பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்
திரு. பொ. வேல்சாமி என்பவர் January 5 அன்று அவருடைய facebookல் // தெலுங்கு பிராமணர் + கப்பலோட்டிய தமிழர் = தொல்காப்பிய இளம்பூரணம்.// என்ற தலைப்பில் சில தகவல்களை எழுதியிருந்தார்.
அதில், //தமிழ்நாட்டில் சுதந்திர வேட்கையை முன்னிறுத்தி ஆங்கிலேய அரசாங்கத்துடன் பெரும் போராட்டத்தை நடத்திய ஒரு சிலரில் பாரதியும் வ.உ.சி யும் குறிப்பிடத்தக்கவர்கள்.// என்றும் எழுதியிருந்தார். அதில் என்னுடைய கருத்தை பதிவிட்டேன். அது தொடர்பாக நடந்த விவாதம்(?)
*
வே. மதிமாறன்: //பாரதியும் வ.உ.சி யும்// என்பதற்கு பதில், வ.உ.சி யும் சுப்பிரமணிய சிவமும் என்று இருந்தால்தான் சரியாக இருக்கும்.
இந்தக் கருத்தை நேற்று இரவே எழுதியிருந்தேன். அதைக் காணவில்லை. அதன் பிறகு நண்பர்கள் பட்டியலில் இருந்து நான் விலக்கப் பட்டிருக்கறேன்
*
Po Velusamy: வே.மதிமாறன்… உங்களுடைய கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவி்ல்லை. அதே நேரத்தில் இப்படியான ஒரு கருத்து உங்களிடம் இருப்பதை நான் மறுக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதியும் வ.உ.சியும் பிற்காலங்களில் தமிழ் இலக்கியத்துடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்தக் கருத்தைதான் என் பதிவு முன்னிலைப் படுத்துவதால், சுப்ரமணிய சிவாவை இணைப்பது பொருத்தமாக இருக்காது.
பொதுவாக நான் அறிந்தக் கொண்ட சில செய்திகளை ஆர்வமுள்ள நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே இந்த பதிவுகளை நான் பதிவிடுகிறேன். என்னை முன்னிலைப் படுத்துவதற்கோ என் மேதமையை நிருப்பிப்பதற்கோ இதனை நான் செய்யவில்லை.எனவே இப்பதிவுகளில் சில தவறுகள் இருந்தால் கூட நான் கவலைப்படுவதில்லை.
இப்பதிவுகளை நுட்பமான பார்வையும் சிந்தனை ஆர்வமும் உள்ள நண்பர்கள் மட்டுமே வாசிக்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கும் இந்தப் பதிவுகளுக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்பது எனக்குத் தெரியும். என் பதிவுகளை படிக்கும் இளம் தலைமுறையைச் சேர்ந்த தோழர்கள் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து புதிய சிந்தனைகளை வளர்த்து எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் ஒரு சில நேரங்களில் அறியாமையால் தவறான தகவல்கள் கொடுத்தால் கூட அதனைப் புரிந்து கொண்டு, அதனைத் தாண்டி செல்லும் அறிவுபடைத்தவர்கள்தான் நம் தோழர்கள்.
*
வே. மதிமாறன்: வ.உ.சி நடத்திய எந்தப் போராட்டத்திலும் பாரதி கலந்து கொண்டு கைதானதில்லை. தனியாகவும் அவர் கைது செய்யப்பட்டதுமில்லை. அவர் கடலூரில் கைதானதே கைதை தவிர்க்க தப்பிப்போன போதுதான். அதனால்தான் ‘இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன்’ என்று கடிதம் எழுதி கொடுத்து விட்டு, உடனே வெளியில் வந்தார்.
ஆனால், சுப்பிரமணிய சிவம் வ.உ.சிக்கு இணையான தியாகி. வ.உ.சியும் சிவமும் பல மேடைகளில் இணைந்தே பேசினர். கோரல் மில் தொழிலாளர் போராட்டம் உட்பட பல போராட்டங்களை இணைந்தே நடத்தி, சிறை சென்று கடும் தண்டனையை அனுபவித்தனர். சிறை வாழ்க்கை சிவத்திற்கு தொழு நோயை பரிசாக தந்தது.
உங்களுடைய இலக்கிய முடிச்சிற்காக, தியாகியை மறைப்பதும், துரோகியை தூக்கிப் பிடிப்பதம் என்ன நியாயம்? இலக்கியத் தொடர்பிலும் சுப்பிரமணிய சிவமே, வ.உ.சியோடு தொடர்பில் இருந்தார்.
‘தமிழை சீர்திருத்த வேண்டும்’ என்று தமிழை விட சமஸ்கிருத்தை உயர்வாக மதிப்பீட்ட பாரதியை கண்டித்து, தமிழில் உள்ள ழ, ழ் போல் சமஸ்கிருத்த்தில் உள்ளதா? அதற்கேற்றால் போல் சமஸ்கிருத்தை திருத்த பாரதி முன் வருவாரா?’ என்கிற அளவில் வ.உ.சி எழுதிய கட்டுரை, சுப்பிரமணிய சிவம் நடத்திய ‘ஞானுபானு’ இதழில்தான்.
//இப்பதிவுகளில் சில தவறுகள் இருந்தால் கூட நான் கவலைப்படுவதில்லை.// என்கிற உங்களின் ‘பொறுப்பான’ பதில் ஆச்சாரியப்படுத்தவில்லை. எதிர்பார்த்ததுதான். ஆனால், தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுது கூட உங்களுக்குப் பிடிக்காது என்பது எந்த வகை ஜனநாயகம்?
//இப்பதிவுகளை நுட்பமான பார்வையும் சிந்தனை ஆர்வமும் உள்ள நண்பர்கள் மட்டுமே வாசிக்கிறார்கள்.//
//நான் ஒரு சில நேரங்களில் அறியாமையால் தவறான தகவல்கள் கொடுத்தால் கூட அதனைப் புரிந்து கொண்டு, அதனைத் தாண்டி செல்லும் அறிவுபடைத்தவர்கள்தான் நம் தோழர்கள்.//
என்கிற வரிகள், உங்கள் நண்பர்களுக்காக சொல்லப்பட்டதாக தெரியவில்லை. உங்களையும் உங்கள் எழுத்துக்களையும் உயர்த்திக் காட்டுவதற்காக உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் தரும் தகுதி சான்றாகதான் இருக்கிறது. அதே நேரத்தில் கேள்வி கேட்ட என்னை ஏளனம் செய்கிற தொனியும்..
அதனால்தான் என் கேள்வியையும் நீக்கி விட்டு, என்னையும் நண்பர்கள் பட்டியிலில் இருந்து விலக்கி வைத்த நீங்கள், Ramasamy Gramian Rajendran என்பவர் உங்களைப் பற்றி எழுதிய “வரலாறு தேடித்தரும் தமிழ் கூகுள் வாழ்க!” என்கிற நுட்பான பார்வையை அனுமத்தித்து அதை Like செய்தும் இருக்கிறீர்கள்.
குறிப்பு:
1. இதற்கு முன்னும் தமிழிசை சம்பந்தமாக என் கேள்விக்கு பதிலளிக்காமல், என்னை இழிவாக திட்டி எழுதிய நபரின் கருததை அனுமதித்து அதை Like க்கும் செய்திருந்தீர்கள்.
2. உங்கள் நண்பர்கள் பட்டியலில் நானாக வரவில்லை. நீங்கள் தான் என்னோடு நட்பாக விரும்பப் பட்டு அழைப்புக் கொடுத்தீர்கள்.
*
Po Velusamy: வே.மதிமாறன் ஐயா…. உங்களுடன் மயிர்பிளக்கும் வாதங்களில் ஈடுபட எனக்கு நேரமில்லை. நீங்கள் செய்யும் விவாதங்களை தயவுசெய்து உங்கள் பக்கங்களில் வைத்து கொள்ளுங்கள். மேற்படி என்னுடைய பதிவிற்கும் உங்கள் கேள்விகளுக்கும் பெரிய தொடர்பு ஏதும் இல்லை. உங்களுடைய விவாதத்தால் என்னுடைய பதிவில் எந்தக் கருத்து மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
என்னுடைய பக்கத்தில் உங்களை friend request கொடுத்தது என் உதவியாளர் செய்த மாபெரும் தவறுதான். அதனை நீங்கள் நினைவூட்டியமைக்கு நன்றி. கருத்துக்குப் பொருத்தம் இல்லாத விவாதங்களை வெளியே தள்ளி விடுவதில் எந்தத் தவறும் இல்லை. இதுவரையான என் பதிவுகளில் எவருடைய கருத்தையும் நான் வெளித் தள்ளியது இல்லை.
*
வே.மதிமாறன்:
//வே.மதிமாறன் ஐயா….உங்களுடன் மயிர்பிளக்கும் வாதங்களில் ஈடுபட எனக்கு நேரமில்லை. ….. மேற்படி என்னுடைய பதிவிற்கும் உங்கள் கேள்விகளுக்கும் பெரிய தொடர்பு ஏதும் இல்லை. உங்களுடைய விவாதத்தால் என்னுடைய பதிவில் எந்தக் கருத்து மாற்றமும் ஏற்படப்போவதில்லை. //
நல்ல ஆழமான பதில்..
//நீங்கள் செய்யும் விவாதங்களை தயவுசெய்து உங்கள் பக்கங்களில் வைத்து கொள்ளுங்கள்.///
இதை உங்கள் முகப்பு பக்கத்தில், ‘இவ்விடத்தில் விவாதங்களுக்கு இடமில்லை, புகழுரைக்கு மட்டும்தான்’ என்று முன்பே அறிவித்திருந்தீர்கள் என்றால் எனக்கு இந்த வெட்டி வேலை தேவைப் பட்டிருக்காது…
//என்னுடைய பக்கத்தில் உங்களை friend request கொடுத்தது என் உதவியாளர் செய்த மாபெரும் தவறுதான்.//
இதையும் உங்கள் உதவியாளர்தானே எழுதியிருப்பார். இதை யார் கருத்தாக எடுத்துக் கொள்வது?
அதன் பிறகு அது தெரிந்தும் என்னை நீங்கள் நண்பராக வைத்திருந்ததும், பிறகு வேறு ஒரு சமயத்தில் எனக்கு பதில் தர முயற்சித்ததும் நீங்கள்தானா அல்லது அதுவும் உங்கள் உதவியாளர் செயலா?
ஆனாலும் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்..
எனக்கு friend request கொடுத்த உங்கள் உதவியாளரை நீங்கள் வேலையை விட்டு தூக்காததற்கு… காலையிலிருந்து என் கருத்துக்களை நீக்காததற்கும்…
நன்றி. வணக்கம்.
*
January 5 அன்று facebook ல் திரு. Po Velusamy பக்கத்தில் நடந்த விவாதம்.
*
ஆனாலும் என் விளக்கங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு, எனக்கு ‘பதில்’ சொன்னதை மட்டும் அவர் பக்கத்தில் வைத்திருக்கிறார். ‘படிக்கிறவங்களுக்கு குழப்பமாக இருக்காதா?’ என்று உங்களுக்கு தோன்றலாம். சாமான்யமானவர்களுக்குத்தான் குழப்பம் ஏற்படும் அவர் எழுத்துக்களைப் படிக்கிற அமானுஷ்யமானவர்களுக்கு தோன்றாதே..
அதனால் நான் என்ன எழுதினேன் என்பதை அவரின் பதிலிலிருந்து புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை காரணமாக எனக்கான அவரின் பதிலை மட்டும் விட்டு வைத்திருக்கிறார்.
**
இதுபோலவே இதற்கு முன்பு அதவாவது, November 30, 2013 அன்று,
//இசைத் தமிழை ஒழித்துக் கட்டிய சாதியம்………..// என்ற தலைப்பில் சில தகவல்களைத் தந்திருந்தார்.
அதில் நான், //இசைத் தமிழை ஒழித்துக் கட்டிய சாதியம்………..// எந்த ஜாதி?
கண்டிப்பாக பார்ப்பனர்களாக இருக்க மாட்டார்கள்… தமிழுக்கு அவர்கள் செய்த சேவையை நீங்கள் facebook ல் எழுதிய பல கட்டுரைகளில் படித்திருக்கிறேன்..// என்று எழுதியிருந்தேன்.
அதற்கு December 1, 2013 அன்று திரு. பொ. வேல்சாமி:
//தமிழிசை பற்றிய நேற்றைய பதிவு குறித்து சென்றாயப்பெருமாள், வே.மதிமாறன், அஜித்பத்மநாபன் ஆகிய மூன்று நண்பர்களும் சில ஐயங்களை எழுப்பியிருந்தனர். ………..
நண்பர் வே.மதிமாறன் நான் பார்ப்பனர்களுக்கு ஆதரவானவன் என்று கருதுவதுபோலத் தெரிகிறது. என்னுடைய கட்டுரைகளில் ஆதாரம் இல்லாத எந்தக் கருத்தையும் நான் கூறுவதில்லை. உதாரணமாக சங்க இலக்கியங்களில் கலித்தொகை தவிர மற்ற எல்லா நூல்களையும் (சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை) தமிழ் மக்கள் படிக்கும்படியாக உழைத்து முதன்முதலில் வெளியிட்டவர்கள் பார்ப்பனர்கள்தான் என்று கூறினால் அதில் என்ன தவறு காணமுடியும்… கலித்தொகையையும் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் வெளியிட்டவர் இ.வை.அனந்தராம அய்யர்தானே?// என்று எழுதியிருந்தார்.
அதற்கு நான்..(வே. மதிமாறன்)
நல்லது. தமிழுக்கான பார்ப்பனர்களின் பங்களிப்பை நான் மறுக்கவில்லை. உங்களின் அந்தக் கட்டுரைகளில் தெளிவாக யார் என்பதை ஆதாரோத்தோடு நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். இப்போதும் இந்த விளகத்திலும் //தமிழ் மக்கள் படிக்கும்படியாக உழைத்து முதன்முதலில் வெளியிட்டவர்கள் பார்ப்பனர்கள்தான்// என்பதை உறுதியாக, தெளிவாக சொல்லியிருக்கறீர்கள்.
அந்த உறுதியையும் தெளிவையும் ஆதராத்தையும் //இசைத் தமிழை ஒழித்துக் கட்டிய சாதியம்………..// என்பதிலும் எதிர்ப்பார்த்தேன். அதனால்தான் ‘எந்த ஜாதி?’ என்றும் கேட்டிருந்தேன்.
அதில், //உயர்ஜாதிக்காரர்கள்..// என்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டிருந்து.
யாரு அந்த உயர்ஜாதிக்காரர்கள்…?
பிள்ளை, கவுண்டர், முதலி, செட்டி இவர்களில் யார்? அல்லது இவர்கள் எல்லோருமே வா?
கண்டிப்பாக நாயுடு, நாயக்கர்களாக இருக்க முடியாது. ஏனென்றால்…//இவற்றையெல்லாம் மற்ற மொழியினர் அழித்துவி்ட்டதாக கதை கட்டினார்கள்//என்றும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
என்று எழுதினேன்.
இதற்கும் திரு பொ. வேல்சாமி எந்த பதிலும் தரவில்லை.
*
8.11.2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் விமர்சனக் கூட்டம் என்ற பெயரில் எனது ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ புத்தகத்திற்கு நடந்த கண்டனக் கூட்டத்தில் என்னை மிக இழிவாக பேசிய வேல்சாமி தான் போதிக்கிறார் முறையாக விமர்சிப்பதைப் பற்றி. -வே. மதிமாறன்.
இது தொடர்பாக Athiyaman de Libertarian என்பவர் எழுதிய அவதுறுக்கு, நண்பர் Nadodi Tamil எழுதிய கண்டனமும் திரு பொ. வேல்சாமியின் பஞ்சாயத்தும்.
Athiyaman de Libertarian: //நண்பர் வே.மதிமாறன் நான் பார்ப்பனர்களுக்கு ஆதரவானவன் என்று கருதுவதுபோலத் தெரிகிறது. /// :)))) அவரை சீரியசா எடுத்துக்க வேண்டாம் சார். ஆழமான, தர்க்கரீதியான contextual criticism அவரிடம் கிடையாது. he will be ignored in annals of historical analysis in due
Nadodi Tamil: அதியமான், கேட்பவர் கேட்கிறார், பதில் சொல்பவர் சொல்கிறார். இடையில் உமக்கென்ன குடைச்சல்? வரலாற்றில் நிற்கப்போவது யார் என்கிற தீர்ப்பெழுதும் உரிமையை உமக்கு கொடுத்தது யார்? உங்கள் கருத்தில் தெறிக்கும் திமிருக்கு பின்னிருப்பது ஜாதியமா? மதிமாறனைவிட பணக்காரனென்ற செல்வச்செருக்கா அல்லது அவரைவிட அதிகம் படித்துவிட்டோம் என்கிற ஆணவமா? எதுவாயினும் நாகாக்க
Athiyaman de Libertarian: நாடோடி தமிழ் : இது ஒரு திறந்த விவாதம். மேலும் பொ.வே எம் நண்பர் தான். இதில் கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இருக்கு. by the way நான் பார்பான் இல்லை. ஒரு பிற்பட்ட சாதியில் பிறந்தவன் தான். திமிர் பற்றியெல்லால் நீர் பேச வேண்டாமே.
Nadodi Tamil: அதியமான் இங்கே பிரச்சனை என்ன? பொ வேலுசாமி ஒரு பதிவு எழுதுகிறார். அதில் மதிமாறன் ஒரு கேள்வி கேட்கிறார். அதற்கு வேலுசாமி விளக்கமளிக்கிறார். இதில் நீர் இடையில் புகுந்து மதிமாறன் கேள்வி குறித்தோ அதில் இருக்கும் தகவல் குறித்தோ விமர்சிக்கலாம். அதைசெய்யாமல் மதிமாறனை புறக்கணியுங்கள். அவருக்கு விவரம் பத்தாது, வரலாற்றில் காணாமல் போய்விடுவார் என்பது என்னவகையான விவாதம்? அதில் தெரியும் ஆணவத்தை திமிரை வேறு என்ன சொல்லி அழைக்க? மதிமாறனின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்று வேலுசாமியே நினைத்து பதில் சொல்லும்போது நீர் மதிமாறனை புறக்கணிக்கச்சொல்வது ஏன்? அது எந்தவகையான விவாதவகை?
Po Velusamy: நண்பர்களே… பொது தளத்தில் சில கருத்துக்களைச் சொன்னால் அதற்கு பலரும் பலவிதமான எதிர்வினைப் புரிவது ஒரு ஜனநாயக மரபு. ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது எதிர்வினை புரிவது அவர்களின் உரிமை. அதற்கு முறையாக பதில் அளிப்பது எழுதுபவரின் கடமை ஆகும். என் கருத்துக்களின் மீதான எவ்வித விமர்சனத்தையும் நான் வரவேற்கிறேன். அதே சமயம் கருத்துகளின் மீதான விவாதத்தை வைத்து நண்பர்கள் சண்டையிடவேண்டாம்.. நீங்கள் அனைவரும் என் மதிப்பிற்குரிய தோழர்கள் என்பதை நினைவுறுத்துகின்றேன்.
வே மதிமாறன்: தோழர் Po Velusamy //நண்பர்களே…// என்று இதிலும் பொதுவாக சொல்லியிருக்கிறீர்கள்.
விசயத்திற்கு வெளியில் காழ்ப்புணர்ச்சியோடு அநாகரீகமாக எழுதியவரை கணடிக்காமல், அவரை கண்டிப்பரையும் சேர்ந்து ‘சண்டையிட வேண்டாம்’ என்று சொல்வது முறையா?
Athiyaman de Libertarian காழ்புணர்சி என்பது தனி உடைமை அல்லவே. பலருக்கும் இருப்பது தான். யாருக்கு காழ்புணர்சி அதிகம் என்பதை வாசகர்கள் தம் பகுத்தறிவால் அறிந்து கொள்வார்கள். (நேற்று தான் பாரதிய ஜனதா பார்ட்டி என்று பாரதியாரை ‘காழ்புணர்வுடன்’ விமர்சித்திருந்த நூலுக்கான எதிர் விமர்சன நூலை படித்தேன். அதில் பொ.வே அவர்களின் கட்டுரை மிக அருமை)
தமிழ் காமராசன்: கடவுளே இங்கேயும் ஆரம்பித்துவிட்டீர்களே…..?
*
8.11.2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் விமர்சனக் கூட்டம் என்ற பெயரில் எனது ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ புத்தகத்திற்கு நடந்த கண்டனக் கூட்டத்தில் என்னை மிக இழிவாக பேசிய வேலுசாமி தான் போதிக்கிறார் முறையாக விமர்சிப்பதைப் பற்றி. -வே. மதிமாறன்.
அறிவு நாணயம் இல்லாத கூட்டம் இப்படிதான் பேசும் தோழரே,
தர்க்க ரீதியில் நம்மை சமாளிக்க இயலாதவர்கள், தனி நபர் தாக்குதலில் ஈடுபடுவதென்பது வழக்கமான நடைமுறைதானே.