பட்டுக்கோட்டை பாடல் பற்றிய..
Chandran Veerasamy அவர்கள் பட்டுக்கோட்டையின் கீழ் கண்ட பாடல் வரிகளை அவருடைய face book பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் என் கருத்தை எழுதினேன்.
//திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது !// -பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
அடிப்படைத் தேவைகளுக்கான பொருளாதார வசதி
இல்லாததனால்தான், திருடவே செய்கிறார்கள். திருந்தவேண்டியதும் திருத்த வேண்டியதும் சமூகத்தைதான்.
உழைப்பையும் மூலதனத்தையும் திருடும் பணக்காரர்கள் அல்லது முதலாளிகள் ஒரு போதும் திருந்தமாட்டார்கள். அவர்கள் திருந்தினால் முதலாளிகளாகவும் இருக்க மாட்டார்கள்.
//திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது !// என்று எழுதிய பட்டுக்கோட்டைதான்,
‘வசதி படைச்சவன் தரமாட்டான்
வயிறு பசிச்சவன் விடமாட்டான்’ என்று எழுதினார்.
அதுதான் யாதார்த்தம். அது திருட்டல்ல. பட்டாளி வர்க்க அரசியல்.
*
பிப்ரவரி 6 அன்று face book ல் எழுதியது.
தொடர்புடையவை:
‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்
‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று
face book comments
*
Chandran Veerasamy: திரைப் படங்களுக்காக சில சமரசங்களைச் செய்திருக்கிறார் பட்டுக்கோட்டையாரும் . புரட்சிக் கவிஞரும் இதற்கு விதிவிலக்கல்ல .தனிப் பாடல்களுக்கும் , திரைப் பாடல்களுக்கும் , சிறிது வேறுபாடு , சில பாடல்களில் தெரிகிறது .
February 6 at 8:07am · Like · 4
வே மதிமாறன்: பட்டுக்கோட்டை பற்றிய குறையாக சொல்லவில்லை. ஒரு சிந்தனையாக பகிர்ந்தேன். அவரை உங்களைப்போலவே நானும் நேசிக்கிறேன்.
February 6 at 8:33am · Edited · Like · 9
Chandran Veerasamy: காலம் மாறும் போது கருத்தும் மாற வேண்டிய நிலை .
February 6 at 8:10am · Like
Elangovan Munusamy: எதாவது சண்டை வரும் வேடிக்கை பாக்கலாம்னு பாத்தா ரெண்டு பேரும் தோள்ல கைய போட்டுக்கிட்டு டீ குடிக்க போறாங்கப்பா!1/2 மணி நேரம் வேஸ்ட்…
February 6 at 8:28am · Edited · Unlike · 4
Chandran Veerasamy: அண்ணன் கிட்டே கத்துக் கிட்டதில் இதுவும் ஒண்ணு .
February 6 at 8:29am · Like · 2
Elangovan Munusamy: இந்த விஷயத்தில ரொனால்டோவை விட வேகமா பந்தை திருப்புராங்களே..
February 6 at 8:32am · Like · 1
Jeeva Sagapthan: வே மதிமாறன் தோழர் அவர்களுக்கு முகநூலில் அரசியல் வகுப்பெடுத்தால் நண்பர்கள் குறைவார்கள்.வம்பு செய்தால் நண்பர்கள் வருவார்கள்.
February 6 at 12:34pm · Unlike · 1
வே மதிமாறன்: புகழ்ந்தாலும்..
February 6 at 1:58pm · Like
Venki Mohan : Friends with Anbu Veera and 25 others
பட்டுக் கோட்டை கல்யானசுந்தரத்தின் பாடல்கள் என்னதான் தத்துவ வரிகளை கொண்டிருந்தாலும், அவ் வரிகள் எம்ஜிஆர் போன்ற பாசிஸ்டுகள் சமூகத்தில் தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வதற்கும் ஓட்டு பொறுக்குவதற்குதான் பயன்பட்டன.
February 6 at 4:32pm · Like · 5
Ananth Jothi: unmai
பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.
//உழைப்பையும் மூலதனத்தையும் திருடும் பணக்காரர்கள் அல்லது முதலாளிகள் // ((திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது innu avar sonnathu intha thirudarkalai patrithaan.))