ம.க.இ.க தோழர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: கோவை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு நன்றி!
கோவையில் 09-0-2014 அன்று மாலை 7 மணியளவில், தீட்சிதர்களுக்கு ஆதரவான சில வழக்கறிஞர்கள், சிதம்பரம் தீட்சிதர்களை அம்பலப்படுத்தி பேசிய மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களை, வழக்கறிஞர்களுக்கு எதிரானவர்களாக திட்டமிட்டு திசை திருப்பி தாக்கியதும் பிறகு பொய் வழக்கில் கைது செய்ய வைத்ததும் அறிந்ததே.
அது தொடர்பாக தீட்சிதர்களின் ஆதரவாளர்களான பா.ஜ.க வழக்கறிஞர்களின் பொய்யை அம்பலப்படுத்தி, இன்று (13-01-2014) காலை நமது வழக்கறிஞர்கள், (முற்போக்காளர்கள்) வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரிடமும் செயலாளரிடமும் முறையிட்டிருக்கிறார்கள்.
இவர்களின் நியாயத்தைக் கேட்ட அவர்கள், “இந்த பிரச்சினை வழக்கறிஞர்களுக்கும் ம.க.இ.க தோழர்களுக்குமானது இல்லை என்பதை புரிந்து கொள்கிறோம். சிறையில் இருக்கும் அவர்கள் ஜாமினில் வெளி வருவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
நியாயத்தைப் புரிந்து சரியான அணுகுமுறையை கையாண்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருக்கும் செயலாளருக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
முன்னதாக தோழர்கள் தாக்கப்பட்ட அன்று அதுகுறித்து எனக்கு உடனடியாக தகவல் தந்தது, தன்னுடைய வருத்தையும் பகிர்ந்து கொண்டார் வழக்கறிஞர் மா. பாலசந்தர்.
ம.க.இ.க தோழர்களை அறிந்த, தோழர் பாலசந்தருடன் இரண்டு தோழர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இவர்கள் அவர்களை தடுத்திருக்கிறார்கள்.ஆனால் தாக்குதலை தடுக்க முடியவில்லை. அவர்களுக்கு புரியவைக்கவும் அவகாசம் கிடைக்கவில்லை.
அன்று இரவு மீண்டும் என்னிடம் பேசிய தோழர் பாலசந்தர், “ஏண்டா வழக்கறிஞரானேன் என்று வேதனையாக இருக்கிறது தோழர். கண்ணெதிரே தோழர்கள் தாக்கப்படுகிறார்கள். வயதான தோழரைகூட மனசாட்சி இல்லாமல் அடிக்கிறார்கள். நம்மால் ஒண்ணும் செய்ய முடியவில்லையே…’ என்று தன் குரல் உடைய வேதனையை பகிர்ந்து கொண்டார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் அபசகுனம் வெளியீட்டகத்தை சேர்ந்த எமது தோழர் மா. பாலசந்தருக்கும் நமது நன்றியை தெரிவிப்போம்.
**
கீழ் உள்ள இந்த செய்தி 09-0-2014 அன்று இரவு 8 மணியளவில் face book ல் எழுதியது.
ம.க.இ.க தோழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்
கோவையில் இன்று மாலை 7 மணியளவில், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சதி குறித்து அம்பலப்படுத்திய பேசிய மகஇக தோழர்களை பா.ஜ.க., வழக்கறிஞர்கள் வம்புக்கிழுத்து, தாக்கியிருக்கிறார்கள்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோழர்களை, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களுக்கும் எதிரானவர்களாக திசைத் திருப்பி, மற்ற வழக்கறிஞர்களையும் துணைக்கு அழைத்து தாக்கியிருக்கிறார்கள்.
பா.ஜ.க வினரின் திட்டமிட்ட இந்த சதியை எதிர்த்து முற்போக்காளர்கள், சமூக அக்கறையுள்ளர்வர்கள் அணி திரள வேண்டும்.
தொடர்புடையவை:
தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’
சிதம்பரம் கோயிலில் பல ரவுடிகளும் ஒரு நாயகனும் (இனி ‘தமிழறிஞர்களை’ சும்மா விடக் கூடாது…)
சிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்?
பார்ப்பனியம் எப்பொழுதுமே பாசிசத்தன்மை கொண்டதுதான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர் வழக்கறிஞர்கள் போர்வையில் ஒளிந்திருக்கும். ஆர்.எஸ்.எஸ.- பா.ஜ.க எடுபிடிகள். பா.ஜ.க அரசியலை ஏற்றுக்கொண்டவன் எந்தச் சாதியில் பிறந்தவனாக இருந்தாலும் – எந்தத் தொழிலை செய்பவனாக இருந்தாலும் பார்ப்பனியத்தையே அவன் ஆயுதமாகக் கொண்டிருக்கிறான்.
பா.ஜ.க, ஆர் எஸ்.எஸ், இந்து முண்ணனி உள்ளிட்ட மதவெறி கும்பல பார்ப்பனர் அல்லாத தமிழர்களை பார்ப்பனர் நலன்களுக்கு அடியாட்களாக மாற்றி தமிழர் உரிமைகளுக்காக போராடி வரும் பெரியார் , இடதுசாரி இயக்கமான ம.க.இ.க தோழர்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருவருவது தொடர் சம்பவமாக இருந்து வருகிறது. இதற்க்கு எதிர்வினையாற்ற வேண்டிய பெரியார் அம்பேத்கரிய மார்கசிய சிந்தனையாளர்கள் மற்றும் பார்ப்பன எதிர்ப்பு கருத்துடைய தமிழ் தேசிய இயக்கங்கள் கட்சிகள், தலித் , இடதுசாரி கட்சிகள், இயக்கங்கள் குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட தெரிவிக்காமல் அமைதிகாப்பது மாபெரும் வரலாற்றுப் பிழையாகும்.. நம்மை விமர்சனம் செய்கிறார்கள் என்பதர்க்காக பொது எதிகளால் நம்மை விமர்சித்தவர்கள் தாக்கப்படும்போது வேடிக்கை பார்ப்பது முற்போக்காளர்களக்கும், பகுதறிவாளர்களுக்கும் அழகல்ல. விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்வோம் . ம.க.இ.க தோழர்களின் தாக்குதலை அனைவரும் கண்டிப்போம், எதிர்வினையாற்றுவோம்.