‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..

ar5337vijayan

ஈழத் தமிழர் பிரச்சினையில் கலைஞர் துரோகம் செய்தார் என்று அவரை கடுமையாக இப்போதும் விமர்சிக்கிற பெரியார் இயக்கங்கள்;

இன்று வைகோ பா.ஜ.க வோடு கூட்டணி வைத்ததை கண்டிக்காமல் இருப்பது ஏன்? கலைஞர் பா.ஜ.க வோடு கூட்டணி வைத்திருந்தால் இப்படித்தான் மவுனம் காப்பார்களா?

ஈழப் பிரச்சினைக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை இந்து மத எதிர்ப்புக்கு கொடுக்காமல் தொடர்ந்து வைகோ விவகாரத்தில் மவுனம் காத்தால், வரும் காலங்களில் எச். ராஜா இல்ல.. வைகோ வே பெரியாரை இழிவாதான் பேசுவார்.

பெரியார் இயக்கங்களின் இந்த மவுனம் தொடர்ந்து நீடிப்பதை பார்த்தால், ‘பா.ஜ.க நிற்கிற இடங்களில் பா.ஜ.க வை எதிர்ப்பது, ம.தி.மு.க நிற்கிற இடங்களில் ம.தி.மு.க வை ஆதரிப்பது’ என்று முடிவு செய்து விடுவார்களோ என்று ‘கலக்கமாக’ இருக்கிறது.

அப்படி செய்தால்..?
என்ன சொல்றது.. இயக்குநர் மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் இறுதிக் காட்சியில் நடிகர் விஜயன் தன் வாழ்க்கையின் கடைசி நேரத்தில் பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது:

“நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க… ஆனா இன்னிக்கி உங்க எல்லாரையும் நான் என்னப் போல மாத்திட்டேன்”

*

பிப்ரவரி 12 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!

‘மோடி பிரதமரானால் தனி ஈழ அமையும்’

பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

இந்திய ராஜபக்சே! வருங்கால பிரதமரா தமிழினக் காவலரா?

13 thoughts on “‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..

  1. கலைஞர் இதற்க்கு முன்னால் BJPயோடு சேரவில்லையா ?இனிமேல் சேரமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது ?

  2. சேருவாரா மாட்டாராங்கறதில்லை கேள்வி. கலைஞர் சேர்ந்தா பிறபோக்கு வை.கோ. சேர்ந்தா முற்போக்குங்கற நாதாரித்தனம் தான் இங்கே கேள்விக்கு உட்படுத்த வேண்டியது

  3. “Indhu madha edirppu” this is the real important issue today. Those who are saying they are hindus, should be opposed. To achieve your goal, shariya law implementation is the only solution.

  4. கலைஞர் இதற்க்கு முன்னால் BJPயோடு சேரவில்லையா ?… அப்போது உங்கள் கருத்து என்னவாக இருந்தது நண்பரே?

Leave a Reply

%d bloggers like this: