மோடி பிரதமரானால் தீட்சிதர்களை ஒழித்துக் கட்டுவார்!
மோடி ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியா வல்லரசு ஆகுமாம். தமிழக மக்கள் எல்லாம் தாமரை சின்னத்தில் வாக்களிக்க தவமிருக்கிறார்களாம்.
இந்த சமூக நீதி கருத்தை உதிர்த்தது, சிதம்பரம் கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து மீட்பதற்காக போராடிய மாவீரன் முன்னாள் அமைச்சர் வி.வி. சுவாமிநாதன்.
மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியா வல்லரசு ஆகுறது இருக்கட்டும். சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் கையிலிருந்து அரசுக் கட்டுபாட்டிற்கு வருமா?
அது சரி, இந்த நாட்டுக்கு மோடி பிரதமர் ஆனதற்குப் பிறகு, சிதம்பரம் கோயில் தீட்சிதர் கையில் இருந்தா என்ன.. அரசு கையில் இருந்தா என்ன? (இனி நீ வயசுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன?)
தன்னிடம் டிரைவராக வேலைப் பார்த்த பெரியவர் சிவனடியார் ஆறுமுக சாமிக்கு ஒழுங்கா சம்பளமும் நல்ல செட்டில் மெண்டும் கொடுத்திருந்தா அவுரு ஏன் அடுத்த வேளை உணவுக்கு சிரமபட்டு வாழப்போறாரு..? அத செய்ய முடியாத இவரு,
மோடிய கூட்டிக்கிட்டு வந்து இந்தியாவ வல்லரசு ஆக்கப் போறாராம்.
*
17-04-2014 அன்று facebook ல் எழுதியது.
தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’
//பெரியவர் சிவனடியார் ஆறுமுக சாமிக்கு ஒழுங்கா சம்பளமும் நல்ல செட்டில் மெண்டும் கொடுத்திருந்தா அவுரு ஏன் அடுத்த வேளை உணவுக்கு சிரமபட்டு வாழப்போறாரு..? ///
தமிழ்க்கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் பெரியவர் சிவனடியார் ஆறுமுகசுவாமியின் முயற்சியைப் பாராட்டி, 2008 இலே கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்பட்டதாக செய்தி வெளிவந்ததே. அந்த ஓய்வூதியத்தையும் நிறுத்தி விட்டார்களா?
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
http://www.Nikandu.com
நிகண்டு.காம்
தில்லை கோவிலை மீட்கத்தான் மாவீரன், இராஜபஷே முன்பு மண்டியிட்டு பம்மிய எழுச்சிப் பொட்டை புலி திருமா கிளம்பியுள்ளாரே ! ! !
சிதம்பரம் கோவிலை அரசுடைமையாக்க திருமாவளவன் கோரிக்கை
http://tamil.oneindia.in/news/2008/03/04/tn-thirumavalavan-wants-tn-govt-to-take-over.html
சிதம்பரம் தீட்சிதர்களிடம் ஆதரவு கேட்ட திருமாவளவன்; மாலை அணிவித்து மரியாதை!!
http://tamil.oneindia.in/news/tamilnadu/vck-chief-reaches-to-dikshitars-lse-198429.html
” எழுச்சிப் பொட்டை புலி ”
அநாகரிகமான, ஆணாதிக்க வார்த்தைகளால் வசை பாடுவதை உங்கள் வலைதளத்தில் தயவு செய்து அனுமதிக்க வேண்டாம் தோழர் மதிமாறன்.