‘மோடி பிரதமரானால் தனி ஈழ அமையும்’

a-supporter-holds-up-a-mask-of-modi-during
வேறு வழியே இல்லை; இவர் ஒருவர்தான் இந்தியாவிற்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் தீர்வு.
*

ஈழத் தமிழர்களின் படுகொலைகள் பெரிய அளவில் தொடங்கிய கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, வைகோ உட்பட இதே ஈழ ஆதரவாளர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, அதன் தலைவர் ஜெயலலிதாவை, ‘அதிமுக வெற்றிபெற்றால், தனி ஈழம் அமையும்’ என்று பேச வைத்தார்கள்.
ஆனாலும் அந்தத் தேர்தலில் அதிமுக படுதோல்லி அடைந்தது.

அதிமுகவை வைகோ, நெடுமாறன் போன்ற ஈழ ஆதரவாளர்கள் ஆதரிப்பதற்கான ஒரு காரணமாக மட்டுமே ஜெயலலிதாவின் அந்த அறிவிப்பு இருந்தது என்ற உண்மை பின்னாட்களில் அவர்கள் நடத்திய அரசியலில் அம்பலமானது.

அதுபோல், இந்த தேர்தலில், ‘பா.ஜ.க வெற்றி பெற்றால், தனி ஈழம் அமைப்போம்’ என்று மோடியை பேச வைக்கலாம் வைகோ.
ஏனென்றால் அவருக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடியை தனக்கான ஆதரவாக மாற்ற, தன்னை நியாயப்படுத்திக் கொள்ள, மோடிக்கு ஆதரவாக ஓட்டு கேட்க, ஈழ ஆதரவாளர்களை மோடிக்கு ஆதரவாக தன்னுடன் இணைத்துக் கொள்ள வைகோவிற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.

பொய்தானே… அதுதான் மோடிக்கு நல்லா வருமே..

விரைவில் எதிர்பார்க்கலாம், தமிழ் நாட்டுக்கும் இளிச்சவாய் தமிழனுக்கென்றும் தனியாக தயாரிக்கப்பட்ட, விசேசமான வாக்குறுதி
‘மோடி பிரதமரானால் தனி ஈழ அமையும்’

அப்புறம் என்ன அரசியல் ‘தெளிவு’ள்ள நாமளும் மோடியை ஆதரிக்க வேண்டியதுதான்.
ஆனால், அரசியல் தெளிவு ‘இல்லாத’ தமிழ் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்.

*

பிப்ரவரி 13 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

9 thoughts on “‘மோடி பிரதமரானால் தனி ஈழ அமையும்’

  1. இதையும் எதிர்ப்பார்க்கலாம் !எதை சொன்னாலும் நம்புறவங்க இருக்கிறார்களே !

  2. வைகோ, நெடுமாறன் வகையறாக்களுக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவேண்டியத் தேவை. பிரபாகரன் ஒரு சமயம் இவர்களை யாழ்பாணத்திற்கு கூப்பிட்டு சாப்பாடுபோட்டு அனுப்பினார். பிரபாகரன், தான் சாப்பிடுகிற உடும்பு கறியெல்லாம் போட்டு அசத்திட்டார்னு நினைக்கிறேன். புலிகளின் பிரச்சார வீடியோக்களில் வரும் சாகசங்களையெல்லாம் காட்டி சீன்காட்டி யிருப்பார் போலும். (ஒரு கார் டயரினை எரித்து ரெண்டு புலிகளை பல்டி அடிக்க வைப்பது போன்ற சாகசங்கள்). சிறையிலிருந்தபோது வைகோ அவர்களுக்கு அந்த நினைவுதான் பொழுதுபோக்கு. அந்த நினைவுகளுடனே “புலியின் உறுமல்” எனும் வானொலியைக் கேட்டுக் கொண்டிருந்ததாக வைகோ ஒரு சமயம் கூறினார்.

    மோடி ஆட்சிக்கு வந்தால், “புலியின் உறுமல்” வானொலி மீண்டும் ஆரம்பிக்கும் என்று வேண்டுமானால் கோரி நியாயமாக ஓட்டுக் கேட்கலாம்.

  3. தயவு செய்து புலிகளைப்பற்றி அனாவசியமாகப் பேசாதீர்கள். அவர்களைப்பற்றிப்பேச சில தகுதிகள் வேண்டும்.

  4. ஒரு ப்ளாக் ஆரம்பித்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அதற்கு மரியாதை கிடைக்க வேண்டும். அது முக்கியம்.

  5. http://manithaabimaani.blogspot.com/2014/02/blog-post_27.html
    தமிழர் நலம் – புதைத்து விடுவோம் – பாஜக

    தமிழர் நலம் குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தி ஹிந்து இதழிற்கு அளித்துள்ள பேட்டியை பாருங்கள். தமிழ் உணர்வு, இன உணர்வு என்று சொல்லிக்கொண்டு பாஜகவிற்கு கொடி பிடிப்பவர்களின் கூடுதல் கவனத்திற்கு இந்த பதிவு. மற்றவர்கள் இந்த நகைச்சுவையாளரின் பேட்டியை படித்து வயிறு குலுங்க சிரிக்கலாம்.

    The Hindu: இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது, சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?

    Rajnath Singh: நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என் நினைவுக்கு வரவில்லை!

    (ஆஹா என்னவொரு பதில்!!! ஒரேடியாக புதைத்துவிடுவது நல்லதாம். பாஜகவிற்கு ஆதரவளிக்கும் தமிழின உணர்வாளர்களே சொல்லுங்க எல்லாத்தையும் புதைத்துவிட்டு போய் விடுவோமா?…இன்று இதை சொன்னவர்கள், ஒரு வேலை ஆட்சிக்கு வந்து இனப்படுகொலை எல்லாம் பழைய சம்பவம், மறந்துவிடுவோம் என்று சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?..Note this point… தங்களின் முந்தைய அரசு என்ன முடிவு எடுத்ததென்று கட்சியின் தலைவரான இவருக்கே தெரியாதாம்…அட்ரா சக்க…அட்ரா சக்க…)

    The Hindu: தமிழர்களின் படுகொலையில் மனித உரிமைகளை மீறிய ராஜபக்‌ஷ மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இதை உங்கள் தலைமை வலியுறுத்தாதது ஏன்?

    Rajnath Singh: நோ கமென்ட்ஸ்!

    (சூப்பரப்பு…நீங்க நோ கமென்ட்ஸ்னு சொல்லிருக்கலாம். ஆனா அதுக்கு என்ன அர்த்தம்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. ராஜபக்சே மேல அவ்ளோ பாசம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்)

    The Hindu: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலையைத் தமிழக பா.ஜ.க. வரவேற்கிறது, தேசியத் தலைமையோ எதிர்க்கிறது. ஏன்? பல்வேறு விஷயங்களில் மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் வேறுபட்டுப் பேசுவது ஏன்?

    Rajnath Singh: எங்களது ஒரு தேசிய கட்சி. இதன் மாநிலம் மற்றும் தலைமைக்கு இடையே இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நீங்கள் கூறுவது எனக்குப் புதிய தகவலாக உள்ளது. இதுகுறித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பேசுவோம். இனி இதுபோன்ற தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

    (இது உலக மகா நடிப்பு சார்… ஒரு நிருபர் சொல்லி தான் உங்க மாநில கிளைல என்ன நடக்குதுன்னு தெரிந்துக்கொள்கின்ற நிலையில் இருக்கீங்க…இதுல நீங்க அந்த கட்சிக்கு தலைவர் வேற…சபாஷ். சரி விடுங்க, இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாதுல்ல, அப்ப சீக்கிரமே முடிவு பண்ணி யார் சொல்றது சரின்னு அறிக்கை விடுங்க)

    The Hindu: உங்கள் அணியில் இணைந்துள்ள வைகோ, சேர இருக்கும் பா.ம.க-வும் கூட வரவேற்கிறார்களே?

    Rajnath Singh: (லேசான புன்னகையுடன்) இது விஷயமாக அவர்களிடம் பேசுவோம்.

    (என்னத்த பேச போறீங்க…அடங்கப்பா ஆள விடுங்க)..

    இப்படி ஒரு பொருந்தா கூட்டணி உங்களுக்கு தேவையா வை.கோ மற்றும் தமிழின உணர்வாளர்களே? சொன்னது சு.சாமி போன்ற ஆட்கள் அல்ல, பாஜகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர். பாஜக ஆட்சி கட்டில் ஏறினால் தமிழினத்திற்கு விடிவு பிறக்கும் என்று சிலர் கூறுவதை பார்க்கும் போது over to Rajnath Singh and BPJ’s policies என்பதை தவிர வேறு எதுவும் கூற தோன்றவில்லை.

    நன்றி: தி ஹிந்து
    கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading