தெய்வங்களை ‘கற்பழிக்கும்’ பக்தர்கள்

guru startoondநம் நாட்டில் நதிகள் மற்றும் தெய்வங்கள் பெண் பெயர்களிலும், வடிவங்களிலும் இருப்பது போல் இந்திய பொருளாதாரமும் பெண்ணியம் கொண்டதாக இருக்கிறது.

ஆன்மிகத்திலும் பெண்கள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பது சிறப்பு தன்மையாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் சென்று பேசும் போது கூட கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றிலும் பெண்களை மையமாக வைத்து தான் வழிபடுகிறோம் என்ற கருத்தையும் வலியுறுத்தினேன்.

ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி, இன்றைய தினத்தந்தியில்.

**

மேற்கு வங்காள மாநிலத்துக்கு உட்பட்ட பிர்பும் மாவட்டத்தின் சுபல்பூர் பகுதியில், பழங்குடி இனத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், வேறு சாதி வாலிபரை காதலித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, இளம்பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆனால் இளம்பெண்ணின் குடும்பத்தினரால் இந்த தொகையை செலுத்த முடியவில்லை.

எனவே அந்த இளம்பெண்ணை கற்பழிக்குமாறு ஊர் பெரியவர்கள் உத்தரவிட்டனர். அதன்படி, அந்த கிராமத்தை சேர்ந்த 13 பேர் சேர்ந்து இளம்பெண்ணை கற்பழித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆபத்தான நிலையில் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
‘என் தந்தை வயதில் இருந்தவர்கள்கூட அதில் இருந்தார்கள்’ என்று அந்தப் பெண் கூறினார்.

-இதுவும் இன்றைய தினத்தந்தியில்

*

இன்று காலை face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

பத்திரிகைகளின் பாலியல் வன்முறையும் தூக்கு தண்டனையும்

7 thoughts on “தெய்வங்களை ‘கற்பழிக்கும்’ பக்தர்கள்

  1. அந்த செய்திக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்… விட்டா அசப்புல ஆடிட்டரே தப்பு பண்ணியமாதிரி போட்டோ வேற

  2. அந்த செய்திக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்… விட்டா அசப்புல ஆடிட்டரே தப்பு பண்ணியமாதிரி போட்டோ வேற\\repeattu…………

  3. அந்த செய்திக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்… விட்டா அசப்புல ஆடிட்டரே தப்பு பண்ணியமாதிரி போட்டோ வேற\\repeattu…………

  4. //..அசப்புல ஆடிட்டரே தப்பு பண்ணியமாதிரி போட்டோ வேற ..//

    ஆடிட்டர் தப்பு பண்ணலைன்னு எப்பிடி சொல்லுறீங்க ????

  5. //பெண்களை மையமாக வைத்து தான் வழிபடுகிறோம் // -இந்த மாதிரியான நாட்டுல
    // இளம்பெண்ணை கற்பழிக்குமாறு ஊர் பெரியவர்கள் உத்தரவிட்டனர் // -இந்த மாதிரி நடக்குதுன்னு சொன்னா .

    – என்ன சம்பந்தம் ,யார சொல்லறன்னு சொல்லறவங்களுக்கு ,நெனைக்கறவங்களுக்கு கண்டிப்பா புரியும் இது எதனுடைய(சமயம் ,சாதி) தொடர்ச்சினு . இதுக்கான கருத்து ” தெய்வங்களை ‘கற்பழிக்கும்’ பக்தர்கள் ” ன்கிறது தான் சரி.

    -இளசெ.

  6. //நம் நாட்டில் நதிகள் மற்றும் தெய்வங்கள் பெண் பெயர்களிலும், வடிவங்களிலும் இருப்பது போல் இந்திய பொருளாதாரமும் பெண்ணியம் கொண்டதாக இருக்கிறது.//

    மொழிபெயர்ப்பு பிழையானது.

    பெண்ணியம் வேறு பெண்மைத்தன்மை வேறு.

    “…பெண்மைத்தன்மை கொண்டதாக இருக்கிறது”. என்று தினத்தந்தி மொழிபெயர்ப்பாளர் எழுதியிருக்கவேண்டும்.

  7. //நம் நாட்டில் நதிகள் மற்றும் தெய்வங்கள் பெண் பெயர்களிலும், வடிவங்களிலும் இருப்பது போல் இந்திய பொருளாதாரமும் பெண்ணியம் கொண்டதாக இருக்கிறது.//தெய்வங்களை ‘கற்பழிக்கும்’ பக்தர்கள்

Leave a Reply

%d bloggers like this: