சாலை மறியல்!


book-fair-2014

கடந்த ஜனவரி மாதம் சென்னை நந்தனம் YMCA வில் நடந்த புத்தகக் காட்சியின்போது 6, 7 நண்பர்களுடன் 5 முறை சாலை மறியல் செய்தேன்.

ஆமாங்க. புத்தகக் கடையில் நான்கு நபர்கள் மட்டும் கூடி, ஒரே புத்தகத்தை கொடுத்து வாங்கிக் கொண்டதை, ‘புத்தக வெளியீட்டு விழா’ என்று அறிவிக்க முடியுமென்றால்,

நான், 4 பேர்களுக்குமேல் போக வர சாலையை கடந்ததை ஏன் சாலை மறியல் என்று அறிவிக்கக் கூடாது?

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

அந்தப் பாடலில் வரும் இசை நிலைகுலைய செய்கிறது!

 

x240-MBg

வார்த்தைகளின் பின்னணியில் குழைந்து குழைந்து இனிமை சேர்க்கிறது வயலின். அந்த நீண்ட பல்லவி முடிந்தவுடன் இடையிசையின் இடையில், மிகச் சரியாக வீணையின் இனிமையை தொடர்ந்து துவங்குகிறது ஷெனாயின் உருக்கும் உன்னதம்.

‘மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்…’
என்று முடித்தவுடன் மீண்டும் இசைக்கிற ஷெனாய் நம்மை திக்குமுக்காட வைக்கிறது.

‘ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்… 
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்’ என்ற இடத்தில் ஒலிக்கிற ஷெனாய் இம்முறை நம்மை நிலைகுலைய வைக்கிறது.

‘பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்..’
இப்போதும் அதே குறிப்புகளோடுதான் ஷெனாய் ஒலிக்கிறது; ஆனால் நம் நிலமையோ, கலக்கமுற்ற உணர்வுகளால் செய்வதறியாது தவிக்கிறது.

55 ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையில் உருவான பாடல் இது. இந்தப் பாடலில் ஷெனாய் வாசித்த கலைஞன் யார் என்று தெரியவில்லை.

இதுபோலவே ‘மாலை பொழுதின் மயக்கத்திலே நான்..’ என்ற பாடலிலும் ஷெனாய் நம்மை கண்ணீர் மல்க வைத்துவிடும்.
இதை வாசித்த அந்த மகா கலைஞனுக்கு நடுங்கும் விரல்களோடு கரம் குவித்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேட்க:
http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Pasamalar/Malarkalai%20Pol%20-%20TamilWire.com.mp3

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

ஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத பாவங்களோடு

மலர்ந்தும் மலராத ‘பாசமலர்’

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

தேர்தலோ தேர்தல்..!

zoomwhy

‘ஓட்டு போடாமல் இருப்பதால் என்ன மாற்றம் நடந்திடபோது?’

‘ஓட்டு போட்டுக்கிட்டேதான் இருக்கிறார்கள். என்ன மாற்றம் நடந்திருக்கிறது?’

‘மோடி’ யிடம் வந்து நிற்கிறது.

ஏப்ரல் 23

மோடி யை எதிர்க்க காங்கிரஸ்காரராக இருந்தாலே போதும்; ஆனால் ‘அவர்கள்’ காங்கிரஸ்காரராக இருக்கக் கூட லாயக்கற்றவர்கள்.

ஏப்ரல் 23

தி.மு.க. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டி புறக்கணிப்பவர்கள்; C.P.M. யை ஆதரிப்பது ஏன்?

ஏப்ரல் 24

இது தேர்தல் பிரச்சாரமா? வர்த்தகமா? அரசியலா? உள்குத்தா?

மோடி அலையில்லை, தமிழகத்தில் ‘டாடி’ தான் என்றார் ஸ்டாலின்.
சன் டி.வியில் ‘டாடி’ யில்லை; மோடி யின் அலை.
தேர்தல் நடக்கும்போது மோடி மனு தாக்கல் நேரலை.

ஏப்ரல் 24

போத்திக்கிட்டு படுத்தா என்ன? படுத்துக்கிட்ட பிறகு போத்திகிட்டா என்ன? அதாங்க ‘லேடி’ க்கு போடறதுக்கு பதில்.. நேரடியா அந்த ‘கேடி’ க்கே போட்டுடலாம்.

ஏப்ரல் 24

facebook ல் எழுதியது

அம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும்

ஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி

IMG_0014

Jennifer உடன் கீதா

பாரதிய ஜனதா, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் இருந்திருந்தால், அது யோக்கியமான கட்சி ஆகி விடாது. அதுபோல் ஜோ டி குரூஸ், மோடி யை ஆதரிக்காமல் இருந்திருந்தால் அவர் ‘சமூகநீதி’ எழுத்தாளராகி விடமாட்டார்.

அவரின் மோடி ஆதரவு திடிரென்று முளைத்த ஒன்றல்ல. கிறத்துவரான அவர் இந்துக் கண்ணோட்டம் கொண்ட இலக்கியவாதியாக (சந்தர்பவாதியாக) இருந்ததால்தான் மோடியை ஆதரிக்கிறார். சாகித்திய அகடாமி விருது பெற்ற உடனேயே அவருக்கு ‘இந்து அமைப்பு’ பாராட்டு விழா நடத்தியதும் அதனாலேதான்.

இந்து முன்னணி ராம. கோபாலன் மோடியை ஆதரிக்காமல் முஸ்லிம் லீக்கையா ஆதரிப்பார்?

ஆக, ஜோ டி குரூஸிடம் எந்த மாற்றமும் இல்லை. அவர் அவராகத்தான் இருக்கிறார்.

இப்படி பட்டவரின் நாவலை ‘நவயனா’ ஆங்கிலத்தில் கொண்டு வர ஒப்பந்தம் போட்டதும், அதை மொழி பெயர்க்க வ. கீதா முயற்சித்ததும்தான் பச்சையான சந்தர்பவாதம்.

அது மட்டுமல்ல, மோடி யை எதிர்ப்பதற்கு ஒருவர் அரசியல் ரீதியாக தீவிரமான பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை கொண்டவராகவோ கம்யுனிஸ்டாகவோதான் இருக்க வேண்டும் என்பதல்ல; காங்கிரஸ் காரராக இருந்தாலே போதும்.

ஆனால், ஜோ டி குரூஸை மறுக்கும் நவயானின் யோக்கியதை மோடியின் யோக்கியதையை போலவே மோசமானது. தத்துவார்த்த ரீதியாக பொய் சொல்வதில் மோடிக்கு சவால் விடுபவர்கள்தான் இவர்கள்.
பெரியார் மீது பா.ஜ.க காரர்கள்கூட சொல்லாத அளவுக்கு இழிவான அவதூறுகளை எழுதிய அல்லது பா.ஜ.க வினருக்கே ‘போலி பாயிண்ட்’ எடுத்து கொடுத்த ரவிக்குமார் தான் அதற்கு முதலாளி.

பெரியார் மீதான அவதூறுகளை திட்டமிட்டு ஆங்கிலத்தில் கொண்டு சேர்த்தவர்தான் நவயானின் இன்னொரு முதலாளி, எஸ். ஆனந்த் என்கிற பார்ப்பனர். இவர்களின் புதிய கூட்டு வ. கீதா.

பெரியார் மீது அவதூறுகள் வந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் பெரியாரிஸ்டுகளுக்கு தான் உண்டு. தன்னை தீவிரமான பெரியாரிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்ட வ. கீதா, இதுவரை அப்படி ஒரு பதிலை எழுதியதே இல்லை.

1996 ஆம் ஆண்டு எஸ்.வி. ராஜதுரையும் – வ. கீதாவும் இணைந்து எழுதிய விடியல் வெளியீடாக வந்த ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலை, அப்போது நடந்த வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து ரவிக்குமாரை தான் வெளியிட வைத்தார்கள். அன்று பெரியாரை புகழ்ந்து பேசிய ரவிக்குமார் தான், பின்னாட்களில் பெரியார் மீது அவதூறுகளை வாரி இறைத்தார்.

அவருக்கான பதிலை சொல்ல வேண்டிய கடமை மற்ற எல்லோரையும் விட எஸ்.வி. ராஜதுரை – வ. கீதா இருவருக்கும் தான் உண்டு.
ஆனால் ரவிக்குமாருக்கான பதிலை இதுவரை இருவரும் இணைந்தும் எழுதியதில்லை. தனி தனியாகவும் எழுதியதே இல்லை.

இப்படியாக பல மோசடி அறிவாளிகளிடமிருந்து தொடர்ந்து பெரியார் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு எந்த பதிலையும் தராமல், மவுனம் காத்த வ. கீதா, அதற்குப் பரிசாகத்தான் நவயனா பதிப்பகத்த்தின் மொழிபெயர்ப்பாளர் பணியை பெற்றார் போல.

பெரியார் பற்றி அவதூறுகளுக்குப் பதில் சொல்லாமல் இருப்பதும், யார் பெரியார் பற்றி கேவலமாக எழுதினார்களோ அவர்களோடு இணைந்து இலக்கிய மற்றும் சமூக பணி செய்வதுதான் ஒரு பெரியாரிஸ்ட்டிற்கான அழகா?

அது மட்டுமல்ல; எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, அ. மார்க்ஸ் மூவருக்கும் பல ஓற்றுமைகள் உண்டு. இவர்கள் தங்களை மார்க்சிய அறிஞர்களாக அடையாளப்படுத்திக் கொண்டே மார்க்சியத்திற்கும் காந்திக்கும் முடிச்சுப் போட்டவர்கள். பார்ப்பன பாரதியை பாசத்தோடு பார்ப்பவர்கள்.  பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்கள்.

எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து, ‘மார்க்ஸ் பெண்களுக்காக பேசவில்லை’ என்ற கண்ணோட்டத்தோடு காரல் மார்க்ஸ் பெண்களை புறக்கணித்தார் என்ற தொணியில் ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’ புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்கள்.
பெரியாரிஸ்டாக மாறிய பிறகு, பெரியாரையும் காந்தியவாதியாக்க முயற்சித்தார்கள்.
இதில் வ. கீதா, ‘காந்தி மனசாட்சி என்று சொன்னதைதான். பெரியார் பகுத்தறிவு என்று சொன்னார்’ என்று துணிந்து பெரியாரை பற்றி மனசாட்சியே இல்லாமல் ஒரு மதிப்பீட்டை தந்தார். ‘காந்திய அரசியல்’ என்று புத்தகமும் எழுதியிருக்கிறார்.

டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள் என்று ஒன்று இருக்கும்போது, அதற்கு மாற்றாக தலித்தியம் என்றும் இயங்குபவர்தான் கீதா.

மார்க்சியவாதிகளாக இருந்து பெரியாரியல் ஆய்வாளராக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், அதன் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினையை இன்னும் தீவிரமாக பார்க்க வேண்டுமானல் டாக்டர் அம்பேத்கரோடுதான் பயணித்திருக்க வேண்டும்.
ஆனால் வ. கீதா ‘தலித்தியம்’ என்கிற பெயரில் தலித் உட்ஜாதி தலைவர்கள் குறித்து தான் அதிகம் பேசினார். இயங்கினார். காந்தி பற்றி எழுதியவர், டாக்டர் அம்பேத்கர் பற்றி எந்த புத்தகமும் எழுதியதில்லை

டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதும், தவிர்ப்பதும் அவரை எதிர்ப்பதை விட மோசமானது. தலித் மக்களோடு தோழமையாக இருந்து கொண்டு, டாக்டர் அம்பேத்கரை இருட்டடிப்பு செய்து, மாற்றாக தலித் உட்ஜாதி தலைவர்களை நிறுவுகிற, இந்தக் கண்ணோட்டமே தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கண்ணோட்டம்தான்.

தன் கையை கொண்டே தன் கண்ணைக் குத்த வைக்கிற, இது போன்றவர்களின் செயலைக் கண்டித்து, 2004 ஆம் ஆண்டு புதிய கலாச்சாரம் இதழில் ‘அம்பேத்கரை தள்ளி வைத்த தலித்தியம்’ என்ற தலைப்பிட்டு நான் ஒரு கட்டுரை எழுதினேன்.

‘தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு தொடர்பு உடையவர்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டும் காந்திய கண்ணோட்டம் போன்றவற்றிற்காகவும் பேராசிரியர் அ. மார்க்சும் எழுத்தாளர் ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரையும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார்கள். ஆனால் வ. கீதா விமர்சிக்கிப்படவில்லை.
இவர்கள் இருவரை விடவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு ‘சிறுவர்களுக்கான இலக்கியம்’ என்று இன்னும் கூடுதலாக செயல்பட்டவர் வ. கீதா தான்.

பேராசிரியர் அ. மார்க்ஸையும் ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரையும் நான்கு வார்த்தைகளில் கடுமையாக விமர்சனம் செய்தால், வ. கீதாவை ஏழு வார்த்தைகளில் விமர்சித்திருக்க வேண்டும். ஆனால் கீதா விற்கு மட்டும் விமர்சனங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோக, ‘பெரியார் தலித் தலைவர்களை இருட்டடிப்பு செய்து விட்டார்’ என்ற குற்றசாட்டுக்கு எந்த பதிலையும் தராத பெரியாரிஸ்டான வ. கீதா,
இன்னொரு புறத்தில் ‘பெரியாருக்கு முன்பே இதை செய்தவர் இவர்தான்’ என்று தலித் உட்ஜாதி தலைவர்களை குறித்து பேசியும் இருக்கிறார்.

எழுத்தாளர் ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரை, பேராசிரியர் அ. மார்க்ஸ், வ. கீதா இந்த மூவரில் பேராசிரியர் அ. மார்க்ஸ் ஒருவரே, நவயனா பதிப்பகத்தின் முதலாளிகளான, பெரியார் பற்றி அவதூறு செய்த ரவிக்குமாரையும் பார்ப்பனர் ஆனந்தையும் தொடர்ந்து அம்பலப்படுத்தினார். அதன் பொருட்டே அவர் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்தார்.

அதனால்தான் பெரியாரிஸ்டான கீதா வுடன் இணைந்து ‘சமூக பணி’ செய்ய புறப்பட்டு இருக்கிற அவர்கள், இன்றளவும் பேராசிரியர் அ. மார்க்சிடம் பெயரளவில் கூட தொடர்பு கொள்வதை தவிர்க்கிறார்கள். எதிர்க்கிறார்கள்.

மற்றபடி ஜோ டி குருஸ் புத்தகத்தை மொழி பெயர்ந்து வெளியிட பொருத்தமானவர்கள் வ. கீதாவும் நவயனும்தான்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் ஜோடி குருஸ் தான் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். இவர்கள் முந்திக் கொண்டதால், இவர்களே மதவாதத்தை எதிர்க்கிற தியாகிகளாகி விட்டார்கள்.

காரணம், மோடியை ஆதரித்து வெளிப்படையாக ஜோ டி குரூஸ் பேசிய பிறகும் இவர்கள் அவர் புத்தகத்தை மொழி பெயர்த்துக்கொண்டிருந்தால், முற்றிலுமாக அம்பலமாகி இருப்பார்கள். அதனால் முந்திக் கொண்டார்கள்.

‘தமிழ்நாட்டில் பெரியார் என்றால் தெரியாது. பெரியார் அணை என்றால்தான் தெரியும்’ என்று கேலி பேசிய ஆனந்தின் நவயனாவுடன் இணைந்து, ரவிக்குமாரின் பெரியார் அவதூறுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்காத வ. கீதாவிற்கு, அந்த வகையில் நாம் கோடான கோடி நன்றிகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.

IMG_0001

படங்கள் நன்றி: Jennifer அவர்களின் இணைப்பு
http://the-jammer.blogspot.in/2008/03/last-weeks-in-chennai.html
http://the-jammer.blogspot.in/2008/03/my-family-in-india.html
*

19-04-2014 அன்று facebook ல் எழுதியது.

K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!

அறியாமை விலக டாக்டர் அம்பேத்கரை வாசியுங்கள்

தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’

மோடி பிரதமரானால் தீட்சிதர்களை ஒழித்துக் கட்டுவார்!

சைவ சமயத்திற்குள் ‘ – ’ எவ்வளவு முக்குனாலும்..

மோடி பிரதமரானால் தீட்சிதர்களை ஒழித்துக் கட்டுவார்!

vv_swaminathan

மோடி ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியா வல்லரசு ஆகுமாம். தமிழக மக்கள் எல்லாம் தாமரை சின்னத்தில் வாக்களிக்க தவமிருக்கிறார்களாம்.

இந்த சமூக நீதி கருத்தை உதிர்த்தது, சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்பதற்காக போராடிய மாவீரன் முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன்.

மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியா வல்லரசு ஆகுறது இருக்கட்டும். சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் கையிலிருந்து அரசுக் கட்டுபாட்டிற்கு வருமா?

அது சரி, இந்த நாட்டுக்கு மோடி பிரதமர் ஆனதற்குப் பிறகு, சிதம்பரம் கோயில் தீட்சிதர் கையில் இருந்தா என்ன.. அரசு கையில் இருந்தா என்ன? (இனி நீ வயசுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன?)

தன்னிடம் டிரைவராக வேலைப் பார்த்த பெரியவர் சிவனடியார் ஆறுமுக சாமிக்கு ஒழுங்கா சம்பளமும் நல்ல செட்டில் மெண்டும் கொடுத்திருந்தா அவுரு ஏன் அடுத்த வேளை உணவுக்கு சிரமபட்டு வாழப்போறாரு..? அத செய்ய முடியாத இவரு,

மோடிய கூட்டிக்கிட்டு வந்து இந்தியாவ வல்லரசு ஆக்கப் போறாராம்.

*

17-04-2014 அன்று facebook ல் எழுதியது.

தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’

சைவ சமயத்திற்குள் ‘ – ’ எவ்வளவு முக்குனாலும்..

இன்று முதல் தெனாலிராமன்.. ஆவலோடு!

Vadivelu

இன்று வடிவேலுவின் தெனாலிராமன் வெளியாகிறது. அவர் காமெடியில் வசனத்திற்கு முக்கிய பங்களிப்பு இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு வசனம், நகைச்சுவை உணர்வே இல்லாமல் செயற்கையான சென்டிமெண்ட் வசனங்களை எழுதி குவித்த ஆரூர் தாஸ். (பாசமலர்)
அவர் எந்த அளவிற்கு காமெடி வசனங்களை எழுதியிருப்பார்?

இருந்தாலும் வடிவேலு பேசுகிற ‘பாவனை’ க்கு எந்த வசனத்தையும் தூக்கி நிறுத்தி விடும் ஆற்றல் இருக்கிறது.
மிக அதிகமாக தனக்கு தானே பேசிக் கொள்வதிலும், mind voice க்கு ஏற்ப முக பாவனைகளோடு வசன உச்சரிப்புகளை அவர் மாற்றுகிற முறையும் அலாதியானது.

சோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, எகத்தாளமோ வசனம் பேசுகிறபோது, அந்த வசனத்திற்குள்ளேயே உணர்வும் பாவமும் இருக்கும். அந்த இரண்டுமே பாதி நடிப்பை கொண்டு வந்து விடும்.

ஆனால், ஒருவர் வசனம் பேசும்போது உடன் நடிக்கிறவர் அதற்கேற்ப reaction செய்வது தான் கடினம். அதை விட கடினம் mind voice க்கு ஏற்ப உதடு அசையாமல் முகபாவனைகளால் உணர்வுகளை சொல்வது. அதிலும் காமெடி செய்வது மிகக் கடினம்.

இவை இரண்டிலும் கில்லாடி வடிவேல். அவரின் சிறப்பே இதுதான். இந்தியாவில் இந்த பாணியில் நடிப்பதற்கு வடிவேலுக்கு இணையான நடிகர்கள் இல்லை.

இப்படியானவர்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதனாலேயே இந்தப் படத்தை இன்று ஆவலோடு பார்க்கச் செல்கிறேன்.
நிச்சயம் ‘இந்திர லோகத்தில் நா. அழகப்பன்’ படம்போல் இருக்காது என்ற நம்பிக்கையிலும்.

தெனாலிராமனா-வடிவேலா?; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!

சைவ சமயத்திற்குள் ‘ – ’ எவ்வளவு முக்குனாலும்..

I-Dont-Know

சமயக் குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசைத் தவிர மற்ற மூவரும் பார்ப்பனர்களே.

இதற்கு நிகழ்கால சாட்சி, சைவ சமய ஈடுபாடு கொண்ட பார்ப்பனர்கள், (அய்யர்கள்) இன்றும் திருநாவுக்கரசு பெயரை வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஞானசம்பந்தன், சுந்தரம், மாணிக்கவாசகம் போன்ற பெயர்களையே அவர்களிடம் பார்க்க முடியும்.

அவ்வளவு ஏன்? சடகோபன், வரதராஜன், ஜானகிராமன், சீதாராமன், கோபாலன், ரங்கராஜன், ரங்கநாதன், வெங்கட்ராமன் போன்ற வைணவ (அய்யங்கார்) பெயர்களையும் சைவ-வைணவ (அய்யர்-அய்யங்கார்) ஒற்றுமையை வலியுறுத்தி வைக்கப்பட்ட சிவராமன், சங்கரராமன் போன்ற பெயர்களையும் வைத்துக் கொள்கிற ‘அய்யர்கள்’; நாவுக்கரசு, திருநாவுக்கரசு என்கிற சைவ சமய பெயரை வைப்பதில்லை.

பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இவர்களை விட, மிக அதிகமாக முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு பெயரை அதிகமாக வைத்திருக்கிறார்கள்.

இது சைவ சமயத்திற்குள் நடக்கிற உள்குத்து. இந்த உள் குத்தில் பார்ப்பனரல்லாத இந்த ஆதிக்க ஜாதிகள் ஞானசம்பந்தன், சுந்தரம், மாணிக்கவாசகம் இந்த பெயர்களையும் பிரியத்தோடு வைத்துக் கொள்வார்கள்.

‘சைவ சமயமே நாங்கள்தான்’ என்று ‘பிள்ளை – முதலி’ எவ்வளவு முக்கினாலும், அவர்கள் பார்ப்பனர்களுக்கு கீழான ‘சூத்திரர்கள்’ தான் என்பதற்கு சாட்சி, அப்பர் அடிகள் என்கிற ஒரு பார்ப்பன அடிமையான திருநாவுக்கரசே.

அதனால்தான் ‘சிறுவன்’ திருஞானசம்பந்தனுக்கு ஒரே பாட்டில் கதவை மூடிய சிவன், பாட்டா பாடிய பிறகுதான் திருநாவுக்கரசுக்கு ‘போதும் நிறுத்தியா’ என்கிற பாணியில் காலதாமதமாக கதவை திறந்தான்.

தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

அறியாமை விலக டாக்டர் அம்பேத்கரை வாசியுங்கள்

எத்தனை ஊடகங்கள் இன்று செய்தி மதிப்பைத் தாண்டி அம்பேத்கரைப் பற்றிப் பேசியிருக்கும் எனத் தெரியவில்லை.

புதிய மற்றும் அலட்சியமாக அம்பேத்கரைக் கடந்துபோகும் வாசகர்களிடம் தொடர்ந்து அவரது எழுத்துக்களை வாசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்திவரும் தோழர் மதிமாறனுக்கும் புதுயுகத்திற்கும் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் வாழ்த்துகள். நன்றிகள். – Chelliah Muthusamy

நன்றி தோழர் Chelliah Muthusamy

சினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin

கிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்

துரோகம் தியாகம் கோமாளித்தனம்; ஜனவரி 26

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

சினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin

ஹாலிவுட்டுக்கு சினிமா எடுக்க கற்றுக் கொடுத்த கம்யுனிஸ்டுகள். அல்லது கம்யுனிஸ்டுகளின் சினிமாக்களை காப்பியடித்த ஹாலிவுட். 

கிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்

துரோகம் தியாகம் கோமாளித்தனம்; ஜனவரி 26

இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

பேச்சுக்கு பேச்சு அடிக்கு அடி-அழகிரியின் வியூகம்

தங்கமும் இரும்பும் – ஆதி சங்கரரும் அட்சயதிரிதியையும்

தெனாலிராமனா-வடிவேலா?; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது

thenaliraman_தமிழ் நாட்டில் உள்ள ஒரு தெலுங்கு அமைப்பு, வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் கிருஷ்ணதேவராயரை அவமானப்படுத்துவதாக புரளியைக் கிளம்பி, தடை செய்ய வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள்.

கிருஷ்ணதேவராயன் என்ன பெரிய போராளியா?
1509 முதல் 1529 வரை 20 ஆண்டுகள் தென் இந்தியாவில் இருந்த மற்ற நாடுகள் மீது ரவுடித்தனம் செய்தவன். விஜயநகரப் பேரரசுவின் பெரிய ரவுடி கிருஷ்ணதேவராயன்.

பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்கி, ஜாதி முறையை கட்டி காத்து தெலுங்கு, கன்னடம், தமிழ் பேசிய எளிய மக்களுக்கு எதிராக ஆட்சி செய்த களவானிதான் கிருஷ்ணதேவராயன்.

கிருஷ்ணதேவராயன் என்கிற இந்த மன்னனுக்கும் அவனுக்கு ஆலோசனை சொல்பவராக வரும் காரிய கோமாளி தெனாலிராமன் என்கிற பார்ப்பனருக்கும் உள்ள உறவே அதற்கு சாட்சி.
கண்டிப்பாக கிருஷ்ணதேவராயனை அவமானப்படுத்திதான் படம் எடுத்திருக்கனும்… ஆனால் பாவம் வடிவேலு புகழ்ந்துதான் எடுத்திருப்பார்.

‘வடிவேலு, கிருஷ்ணதேவராயனை கேலி செய்து படம் எடுத்திருக்கிறார்’ என்று கொதிக்கிறது தெலுங்கு அமைப்பு. உண்மையில் கிருஷ்ணதேவராயனை முட்டாளாக நிரூபித்தது தெனாலிராமன் தான். அதற்கு சாட்சி தெனாலிராமன் கதைகளே.

பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல தெரியாத அறிவற்றவனாக கிருஷ்ணதேவராயன் தவித்த போது, அதை தீர்த்து வைத்து, அவனை சிக்கலில் இருந்து மீட்டவன் தெனாலிராமன் என்கிற ‘பிராமணரே’; இதுவே தெனாலிராமன் கதைகளின் உள்ளடக்கம்.

ஆக, கிருஷ்ணதேவராயனை ஒரு கூ முட்டையாக சொல்லியிருக்கிறது, தெனாலிராமன் கதைகள். இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் தெனாலிராமன் கதைகளுக்குத்தான் தெரிவிக்க வேண்டும்.

சாளுக்கிய மரபில் வந்த ‘புலிகேசி’ மன்னர்களை கேலி செய்து ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ என்று படம் வந்தபோது அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் வாயைப் பிளந்து பார்த்தார்கள்.

காரணம் தமிழ் நாட்டில் பார்ப்பனியத்தை தூக்கி நிறுத்தியதில் பெரிய பங்காற்றிய பல்லவ மன்னர்களின் எதிரி புலிகேசி. அதன் காரணமாகவே கல்கி ‘சிவகாமியன் சபதம்‘ நாவலில் புலிகேசி மன்னர்களை வில்லன்களாக சித்தரித்து எழுதினார்.

அதை தொடர்ந்து பிரதானமாக ஆனந்த விகடனும் இன்னும் பல பத்திரிகைகளும் புலிகேசி மன்னர்களை கேலி செய்து ஜோக்குகள் எழுதின. கேலி சித்திரங்கள் வரைந்தன.

அதன் தொடர்ச்சியாகதான் ஆனந்த விடகனில் பயிற்சி எடுத்த, சிம்புதேவன் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ என்று பெயர் வைத்தார்.
அந்தப் படத்தின் வெற்றியின் காரணமாக அது போன்ற சூழலுக்காகவே வடிவேலு ‘தெனாலிராமன்’ களத்தை தேர்ந்தெடுத்திருக்கக் கூடும்.

இருந்தாலும் தமிழ் நாட்டில் தெலுங்கு அமைப்புகள் என்ற பெயரில் இருக்கும் நாயுடு, ரெட்டி மற்றும் தெலுங்கு பார்ப்பனர்களை உள்ளடக்கிய ஆதிக்க ஜாதிகளின் இந்த கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு, கிருஷ்ணதேவராயனாகவும் தெனாலிராமனாகவும் வடிவேலு என்கிற காமெடி நடிகர் நடிப்பதை அவர்கள் இழிவாக கருதுவது காரணமாக இருக்கலாம்.

ரஜனி, கமல் நடித்திருந்தால் நன்றி தெரிவித்து விளம்பரம் வெளியிட்டு இருப்பார்கள்.

இதை உறுதி செய்வதற்கு ஒரு சாட்சியும் இருக்கிறது. சிவாஜி தெனாலிராமனாகவும் என்.டி. ராமாராவ் கிருஷ்ணதேவராயனாகவும் நடித்து ‘தெனாலிராமன்’ என்ற பெயரில் படம் வந்திருக்கிறது. அப்போது யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சரி. சமீபத்திலும் சில வருடங்களுக்கு முன்னும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக படங்கள் வந்தபோது, அது குறித்து ஒரு வார்த்தையும் கண்டிக்காமல் இருந்த தமிழ் நாட்டில் வாழும் இந்த தெலுங்கு அமைப்புகள், தெனாலிராமன் படத்துக்கு எதிரா கிளம்பிட்டாங்க.

ஏற்கனவே இங்க இனவாத அரசியல் தீவிரமா எரிஞ்சிக்கிட்டிருக்கு. இதுல இவுங்க வேற எண்ணையை ஊத்துறாங்க..

போங்க.. போய் உங்க சமூகத்தில இருக்கிற வசதியில்லாத புள்ளக் குட்டிகளையாவது படிக்க வையுங்க. அது முடியாட்டி அவர்களை சுரண்டுவதையாவது நிறுத்துங்க.

*

05.04.2014 அன்று facebook ல் எழுதியது

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!

தமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங்