பாரதிராஜாவின் இனவாதத்திற்கு கேரள அரசின் பரிசு
‘தமிழ் சினிமாவில், கன்னடர்கள், மலையாளிகள் ஆதிக்கம்… தமிழகத்தில் திருமலை நாயக்கர் வழிவந்த தெலுங்கர்களின் ஆதிக்கம்..
திராவிட இயக்க அரசியல் தமிழனுக்கு எதிரானது… பெரியார் சரியில்லை..
ஏன் தமிழனுக்குத் தலைமை தாங்க தமிழனே கிடைக்கிலையா.. தமிழனுக்கு அந்தத் தகுதியில்லையா?’
என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் தீவிர இனவாதம் பேசிய இயக்குநர் பாரதிராஜா வெட்கப்படும்படியாக அவரை,
கேரள ‘காங்கிரஸ்’ அரசு, திரைப்பட விருது கமிட்டி தலைவராக நியமித்துள்ளது.
2013-ம் ஆண்டுக்கான சிறந்த மலையாளப் படம், கலைஞர்களைத் தேர்ந்தெடுக்க 7 பேர் அடங்கிய விருது கமிட்டிக்கு தலைவராக பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை தமிழனுக்குக் கிடைத்த பெருமை என்ற பாணியில்,
பாராதிராஜாவும் ‘பெருந்தன்மை’யோடு ஏற்றுக் கொண்டுள்ளார்.
”சிறந்த மலையாளப் படங்களைத் தேர்ந்தேடுக்கும் கமிட்டிக்குத் தலைவராக உங்களுக்கு ஒரு மலையாளிகூட கிடைக்கிலையா? ஒரு மலையாளப் படத்தைக் கூட இயக்காத தமிழன் பாரதிராஜாதான் மலையாளப் படங்களை தேர்ந்தெடுக்கும் குழுவுக்குத் தலைவரா? இது என்ன கேரளாவா? தமிழ்நாடா?“
என்று மலையாள இனவாதிகள் யாராவது பேசியிருப்பார்களா?
அப்படி பேசினால் அது சரியா? தப்பா?
தொடர்புடையவை:
இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!
தமிழ் முகங்கள் Set property போல்தான் பாரதிராஜாவிற்கு…
பாரதிராஜா: கலைஞன் தேவராகிய கதைச் சுருக்கம்
பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..
கலைஞர் + பாரதிராஜா + பாக்கியராஜ் = `தனம்`- தமிழ் சினிமாவின் துணிச்சல்
இனிமேல் பாரதிராஜா இனவாதம் பேச மாட்டார். கேரளா புகழ் பாடுவார்
.///அப்படி பேசினால் அது சரியா? தப்பா?///
சரிதான்…இப்ப அதுக்கென்னவாம்..?
//என்று மலையாள இனவாதிகள் யாராவது பேசியிருப்பார்களா?
அப்படி பேசினால் அது சரியா? தப்பா?//
தப்பல்ல, அப்படியிருந்தும், பாரதிராஜாவுக்கு மலையாளிகள் தலைமைப் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள் என்றால், பாரதிராஜாவைப் போன்ற தகுதியுள்ளவர்கள், கேரளாவில் கிடையாது, அத்துடன் பாரதிராஜாவைத் தலைவராக்கினால், அந்த நிகழ்ச்சி மேலும் பிரபலமடையும் என்று மலையாளிகளுக்குத் தெரியும் என்பது தான் கருத்தாகும்.
உண்மையைப் பேசினால் அல்லது அதைப் பற்றி எழுதினால் மற்றவர்கள் பரிசும் தந்து பாராட்டவும் செய்யமாட்டார்கள். அதனால் பாரதிராஜா போல அப்படி அப்பட்டமாக உண்மையைப் பேசக் கூடாது, அவர் பேசும் உண்மைகளை மனிதாபிமானம் என்ற பெயரில் போட்டு மழுப்பினால் தான் மற்றவர்கள் பாராட்டுவார்கள், பரிசும் தருவார்கள். ஆனால், பாரதிராஜா அவர்கள், மலையாளிகளின் ஆதிக்கம் பற்றிய உண்மையைப் பேசியும், கேரளாக்காரன் பரிசு கொடுத்து விட்டான். மலையாளிகளைப் போன்ற பெருந்தன்மையுள்ளவர்கள் கிடையாது. அதனால், யாரும் இனிமேலாவது மலையாளிகளின் ஆதிக்கம் என்ற உண்மையைப் பேசக் கூடாது, அப்படிப் பேசினால், பரிசும் பாராட்டும் கிடைக்காது, என்ற கருத்தைத் தான் திருவாளர் மணிமாறன் சொல்ல வருகிறார் போல் தெரிகிறது. அதாவது பரிசு கிடைக்க வேண்டுமானால், அப்பட்டமான உண்மைகளை, தமிழர்களுக்காதரவான கருத்துக்களைத் தெரிவிக்காமல் அடக்கி வாசிக்க வேண்டும். 🙂
என்ன சொல்ல வரீங்க? ஒண்ணுமே புரியல…