Flash News
பட்ஜெட் | பயந்து ஓடிய செய்தி சேனல்கள்
பாரதிதாசனும் மோடிதாசனும்
கம்ப்யூட்டரில் ஜோதிடம் போல்தான் சினிமா வந்தபோதும் புராணக்கதை
நவீன தமிழ் கலைஞருடையது
இஸ்லாமிய வெறுப்பும் திமுக எதிர்ப்பும்
#எங்க வீட்டுப் பிள்ளை #பாசமலர் #உத்தமபுத்திரன்#ராஜாதிராஜ + பிச்சைக்காரன்
தாத்தா
#சங்கராச்சாரி #ஆதினம் #அர்ச்சகர்
திராவிடத் தலைவரின் இந்தி பள்ளி
காலாவதியானது திராவிடமல்ல அண்ணா ‘திராவிட’ முன்னேற்றக் கழகம்
கெட்டவன்தான் குடிப்பான்
Monday, June 05, 2023
தோழர் மதிமாறன்,
சாதிக்கெதிராக பெரியாரையும், அம்பேத்கரையும் நிறுத்துவதில் தவறில்லை. அம்பேத்கரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் பார்ப்பனியத்திற்கெதிரான போராட்டக் களத்தில் நிற்கும் அனைவருக்கும் ஒரு ஆயுதம் என்பதையும் மறுக்க முடியாது.
ஆனால், அம்பேத்கரை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் பல் தளங்களிலும் இருக்கிறார்கள். அறிவுத்தளத்தில் அவர்கள் உருவாக்கிய கோட்பாடு தான் “அம்பேத்கரியம்” (Ambedkarism) என்பது. அவர்கள் அம்பேத்கரை கடவுள் போல் வழிபடுபவர்கள். அம்பேத்கரின் மீதான் விமர்சனங்களை “தலித் விரோதம் என்று முத்திரை குத்துபவர்கள். இந்தக் கும்பல் தான் இப்போது தலித் பில்லியனர்களாக வளர்ந்து வந்துள்ளது. இவர்கள் அம்பேத்கரின் பெயரால் அப்பாவி தலித் மக்களைச் சுரண்டுபவர்கள். இவர்களது எண்ணம் சாதி ஒழிப்பல்ல; மாறாக சாதியின் பெயரால் சலுகைகளைப் பெறுவது. தலித் அடையாள அரசியலின் காரண கர்த்தாக்களாக விளங்கும் இவர்கள்தான் “அம்பேத்கரியம்” குறித்து பேசுகிறார்கள். விவரம் தெரியாத அப்பாவி தலித் இளைஞர்கள் பலர் தலித் அடையாள அரசியலுக்குப் பலியாகி இருக்கிறார்கள்; இன்னும் பலியாகிறார்கள். இந்நிலைமை தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களில் மிகவும் மோசமாக உள்ளது.
நான் இங்கே கூற வருவது என்னவென்றால் “அம்பேக்கரியம்” (Ambedkarism) என்ற ஒன்று இருக்கிறதா? இருக்கிறதென்றால், அது சாதி ஒழிப்புக்கு எப்படிப் பயன்படும்? “அம்பேத்கரியல் ஆய்வு” என்று போட்டிருக்கிறது. அம்பேத்கரியம் என்ற ஒரு ஆய்வு முறை இருக்கிறதா?
இதுபற்றிய விவாதங்களில், மகாராட்டிர அரசியல் விமர்சகர், ஆய்வாளர் தோழர்.ஆனந்த் தெல்டும்டே பல கருத்துக்களைக் கூறுகிறார்.
அவர் கூறுவது என்னவென்றால், அம்பேத்கர், தனது ஆசிரியரும், அமெரிக்க முற்போக்கு ஜனநாயகவாதியுமான ஜான் டூயீயின் கொள்கைகளால் கவரப்பட்டவர். அவரின் கொளைகை முற்போக்கு நடைமுறைத்துவம் (Progressive Pragmatism). அவர் மார்க்சியம் போன்ற எந்தவொரு பெரும் தத்துவத்தையும் (Grand Theory), ஏற்றுக் கொண்டவரில்லை.
அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு நடைமுறைவாதியாகத் () தான் இருந்தாரே தவிர ஒரு தத்துவத்தைப் பின்பற்றியவரில்லை. ஆனந்த் தெல்டும்டேயின் கட்டுரையிலிருந்து சில வரிகள்:
“Thus not merely expediency but even in theory Ambedkar does not leave behind any systematic body of thought that can be termed Ambedkarism, simply because he did not believe in one. He does leave for us his vision, his goals and a role model to follow.”
Ambedkarites against Ambedkar
http://kractivist.wordpress.com/2013/05/10/ambedkarites-against-ambedkar/
“If one takes an objective look at this brief life sketch, Babsaheb Ambedkar kept changing his strategies and tactics as per the situations with a sole focus on the emancipation of Dalits. One does not find any enduring theory or a theoretical postulate that he represented, except for pragmatism. He could be an ideal, a role model, for his unstinted commitment, iconoclastic attitude, intellectual honesty, hard work, integrity and sincerity but possibly cannot be extrapolated to face the future. If he had been always evolving and changing all through his life, how could one possibly extend him into the future?”
To the Self-Obsessed Marxists and the Pseudo Ambedkarites
http://sanhati.com/excerpted/6366/
அம்பேத்கர் கடைசியில் பின்பற்றத்தக்க தத்துவம் எதையும் விட்டுச் செல்லவில்லை, அவர் விட்டுச்சென்றதெல்லாம் அவரின் உயரிய குறிக்கோள், விடா முயற்சி மற்றும் பின்பற்றத்தக்க நேர்மையான மனிதராகத் தான் இருந்துள்ளார். அவர் பின்பற்றிய வழிமுறைகளிலிருந்து “அம்பேத்கரியம்” என்று கூறத்தக்க எந்த ஒரு முறைப்படுத்தப் பட்ட தத்துவமும் இல்லை. ஆகவே அவர் பின்பற்றிய வழிமுறைகளை எதிர்காலப் பிரச்சினைகளை எதிர் கொள்ளப் பயன்படுத்த முடியாது.
இக்கட்டுரையையும் படிக்க: Crisis Of Ambedkarites And Future Challenges
http://www.countercurrents.org/teltumbde220411.htm
ஆகவே, “அம்பேத்கரியல் பார்வை”, “அம்பேத்கரிய ஆய்வு” என்று எழுவது சரியானதாக இருக்குமா?
இதை அம்பேத்கரை நிராகரிப்பதற்காகக் கூறவில்லை. அரசியல், தத்துவ ரீதியில் விசயங்களைப் புரிந்து கொள்ளத்தான் கூறுகிறேன்.
தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். இது பற்றி ஆறிந்தவர்களையும் எதிர்வினையாற்ற அழைக்கிறேன்.
ந்ன்றி!
தோழமையுடன்,
பகத்.
தலித்தியம் என்பதற்கும் டாக்டர். அம்பேத்கர் தத்துவங்களுக்கும் சம்பந்தமில்லை. இன்னும் சரியாக சொன்னால், டாக்டர் அம்பேத்கர் என்ன சொன்னாரோ அதற்கு நேர் எதிராகதான் தலித்தியம் இருக்கிறது.
அம்பேத்கரோடு தலித்தியம் என்று முடிச்சு போடுவதே மோசடி.
டாக்டர் அம்பேத்கரை பற்றி தெரிந்து கொண்டு அவரை விமர்சனத்திற்கு உட்படுத்துங்கள்.
இந்து மதம் பார்ப்பனிய தத்துவங்களின் தந்திரம் ஜாதியின் தோற்றம் அதன் செயல் அதன் நுட்பங்களை அம்பலப்படுத்தவேண்டுமென்றால் அம்பேத்கர் – பெரியார் இவர்களின் நுட்பமான விமர்சனங்களின் மூலமாகவே அதை செய்ய முடியும்.
அதை அம்பேத்கரியம் பெரியாரியம் என்று அழைப்பதில் உங்களுக்கு என்ன நஷ்டம்? அதனால் சமூகத்தில் என்ன தீமை ஏற்படப்போகிறது?
அம்பேத்கரை படிக்கமாலேயே உங்களின் இந்து மத எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு இருக்குமானால் அது அறியாமையாகத்தான் இருக்கும். அப்படி இருக்க அம்பேத்கரை பற்றி தெரிந்து கொள்ளமாலேயே அவர் குறித்த விமர்சனங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?
தோழர்,
நான் “தலித்தியம்” என்ற வார்த்தையை எங்குமே பயன்படுத்தவில்லை.
நான் மேலே கூறியிருக்கும் கருத்துக்கள், அம்பேத்கரியம் பற்றிய என்னுடைய கருத்துக்கள் அல்ல. மார்க்சியம், அம்பேத்கர் மற்றும் சாதி ஒழிப்பு பற்றி பல வருடங்களாகப் பேசியும், எழுதியும், போராடியும் வருபவரான ஆனந்த் தெல்டும்டே என்பவரால் கூறப்பட்ட கருத்துக்கள் அவை.
மேலும் நான் இவற்றைக் கூறுவது அம்பேத்கரை எதிர் நிலையில் வைத்தோ, அம்பேத்கரை நிராகரிப்பதற்காகவோ கூறவில்லை என்பதைத் தெளிவாக விளக்கி விடுகிறேன். அம்பேத்கரியம் பற்றி மேற்கூறிய கருத்தைச் சொன்ன ஆனந்த் தெல்டும்டேயின் நோக்கமும் அம்பேத்கரை நிராகரிப்பதல்ல. மாறாக சாதி ஒழிப்புக்கு என்ன வழி என்பதைக் குறித்தும், தற்போதைய ‘அம்பேத்கரிய’ அமைப்புகள் அம்பேத்கரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் தான் அவர் அக்கட்டுரைகளில் எழுதியுள்ளார்.
நான் கேட்கும் கேள்வி:
ஆனந்த் தெல்டும்டே “அம்பேத்கரியம்” என்ற முறைப்படுத்தப்பட்ட எந்த ஒரு தத்துவமும் இல்லை என்று கூறுகிறார்.
அவரது கட்டுரையிலிருந்து:
“If one takes an objective look at this brief life sketch, Babsaheb Ambedkar kept changing his strategies and tactics as per the situations with a sole focus on the emancipation of Dalits. One does not find any enduring theory or a theoretical postulate that he represented, except for pragmatism. He could be an ideal, a role model, for his unstinted commitment, iconoclastic attitude, intellectual honesty, hard work, integrity and sincerity but possibly cannot be extrapolated to face the future. If he had been always evolving and changing all through his life, how could one possibly extend him into the future?
It is in this studied sense that I have asserted that there cannot be Ambedkarism, which, in any case, is only casually spoken of among a section of scholars and sentimentally celebrated by Ambedkarite Dalits”
கட்டுரைக்கான இணைப்பு: http://sanhati.com/excerpted/6366/
இரண்டாவது பாராவை கவனியுங்கள். “அம்பேத்கரின் மீது பற்றுள்ள சில தலித் அறிவுஜீவிகள் தான் “அம்பேத்கரியம்” என்ற வார்த்தையைப் ப்யன்படுத்துகிறார்கள். ஆனால் “அம்பேத்கரியம்” என்ற ஒரு தத்துவம் உண்மையில் இல்லை” என்று கூறுகிறார்.
ஏன் “அம்பேத்கரியம்” ஒரு த்தத்துவமாக இல்லை என்பதை நான் என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் அளித்த மூன்று இணைப்பில் உள்ள கட்டுரைகளிலும் தெல்டும்டே விரிவாக விளக்குகிறார்..
தெல்டும்டேயின் இந்தப் பார்வை பற்றிய உங்கள் கருத்தென்ன? என்பதுதான் என் கேள்வியின் சாரம். இந்தப் புரிதலின் அடிப்படையில் தான் “அம்பேத்கரியல் பார்வை”, “அம்பேத்கரியல் ஆய்வு” என்று எழுதுவது சரியாக இருக்குமா? என்று கேட்டேன்.
//அம்பேத்கரின் மீதான் விமர்சனங்களை “தலித் விரோதம் என்று முத்திரை குத்துபவர்கள். இந்தக் கும்பல் தான் இப்போது தலித் பில்லியனர்களாக வளர்ந்து வந்துள்ளது. இவர்கள் அம்பேத்கரின் பெயரால் அப்பாவி தலித் மக்களைச் சுரண்டுபவர்கள். இவர்களது எண்ணம் சாதி ஒழிப்பல்ல; //
,இவர்களோடு அம்பேத்கரை ஒப்பிட்டு பேசுவது முடிவுக்கு வருவதும் என்ன நியாயம்? இதைத்தான் மோசடி என்று குறிப்பிட்டேன்.
டாக்டர் அம்பேத்கரை அம்பேத்கர் வழியில்தான் புரிந்திருக்கிறேன். அதை நான் அம்பேத்கரியம் என்று குறிப்பிடுகிறேன்.. அதை அந்த பின்னூட்டததில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
(ஜாதியின் தோற்றம் அதன் செயல் அதன் நுட்பங்களை அம்பலப்படுத்தவேண்டுமென்றால் அம்பேத்கர் – பெரியார் இவர்களின் நுட்பமான விமர்சனங்களின் மூலமாகவே அதை செய்ய முடியும்.
அதை அம்பேத்கரியம் பெரியாரியம் என்று அழைப்பதில் உங்களுக்கு என்ன நஷ்டம்? அதனால் சமூகத்தில் என்ன தீமை ஏற்படப்போகிறது?)
மற்ற விசயங்களை குறித்தும் மற்றத் தலைவர்களின் எழுத்துக்களைக் குறித்தும் அவ்வளவு ஏன்..? நவீன இலக்கியவாதிகளின் கழிசடை இலக்கியங்கள் குறித்தும் நேரடியாக படித்து தெரிந்து கொண்டு ஆதரிக்கிற விமர்சிக்கிற பலர், டாக்டர் அம்பேத்கரை மட்டும் அப்படி தெரிந்து கொள்ள விரும்புவதில்லை என்பது மட்டுமல்ல, தெரிந்து கொள்ளாமலேயே விமர்சன நிலைக்கே வந்துவிடுகிறார்கள். இதுவே பார்ப்பனிய இந்து மனோபாவம்தான்.
ஆனந்த் தெல்டும்டே கருத்து இருக்கட்டும், டாக்டர் அம்பேத்கர் பற்றிய உங்கள் கருத்தென்ன?
// இவர்களோடு அம்பேத்கரை ஒப்பிட்டு பேசுவது முடிவுக்கு வருவதும் என்ன நியாயம்? இதைத்தான் மோசடி என்று குறிப்பிட்டேன்.//
தோழர், “அம்பேத்கரியம்” பேசும் பிழைப்புவாதிகளை நான் அம்பேத்கருடன் இணைத்துப் பேசவில்லை. “அம்பேத்கரியம்” என்ற பதத்தை அப்பிழைப்புவாதிகள்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் கூறினேன்.
// (ஜாதியின் தோற்றம் அதன் செயல் அதன் நுட்பங்களை அம்பலப்படுத்தவேண்டுமென்றால் அம்பேத்கர் – பெரியார் இவர்களின் நுட்பமான விமர்சனங்களின் மூலமாகவே அதை செய்ய முடியும்.
அதை அம்பேத்கரியம் பெரியாரியம் என்று அழைப்பதில் உங்களுக்கு என்ன நஷ்டம்? அதனால் சமூகத்தில் என்ன தீமை ஏற்படப்போகிறது?)//
இன்றை சூழலில், அம்பேத்கரின் தேவையை நான் மறுத்ததாக நீங்களே கற்பனை செய்து கொள்ள வேண்டாம் தோழரே. அம்பேத்கரியம் என்று பயன்படுத்துவதால் நன்மை, தீமை ஏற்படுகிறது என்றெல்லாம் நான் கூறவில்லை. ஒரு புரிதலுக்குத்தான் அது குறித்துக் கேட்டேன்.
// மற்ற விசயங்களை குறித்தும் மற்றத் தலைவர்களின் எழுத்துக்களைக் குறித்தும் அவ்வளவு ஏன்..? நவீன இலக்கியவாதிகளின் கழிசடை இலக்கியங்கள் குறித்தும் நேரடியாக படித்து தெரிந்து கொண்டு ஆதரிக்கிற விமர்சிக்கிற பலர், டாக்டர் அம்பேத்கரை மட்டும் அப்படி தெரிந்து கொள்ள விரும்புவதில்லை என்பது மட்டுமல்ல, தெரிந்து கொள்ளாமலேயே விமர்சன நிலைக்கே வந்துவிடுகிறார்கள். இதுவே பார்ப்பனிய இந்து மனோபாவம்தான். //
நான் அம்பேத்கரை எதிர் நிலையில் வைத்துப் பேசுவதாக எடுத்துக் கொண்டு பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் பயன்படுத்துகிறீர்கள். நான் எனது இரண்டு பின்னூட்டங்களிலும் அம்பேத்கரை நிராகரிப்பது என் நோக்கம் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறேன். நீங்கள் அதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், நட்பு ரீதியில் விமர்சனம் வைப்பவரை பார்ப்பனிய இந்து மனோபாவம் கொண்டவர் என்று மிகவும் எளிமையாக முத்திரை குத்துகிறீர்கள். நன்று!
நான் அம்பேத்கரை படிக்கவே இல்லை என்று நீங்களாகவே கற்பனை செய்து கொள்கிறீர்கள்.
// ஆனந்த் தெல்டும்டே கருத்து இருக்கட்டும், டாக்டர் அம்பேத்கர் பற்றிய உங்கள் கருத்தென்ன? //
நான் கேட்ட கேள்வியை வேறு விதமாக எனக்கே திருப்பி விடுகிறீர்கள். சரி பரவாயில்லை.
அம்பேத்கரும், அவரது எழுத்தும் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் ஒரு வலிமையான ஆயுதம். இதுதான் அம்பேத்கரைப் பற்றிய என்னுடைய கருத்து. இக்கருத்து வைத்திருப்பவனுக்கு அம்பேகரியம் குறித்து விமர்சனமே இருக்கக் கூடாதா?
நாம் இருவருக்கும் பல ஒத்தக் கருத்துக்கள் இருக்கின்றன. பார்ப்பனிய எதிர்ப்பு, தமிழினவாதிகளின் சாதிப்பற்றை அம்பலபபடுத்துதல், மார்க்சியப் பார்வை, அம்பேத்கர்-பெரியார் ஆகிய இருவரையும் பார்ப்பனிய எதிர்ப்பின் சின்னமாக, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களாக முன்னிறுத்துவது என்று பல விசயங்களில் உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடுதான். இச்சிறு விவாதத்தின் மூலம் நமக்குள் மனக்கசப்பு ஏற்பட வேண்டாம். உங்கள் கட்டுரைகள், புத்தகங்களை தொடர்ந்து படிக்கிறேன்; தொடர்ந்து படிப்பேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் இது குறித்துப் பேசலாம்.
நன்றி!
தோழமையுடன்
பகத்.
எளிதாக நான் முத்திரை குத்தவில்லை. டாக்டர் அம்பேத்கரை பற்றிய உங்களின் பார்வைதான் உங்களை முத்திரை குத்துகிறது.
நீங்கள் அவரை விரிவாக படிக்கவில்லை என்பதையும் அதுதான் அடையாளப்படுத்துகிறது.
டாக்டர் அம்பேத்கரை விமர்சனத்தோடு ஆதரிப்பதாக சொல்கிற யாரும் அவரை பற்றி மிக இழிவாக பார்ப்பனக் கண்ணோட்டத்தோடு, குறிப்பாக அருண்சோரி, ஜெயமோகன் போன்றவர்கள் எழுதியபோது அதை மறுத்தோ கண்டித்தோ எழுதியதில்லை. வேடிக்கைத்தான் பார்த்தார்கள்.
பெரியார் இயக்கத்தவர்களும் அம்பேத்கரிஸ்டுகளும்தான் அதற்கு பதில் சொல்லியிருக்கிறார்கள். (ஆனந்த் தெல்டும்டே தன்னை ‘அம்பேத்கரிஸ்ட்’ என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.)
அதுபோலவே அவரின் சிலை ஜாதி வெறியர்களால் ஆயிரக்கணக்கான முறை சேதப்படுத்தியபோது, அதைக் கண்டித்து வீதிக்கு வந்து போராடியது…அம்பேத்கரை கடுமையாக விமர்சனத்தோடு ஆதரிப்பதாக சொல்கிற புரட்சியாளர்கள் அல்ல.
நீங்கள் குறிப்பிடுகிற அம்பேத்கரியம் என்கிற பெயரில் இருக்கிற பிழைப்புவாதிகள்தான்.
மற்றபடி உங்களின் தோழமைக்கு நன்றி.
“End notes” போட்டுவிட்டு திரும்பவும் பின்னுட்டமிடுவதற்கு மன்னிக்கவும்.
தோழர், நான் கொடுத்த இணைப்பில் உள்ள ஆனந்த் தெல்டும்டேயின் கட்டுரையை படிக்கவே கூடாது என்று முடிவு செய்து விட்டீர்களோ?
// (ஆனந்த் தெல்டும்டே தன்னை ‘அம்பேத்கரிஸ்ட்’ என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.) //
ஆன்ந்த் தெல்டும்டே, “அம்பேத்ரியம்” என்ற ஒன்று இருக்கிறது என்பதையே நிராகரிப்பவர். ( இதன் பொருள் அம்பேத்கரையும், அவரது பங்களிப்பையும் நிராகரிப்பது என்பதல்ல; மாறாக “அம்பேத்கரியம்” என்ற முறைப்படுத்தப்பட்ட தத்துவம் இல்லை. ஏனென்றால் அம்பேத்கர் ஒர் நடைமுறைவாதி (Pragmatist). ) “அம்பேத்கரியம்” என்ற வார்த்தையை தெல்டும்டே ஒரு முறை கூடப் பயன்படுத்தியதில்லை. இதை அவரே எழுதியிருக்கிறார்.
“Now those who are conversant with my writings would never find that I ever advocated amalgamation of Ambedkarism and Marxism. In fact I have never used the term Ambedkarism, that has been attributed to me.”
To the Self-Obsessed Marxists and the Pseudo Ambedkarites
http://sanhati.com/excerpted/6366/
“அம்பேத்கரியம்” என்ற முறைப்படுத்தப்பட்ட ஒரு தத்துவம் இல்லை என்று கூறியதற்காக மராட்டியத்தில் உள்ள சில “அம்பேத்கரியவாதிகள்” (pseudo Ambedkarites) தெல்தும்டேவை அம்பேத்கரைப் புண்படுத்திவிட்டார் என்று கூறினர். அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு” (Annihilation of Caste) நூலை “கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை” (Communist Manifesto) யுடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக சில “மார்க்சியவாதிகள்” (self-obsessed Marxists) அவரை அது தவறான ஒப்பீடு என்று திட்டினர். அவர்கள் இருவருக்கும் பதிலளிக்கும் முகமாகவே தெல்டும்டே “To the Self-Obsessed Marxists and the Pseudo Ambedkarites” என்று தலைப்பிட்ட கட்டுரையை எழுதினார்.
அக்கட்டுரையில் எப்படி சில “மார்க்சியவாதிகள்” மார்க்சியத்தை ஒரு மதம் போல் ஆக்கிவிட்டார்கள் என்பதையும், எப்படி சில “அம்பேத்கரியவாதிகள்” அம்பேத்கரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதையும், எப்படி “அம்பேத்கரியம்” ஒரு முறைப்படுத்தப்பட்ட தத்துவம் இல்லை என்பதையும், சாதியை எப்படி ஒழிப்பது என்பது பற்றியும் தெளிவாக எழுதியுள்ளார்.
“அம்பேத்கரியம்” என்று ஒரு தத்துவம் இல்லை என்று கூறும் தெல்டும்டேதான் அம்பேத்கர் முஸ்லீம்கள் குறித்து எழுதியவற்றைத் திரித்துப் பிரச்சாரம் செய்த பார்ப்பன இந்து மதவெறிக் கட்சியான பா.ஜ.க வின் புளுகுகளை ஆதாரத்துடன் தோலுரித்தார். அது குறித்து நீங்களும் எழுதியிருக்கிறீர்கள். அவர் அம்பேதரை எப்போதும் நிராகரித்ததில்லை. அவரது நிலை எனக்கு சரி எனப்பட்டதனால் தான், அம்பேத்கர் குறித்து, (குறிப்பாக சில தலித்தியப் பிழைப்புவாதிகள் அம்பேத்கரைப் பெரியாருக்கு எதிராக நிறுத்தும் வேளையில், நீங்கள் அம்பேத்கர்-பெரியார் இருவரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களாக முன்னிறுத்துவது மிகவும் சரியான பார்வை என்று தோன்றியது.) தொடர்ந்து எழுதிவரும் உங்களிடம் “அம்பேத்கரியம் குறித்துக் கேட்போமே என்று கேட்டேன்.
Ambedkarites against Ambedkar
http://www.epw.in/margin-speak/ambedkarites-against-ambedkar.html
http://kractivist.wordpress.com/2013/05/10/ambedkarites-against-ambedkar/
எப்படி “அம்பேத்கரியம்” ஒரு முறைப்படுத்தப்பட்ட தத்துவம் இல்லை என்பதைக் கூறுவதற்காகவே இக்கட்டுரையை எழுதியுள்ளார். அப்படிப்பட்டவரை அவர் தன்னை “அம்பேத்கரிஸ்ட்” என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார் என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள்?
“அம்பேத்கரிஸ்டுகளை” விமர்சித்து அவர் ஆற்றிய உரை
Crisis Of Ambedkarites And Future Challenges
http://www.countercurrents.org/teltumbde220411.htm
சமீபத்தில் ஐதராபாத்தில் “Democracy, Socialism and Visions for the 21st Century” என்ற தலைப்பில் நடந்த சர்வதேசக் கருத்தரங்கில் “The Class and Caste Question: Ambedkar and Marx” தலைப்பில் உரையாற்றினார்.
http://sanhati.com/wp-content/uploads/2014/03/Hyderabad.pdf