காதல்: பகுத்தறிவு கலைஞர் டி.வியும் பக்திமான் கேப்டன் டி.வியும்

captain-TV1tv

காதலர் தினம் பற்றி 10 நிமிடம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்காக நேற்று (13-02-2014) பேசினேன். அது இரண்டு நிமிடங்களாக சுருக்கப்பட்டு இன்று காலை ஒளிபரப்பானது.

“காதலர் தினம் வர்த்தக தினமாக இருக்கிறது. காதலர் தினம் கொண்டாடப்பட்டப் பிறகுதான் காதலர்கள் அதிகமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.”

“தொழிலாளர் தினத்தை விட காதலர் தினத்திற்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழலை வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தியிருக்கிறது”

“காதலர் தினத்தை ஒழுக்கக்கேடு என்று சொல்கிற மத பழைமைவாதிகள் கள்ளக் காதல் கொண்டுகிற அளவிற்கு மோசமானவர்கள்” என்றேன். இது ஒளிபரப்பானது. இப்படி தெளிவாக அல்ல. குழப்பமாக.. காரணம் இடையில் நான் பேசிய பல செய்திகளை நீக்கியதால்.

நான் பேசியதில் நீக்கப்பட்ட முக்கியமான செய்திகள்,

“கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த பத்ரிநாத் தலைமை அரச்சர்கர் கேசவன் நம்பூதிரி, கருவறையை கரு உண்டாக்கும் அறையாக பயன்படுத்திய காஞ்சிபுரம் தேவநாத குருக்கள், கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் கைதான சங்கராச்சாரி இவர்களிடம் கேட்டால் அவர்களும் சொல்வார்கள் காதலர் தினம் ஒழுக்கக் கேடானது என்று”

“ஜாதி மத எதிர்ப்பு அரசியல்தான் காதலை வாழவைக்கும். அந்த வகையில் பிப்ரவரி 14 ஆம் தேதியை விட செப்டம்பர் 17 – ஏப்ரல் 14 இவைதான் காதலர்களுக்கான நாட்கள். அவை தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாட்கள். அவர்கள் பிறந்த நாட்களை கொண்டாடுவது என்பது அவர்களின் அரசியலை உயர்த்திப் பிடிப்பது. அதுதான் காதலர்களை பாதுகாக்கும்.”
இந்தப் பகுதிகள் ஒளிபரப்பாக வில்லை.

இதுபோலவே இதற்கு முன் சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் இடஓதுக்கிடூ பற்றிய கருத்துரையில் பார்ப்பனர்களின் இட ஒதுக்கீடு எதிர்ப்பு பற்றிய என்னுடைய கருத்துகள் நீக்கப்பட்டன.

நான் சொன்ன சில பொதுவான விசயங்களும், நீக்கப்பட்டு அது அவர்களின் கருத்தாக வாய்ஸ் ஓவரில் இடம் பெற்றது.

இந்து மதத்திற்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக சொன்னால்தான் கலைஞர் செய்திகளுக்கு பிடிக்கவில்லை என்பதைகூட விட்டுவிடுங்கள், பெரியார் – டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று சொன்னால்கூடவா அவர்களின் பார்ப்பன பார்வையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்?

இதுபோன்ற பிரச்சினையின் காரணமாகத்தான், சிலர் அவர்களின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது வேறு காரணம் சொல்லி தவிர்த்துவிடுகிறேன். ‘இந்த முறை அப்படி நேராது’ என்றதால் நம்பினேன். நேர்ந்தது.

இந்த விசயத்தில் பகுத்தறிவு கலைஞர் டி.வியோடு ஒப்பிட்டால் நம்ம பக்திமான் கேப்டன் டி.வியை புரட்சிகர தொலைக்காட்சியாகவே அறிவிக்கலாம்.

*

இன்று காலை face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

இளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்

5 thoughts on “காதல்: பகுத்தறிவு கலைஞர் டி.வியும் பக்திமான் கேப்டன் டி.வியும்

  1. face book ல் comments
    *
    Ganeshan Ramachandran · 13 mutual friends
    இனி வாய்ப்பு முழுமையாக நிராகரிக்கப்படலாம் என்ற சிந்தனையில்லாமல் உண்மையைப் பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள் தோழர். பெரியார் விதைத்தது வீண்போகவில்லை.
    2 hours ago · Unlike · 8

    வே மதிமாறன் திரு. Ganeshan Ramachandran நன்றி.
    2 hours ago · Like · 1

    பூ.ஆ.இளையரசன் பெரியார் · 124 mutual friends
    நான் பேசியதில் நீக்கப்பட்ட முக்கியமான செய்திகள்,
    “கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த பத்ரிநாத் தலைமை அரச்சர்கர் கேசவன் நம்பூதிரி, கருவறையை கரு உண்டாக்கும் அறையாக பயன்படுத்திய காஞ்சிபுரம் தேவநாத குருக்கள், கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் கைதான சங்கராச்சாரி இவர்களிடம் கேட்டால் அவர்களும் சொல்வார்கள் காதலர் தினம் ஒழுக்கக் கேடானது என்று”// அருமை தோழர்
    about an hour ago · Like · 1

    Victorship Victor naanum parthen iya makilchi..
    about an hour ago · Like

    Harinath Desuvel உன்னை பிழைக்க வைக்க இந்துமதமும், பார்பனர்களும் நிச்சயம் பிறந்துகொண்டே இருப்பார்கள்.

    நீங்கள் கூறுவது உங்கள் பெரியார் இயக்கத்திலும், அம்பேத்கர் இயக்கத்திலும் இல்லையா?

    மற்றவர்கள் மேல் குற்றதை சுமத்திவிட்டு நீங்கள் யோகியமானவர்கள்போல் கருத்துரைத்தால் நீக்காமல் என்ன செய்வார்கள்.

    பெரியார், அம்பேத்கர் இயக்கவாதிகள் அறைவேக்காட்டுத்தனமானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்களே.

    வாழ்க உம் இயக்க கொள்கைகள் ………. சமுதாயம் சீரழிய
    about an hour ago · Like

    திருவள்ளுவன் இலக்குவனார் தங்கள் நோக்கத்திற்கோ பணப்பயனுக்கோ எதிரான கருத்துகளை நீக்கி ஒளி பரப்பும் உரிமை தொலைக்காட்சிக்கு உரியது. சரி! சரி! உங்களை இனி அழைக்கவில்லை போதுமா?
    about an hour ago · Like

    சிவ. சுந்தரசாமி · 6 mutual friends
    அருமையான பதிவு. மழைத்துளி சாக்கடையில் விழுந்துவிட்டதால் மழை நாறப்போவது இல்லை. நாங்கள் உங்கள் பக்கம்..
    about an hour ago · Like

    Senthil VK “ஜாதி மத எதிர்ப்பு அரசியல்தான் காதலை வாழவைக்கும். அந்த வகையில் பிப்ரவரி 14 விட செப்டம்பர் 17 – ஏப்ரல் 14 இவைதான் காதலர்களுக்கான நாட்கள். அவை தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாட்கள். அவர்கள் பிறந்த நாட்களை கொண்டாடுவது என்பது அவர்களின் அரசியலை உயர்த்திப் பிடிப்பது. அதுதான் காதலர்களை பாதுகாக்கும்.” – சிறப்பு…!
    about an hour ago · Like

    கரு. திருநாவுக்கரசு · 16 mutual friends
    பாஸ் அனைத்தையும் ஒளிபரப்பினால் சுவார்ஸ்யம் இருக்காது
    about an hour ago · Like

    K.s. Ram · 6 mutual friends
    பெரியார் என்ற வார்த்தையை கூட அழுத்தி உச்சரிக்க பயப்படுகிறது-கலைஞர் டிவி மக்கள் தெளிவு பெறக்கூடாது என்பது அதன் நோக்கம் போல
    about an hour ago · Like · 1

    வே மதிமாறன் கரு. திருநாவுக்கரசு //பாஸ் அனைத்தையும் ஒளிபரப்பினால் சுவார்ஸ்யம் இருக்காது.//
    நேரத்திற்கு ஏற்றார்போல் சுருக்குவது தவறில்லை. எதை சுருக்குகிறார்கள் என்பது முக்கியம்.
    அதுபோல் இந்து மத எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு என்று பேசாதவர்களுக்கும்தான் அதிகம் நேரம் ஒதுக்குகிறார்கள். அவர்களையே அடிக்கடி அழைக்கிறார்கள்.
    39 minutes ago · Like

    ஈரோடு தம்பி Karunaa family and Maaran family are Super grade paappaan family. The converted pappaans and cross-breed paappans are very dangerous in Tamil Nadu.
    27 minutes ago · Like

    ஈரோடு தம்பி You still believe that Karunaa kumbal follow Periyaarism ??
    26 minutes ago · Like
    Ez Hil கருத்து சொல்வது எல்லோருடைய உரிமை அதில் காசு பார்ப்பது ஊடகத்தின் தன்மை எதற்கு இந்த மானம் கெட்ட பொழப்பு கவலை படாதே தோழர்

  2. சரி உஙகள் எடிட்டிங்க் செய்யபடாத முழு பேச்சை வாங்கி அதை யூ டியூபில் போட்டு இங்கே லிங்க் கொடுங்கள்…

    இனி கூப்பிடால் பேசமாட்டேன் என்பதற்கு பதில் என் பேச்சு எனக்கு முழுதாக வேண்டும் என்று கேட்டு பதிவிட்டுவிட்டால் வேலை முடிந்தது.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading