ஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி

IMG_0014

Jennifer உடன் கீதா

பாரதிய ஜனதா, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காமல் இருந்திருந்தால், அது யோக்கியமான கட்சி ஆகி விடாது. அதுபோல் ஜோ டி குரூஸ், மோடி யை ஆதரிக்காமல் இருந்திருந்தால் அவர் ‘சமூகநீதி’ எழுத்தாளராகி விடமாட்டார்.

அவரின் மோடி ஆதரவு திடிரென்று முளைத்த ஒன்றல்ல. கிறத்துவரான அவர் இந்துக் கண்ணோட்டம் கொண்ட இலக்கியவாதியாக (சந்தர்பவாதியாக) இருந்ததால்தான் மோடியை ஆதரிக்கிறார். சாகித்திய அகடாமி விருது பெற்ற உடனேயே அவருக்கு ‘இந்து அமைப்பு’ பாராட்டு விழா நடத்தியதும் அதனாலேதான்.

இந்து முன்னணி ராம. கோபாலன் மோடியை ஆதரிக்காமல் முஸ்லிம் லீக்கையா ஆதரிப்பார்?

ஆக, ஜோ டி குரூஸிடம் எந்த மாற்றமும் இல்லை. அவர் அவராகத்தான் இருக்கிறார்.

இப்படி பட்டவரின் நாவலை ‘நவயனா’ ஆங்கிலத்தில் கொண்டு வர ஒப்பந்தம் போட்டதும், அதை மொழி பெயர்க்க வ. கீதா முயற்சித்ததும்தான் பச்சையான சந்தர்பவாதம்.

அது மட்டுமல்ல, மோடி யை எதிர்ப்பதற்கு ஒருவர் அரசியல் ரீதியாக தீவிரமான பெரியார் அம்பேத்கர் கருத்துக்களை கொண்டவராகவோ கம்யுனிஸ்டாகவோதான் இருக்க வேண்டும் என்பதல்ல; காங்கிரஸ் காரராக இருந்தாலே போதும்.

ஆனால், ஜோ டி குரூஸை மறுக்கும் நவயானின் யோக்கியதை மோடியின் யோக்கியதையை போலவே மோசமானது. தத்துவார்த்த ரீதியாக பொய் சொல்வதில் மோடிக்கு சவால் விடுபவர்கள்தான் இவர்கள்.
பெரியார் மீது பா.ஜ.க காரர்கள்கூட சொல்லாத அளவுக்கு இழிவான அவதூறுகளை எழுதிய அல்லது பா.ஜ.க வினருக்கே ‘போலி பாயிண்ட்’ எடுத்து கொடுத்த ரவிக்குமார் தான் அதற்கு முதலாளி.

பெரியார் மீதான அவதூறுகளை திட்டமிட்டு ஆங்கிலத்தில் கொண்டு சேர்த்தவர்தான் நவயானின் இன்னொரு முதலாளி, எஸ். ஆனந்த் என்கிற பார்ப்பனர். இவர்களின் புதிய கூட்டு வ. கீதா.

பெரியார் மீது அவதூறுகள் வந்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் பெரியாரிஸ்டுகளுக்கு தான் உண்டு. தன்னை தீவிரமான பெரியாரிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்ட வ. கீதா, இதுவரை அப்படி ஒரு பதிலை எழுதியதே இல்லை.

1996 ஆம் ஆண்டு எஸ்.வி. ராஜதுரையும் – வ. கீதாவும் இணைந்து எழுதிய விடியல் வெளியீடாக வந்த ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலை, அப்போது நடந்த வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து ரவிக்குமாரை தான் வெளியிட வைத்தார்கள். அன்று பெரியாரை புகழ்ந்து பேசிய ரவிக்குமார் தான், பின்னாட்களில் பெரியார் மீது அவதூறுகளை வாரி இறைத்தார்.

அவருக்கான பதிலை சொல்ல வேண்டிய கடமை மற்ற எல்லோரையும் விட எஸ்.வி. ராஜதுரை – வ. கீதா இருவருக்கும் தான் உண்டு.
ஆனால் ரவிக்குமாருக்கான பதிலை இதுவரை இருவரும் இணைந்தும் எழுதியதில்லை. தனி தனியாகவும் எழுதியதே இல்லை.

இப்படியாக பல மோசடி அறிவாளிகளிடமிருந்து தொடர்ந்து பெரியார் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு எந்த பதிலையும் தராமல், மவுனம் காத்த வ. கீதா, அதற்குப் பரிசாகத்தான் நவயனா பதிப்பகத்த்தின் மொழிபெயர்ப்பாளர் பணியை பெற்றார் போல.

பெரியார் பற்றி அவதூறுகளுக்குப் பதில் சொல்லாமல் இருப்பதும், யார் பெரியார் பற்றி கேவலமாக எழுதினார்களோ அவர்களோடு இணைந்து இலக்கிய மற்றும் சமூக பணி செய்வதுதான் ஒரு பெரியாரிஸ்ட்டிற்கான அழகா?

அது மட்டுமல்ல; எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா, அ. மார்க்ஸ் மூவருக்கும் பல ஓற்றுமைகள் உண்டு. இவர்கள் தங்களை மார்க்சிய அறிஞர்களாக அடையாளப்படுத்திக் கொண்டே மார்க்சியத்திற்கும் காந்திக்கும் முடிச்சுப் போட்டவர்கள். பார்ப்பன பாரதியை பாசத்தோடு பார்ப்பவர்கள்.  பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்கள்.

எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து, ‘மார்க்ஸ் பெண்களுக்காக பேசவில்லை’ என்ற கண்ணோட்டத்தோடு காரல் மார்க்ஸ் பெண்களை புறக்கணித்தார் என்ற தொணியில் ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’ புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்கள்.
பெரியாரிஸ்டாக மாறிய பிறகு, பெரியாரையும் காந்தியவாதியாக்க முயற்சித்தார்கள்.
இதில் வ. கீதா, ‘காந்தி மனசாட்சி என்று சொன்னதைதான். பெரியார் பகுத்தறிவு என்று சொன்னார்’ என்று துணிந்து பெரியாரை பற்றி மனசாட்சியே இல்லாமல் ஒரு மதிப்பீட்டை தந்தார். ‘காந்திய அரசியல்’ என்று புத்தகமும் எழுதியிருக்கிறார்.

டாக்டர் அம்பேத்கர் சிந்தனைகள் என்று ஒன்று இருக்கும்போது, அதற்கு மாற்றாக தலித்தியம் என்றும் இயங்குபவர்தான் கீதா.

மார்க்சியவாதிகளாக இருந்து பெரியாரியல் ஆய்வாளராக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள், அதன் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினையை இன்னும் தீவிரமாக பார்க்க வேண்டுமானல் டாக்டர் அம்பேத்கரோடுதான் பயணித்திருக்க வேண்டும்.
ஆனால் வ. கீதா ‘தலித்தியம்’ என்கிற பெயரில் தலித் உட்ஜாதி தலைவர்கள் குறித்து தான் அதிகம் பேசினார். இயங்கினார். காந்தி பற்றி எழுதியவர், டாக்டர் அம்பேத்கர் பற்றி எந்த புத்தகமும் எழுதியதில்லை

டாக்டர் அம்பேத்கரை புறக்கணிப்பதும், தவிர்ப்பதும் அவரை எதிர்ப்பதை விட மோசமானது. தலித் மக்களோடு தோழமையாக இருந்து கொண்டு, டாக்டர் அம்பேத்கரை இருட்டடிப்பு செய்து, மாற்றாக தலித் உட்ஜாதி தலைவர்களை நிறுவுகிற, இந்தக் கண்ணோட்டமே தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கண்ணோட்டம்தான்.

தன் கையை கொண்டே தன் கண்ணைக் குத்த வைக்கிற, இது போன்றவர்களின் செயலைக் கண்டித்து, 2004 ஆம் ஆண்டு புதிய கலாச்சாரம் இதழில் ‘அம்பேத்கரை தள்ளி வைத்த தலித்தியம்’ என்ற தலைப்பிட்டு நான் ஒரு கட்டுரை எழுதினேன்.

‘தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு தொடர்பு உடையவர்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டும் காந்திய கண்ணோட்டம் போன்றவற்றிற்காகவும் பேராசிரியர் அ. மார்க்சும் எழுத்தாளர் ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரையும் கடுமையாக விமர்சிக்கப் பட்டார்கள். ஆனால் வ. கீதா விமர்சிக்கிப்படவில்லை.
இவர்கள் இருவரை விடவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு ‘சிறுவர்களுக்கான இலக்கியம்’ என்று இன்னும் கூடுதலாக செயல்பட்டவர் வ. கீதா தான்.

பேராசிரியர் அ. மார்க்ஸையும் ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரையும் நான்கு வார்த்தைகளில் கடுமையாக விமர்சனம் செய்தால், வ. கீதாவை ஏழு வார்த்தைகளில் விமர்சித்திருக்க வேண்டும். ஆனால் கீதா விற்கு மட்டும் விமர்சனங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

அதுபோக, ‘பெரியார் தலித் தலைவர்களை இருட்டடிப்பு செய்து விட்டார்’ என்ற குற்றசாட்டுக்கு எந்த பதிலையும் தராத பெரியாரிஸ்டான வ. கீதா,
இன்னொரு புறத்தில் ‘பெரியாருக்கு முன்பே இதை செய்தவர் இவர்தான்’ என்று தலித் உட்ஜாதி தலைவர்களை குறித்து பேசியும் இருக்கிறார்.

எழுத்தாளர் ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரை, பேராசிரியர் அ. மார்க்ஸ், வ. கீதா இந்த மூவரில் பேராசிரியர் அ. மார்க்ஸ் ஒருவரே, நவயனா பதிப்பகத்தின் முதலாளிகளான, பெரியார் பற்றி அவதூறு செய்த ரவிக்குமாரையும் பார்ப்பனர் ஆனந்தையும் தொடர்ந்து அம்பலப்படுத்தினார். அதன் பொருட்டே அவர் கடுமையான எதிர்ப்புகளையும் சந்தித்தார்.

அதனால்தான் பெரியாரிஸ்டான கீதா வுடன் இணைந்து ‘சமூக பணி’ செய்ய புறப்பட்டு இருக்கிற அவர்கள், இன்றளவும் பேராசிரியர் அ. மார்க்சிடம் பெயரளவில் கூட தொடர்பு கொள்வதை தவிர்க்கிறார்கள். எதிர்க்கிறார்கள்.

மற்றபடி ஜோ டி குருஸ் புத்தகத்தை மொழி பெயர்ந்து வெளியிட பொருத்தமானவர்கள் வ. கீதாவும் நவயனும்தான்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் ஜோடி குருஸ் தான் எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும். இவர்கள் முந்திக் கொண்டதால், இவர்களே மதவாதத்தை எதிர்க்கிற தியாகிகளாகி விட்டார்கள்.

காரணம், மோடியை ஆதரித்து வெளிப்படையாக ஜோ டி குரூஸ் பேசிய பிறகும் இவர்கள் அவர் புத்தகத்தை மொழி பெயர்த்துக்கொண்டிருந்தால், முற்றிலுமாக அம்பலமாகி இருப்பார்கள். அதனால் முந்திக் கொண்டார்கள்.

‘தமிழ்நாட்டில் பெரியார் என்றால் தெரியாது. பெரியார் அணை என்றால்தான் தெரியும்’ என்று கேலி பேசிய ஆனந்தின் நவயனாவுடன் இணைந்து, ரவிக்குமாரின் பெரியார் அவதூறுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்காத வ. கீதாவிற்கு, அந்த வகையில் நாம் கோடான கோடி நன்றிகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.

IMG_0001

படங்கள் நன்றி: Jennifer அவர்களின் இணைப்பு
http://the-jammer.blogspot.in/2008/03/last-weeks-in-chennai.html
http://the-jammer.blogspot.in/2008/03/my-family-in-india.html
*

19-04-2014 அன்று facebook ல் எழுதியது.

K.J.ஜேசுதாஸின் பக்தியும் ‘நவீன’ இலக்கியவாதிகளின் புத்தியும்; சாகித்திய அகடாமி விருது!

அறியாமை விலக டாக்டர் அம்பேத்கரை வாசியுங்கள்

தில்லை அந்தணர்-சிதம்பரம் தீட்சிதர்-‘சைவ சமயம் அயோக்கியப் பயல்கள் கூட்டம்!’

மோடி பிரதமரானால் தீட்சிதர்களை ஒழித்துக் கட்டுவார்!

சைவ சமயத்திற்குள் ‘ – ’ எவ்வளவு முக்குனாலும்..

9 thoughts on “ஜோ டியை ஆதரிக்கும் மோடி ; நவயனா வ.கீதாவின் சந்தர்ப்பவாத காமெடி

  1. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்கள்.

    எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் இணைந்து, ‘மார்க்ஸ் பெண்களுக்காக பேசவில்லை’ என்ற கண்ணோட்டத்தோடு ஷீலா ரௌபாத்தம் எழுதிய ‘அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்’ புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்கள்.

  2. பார்ப்பனர் ஆனந்த், பார்ப்பன பாரதி, ஆனால் வே கீதா. அவளை மட்டும் பார்ப்பனர் கீதா என்று அழைக்காததிற்குக் காரணம்?

  3. “நவயனா” பார்ப்பன கும்பலின் அரசியலைப் பற்றிroundtableindia.co.in தளத்தில் நிறைய விவாதிருக்கிறார்கள் தோழர்.சிறு புத்தகமாக ஆங்கிலத்தில் வெளியீட்டிருக்கிறார்கள்.

  4. Pingback: puskinr

Leave a Reply

%d