தமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா

Tamil New Year Invitation

தொடர்புடையது:

சென்னை புத்தகக் காட்சியில்..

11 thoughts on “தமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா

 1. நல்லதொரு தகவல். மிக்க மகிழ்ச்சி.
  தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

 2. முதலில் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

  அம்பேத்கரையும் பெரியாரையும் நீங்கள் ஒரே கோணத்தில் பார்ப்பது ஏன்.

  அம்பேத்கர் இருகோடுகளில் பெரிய கோடாக் உயர்ந்து காண்பி என்று வாழ்ந்து காட்டினார்.

  பெரியார் தமிழர்கள் தாழ்ந்தத்ற்கு பார்ப்பானர்கள்தான் காரணம் என்ற பகுத்தறிவு பேசினார்.

  சாதியால்தான் தமிழர்கள் தாழ்ந்தார்கள், நமக்கு இடஒதுக்கீடு வருவதற்கு பெரியார்தான் காரணம் என்று பெரும்பாலான தமிழர்களை நினைக்க்விட்டார். சூத்திரன் என்று பார்ப்பனர்கள் சொன்னதால் மட்டும்தான் தமிழன் தாழ்ந்தானா. அப்படியானால், இஸ்லாமியர்களும் கிருத்துவப் பாதிரியார்களும் இட ஒதுக்கீடு கேட்பதன் காரணம்? அவர்கள் தாழ்ந்ததற்கு யார் காரணம்.

  கோயில்களில் அர்ச்சகராக இருந்தால் உட்கார்ந்து தின்கிறான் என்பதும் அவர்கள் வீட்டுப் பெண்களுடன் கல்வியால் படித்து உயர்ந்தால் 2000 வருசம் எங்களைத் தாழ்த்தித்தான் உயர்ந்தார்கள் என்பதும் எப்படிப் பகுத்தறிவாகும்.

  பார்ப்பனர்களை அரசு அலுவகங்களிலிருந்து அகற்றிவிட்டு என்ன சாதித்தீர்கள். எங்கும்,எதிலும் லஞ்சம், ஊழல். வேலைக்கு சேர்ந்து 6 மாதமே ஆனவர்கள் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொள்கிறார்கள். தெருவுக்கு 3 டாஸ்மாக் கடைகள், மக்களின் பணத்திலிருந்து வழங்கப்படும் விலையில்லாப் (இலவச) பொருட்களில் தலைவரின் படமும் பெயரும் ஏன் இடம்பெறுகிறது, நமது தலைவர்கள் திரைப்படத்துறையிலிருந்து மட்டும் ஏன் வருகிறார்கள், வீல் சேரில் சுற்றுபவருக்கும் கொரநாட்டில் மாதக்கணக்கில் தங்குபவருக்கும் மற்ற ஊதியர்களைப் போல் பணி ஓய்வு ஏன் கிடையாது, என்று தமிழர்கள் சிந்திக்காமல் இருப்பதற்கு பார்ப்பனர்கள்தான் காரணம் என்று பெரியார் கூறுவாரா.

  இந்து மதத்தை தரக் குறைவாகப் பேசி மற்ற மதத்தினர் முன்னால் கேவலப்படுத்தியதைத் தவிர பெரியார் எதையும் சாதித்துவிடவில்லை.

  தங்களின் பண்பின் மீது உள்ள பெரு மதிப்பினால் இந்தப் பதிவை உங்கள் தளத்தில் பதிவிடுகிறேன்.

  கே. கோபாலன்

 3. *கே. கோபாலன் அவர்களே

  கோயில் கருவறையை சுத்தப்படுத்தி கழுவி வெளியேற்றப்படும் கழிவு நீரை தீர்த்தம என்று சொல்லி அதை தலையில் தெளித்தால் நோய்வராது என்றும் நல்லது நடக்கும்கும் என்று சொல்லி மக்களை முட்டாளாக்கியது யார் இந்த பார்ப்பனர்கள் தானே இப்பொழுதுகூட ஒரு பார்ப்பனரும் இதை கண்டிக்காமல் இருப்பதற்க்கு என்ன காரணம்?

  * பெரியார் ஏன் பார்ப்பனர்களை எதிர்த்தார்?

  ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்! உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்க…ள் 166 பேர்! வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்! பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்! மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்! கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்! பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்! ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்! -குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் ) மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒதுக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் என இப்போது புரிகிறதா ?
  //பார்ப்பனர்களை அரசு அலுவகங்களிலிருந்து அகற்றிவிட்டு என்ன சாதித்தீர்கள்.//
  அப்படியா ? சொல்லவே இல்ல.

  *கோயில்களில் அர்ச்சகராக இருந்தால் உட்கார்ந்து தின்கிறான் என்பதும்/’/ பின்ன என்ன அவிங்க கோயில்ல வெட்டியா… முறிக்கிறாங்க…?

  இந்துமத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கவே முடியாது .
  – புரட்சியாளர் அம்பேத்கர்

 4. திரு பூ.ஆ.இளையரசன் அவர்களுக்கு,

  மொத்த சனத்தொகையில் 3 சதவீதமே உள்ள ஒரு சாதியினர் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அவர்கள் உழைப்பு காரணமில்லை என்கிறீர்களா. 50 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் தலையெடுத்தது இந்த சாதியில்தான்.

  சமூக ரீதியால் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த அளவு உயராமல் தடுத்தது சாதி மட்டும்தானா அல்லது அவர்களின் தாழ்வு மனப்பான்மையா.

  கடவுளை நம்புவதும் நம்பாததற்கும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகளும் காரணமாக உள்ளன. ஒருவன் வாழ்வில் உயர்வதற்கும் தாழ்வதற்கும் கடவுள் நம்பிக்கை ஒரு காரணமில்லை.

  ஆசிரியர் தொழிலிலும் மருத்துவத் துறையிலும் இட ஒதுக்கீடு கூடாது என்பது என் போன்றோர்களின் கருத்து.

  ////இந்துமத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்கவே முடியாது .
  – புரட்சியாளர் அம்பேத்கர்////
  (எல்லோரும் இஸ்லாமியராக வேண்டும் என்று பெரியார் விரும்பினார் என்று படித்த ஞாபகம்.)

  தங்களின் தரம் மிக்க பதிவுக்கு மிக்க நன்றி.

  கே. கோபாலன்

Leave a Reply

%d bloggers like this: