யுவன் சங்கர் ராஜா மதம் மாறினார் இளையராஜா இழிவுபடுத்தப்படுகிறார்

398750_457844934263040_212708969_n

யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியாராக மாறிவிட்டார் என்று சொல்கிறார்கள்;

இப்போது இந்து உணர்வாளர்கள் ‘இளையராஜா தன் மகனை இப்படி தறுதலையா விட்டுடாரே. இவுரு என்ன இந்து உணர்வோடு தன் மகனை வளர்த்தார். ஊருக்கு இந்து மத உபதேசம் செய்யும் இளையராஜா தன் மகனிடம் அதைப் பற்றி பேசவில்லையா? மத மாற்றத்தைத் தடுக்கவில்லையா?’ என்று அறிவுரை சொல்வார்கள் கண்டிப்பார்கள்.

பகுத்தறிவாளர்கள் யுவனின் மத மாற்றத்தை, இளையராஜாவின் இந்து இறை நம்பிக்கையோடு ஒப்பிட்டு அவரை கேலி செய்வார்கள்.

-நேற்று (9-2.2014) இரவு 10 மணிக்கு மேல் face book ல் எழுதியது.

*

யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியராக மாறியதற்கு இளையராஜாவை திட்டுகிறார்கள். இது பகுத்தறிவா? ‘சூத்திர’ அறிவா?

-இன்று பிற்பகல்  face book ல் எழுதியது.

*

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தீவிரமான இந்துக் கடவுள்களின் பக்தராக இருந்தார். பார்ப்பன கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். தன் திருமணத்தையே இந்துக் கோயிலில்தான் நடத்தினார்.

போராளிக்களுக்கான தலைவரே இந்து நம்பிக்கையோடு இருக்கலாம். அவரின் இந்து நம்பிக்கையை எந்தக் கேள்வியும் இல்லாமல், பகுத்தறிவாளர்கள் உட்பட ஒட்டு மொத்தமான தமிழர்களுக்கும் தலைவராக அவரை  ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் தனி வாழ்க்கையில் எந்த முற்போக்கு அம்சமும் இல்லாத,ஒரு இசைக் கலைஞர், சினிமாக்காரர் இளையராஜா; இந்து மற்றும் பார்ப்பனக் கடவுள்களின் தீவிர பக்திமானாக இருந்தும்; தன் மகனின் இஸ்லாமிய மத மாற்றத்தை ஆதரித்திருக்கிறார்.

ஆனாலும் பிரபாகரன் போனற போராளிகளிடமே, இந்து எதிர்ப்புணர்வை எதிர்பார்க்காமல் தலைவராக கொண்டாடுபவர்கள்,

இளையராஜாவை போன்ற சினிமாகாரரிடம் இந்து எதிர்ப்புணர்வை எதிர்பார்த்து அவரை இழிவானவராக விமர்சிப்பது,
தமிழ் உணர்வா? ‘சூத்திர’ உணர்வா?

Tnfishermen Voices: தோழர் தேசிய தலைவர் அவர்கள் ஈழத்தில் பிறந்தவர் பெரியாரிய கருத்துகள் அந்த வயதில் அவரிடம் போய் சேர்ந்திருக்க வாய்ப்பு இல்லை.

வே மதிமாறன்: ஆமாம். அவரை பற்றியல்ல, இந்தக் கேள்வி. கடவுள் மறுப்பு, இந்து மத எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் பேசுகிறவர்கள் குறித்துதான்.

பெரியாரை தவிர்த்துவிட்டு, வெறும் விடுதலைப்புலிகள் ஆதரவு என்று மட்டுமே அரசியல் நடத்துகிறவர்கள் இந்து மத ஆதரவாளர்கள் மட்டுமல்ல; மோடி, பால்தாக்ரே போன்ற பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்பதையும கவனித்தில் கொள்ள வேண்டும்.

அதனால்தான் வைகோ போன்றவர்களால் நேரடியாக மோடியை ஆதரிக்க முடிகிறது. அது தன் செல்வாக்குக்கு எதிரானதல்ல என்று அவரால் உறுதியாக நம்பமுடிகிறது.

தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவு நிலை கொண்ட, பெரியார் இயக்கங்களும் அதன் காரணத்தினாலேயே வைகோ பற்றிய விமர்சனங்களைகூட செய்ய மறுக்கிறது.

இன்று மதியம்  face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால் நடக்கிறத வேற..

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

8 thoughts on “யுவன் சங்கர் ராஜா மதம் மாறினார் இளையராஜா இழிவுபடுத்தப்படுகிறார்

  1. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தீவிரமான இந்துக் கடவுள்களின் பக்தராக இருந்தார். பார்ப்பன கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். தன் திருமணத்தையே இந்துக் கோயிலில்தான் நடத்தினார்.

    போராளிக்களுக்கான தலைவரே இந்து நம்பிக்கையோடு இருக்கலாம். அவரின் இந்து நம்பிக்கையை எந்தக் கேள்வியும் இல்லாமல், பகுத்தறிவாளர்கள் உட்பட ஒட்டு மொத்தமான தமிழர்களுக்கும் தலைவராக அவரை ஏற்றுக் கொள்ள முடியும்
    ஆகையால் தான் ஈழத்தில் ஒரே இரவில் அத்தனை இஸ்லாமிய மக்களையும் இந்த விடுதலை புலிகள் விரட்டி, இஸ்லாமியர்களின் சொத்துகளையும் பிடுங்கி துரத்தினர்.

  2. மீண்டும் மீண்டும் இலங்கைநிலைமையை , தமிழக நிலைமையோடு ஒப்பிட்டு குழப்பி வருகிறீர்கள் .

    தமிழ்நாட்டைப்போல் . இலங்கையில் பார்பனீய ஆதிக்கமோ , செல்வாக்கோ ஒரு போதும் நிலவியதில்லை.

    ஈழத்தைப்பொறுத்தவரை பிராமணர்கள் தமிழ் நாட்டில் இருப்பது போல் அதிகளவில் இல்லை . ஒரு ஊரில் ஆறு கோவிலகள் இருந்தால் அந்த கோவில்கலை சுற்றி மூன்று அல்லது நா ந்கு பிராமண குடும்பங்களெ இருக்கும் . இந்த வகையில் பார்த்தால் இலங்கை முழுவதற்குமே பத்தாயிரத்திற்கும் குறைவான பிராஅமணர்களே இருப்பார்கள் .

    இலங்கையைப்பொறுத்தவரை அங்கு ஊர்களில் , கோவிலகளில் சைவ வேளார்களின் ஆதிக்கமே அதிகம் . அந்த வகையில் கோவில்களில் கூட பிராமணர்கள் சைவ வேளாளர்க்கு அடங்கியே நடப்பார்கள் .இது முற்றிலும் தமிழ் நாட்டுநிலைமைக்கு நேர்மாறானது.
    இதை தமிழ் நாட்டவர் பலர் புரிந்து கொள்வதில்லை . தமிழ் நாட்டவர்களைப்போலவே ஈழத்தமிழர்களும் பெரியார் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வெண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.
    இது எப்படி சாத்தியம் ?
    அது மட்டுமல்ல ஈழ போராளி த்தலவர் கூட அப்படித்தான் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் ?
    தமிழ் நாட்டில் உள்ள மதப்பிரச்சனையை விவாதிப்பதாக இருந்தால் கூட புலிகளின் தலைவரை வம்புக்கிழுக்கிறார்கள் .

    ஈழத்தமிழர்களைப்பொறுத்தவரை அவர்களின் தலவர் தமிழ் உணர்வு மிக்கவராகவும் , தான் கொண்ட கொள்கையில் உறுதியுடையவரகாவும் இருக்க வேண்டுமென்றே எதிர்ப்பர்க்கிறார்கள் .

    இந்து எதிர்ப்புணர்வை அவர்கள் எதிர்ப்பார்கவுமில்லை . அதற்கு அங்கு அவசியமுமில்லை.

    பெரியார் ஈழத்தில் தமிழராக பிறந்திருந்தால் சிங்கள பவுத்த பேரினவாதத்தை எதிர்த்து போராடியிருப்பாரே தவிர பிராமணீயத்தையோ அல்லது இந்து மதத்தையோ எதிர்த்திருக்க மாட்டார்.

    இதனை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

  3. சையத் அவர்களெ ,

    இலங்கையின் வட பகுதியில் முஸ்லிம்களை அவர்களின் வீடுகளை விட்டு புலிகள் வெளியேற்றினார்கள் என்றும் அவர்களின் சொத்துகளை அப்கரித்தார்கள் என்றும் சொல்கிறீர்கள் .

    னீங்கள் சொல்வதைப்பார்தால் இலங்கையில் வாழும் முஸ்லிமகள் என்னவோ அப்பிராணிகள் போலவும் அவர்கள் மேல் புலிகள் கை வைத்து விட்டார்களெனவும் ஒரேயடியாக கண்ணீர் வடிக்கிறீர்கள்.

    அத்ற்கு முன் முஸ்லிம் காடையர்கள் ஊர்காவல் படை என்ற பெயரில் சிங்கள ராணுவத்திடம் ஆயுதங்களைப்பெற்று அரை குறை பயிற்சியையும் பெற்று விட்டு அதனை வைத்து எத்தனை ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை குழந்தகள் பெண்கள் என்றும் பாராது கொன்று தள்ளினார்கள் எனத்தெரியுமா ?

    கோவில்கள் , பல்கலைகழகம் , வீடு , வீதிகள் , என்று எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை .
    கோவிலில் புகுந்திருந்த தமிழ் மக்களை வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்யும்போது ஒரு மூன்று மாத குழந்தையை கோவிலின் சுவற்றில் அறைந்து கொன்றான் ஒரு முஸ்லிம் காடையன்.

    பல தமிழ் கிராமங்களில் முஸ்லிம் காடையர்கள் புகுந்து தமிழ் மக்களை வேட்டையாடியதில் பலர் கொல்லப்பட்டார்கள் . ஏனையவர்கள் காடுகளுக்குள் தப்பி ஒடி விட அந்த தமிழ் கிராமங்கள் முழுவதும் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்த ஊர்களில் இருந்த சைவக்கோவில்கள் யாவும் இன்று மாட்டிறைச்சி கடைகளாக மாற்றப்பட்டுள்ளன.

    இவர்கள் செய்த கொடூரங்கள் சிலவற்றை த்தான் இங்கு சொல்லியிருக்கிறேன்.பல கொடூரங்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.

    கிழக்கில் முஸ்லிம்களால் தமிழ் கொடூரமாக பாதிக்கப்பட்டபோது தான் புலிகள் யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லிம்களை வெளியேறுமாறு பணித்தார்கள் அப்போது யாழில் பதினோராயிரம் முஸ்லிம்கள்தான் இருந்தார்கள்.

    அவர்களை புலிகள் உயிரோடு வெளியேற்றினார்கள் . அதனால் இன்று அவர்கள் திரும்பி வந்து மீள் குடியேறக்கூடியதாகவிருக்கிறது.

    ஆனால் கிழக்கில் முஸ்லிம்கள் தமிழ் மக்களை உலகத்தை விட்டே அனுப்பி விட்டார்கள். அதனால்தான் தமிழ் கிராமங்கள் எல்லாம் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன.

    மேலும் முஸ்லிம் காடையர்கள் கிழக்கில் மேற்கொண்ட படுகொலைகளின்போது அப்பாவி தமிழ் பெண்கள் மேல் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள் எண்ணிலடங்காதது.

    ஆனால் வடக்கில் எந்த ஒரு புலிகளினதோ அல்லது தமிழ் மகனினதோ ஒரு சுண்டு விரல்தானும் முஸ்லிம் பெண்களின் முக்காட்டை கூட தொட்டது கிடையாது..

    இவ்வளவு கொடுமகளை முஸ்லிம்கள் தமிழ் மக்க்ளுக்கு இழைத்தும் இன்று வரை புலிகள்தான் முஸ்லிம்களை தாக்கினார்கள் கொன்றார்கள் என வெற்றிகரமாக பிரச்சாரப்படுத்தப்படுகிறது.

    அத்ற்கு காரணம் அந்தக்காலப்பகுதியில் இலங்கை இனவெறி அரசு செய்தி தணிக்கையினை அமல் படுத்தியிருந்ததுதான் காரணம்.
    இலங்கை அரசில் எப்போதும் பதவியை நக்கி கொண்டிருக்கிற முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை நன் கு பயன்படுத்தி கொண்டாரகள் .

    முஸ்லிம் ஊர்காவல் படையினரும் , காடையர்களும் தமிழ் மக்கள் மேல் மேற்கொண்ட படுகொலைகளை மறைத்து அதற்கு பதிலடியாக முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேல் புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களை , பிஉலிகள் அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்ததாக பிரச்சாரப்படுத்துவதில் வெற்றி பெற்றார்கள்.

    அதனால்தான் இன்றுவரை ஒரு பெரும் பொய் உண்மையாக வலம் வந்து கொன்டிருக்கிறது.

    உங்கலைப்போன்றவர்கள் இனிமேலும் இந்த பொய்களை சொல்லி ஊளையிட்டுக்கொண்டிருந்தால் நாமும் சும்மாயிருக்கபோவதில்லை.

    தமிழ் போராளிகளின் தலைவர் இந்து நம்பிக்கையாளராக இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம்.
    அது தமிழ் மக்களின் பிரச்சனை.
    உனக்கென்ன அதில் பிரச்சனை ?

    உனது முஸ்லிம் தலைவர்கள் இஸ்லாத்தின் இறைநம்பிக்கையாளர்களா இல்லையா என நாம் கவலைப்படுவதில்லை. அது எமக்கு தேவையுமில்லை.

    உனது எல்லைக்குள் நின்று கருத்து சொல்ல பழகி கொள்

  4. மதம் மாறுவது அவரவர் சொந்த விருப்பம், அதில் தலையிட எனக்கு விருப்பமில்லை.

    இந்து மதத்துக்குள் வர விரும்பும் அந்நிய நாட்டவர்களை எந்த சாதிக்குள் இணைத்துக் கொள்வது என்ற குழப்பம் உள்ளது போலவே, இஸ்லாமில் சேருவோர் எப்பிரிவில் சேர்வது என்ற குழப்பமும் உள்ளது.

    சுன்னாவிலா, சியாவிலா சூஃபியிலா இபாதியிலா அக்மதியாவிலா மெக்தாவியிலா. சுன்னா என்றால் எப்பள்ளியில் சேரச் சொல்லுவீர்கள், வகாபிய வழிமுறையா, ஹனாபியா, மாலிகி, ஷாஃபி, ஷலாஃபி எதில் சேரலாம். அல்லது சியாவில் உள்ள 12 பிரிவுகளில் ஒன்றிலா, சூஃபியில் உள்ள 12 பிரிவுகளில் ஒன்றிலா அல்லது இவை யாவும் சாராமல் ஆங்கொன்று ஈங்கொன்றாய் இருக்கும் சிறிய பிரிவுகளிலா… 🙂

    எல்லா மதங்களில் உள்ளது போலவே இஸ்லாமிலும் உட்கட்சிகளும் பூசல்களும் உள்ளனவே.

    கடந்த மூன்று ஆண்டுகளில் லட்சக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை அல்லாவிகளும் சுன்னாக்களும் சிரியாவில் கொன்றொழித்துள்ளார்கள், ஏன் தாங்களவர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.

    அதிலும் பெற்றோ டாலர் தேசங்கள் தமது அரசியல் நலனுக்காய் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை தம் பிரிவுக்குள் உள் மதமாற்றம் செய்தும், அமைதி வழியை பற்றிய சூபிக்களை அழிக்கும் போக்கினையும் செய்து வருவதோடு, மண் சார்ந்த கலாச்சாரங்களை துறக்கச் செய்து இறக்குமதி செய்யப்பட்ட புர்கா, குறுந்தாடி என பகட்டுத்தனமான மத அடையாளங்களினால் தம் ரத்த பந்தங்களான சொந்த தேசத்தவரோடு பிணக்காகி உரசல் போக்குகளும் வலுத்துவருகின்றதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிக்கு ஆள் சேர்பதை போல விளிம்புநிலை மக்களை பொருளாதாரம் கொண்டும், புகழ்பெற்றோரை வேறு வகையிலும் மதம்மாற்றி விளம்பரம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது வருந்த தக்கது. மத உள் மதமாற்றங்கள் தொடர்ந்து இந்து இஸ்லாம் கிறித்தவ பிரிவுகளில் நடத்தப்பட்டும் விள்ம்பரபடுத்தப்படுவது ஜனநாயகத்தை பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி பணநாயகம்.

    மத அரசியல் வியாபாரத்தில் இவரையும் கூட புரோக்கர்களாகவே கருதுகின்றேன். நன்றிகள்.

  5. இந்து மதத்தில் இருப்பது போன்ற ஜாதி அடிமைத்தனம் கிறிஸ்தவ மதத்திலும் இருக்கிறது. தலித் இந்துவுக்கும் தலித் கிருஸதவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.இஸ்லாத்தால் மட்டுமே இந்த இழிவை துடைக்க முடியும்.

    இஸ்லாத்தில் பிரிவுகள் இருப்பது உண்மைதான் ஆனால் அங்கே பள்ளன் என்ற பிரிவோ பறையன் என்ற பிரிவோ இல்லை.

Leave a Reply

%d bloggers like this: