சைவ சமயத்திற்குள் ‘ – ’ எவ்வளவு முக்குனாலும்..

I-Dont-Know

சமயக் குரவர்கள் நால்வரில் திருநாவுக்கரசைத் தவிர மற்ற மூவரும் பார்ப்பனர்களே.

இதற்கு நிகழ்கால சாட்சி, சைவ சமய ஈடுபாடு கொண்ட பார்ப்பனர்கள், (அய்யர்கள்) இன்றும் திருநாவுக்கரசு பெயரை வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஞானசம்பந்தன், சுந்தரம், மாணிக்கவாசகம் போன்ற பெயர்களையே அவர்களிடம் பார்க்க முடியும்.

அவ்வளவு ஏன்? சடகோபன், வரதராஜன், ஜானகிராமன், சீதாராமன், கோபாலன், ரங்கராஜன், ரங்கநாதன், வெங்கட்ராமன் போன்ற வைணவ (அய்யங்கார்) பெயர்களையும் சைவ-வைணவ (அய்யர்-அய்யங்கார்) ஒற்றுமையை வலியுறுத்தி வைக்கப்பட்ட சிவராமன், சங்கரராமன் போன்ற பெயர்களையும் வைத்துக் கொள்கிற ‘அய்யர்கள்’; நாவுக்கரசு, திருநாவுக்கரசு என்கிற சைவ சமய பெயரை வைப்பதில்லை.

பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இவர்களை விட, மிக அதிகமாக முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு பெயரை அதிகமாக வைத்திருக்கிறார்கள்.

இது சைவ சமயத்திற்குள் நடக்கிற உள்குத்து. இந்த உள் குத்தில் பார்ப்பனரல்லாத இந்த ஆதிக்க ஜாதிகள் ஞானசம்பந்தன், சுந்தரம், மாணிக்கவாசகம் இந்த பெயர்களையும் பிரியத்தோடு வைத்துக் கொள்வார்கள்.

‘சைவ சமயமே நாங்கள்தான்’ என்று ‘பிள்ளை – முதலி’ எவ்வளவு முக்கினாலும், அவர்கள் பார்ப்பனர்களுக்கு கீழான ‘சூத்திரர்கள்’ தான் என்பதற்கு சாட்சி, அப்பர் அடிகள் என்கிற ஒரு பார்ப்பன அடிமையான திருநாவுக்கரசே.

அதனால்தான் ‘சிறுவன்’ திருஞானசம்பந்தனுக்கு ஒரே பாட்டில் கதவை மூடிய சிவன், பாட்டா பாடிய பிறகுதான் திருநாவுக்கரசுக்கு ‘போதும் நிறுத்தியா’ என்கிற பாணியில் காலதாமதமாக கதவை திறந்தான்.

தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

19 thoughts on “சைவ சமயத்திற்குள் ‘ – ’ எவ்வளவு முக்குனாலும்..

  1. குறவர்கள்- குரவர்கள் என்பதே பொருத்தம் என நினைக்கிறேன்.

  2. இந்த ‘எழுத்தாளருக்கு’ குரவருக்கும், குறவருக்கும் வேறுபாடு தெரியவில்லை. அதற்கிடையில் சைவத்தையும் தமிழையும் வளர்த்த சைவக்குரவர்களை விமர்சிக்க கிழம்பி விட்டார். இப்படி தமிழர்களின் வரலாற்றை, நாயன்மார்களைக் கொச்சைப்படுத்தினால் தான் எழுத்துலகில் முன்னுக்கு வரலாம் என்ற நிலை தமிழ்நாட்டிலிருக்கும் வரை, இப்படி உளறிக் கொண்டே தானிருப்பார்கள். சைவத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் சமமானவர்கள், அவர்கள் என்ன சாதியினராக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு கிடையாது, அப்படி ஏற்றத்தாழ்வு கற்பிப்பது பாவம். அதை அறிவுறுத்துவதற்காகத் தான் சிவன் கோயில்களில் சாதி வேறுபாடின்றி, நாயன்மார்களின் சிலைகள் எல்லாம் சமமாக ஒரே பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பதை அறியாதவர்கள் தான் இப்படி எல்லாம் உளறுவார்கள். சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை மட்டுமல்ல, பிரியக் கூடாதவை.

  3. ஆமாம். குரவர்கள் தான். நன்றி. நான் திருத்தி விட்டேன்.
    நான் எழுப்பிய விசத்திற்குள் வராமல் நீங்கள் தமிழசிரியர் பணியை மட்டும் பார்த்துவிட்டு தப்பித்து போவது முறையாகாது Viyasan Viyas.

  4. //நான் எழுப்பிய விசத்திற்குள் வராமல்///

    நீங்கள் எழுப்பிய விசமத்துக்கு நான் பதிலளித்து விட்டேன். தமிழ்ச்சைவத்தில் நாயன்மார்களுக்கிடையே சாதி வேறுபாடு கிடையாது. பிராமணராகிய சம்பந்தரும், வேளாளராகிய அப்பரும், புலையனாகிய நந்தனாரும், வேடராகிய கண்ணப்பரும், அரசியாகிய மங்கையர்க்கரசியாரும் சமமானவர்கள். அவர்களுக்கு சாதி கற்பிப்பதும், பாகுபாடு காட்டுவதும் பாவம் (சிவநிந்தனை) என்பதை இலங்கையில் சிறுவயதிலேயே சொல்லிக் கொடுத்து விடுவார்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்களுக்குத் தான் அது தெரியவில்லை போல் தெரிகிறது. சூத்திரனாகிய திருநாவுக்கரசருக்கு அப்பர் என்று பெயர் வந்தமைக்கு காரணமே, பார்ப்பனராகிய சம்பந்தர் அவரை தனது தந்தைக்குச் சமமானவர் என்று கருதி ‘அப்பர்’ என்று அழைத்ததால் தான். நாயன்மார்கள் சாதி பாராட்டவில்லை, சாதியை ஒழிக்க அக்காலத்திலேயே பாடுபட்டவர்கள். அதற்கேற்ப வாழ்ந்து காட்டியவர்கள். அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறும், நாயன்மார்களில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சாதியினரும் இருப்பதும், தமிழர்களின் சைவத்தில் சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாவம், சிவனுக்கு முன்னால் எல்லோரும் சமமானவர்கள் என்பதை எடுத்துக் காட்ட, இயற்றப்பட்டதாகக் கூட இருக்கலாம்.
    இப்பொழுது தமிழர்கள் எவருமே திருநாவுக்கரசு என்று தமது குழந்தைக்கு பெயர் வைப்பதில்லை, அநேகமான பெயர்கள் எல்லாம் இஸ், பிஸ் என்று சமஸ்கிருதம் கலந்த பெயர்கள் தான். அதற்காக தமிழர்கள் எல்லாம் திருநாவுக்கரசு போன்ற தமிழ்ப்பெயர்களை வெறுக்கிறார்கள், அவர்கள் தமிழை இழிவாகக் கருதுகிறார்கள் என்று கருத்தாகுமா?

  5. திருநாவுக்கரசு என்ற திருநாமத்தை ஏன் வைக்கவில்லையென்பதற்கு வியாசன் கூறும் பதில் சமஸ்கிருதப்பெயர்களே விரும்பப்பட்டதால். சப்பைக்கட்டு. அன்றிலிருந்து இன்றுவரை வைக்கப்படவில்லை என்பதுதான் மதிவாணன் சொல்வது. அதற்கு காரணம் அப்பரின் சாதியென்கிறார். சைவப்பார்ப்பனரைத் தவிர மற்றவர் வைக்கின்றார்கள். அன்று அப்பூதியடிகள் – செட்டியார் – தன் பிள்ளைக்கு வைத்திருந்தார். இன்று சமுஸ்கிருதப்பெயர்கள் வைக்கப்பட்டாலும், தமிழ்ப்பெயர்களை வைக்கும்போது நாவுக்கரசர் திருநாமத்தைச் சூட்டிக்கொள்வோர் பார்ப்பனரல்லாதோர் மட்டுமே. இலங்கை எப்படியும் இருக்கட்டும். மதிவாணன் அடையாளங்காட்டுவது தமிழரையும் தமிழ்ச்சைவப்பார்ப்பனரகளையும் மட்டுமே.

    வைணவப்பார்ப்பனர்கள் வடமொழி, தமிழ்மொழி இரண்டிலுமே பெயர்கள் சூட்டிக்கொள்கிறார்கள். ஆழ்வார்களில் ஒடுக்கப்பட்ட சாதியினர்கள் மூவருண்டு. ஆனால் அவர்கள் பெயர்களை வைப்பதில்லை என்று வைணவப்பார்ப்பனர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் வைணவர்கள் இரு ஆழ்வார்கள் திருநாமங்களை மட்டுமே சூட்டிக்கொள்வர்; 1. நம்மாழ்வாரின் பல திருநாமங்கள் 2. ஆண்டாள் (பெண்களுக்கு). குலசேகராழ்வார் திருநாமத்தையும் சூட்டிக்கொள்வது. இதுபோக ஆச்சாரியர்கள் திருநாமங்களையும் சூட்டிக்கொள்வதுண்டு. வைணவர்கள் அனைவருமே இப்படித்தான்.

    வியாசன் உண்மையிலே தன் மதத்தில் சாதிகள் இல்லையென்பாரானால், தமிழ்ப்பார்ப்ப்னர் நண்பர்களை அவர்கள் குழந்தகளுக்கு நாவுக்கரசர் திருநாமத்தைச்சூட்டச்சொல்லி, மதிவாணன் போன்றோர் பிற்காலத்தில் இதே குற்றச்சாட்டைப் பார்ப்பனர் மீது வைக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

  6. The caste system in TN will stay for 2000 more years. The reason – cos of guys like you who always brings castiest angle to every damn thing, be it a movie, song or even building toilets….not to blame you but your role model Periyar. Instead of breaking down caste, he spewed venom against people by birth and attached characteristics to certain caste( which is again by birth)…
    In case of clear evidence, TN is only state in India, which has political parties(with strong presence) for each and every caste (PMK, MDMK, DMDMK, VC , KMK, Forward bloc, Puthiya thamizhagam etc) even compared to UP…

  7. //If Nandhan belongs to PULAIYAN and if Dikshidhars “treating” all the “bakthars” at par,why they hell they burned him alive?//

    do you have any facts for that? there are songs/poems which can be interpreted the way people want to…get facts before jumping on the conclusions….and also why don you ask the same to islam? why an wahhabi is not treating subcontinent muslim at par? why an paki muslim is not treating an mujahir muslim(indian) at par post partition? the difference between you and me…you is hinduism is unclean and other religions like islam is clean..I say, all the religions in this world have a dirty side, its for us to take up the clean side instead of whining and posting like the “so called” intelligent comments…

  8. இக்காலத்தில் கூட தீட்சிதர்கள் தமிழர்களின் சைவத்தின் வழி ஒழுகுவதில்லை. தீட்சிதர்களின் செயலுக்கு தமிழர்களின் சைவத்துக்குப் பழியா? சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக, ஐரோப்பிய பாதிரிமார்கள் பெண்களை பேய்களேன்று பழி சுமத்தி உயிரோடு எரித்தார்கள், அதற்காக, யாரும் இன்றும் கிறித்தவத்தை இழிவு படுத்துவதில்லை. ஈழத்து தமிழ்ச் சைவத்தில் நாயன்மார்கள் அனைவரும் சமமானவர்கள், அவர்கள் பாடிய தேவாரங்கள், வேதங்களுக்கு இணையானவை அல்லது அதை விட உயர்ந்தனவே தவிர தாழ்ந்தவையல்ல. இலங்கையில், தமிழ்நாட்டில் போல்,எந்தப் பார்ப்பானுக்கும் தமிழில் தேவாரம் பாடுவதை எதிர்க்க துணிச்சலும் வராது, அப்படி எதிர்த்தால், அவன் அந்த ஊரிலேயே குடியிருக்க முடியாது மட்டுமல்ல, அதற்குப் பிறகு ஒழுங்கா நடக்க முடியாமல் கூட போகலாம். 🙂

    தீட்சிதர்களையும் தமிழர்களின் சைவத்தையும் ஒன்றாக்கி, தாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி, பார்ப்பனீயத்தை எதிர்க்கும் போர்வையில், எமது முன்னோர்கள் கட்டிக் காத்த சைவ/வைணவத்தையும், தமிழர்களாகிய நாயன்மார்களையும் தூற்றிய பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், பகுத்தறிவுவாதிகளும், திராவிட வீரர்களும் திடீரென்று சைவத்திலும், தமிழிலும் அக்கறை கொண்டவர்களாக, தில்லையைக் காக்கக் கிழம்பியதை, பெரும்பான்மைச் சைவத்தமிழர்கள் நம்பவில்லை, அதனால் அவர்களுடன் இணைந்து போராட்டத் தயங்கினார்கள். அவர்களின் தில்லையை மீட்கும் போராட்டமும், அவர்களின் சாதியொழிப்புப் போராட்டங்கள் போலவே பிசு பிசுத்துப் போய் விட்டது. அதனால் தான் தமிழர்களின் மெக்காவாகிய தில்லைச் சிதம்பரம் இன்று தீட்சிதர்களின் கைகளுக்குப் போய் விட்டது. இனிமேலாவது பெரியாரிஸ்டுக்களும், ஏனையோர்களும், முஸ்லீம்களின் மதவுணர்வை மட்டுமல்ல, பெரும்பான்மைத் தமிழர்களின் மதவுணர்வையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் தான், தமிழர்கள் அனைவரும் தமிழர்களாக ஒன்றுபட முடியும் என்பதை உணர வேண்டும்.

  9. தமிழ்நாட்டுச் சைவப் பிராமணர்கள் திருநாவுக்கரசரின் பெயரை மட்டுமல்ல, ஏனைய பிராமண நாயன்மார்களின் பெயர்களையும் கூடத் தான் வைப்பதில்லை. அதனால் முதலில் தமிழர்கள் ‘திருநாவுக்கரசு’ போன்ற தமிழ்ப்பெயர்களை தமது குழந்தைகளுக்கு வைக்கட்டும், அதற்குப் பின்னால் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்.

  10. Viyasan Viyas,
    தீட்சிதர்களையும் தமிழர்களின் சைவத்தையும் ஒன்றாக்கி — Are you saying there are two different saivam in Tamil Nadu?
    Prakash

  11. திருநாவுக்கரசர் திருநாமத்தைத் தமிழ்ச்சைவைப்பிராமணர்கள் ஏன் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டவில்லை என்று கேட்டால், மற்றைய பிராமண நாயன்மார்கள் திருநாமதங்களையும் சூட்டவில்லையென்பதா வியாசனின் பதில்? மேலும், மாணிக்கவாசகர், சுந்தர மூர்த்தி இவர்கள் பெயர்களெல்லாம் அவர்களுக்கு இருக்கின்றனவே? சுந்தர மூர்த்தி அய்யர் கேள்வியே படவில்லையா? கேள்விப்படவில்லையென்றால், சொல்கிறேன். இவர்தான் காஞ்சி மடத்து அக்கவுண்டடண்ட். சங்கரராமன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுள் நான்காவது அக்கயூஸ்ட்.
    மாணிக்கவாசகம், மணிவாசகம் என்று அய்யர் குழந்தைகள் நிறைய உண்டு.
    திருநாவுக்கரசர் திருநாமத்தை மட்டும் ஓரங்கட்டுவதேன் என்ற கேள்விக்கு என்ன நேரடி பதில்? தமிழர்கள் – பார்ப்பனரல்லாதோர் – திருநாவுக்கரசு, நாவுக்கரசு என்ற பெயர்க்ளோடு காணப்படுகிறார்கள். அரசியல்வாதி ஒருவரே இருக்கிறார் அப்பெயரில். அவர் கள்ளர் ஜாதியைச்சேர்ந்தவர்.

    திருநாவுக்கரசு என்ற பெயரை ஓரங்கட்டியவர்கள் தமிழ்ச்சைவப்பார்ப்பனர்களே என்பதுதான் இங்கு மதிமாறன் வைக்கும் குற்றச்சாட்டு. பிராமணரல்லாதோரை இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அக்காலத்தில் அவர்களை ஏற்பது கிடையாது. எனவே மதிமாறனின் குற்றச்சாட்டு நம்பும்படியாகத்தான் இருக்கிறது.

    இலங்கை வேறு. தமிழகம் வேறு. சமூகமும் அதன் உணர்வுகளும் வெவ்வேறானவை. ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தைத் தனியாக எடுத்துப்பேசவும்.

    – Kulasekaran

  12. தீட்சிதர்கள் தமிழ்ச் சைவர்களல்ல. தாம் வெளியிலிருந்து வந்ததாக அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் தமிழ்ச்சைவத்தை விட வேறுபட்ட, அதாவது தமிழ்நாட்டிலுள்ள ஆகம விதிகளுக்குட்பட்ட ஏனைய கோயில்கள் எல்லாம் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் இருந்தாலும், சிதம்பரத்தில் தீட்சிதர்களின் சைவம் “Distinct religious denomination” என்று சுப்பிரமணியம் சுவாமி வாதாடியதால் தான் தமிழர்களின் தில்லைச் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு தாரை வார்க்கப்பட்டது. அதனால், தமிழ்நாட்டில் பலவைகையான சைவம் இருப்பது போன்ற மாயை தோற்றுவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் தமிழர்களின் முன்னோர்களில் கோயில்களில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இது அவர்களின் தவறல்ல, இளிச்சவாய்த் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஒற்றுமையில்லை, இந்துமதத்தை மட்டும் வெறுக்கும் பெரியாரிசம், தமிழர்களைப் பிரித்து, கடைசியில் அவர்களின் முன்னோர்களின் பாரம்பரிய சொத்துக்களையே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டது, இதில் வேடிக்கை என்னவென்றால், பெரியாரிசம் சாதியையும் ஒழிக்கவில்லை, அது தமிழர்களை மேலும் பிரிவடையச் செய்து, தமது சொந்த மண்ணிலேயே தமது சொத்துக்களை மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவதை தடுக்க முடியாத இனமாக தமிழர்களை மாற்றி விட்டது.

  13. இந்தப் பதிவில் திரு. மதிமாறன் மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயன்றிருக்கிறார். அல்லது இலங்கையில் கூறுவது போல், “முட்டையில் *மயிர் பிடுங்க” முயற்சித்திருக்கிறார், அதாவது இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து தனது நேரத்தை வீணாக்கியிருக்கிறார். பார்ப்பனர்கள் அனைவரும் தமிழுக்கு எதிரிகளும் அல்ல, அல்லது எல்லோரும் தமிழில் அளவுகடந்த பற்றுள்ளவர்களும் அல்ல. சோ ராமசாமி போன்ற எத்தனையோ சமக்கிருதவாதிகள் அவர்களிடமும் உண்டு. அதனால் சுந்தரர், மாணிக்க போன்ற சமக்கிருத சொற்கள் உள்ள பெயர்களை அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள். திருநாவுக்கரசு போன்ற சுத்தமான தமிழ்ப்பெயர்களை அவர்கள் இடுவதில்லை என்றும் கொள்ளலாம். மூர்த்தி நாயனார் என்பவர் வணிகர், பிராமணரல்ல, ஆனால் பல பிராமணர்களுக்கு மூர்த்தி என்ற பெயர் உண்டு. தமிழ்நாட்டில் தமிழ்ச்சைவப் பார்ப்பனர்கள், இசைஞானியார், திருநீலநக்கர், பூசலார், புகழ்த்துணை நாயனார் போன்ற பிராமண நாயனார்களின் தூய தமிழ்ப் பெயர்களை இன்றும் தமக்கிட்டுக் கொண்டு திருநாவுக்கரசு என்ற பெயரை மட்டும் ஒதுக்கினால் அதற்கு திருநாவுக்கரசரின் சாதி தான் காரணம் என்று வாதாடலாம். ஆனால் அப்படி எதுவுமில்லை, அதனால் இந்தப் பதிவு பார்ப்பனர்களையும், பார்ப்பனர்களரல்லாத இந்துக்களையும் சிண்டு முடித்து விடும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

    (* இலங்கைத் தமிழ்ப் பேச்சுவழக்கில் ‘மயிர்’ என்பது தமிழ்நாட்டில் போல் கெட்ட வார்த்தையல்ல) 🙂

  14. திருநாவுக்கரசரை பார்ப்பன அடிமைன்னு மரியாதை இல்லாம எழுதறேள். எங்காத்துக் கொழந்தைக்கும் திருநாவுக்கரசுன்னு பேர வச்சுட்டு திருநாவுக்கரசு இங்க வாடான்னு உம்ம கணக்கா மரியாதை கொடுக்காம கூப்பிடச் சொல்றேளா? சம்பந்தரே அவர் பேரைச் சொல்லாம அப்பரே அப்டீன்னு கூப்பிட்டார். சம்பந்தா, சுந்தரா இங்க வாடான்னு கூப்பிடறது கணக்கா அந்தப் பெரியவர் பேரச் சொல்லி மரியாதை இல்லாமல் கூப்பிட முடியுமோ? அப்டியே வாய் தவறி கூப்பிட்டாலும் பக்கத்து வீட்டுப் பிள்ளைவாளும், எதிர் வீட்டு முதலியாரும் சும்மா இருப்பாளோ? அவா சும்மா இருந்தாலும் உம்ம மாதிரி விஷமக்கொடுக்குகள் அவாள சும்மா இருக்க விடுவாளோ? நடக்க விடாம பண்ணிட்டா என்ன பண்றது? அப்றம் இன்னோரு விஷயமும் இருக்கு ஓய். அந்த அப்பூதி பிராமணர் தன் பிள்ளைக்கு பெரியவர் மேல உள்ள பக்தியால திருநாவுக்கரசுன்னு பேர வச்சார். என்ன ஆச்சு. பாம்பு கொத்தி அல்பாயுசுல போயிடுத்து. அப்போ திருநாவுக்கரசர் அதுக்கு உயிர குடுத்து காப்பாத்திவிட்டார். அப்பூதி அய்யர் பிள்ளைக்கே அப்படி ஆயிடுத்துன்னா அப்பறம் வேற அய்யர் யாராவது தன் கொழந்தைக்கு அந்த பேர வைப்பாரோ? அப்படியே பேர் வெச்சாலும் ஏதோ கோபத்துல மகனை வாய் தவறி மரியாதை இல்லாம கூப்பிட்டுத் தோலைச்சார்ன்னு வையும். நாம பண்ற சிவநிந்தைக்கு பாம்பு மட்டுமா கொத்தும்? அப்பறம் கோயிலுக்குப் போய் எம்புள்ள உயிர காப்பாத்துங்கோன்னு திருநாவுக்கரசரை கூப்பிட முடியுமோ? இப்படி நாலையும் யோசிக்காம கோள் மூட்டி விடறதே வேலையா வெச்சுண்டுருக்கீர்.

  15. @Viyasan Viyas

    “இலங்கையில், தமிழ்நாட்டில் போல்,எந்தப் பார்ப்பானுக்கும் தமிழில் தேவாரம் பாடுவதை எதிர்க்க துணிச்சலும் வராது, அப்படி எதிர்த்தால், அவன் அந்த ஊரிலேயே குடியிருக்க முடியாது மட்டுமல்ல, அதற்குப் பிறகு ஒழுங்கா நடக்க முடியாமல் கூட போகலாம். ”

    தமிழ் நாட்டில் பிராமணர்கள் தேவாரம் பாடுவதில்லையோ? இப்படி வன்முறையைத் தூண்டிவிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

Leave a Reply

%d bloggers like this: