தமிழ் பண்பாடு: கலாச்சாரமா? ஆச்சாராமா?

தோழர்கள் குமரேசன் ((‘தீக்கதிர்‘ பொறுப்பாசிரியர்), கவுதம் சன்னா(விடுதலை சிறுத்தைகள்) இவர்களுடன் 16-01-2014 அன்று கேப்டன் டி.வியில்நடந்த விவாதம்.

தமிழ் பண்பாடு வளர்க்கிறதா?

மேற்கத்திய பண்பாடு vs இந்து பண்பாடு – மாடு vs மனிதன். பெரியார் துவக்கிய நவீன சிந்தனை – எது நவீன இலக்கியம்?

இலக்கியவாதிகளின் படித்தவர்களின் ஜாதி வெறி..

தமிழிலக்கியம் வைத்திருப்பது சம்ஸ்கிருத இலக்கியங்களின் டப்பிங் ரைட்ஸ்.

தலைமுறை தலைமுறையாக தமிழ்மொழியை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள் படிப்பறிவு அற்ற தமிழ் மக்களே..

தொடர்புடையவை:

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

தங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்

துரோகம் தியாகம் கோமாளித்தனம்; ஜனவரி 26

பலி வாங்கும் bike

funny-bike-wheeling
நகரத்திற்குள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்டக்கூடாது என்று மோட்டர் பைக் வைத்திருப்பவர்களை கட்டுப்படுத்துகிறது காவல்துறை.

ஆனால், நவீன மோட்டர் பைக்குகள் 100 cc க்கு மேல் அதுவும் 300 – 600 cc பைக்குகள் எல்லாம் வந்திருக்கிறது. இவை ஆரம்ப வேகமே 40 கிலோ மீட்டருக்கு மேல்தான்.

இளைஞர்களை, அதுவும் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களை குறி வைத்தே இந்த வாகனங்கள் சந்தைப் படுத்தப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக விளம்பரம் படுத்தப்படுவதே வேகம், சாகசம். அதுவும் ஒரு சக்கரம் மேலே தூக்கியபடி ஓட்டுகிற விளம்பரங்கள்தான். (wheeling)

 
இந்த வாகனங்களே நகரங்களில் விபத்து ஏற்படுத்துகிறது. பல உயிர்களை பலி வாங்குகிறது.

இதுபோன்ற ஊதாரித்தனமான வண்டிகளை உற்பத்தி செய்வதற்கும் பொறுப்பற்ற முறையில் விளம்பர படுத்துவதற்கும் தவணை முறையில் விற்பதற்கும் அனுமதி தந்துவிட்டு,
40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்டக்கூடாது என்று கட்டுபாடு வைத்திருப்பது யாரை ஏமாற்ற?

குடிப்பதற்கு சாராயக்கடையை திறந்து வைத்து ‘நல்லா குடி.. ஆனா போதை ஆகக்கூடாது’ என்பதுபோல்தான் இதுவும்.

*

February 25 அன்று face book ல் எழுதியது

இல. கணேசன் மீன் விற்கிறாரா.. வாங்குகிறாரா?

newPic_9230_jpg_1769564g
கணேசனின் மத்தியாசனம்

‘பார்ப்பனர்கள் சுத்த சைவம் தான்; ஆனால் ஒரு ஊரில் நண்டு மட்டும்தான் சாப்பிட கிடைக்கும் என்றால், நண்டோட நடுவுல இருக்கிறத மட்டும் எனக்கு கொடு என்பார்கள்’ – பெரியார்.

தொடர்புடையவை:

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

டாடா ஊழியர் கொலை; சிக்கியது சிவப்பு சட்டை

chennaiengnrFEB250214

சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி  கொலை செய்யப்பட்ட வழக்கில்,
அவரின் A.T.M கார்டை திருடி பணம் எடுக்க முயற்சித்தபோது பிடிபட்டவர்கள் என்று காவல் துறை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்திருக்கிறது.

கேமராவில் பதிவாகி இருந்த சிவப்பு கலர் சட்டையை குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்து உள்ளோம் என்கிறது காவல் துறை.

சிவப்பு கலர் சட்டை மட்டுமே எப்படி கொலைக்கான அடையாளமாக இருக்க முடியும்? அப்படி இருந்தால் அந்த சட்டையை குற்றவாளிகள் அதற்குப் பிறகும் போட்டுக் கொண்டே இருப்பார்களா? பத்திரப் படுத்தி வைத்திருப்பார்களா?

இதேபோல் கடந்த ஆண்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று வங்கியின் கேமராவில் பதிவான ‘கட்டம் போட்ட சட்டை’ என்று சாட்சி சொல்லி விசாரணையே இல்லாமல் 5 வட நாட்டு இளைஞர்களை சுட்டுக் கொன்று அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது போலிஸ்.

இன்றைய தினத்தந்தியில்,
கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளனர். வாக்குமூலம் விவரம் வருமாறு:

தினமும் இரவு வேலை முடிந்ததும் மது அருந்துவோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் போதையில் சிப்காட் வளாகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தோம்.
அப்போது நள்ளிரவு நேரம். உமா மகேஸ்வரி ரோட்டில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் நாங்கள் கிண்டல் செய்தோம். நாங்கள் இந்தி சினிமா பாட்டை பாடி அவரது கையைப் பிடித்து இழுத்தோம்.

இதில் கோபம் அடைந்த உமா மகேஸ்வரி, எங்களை செருப்பால் அடித்தார். இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்து கூட்டமாக கூடினார்கள். இதனால் நாங்கள் தப்பி ஓடிவிட்டோம்.

உமாமகேஸ்வரி, எங்களை தாக்கியது எங்களுக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. அவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று உறுதி எடுத்தோம். எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13–ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார்.

போதை மயக்கத்தில் இருந்த நாங்கள், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளினோம். பின்னர் அவரது வாயை பொத்தி அலாக்காக குண்டுகட்டாக தூக்கினோம். அருகில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கிச்சென்றோம்.’
என்று காவல் துறை தந்த செய்தி வந்திருக்கிறது.

இவர்கள் கொலை செய்யப்பட்டவருக்கு பழக்கமில்லாதவர்கள் போல் தான் இருக்கிறார்கள். அவர்கள் சொல்கிற சம்பவம் அப்படித்தான் அதை பதிகிறது.

ஆனால், ‘அந்தப் பெண்’ என்று சொல்லாமல் ‘உமா மகேஸ்வரி’ என்று ஒவ்வொரு முறையும் நன்கு தெரிந்தவர் பெயரை சொல்வது போல், பெயர் சொல்லியே சொல்கிறார்கள்.
அது எப்படி அவர்களுக்கு அவரின் பெயர் அந்த அளவிற்கு தெரிந்திருக்கிறது?

அது மட்டுமல்ல ‘எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13–ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார்.’ என்கிறார்கள்.

இந்த வாக்கியத்தில், அவர்கள் திட்டமிட்டு அவருக்காக காத்திருந்ததுபோல்தான் இருக்கிறது.

ஆனால், உமா மகேஸ்வரியோ கொலை நடந்த அன்று வழக்கத்தை விட முன்பாகவே வேலையிலிருந்து அனுமதி கேட்டு சென்றார் என்று இரண்டு நாட்களுக்கு முன் காவல் துறையே சொல்லி உள்ளது.

அவர்கள் குற்றவாளிகள் என்றால் காவல் துறை இன்னும் கூடுதல் ஆதாரங்களை தர வேண்டும். அவர்களின் முகத்தை மூடி வைத்திருப்பது ஏன்? எல்லா வழக்கிலும் இதுபோல்தான் காவல் துறை குற்றவாளிகள் முகத்தை மூடி வைத்ததா?

முகத்தை முற்றிலுமாக மூடி உள்ளே இருப்பது ஆணா? பெண்ணா? என்று கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கொண்டு வந்து அவர்களை பத்திரிகையாளர்களுக்கு முன்னால் எதற்கு நிற்க வைக்க வேண்டும்?
அதன் மூலமாக மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது காவல் துறை?
நாளை நீதி மன்றத்தில் நிறுத்தும்போது இவர்கள்தான் அவர்கள் என்பதை மக்கள் எப்படி அடையாளம் காண முடியும்?

இது போன்ற சந்தேகங்கள் இல்லாத அளவிற்கு பொது மக்களுககு அதை விளக்க வேண்டும். ஒருபோதும் உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது.

*

இன்ற மதியம் face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

.சோ சொன்னது தவறு; ஆட்டோ சங்கரோ, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ.. என்கவுன்டர் கூடாது

நடிகை ஆடியதும், பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; சாதனை

playback-singer-lr-eswari-felicitated-event-5efed4c2

“தென்னை மரத்தோப்பினிலே
தேங்காயை பறிச்சிக்கிட்டு..
பக்தியுடன் நாங்கள் வந்தோம்..
மாரியாத்தா ஆ…
நீ.. எளநீர எடுத்துக்கிட்டு….’ (செல்லாத்தா..)

பழையப் பாட்டுதான். பலமுறை கோயில் ஒலிபெருக்கி மூலம் கேட்டது தான். இதன் தாளம் எவ்வளவு தூரத்திலிருந்து கேட்டாலும் என்னை வசீகரிக்கும். இன்று (ஜனவரி 9) காலையிலும் அதுபோலவே ஒலிபெருக்கியில் கேட்டேன்.

இந்தப் பாடலின் சிறப்பு, எல்.ஆர். ஈஸ்வரி.

திரை இசையில் அதிகமாக துள்ளலான பாடல்களை பாடியிருக்கிறார். தனது அழுத்தமான உச்சரிப்பாலும் நுட்பான சங்கதிகளோடும் ‘இனி இதை இதுபோல் வேறு யாரும் பாட முடியாது’ என்கிற முடிவோடும் இருக்கும் அவர் குரல்.

திரையில் அவர் பாடிய பாடல்கள், பெரும்பாலும் பெண்ணின் ‘Sexy Dance‘ க்காவே பயன்படுத்தப்பட்டது. அவர் குரல் பெண்ணின் விரகதாப உணர்வுக்கும் வேகமான பாடல்களுக்கும் மட்டுமே என்று முத்திரை குத்தப்பட்டு, ஆண்களின் ரசனைக்காக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டது.

ஆனால், திரைக்கு வெளியே அவருடைய தனிப்பாடல்கள், அதற்கு நேர் எதிராக ‘பக்தி’ சார்ந்து, பெண்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.

‘அம்மன் பாடல் என்றால் அது எல்.ஆர். ஈஸ்வரிதான்’ என்று பெண்களும் அவரின் விரகதாப பாடல்களை ரசித்த ஆண்களும் பக்தியோடு கேட்கிறார்கள் என்று அதை சாதரணமாக சொல்லிவிட முடியாது.

அவர் குரலை கேட்ட மாத்திரத்தில், அந்த அம்மனே தங்கள் மீது இறங்கி விட்டதாக கருதி ‘அருள்’ பெற்று தன்னிலை மறந்து ஆடத் துவங்குகிறார்கள்.

திரையில் அவர் பாடலுக்கு ஒரு நடிகை அரைகுறை ஆடையுடன் ஆடியதும், நிஜத்தில் அவர் பாடிய பாடலுக்கு பக்தர்கள் ‘சாமி’ வந்து ஆடுவதும்; இது சாதாரண விசயமல்ல; சாதனை.

வேறு எந்தப் பாடகராலும் இப்படி இரண்டு எதிர் எதிர் உணர்வுகளோடு மக்களுடன் பயணிக்க முடியாது. ஆண்-பெண் இருபாலரிலும் எல்.ஆர். ஈஸ்வரிக்கு இணையாக இதுவரை இல்லை. இதில் இன்னும் கூடுதல் சிறப்பு, அவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவர் என்பது.

கத்தோலிக்க கிறிஸ்துவரான ஜேசுதாஸ், திரைக்கு வெளியே தன் கர்நாடக இசையின் திறமையை நிரூபித்துக் கொள்ள, பயன்படுத்த, அங்கீகாரத்திற்காகவும் தன் பார்ப்பன ‘பக்தி’யின் மூலம், ‘இந்து’ ஆதிக்க ஜாதிக்கார்களின் மனதில் இடம் பிடித்தார்.

எல்.ஆர். ஈஸ்வரியோ அதற்கு நேர் எதிராக தாழ்த்தப்பட்டவர்கள், மிக பிற்படுத்தப்பட்ட வண்ணார், குயவர், வன்னியர், கள்ளர், மீனவர் மற்றும் நாடார் போன்ற எளிய மக்களின் இறை உணர்வோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

இன்றைய சூழலில் ‘தமிழ் உணர்வு’ கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் பேசுகிற இந்து ஜாதி தமிழத் தேசியத்தை விட, கத்தோலிக்க கிறிஸ்துவரான எல்.ஆர். ஈஸ்வரியின் ‘இந்து’ பக்திப் பாடல்களே முற்போக்கானதாக இருக்கிறது.

**

“தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு..”

தென்னை மரத்துலதான் தேங்காயை பறிக்க முடியும். மாமரத்துலய பறிக்க முடியும்?

“பக்தியுடன் நாங்கள் வந்தோம்.. மாரியாத்தா ஆ…”

இதுக்கு எதுக்கு பக்தி?
‘கடவுள் இல்லை’ என்று சொல்லிவிட்டு பறித்தால்கூட தென்னை மரத்திலிருந்து தேங்கா பறிக்கலாம்.

மாந்தோப்புல, மாமரத்துல தேங்காயை பறிச்சதான் பக்தி.
அப்பதான் ‘பக்தியுடன் நாங்கள் வந்தோம்.. மாரியாத்தா ஆ…’ என்று பாடினால் பொருத்தமாக இருக்கும்.

மற்றபடி, தென்னை மரத்துல தேங்காயை பறிக்கிறது பக்தியல்ல, தொழில்.

*

ஜனவரி 9 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

All Your Duty.. ‘கோலிசோடா’ ctrl + c ctrl + v

புரட்சித்தலைவரின் புரட்சிகரப் பாடல்

புரட்சித்தலைவரின் புரட்சிகரப் பாடல்

hqdefault

தமிழ் சினிமாவில் முதல் முறையாக இரட்டை அர்த்ததில் அல்ல, ஒரே அர்த்தத்தில், ‘புரட்சித்தலைவர்’ எம்.ஜி.ஆர் என்ற முதியவர் , இளம் பெண்ணின் மார்பகங்களை மாங்காயோடு ஒப்பிட்டு,

அந்தப் பெண்ணின் மார்பகங்களின் முன் கை நீட்டியும் பார்வையால் பார்த்தும் ‘காயா.. இல்லை பழமா..? கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா?’ என்று பாட்டு பாடி ஈவ்டீசிங் செய்தார்.

‘பறிச்சாலும் துணிப்போட்டு மறைச்சாலும் பெண்ணே.. பளிச்சென்று தெரியாதோ இளம் மாங்கா முன்னே..’
‘உன் புத்தி.. பெண் புத்தி.. பின் புத்தி..’
இதுவும் தலைவர் பாடியதுதான்.

*

‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.பாட்டு தெரியாத நீங்கள் எல்லாம் ஒரு டீச்சரா?’
என்று சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய சைதை துரைசாமி அவர்கள் ஆசிரியர்களுக்கான ஒரு விழாவில் பெண் ஆசிரியர்களைக் கண்டித்திருக்கிறார்.

*

பாடலை பார்க்க..

http://youtu.be/vylKWIFujkI

தொடர்புடையவை:

எம்.ஜி.ஆரையே வீழ்த்திய அன்பழகன்

தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

..இவர்களுடன் எம்.ஜி.ஆரும் கலைஞரும் மலையாளிகளும்; தீர்வு தமிழ்த்தேசியம்!?

‘இந்து’ காதலர் தினம் – தினகரன் – ராம.கோபாலன் – விஜயகாந்த்

Bairavar

காதலர் தினத்தை கொண்டாடிய இந்து அமைப்புகளுக்கு நன்றி!
*
சிவனின் அவதாரங்களில் ஒன்றான பைரவரின் வாகனமான நாய்க்கும் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான பன்றிக்கும், காதலர் தினத்தை முன்னிட்டு இந்து அமைப்புகள் இன்று திருமணம் செய்து வைத்தார்கள்.

February 14

1001263_10201554151237727_1016166788_n

மோடி அலை வீசுவதாக தனது செய்திகளில் கூட ‘கருத்தை’ சொறுகி அடிக்கடி எழுதிகிற தினகரன், வண்டலூரில் மோடி கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்திற்‘கே’ முதல் பக்கத்தில் படமும் 8 காலத்திற்கு தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டு, உள்ளே இரண்டு பக்கங்கள் வரை நீட்டி மொத்தம் 3 பக்கங்கள் கொண்டாடியது.

நேற்றைய திருச்சி திமுக மாநாட்டு செய்தியை‘யே’ முதல் பக்கத்தில் 1 படமும் 5 காலத்திற்கு செய்தியாகவும் உள்ளே ஒரே பக்கத்திற்குள் முடித்துக் கொண்டது.

தினகரன் திமுக ஆதரவு பத்திரிகை மட்டுமல்ல கலைஞரின் குடும்ப பத்திரிகை என்கிறார்கள் உண்மையா?

February 16

1622654_10201557314236800_999590896_n

‘இந்து முன்னணி அரசியல் கட்சியல்ல. தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று பின்புதான் முடிவு செய்வோம்’ – என்று இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் யாருகூட கூட்டணி என்பதைகூட கண்டுபுடிச்சிடலாம்..
ராம கோபாலன் யாரை ஆதரிப்பாரு? கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். ஒருவேளை முஸ்லீம் லீக்கை ஆதாரிப்பாரோ?

February 17

vijayakanth_076

 ஜோதிடர்களுக்கு ஓர் சவால்!
*
ஜோதிடத் திறமையால் தனிநபர் வாழ்க்கையிலிருந்து அரசியல் வரை, நடக்கப்போறத முன் கூட்டியே சொல்றீ்ங்க..
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் அடுத்த பிரதமர்.. என்றெல்லாம் சொல்வது இருக்கட்டும்..

விஜயகாந்த் யாருடன் கூட்டணி வைப்பாரு? இத உங்களால சொல்ல முடியுமா?

February 17

துரோகம் தியாகம் கோமாளித்தனம்; ஜனவரி 26

*
இந்திய அரசியல் சட்டம்… அதன் முற்போக்கு அம்சங்களுக்குக் காரணம் டாக்டர் அம்பேத்கர். அதன் பிற்போக்குத் தனங்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை..
*
வேந்தன். பேராசிரியர் ஹாஜாகனி. வே. மதிமாறன்.

அவர்கள் சொல்வது போல் சட்டத்தைத் திருத்தக் கூடாது. ஆனால், திருத்த வேண்டும். திருத்தப் பட்டிருக்கிறது.

மிகைப்படுத்தப்பட்ட கதாநாயகனை விஞ்சிய சாகசம் . ..
காந்தி+பிரிட்டிஷ் அரசு + இந்திய தலைவர்கள் vs டாக்டர் அம்பேத்கர்.

தொடர்புடையவை:

மக்கள் தொலைக்காட்சி பேட்டி

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

தங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்

தூக்கு ரத்து நிச்சயம் விடுதலையே லட்சியம்

FL26_PROFILE_SATHA_1512111m

தமிழர்கள் நெஞ்சில் நம்பிக்கை விதைத்ததற்கு நன்றி.
தமிழர்கள் கண்ணீர் மல்க, கரம் குவித்த ஆனந்த நன்றி அடுத்த சில மணிகளில்..

காலை 9.30 மணிக்கு face book ல் எழுதியது.

*

ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து. மகிழ்ச்சி. நன்றி.

3 வரின் விடுதலைக்காக உழைப்போம்.

நீதிபதிகளும் 3 பேர் விடுதலை குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளனர் என்பது இந்த தீர்ப்பைப்போலவே மிக மிக முக்கியமானது.

இன்று 12 மணியளவில்  face book ல் எழுதியது.

image_preview

Do Anything என்ற இளையராஜாவின் உலகப் புகழ் பெற்ற உன்னத இசை மூலமாக, மூவர் தூக்கு ரத்தான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
http://www.tamilv2.com/Download%20SPL%20Collections/How%20To%20Name%20It/10%20-%20Do%20Anything%20-%20Www.TamilKey.Com.mp3

மதியம் 1 மணிக்கு face book ல் பதிவிட்டது.

Karunanidhi.Jayalalitha

தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி யாருக்கு ?

மந்திய காங்கிரஸ் அரசை நிர்பந்த்தித்து, வேண்டிக் கேட்டுக் கொண்டு அல்லது கூட்டணி நிபந்தனையாக ‘ராஜிவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும்’ என்று கலைஞரின் முயற்சியால் விடுதலையும் செய்யப்பட்ட பிறகு 39+1=40 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா?

இல்லை,
மத்திய அரசை முந்திக் கொண்டு தமிழக முதல்வர் ராஜிவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து 39+1=40 தொகுதிகளிலும் வெற்றியை அள்ளிச் செல்வாரா?
பார்ப்போம்.

மதியம் 2 மணிக்கு face book ல் எழுதியது.

PRW_dd_happy-faces-high-res

மரியாதைக்குரிய நீதிபதி சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள், மூவர் உயிர்களை மட்டும் காக்கவில்லை; இந்தத் தீர்ப்பு மாறாக இருந்திருந்தால் செங்கோடி, முத்துக்குமார் போல், பலர் தங்கள் உயிர்களை தியாகம் செய்திருப்பார்கள்.

அந்த உயிர்களையும் காத்த நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நீதிபதிகளுக்கு நம் நன்றியை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதின் மூலம் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.

மாலை 6 மணிக்கு face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

முல்லைப் பெரியாறு, மூவர் தூக்கு: மரியாதைக்குரிய நீதிபதி தாமஸ்

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

‘தினகரன்’ மாற்றம், நம்ப முடியாத அளவிற்கு உண்மையாக இருக்கிறது