொண்டுவரவேண்டும் என்பதுதான். தேவாரம், திருவாசகம் போன்றவை அதற்கான பிரச்சார சாதனங்கள்தான். அதன் பிரச்சார பீரங்கிகள்தான் சுந்தரர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் இந்த நால்வரும்.
தேவராமும், திருவாசகமும் மக்கள் மத்தியில் சைவ சமயத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு மட்டும்தானே தவிர… அது கோயிலினுள் வழிபாடு நடத்துவதற்காக அல்ல. அதனால் தான் அதில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதனாலேயே கோயிலுனுள் அனுமதியும் மறுக்கப்படடது.
அதே காரணத்தினால்தான் இன்றும் கோயிலுனுள் பாட அனுமதி மறுக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல தேவாரம், திருவாசம், பெரிய புராணம் இவை பார்ப்பனியத்திற்கு அடியாள் வேலைதான் பார்த்தது.
‘தேவராமும், திருவாசகமும் பார்ப்பன எதிர்ப்பு தத்துவ மரபல்ல’ ‘பார்ப்பனியத்தின் தமிழ் வடிவ மரபு’
ஞானக்குழந்தை திருஞானசம்பந்தன்,‘ கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் பொண்டாட்டிக்கூட நான் படுக்கனும்..’ சிவபெருமானிடமே ‘இசைத்துவை’ என்று வேண்டினான். கடவுளையே ‘மாமா’ வேலை பார்க்கச் சொல்லியிருக்கான்.
அதனால்தான் பெரியார்: “சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஜனவரி 7 அன்று face book ல் எழுதியது.
தொடர்புடையவை:
சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும் (இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக் கூடாது…)
சிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்?
K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!
An Excellent Write-up. Congrats.
Sent from my iPhone
With Best wishes,
Dr.S.Devadoss
>
ந்ண்பர் மதிமாறனுக்கு,
நான் சிதம்பரம் கோவிலுக்குப் போனதில்லை. கோவிலுக்குள் தீட்சிதர்கள் செய்யும் அட்டூழியங்கள் உண்மையிலேயே நடந்திருந்தால் மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள். இந்தப் பதிவை எழுதிய நீங்கள் மதிமிக்க மாறன் தான்.
திரு ஆறுமுகச்சாமி சொல்லும் இடத்தில் ஒரு பார்ப்பனர் அமர்ந்து திருவாசகம் சொல்லியிருந்தால் அனுமதித்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா. (பார்ப்பனர்கள் திருவாசகம் சொல்வது இல்லை என்று என் போன்றவர்களிடம் கூறாதீர்கள்) திரு ஆறுமுகச்சாமி பிடிவாதம் செய்தது அவரது சாதித் திமிறைக் காட்டவில்லையா.
நான் சிறுவனாக இருந்தபோது பார்ப்பனர்களின் நூலை ஒரு கூட்டம் பிடித்து அறுத்தது என்று கேட்டதெல்லாம் பொய்யா. உண்மையானால் இது எத்தகைய பண்பாடு.
நான் பெரிதும் மதித்து வணங்கும் காஞ்சி பழைய மடாதிபதி படத்தை இதற்குள் நுழைத்ததன் காரணம் என்ன என்று தெரியவில்லை. அவரைப் பற்றி கேள்விப்படுவதெல்லாம் பார்ப்பனர்கள் விடும் புருடா என்று என்னால் நம்ப முடியவில்லை. வணக்கம்.
கே. கோபாலன்
இந்தப் பிரச்சனையில் கடவுள் நம்பிக்கையற்ற திரு. மதிமாறன் போன்றவர்களின் அதீத ஈடுபாடு, கடவுள் நம்பிக்கையுள்ள, பெரும்பான்மை சைவத்தமிழர்களை தீட்சிதர்களுக்கு ஆதரவாக திருப்பி விடுமோ என்று பயமாக இருக்கிறது. இவர்களின் இந்து மத வெறுப்பும், தேவார திருமுறைகளைக் கொச்சைப்படுத்துவதும், தீட்சிதர்களை எதிர்க்கும் சைவத் தமிழர்களை அவர்களுக்கு ஆதரவாக நடக்கச் செய்து விடும்.
அதை விட, பாவேந்தர் பாரதிதாசன் “ஸ்ரீரங்கநாதனையும்,தில்லைநடராசனையும்,
பீரங்கிகொண்டு தகர்க்கும்நாள் எந்நாளோ??? என்ற பாடலில் குறிப்பிடுவது கோபுரத்தை பிளப்பதைப் பற்றியே தவிர, நடராசரையும், அரங்கனையும் பிளப்பது பற்றி அல்ல.
ந்ண்பர் மதிமாறனுக்கு
இப்பொதுதான் வியாசன் பதிவின் மூலம் உங்கள் கேப்டன் TV உரையாடலைக் கேட்டேன். முழுக்க் முழுக்க ஆளும் கடசியைக் காட்டிக்கொடுக்க முயன்றதைத் தவிர ஏதும் தோன்றவில்லை. முதல்வரானவுடன் முதலில் கையெழுத்திட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை கடைசி வரை கடைப்பிடிக்கத் தவறிய முன்னாள் முதல்வரைப் பற்றி உங்கள் பேச்சில் ஒரு வார்த்தையாவது எதிர் பார்த்து ஏமாந்தேன்.
இருப்பினும் மற்ற் பதிவீட்டார்களிடம் இல்லாத உங்களது பண்பு என்னை மிகவும் கவர்கிற்து. please keep it up.
இன்று நான் மிகவும் வேதனையடைந்தேன். ஒரு திரைப்பட அரங்கின் முன்னால் காலை 7 மணிக்கு 200 மாணவர்களும் 6 காவல் துறையினுரும். என்ன நடக்கிறது நமது தமிழகத்தில். சிதம்பரம் கோவிலை விட இது உங்களுக்கு வேதனையளிக்கவில்லையா.
கே. கோபாலன்
my email ID : kgopaalan@blogspot.com
முதலில் கருஞ்சட்டை போட்டவர்களின் நேர்மையை பற்றி உரக்க கூறுங்கள். பிறகு உங்களுக்கு கொஞ்சமும் தெரியாத மெய்யியலைப் பற்றி கதைக்கலாம்.
வாங்கினான் என்பதற்கு வாங்கவில்லை என்பது சரியான எதிர்ப்பதமல்ல.வாங்கினான் என்பதற்கு விற்றான் என்பதே சரியான எதிர்ப்பதம்.
அதுபோல கடவுள் நம்பிக்கையை ஆத்திகம் என்று சொன்னால் கடவுள் மறுப்பு என்பது நாத்திகமல்ல.கடவுள் அல்லாத வேறொன்றை நம்புவதுதான் நாத்திகம்.அது சாத்தானாக கூட இருக்கலாம்.
மிக சரியாக சொல்வதேன்றால் தன்னை நம்புவது என்பதைவேண்டுமானால் நாத்திகமாக நாத்திகர்கள் சொல்லிகொள்ளலாம்.ஏனென்றால் எதனையும் பகுத்தறிவோடு ஆராய்ந்து ஒத்துகொள்லுதல் என்று வரும்போது தங்கள் தலைவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுகொள்ளுதல் என்பதும் முட்டாள் தனமானதே.
எனவே நாத்திகர்கள் இனி கடவுள்மறுப்பு என்பதை கைவிட்டுவிட்டு தாங்கள் யாரை நம்புகிறார்கள் என்பதை கூறினால் அவர்களுட்பட யாவருக்கும் நாத்திகத்தை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்புக்கிட்டும்
“அது மட்டுமல்ல தேவாரம், திருவாசம், பெரிய புராணம் இவை பார்ப்பனியத்திற்கு அடியாள் வேலைதான் பார்த்தது.”
அதுசரி.பெரியாரின் கொள்கைகளை வாழ்க்கை நெறியாக கொண்டு வாழும் பகுத்தறிவு சிங்கங்களை என்னவேன்றுசொல்லுவது.தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் எல்லாம் தொண்டர்கள்.தங்களுக்கு வேண்டப்படாதவர்கள் அடியாட்கள்.அல்லவா?
“பெரியபுராணமே சமண, பவுத்த சமயங்களின் எழுச்சியிலிருந்து சைவ சமயத்தை மீட்டெடுக்க எழுதப்பட்டதுதான்.அதானல்தான் அதில் எல்லா ஜாதிக்காரர்களுக்கும் ஒரு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டது.”
சரி ,தங்கள் முழங்கிகொண்டிருக்கும் பெரியாரிசம் மட்டும் என்ன செய்துகொண்டிருக்கிறது?உங்களுக்கு இருந்தால் அதன்பெயர் சமுக அக்கறை,மற்றவனுக்கு இருந்தால் அது தான்தோன்றித்தனம்.பலே பலே.