அந்தப் பாடலில் வரும் இசை நிலைகுலைய செய்கிறது!

 

x240-MBg

வார்த்தைகளின் பின்னணியில் குழைந்து குழைந்து இனிமை சேர்க்கிறது வயலின். அந்த நீண்ட பல்லவி முடிந்தவுடன் இடையிசையின் இடையில், மிகச் சரியாக வீணையின் இனிமையை தொடர்ந்து துவங்குகிறது ஷெனாயின் உருக்கும் உன்னதம்.

‘மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்…’
என்று முடித்தவுடன் மீண்டும் இசைக்கிற ஷெனாய் நம்மை திக்குமுக்காட வைக்கிறது.

‘ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்… 
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்’ என்ற இடத்தில் ஒலிக்கிற ஷெனாய் இம்முறை நம்மை நிலைகுலைய வைக்கிறது.

‘பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்..’
இப்போதும் அதே குறிப்புகளோடுதான் ஷெனாய் ஒலிக்கிறது; ஆனால் நம் நிலமையோ, கலக்கமுற்ற உணர்வுகளால் செய்வதறியாது தவிக்கிறது.

55 ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையில் உருவான பாடல் இது. இந்தப் பாடலில் ஷெனாய் வாசித்த கலைஞன் யார் என்று தெரியவில்லை.

இதுபோலவே ‘மாலை பொழுதின் மயக்கத்திலே நான்..’ என்ற பாடலிலும் ஷெனாய் நம்மை கண்ணீர் மல்க வைத்துவிடும்.
இதை வாசித்த அந்த மகா கலைஞனுக்கு நடுங்கும் விரல்களோடு கரம் குவித்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேட்க:
http://download.tamiltunes.com/songs/__P_T_By_Movies/Pasamalar/Malarkalai%20Pol%20-%20TamilWire.com.mp3

உன்னதம்: இளையராஜா-மகேந்திரன்-ஸ்ரீதேவி-ரஜினி

ஒரு குண்டுமணி குலுங்குதடி: எளிய தமிழனின் குரல் உன்னத பாவங்களோடு

மலர்ந்தும் மலராத ‘பாசமலர்’

இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

6 thoughts on “அந்தப் பாடலில் வரும் இசை நிலைகுலைய செய்கிறது!

  1. அது ஒரு காலம்…யாவருமே ரசிகர்களாக இருந்ததால் வந்த விளைவுகள் இப்பாடல்கள்.
    இன்று …ம் வேண்டாம்

Leave a Reply

%d bloggers like this: