‘தினகரன்’ மாற்றம், நம்ப முடியாத அளவிற்கு உண்மையாக இருக்கிறது

dinakaran

‘ஆறுதல் அளித்த மரணம்’ என்று தலைப்பிட்டு
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டபோது அதை ஆதரித்து தலையங்கம் எழுதிய ஒரே தமிழ நாளிதழ் ‘தினகரன்’.

அதுமட்டுமல்ல, ‘இன்னும் உயிருடன் இருக்கிறார்களே’ என்ற தொணியில் ‘ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்றுபேர் 21 ஆண்டுகளாக காவலில் இருக்கிறார்கள்.’ என்றும் கொலை வெறியோடு எழுதியது.
அப்போதே அதைக் கண்டித்து நான் எழுதினேன். அந்தக் கட்டுரை ‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ என்ற என் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது.

நிர்வாகத்தின் நிலையே, ‘தூக்கு தண்டனையை ஆதரிப்பது’ என்பதாகவும் இல்லை. அவர்களின் சன் நியுஸில்  செய்தி ஆசிரியராக ராஜா இருந்தபோது, தூக்கு தண்டனைக்கு எதிராக விவாதங்கள் நடத்தப்பட்டது.

அஜ்மல் கசாப் தூக்கை கண்டித்தும் விவாதம் செய்தார்கள். ‘தினகரன்’ தான் தூக்கை வரவேற்று எழுதியது.

அப்போது அப்படி எழுதிய அது, இப்போது, ‘சபாஷ்! சரியான தீர்ப்பு’ என்று தலைப்பிட்டு வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 15 பேரின் மரண தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று எழுதியிருக்கிறது.

‘இதன் மூலம் ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் மற்றும் காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்தர்பால் புல்லருக்கும் தண்டனை குறைப்பு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.’ இன்று தினகரன் எழுதியிருக்கிற இந்த வரிகள் நம்ப முடியாத அளவிற்கு உண்மையாக இருக்கிறது.

22-11-2012 அன்று அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை ஆதரித்தும் ‘ராஜிவ் கொலை குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்’ என்று விருப்பம் தெரிவித்தும் எழுதிய தினகரனின் இந்த மாற்றம், அப்போதைய பொறுப்பாசிரியர் கதிர்வேல் மாறிபோனதால் ஏற்பட்ட மாற்றமா?

எப்படியோ, இந்த மாற்றம் வரவேற்க கூடியதாக இருக்கிறது. இப்படி ஒரு தலையங்கம் எழுதிய தினரனுக்கு நம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

*

இன்று காலை face book ல் எழுதியது.

தொடர்புடையது:

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

4 thoughts on “‘தினகரன்’ மாற்றம், நம்ப முடியாத அளவிற்கு உண்மையாக இருக்கிறது

 1. சன் நியுஸில் செய்தி ஆசிரியராக ராஜா இருந்தபோது, ///////////

  யாரு இந்த ராஜா? சன் செய்திகளில் பணிபுரிந்த அகிலா உட்பட பல பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த சன் நியூஸ் சங்கராச்சாரியாரா? ஒரு வேளை, இங்கே குறிப்பிடப்படும் ராஜா, அந்த பாலியல் புகழ் ராஜாவாக இருக்கும்பட்சத்தில் – இவர்கள் எல்லாம் தூக்கு தண்டனை பற்றி விவாதிக்க தகுதி பெற்றவர்களா? அதையும் பெருமையா பேசுவது மதியுள்ள செயலா மாறனுக்கு.

 2. திரு வே மதி மாறன் அவர்களே..
  உங்களுக்கு மாறன்களின் அரசியல் தெரியவில்லை என்றால் …

  தேர்தல் வரபோகுது… இப்போதே மத்திய உள்துறை பான சூனா.. தான் பிரபாகரனை பாதுகாக்க நினைத்தாகவும்.. தன் திட்டத்தை பிரபாகரன் ஏற்கவில்லை.. பிரபாகரன் தமிழ்நாட்டில் இருக்கும் வைகோ, நெடுமாறன் போன்றவர்களை நம்பினார் .. அதனால் தான் கொல்லப்பட்டர்ன்னு கலரு கலர ரீல்உடுறாரு… உண் மையில் இவரு போரை நிருத்த நினைச்சிருந்த வடிவேல் மாதிரி தன்னக்கு தானே ‘ஜாக்கிரதை’ தான் சொல்லி இருக்கணும்.. என்னா கோத்தைபா இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்னு சொல்ல்றார்.
  ஆனா தேர்தல் சுரமும் பதவி ஆசையும் நம்மை மாங்காய் மடயன்கள்னு சுனா பானவை நினைக்க வைக்குது.

  எனக்கென்னவோ .. 3பேர் தூக்கை ரத்து செய்யத்தான் இந்த தீர்ப்புன்னு தோணுது. இத்க்கு முன்னால் பல முறை பலர் பல ஆண்டு தூக்கு தண்டனைக்கு காத்திருந்து சிறையில் கழித்தபோதேல்லாம் .. எதையும் புடுங்காத அரசமைப்புக்கு இப்போ தூக்கு தண்டனைகு காத்திருங்கிறவங்க மேல கரிசனம் வந்ததுன்னு நம்ப நாம் கேனையர்கள் அல்ல.

  ராஜிவ் கொலை தமிழ் நாட்டில் சென்டிவ் விஷயமா பார்க்கபடுதுங்கிறது . மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். தமிழனை சென்சேசனல் இடியட் என்று அழைப்பது அதே மத்தி தான். தூக்கு தண்டனை எதிர்ப்பும் அதை ஒட்டிய மாணவர் போராடமும் , மக்கள் ஆதரவும் அனைத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்கு மத்திய அரசு.

  http://kannimaralibrary.co.in/elamebook/

  ராஜிவ் கொலையில் 3 பேரை தூக்கில் போடனும்னு ராஜிவுடன் செத்த 17 பேரின் குடும்ங்களை வைத்து ஒரு போரட்டம் நடந்ததே நினைவிருக்கா..

  உண்மையில் குற்றவாளிகள் என்றால் என்ன செய்யவேண்டும் ? குற்றம் நிரூபிக்கபட்ட நிலையில் மேல் முறையிட்டுக்கும் கருணை மனுவுக்கும் அவகாசம் 3 – 6 மாசம் தான்.. இவை எதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் தானாவே தூக்குதண்டனை உற்தியாகும். அந்த தேதியில் அரசு நிறைவேற வேண்டும் என்று தானே கோர்ட் உத்திரவிட வேண்டும்.

  காதலனுடன் ஜல்சா இரவு வரை பணிவிட்டு இரவில் பேருந்தில் வந்த ஜோதி / நிர்பயா / மாலினி / எதோ ஒன்ற்… கற்பழிகப்பட்டதால் தில்லியையே ஸ்தம்பிக்க வைத்தார்களே…

  அந்த கைதிகள் இதே காரணம் காட்டி 10 வருசம் கழித்து விடுதலை செய்தால்.. ஒத்துகொள்வார்களா…?

  குற்றம் நிறுபிக்கபடவில்லை குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்வது வேறு .. இது வேறு இதன்படி இவர்கள் குற்றவாளி தான்.. இதன்படி ராஜிவ் கொலை குற்றம் சட்டப்படவர் விடுவிக்க பட்டால் திரும்பவும் உண்மைகள் புதைக்கபடும். உண்மை குற்றவாளிகள்..மற்றும் சுவாமி & கோ தப்பும்.

  சோனியா ஜி, ராகுல் ஜி, 2ஜி, கலைஞர், கனி மொழி , ராசா.பானா சூனா நிலக்கரி, காமன் வெல்த்.. இப்போ சசி தரூரின் 4ம் மனைவி.. எல்லாம் சேர்த்து.. திமுக, காங் கூட்டணி உறுதிஆகிறது

  ஆனா தினசரி சும்ம டீக்கடையில் பேப்பர் படிப்பவன் கிட்ட கூட இந்த கூட்டணிக்கு ஓட்டு கேட்டல் காலில் இருப்பதை கழட்டுவான். அப்ப ஓட்டு கேட்க என்ன பண்ணாம் என்று யோசித்த குயுக்தி மூளையின் கண்டு பிடிப்பு இது..

  அதனால் இப்படி எதுனா வழக்கில் கொன்சம் பேர விடுவித்தால்.. ராஜிவ் கொலை குற்றவாளி விடுதலை கோரிக்கை எழும்பும்.. அவர்களை விடுவித்து கொஞ்சம் நல்ல பெயர் வாங்கினால்.. தேர்தல்லு பயன்படும் என்பது தான் காங் பெருச்சாளிகளின் கணக்கு.

  இவங்க திருந்தீட்டாங்கன்ன்னு நினைக்கிற ..உங்களை பார்க்க பாவமாக இருக்கு.ஜி…

Leave a Reply

%d bloggers like this: