பூனக்குட்டி தம்பி புலிக்குட்டியும்…

maxresdefaultதமிழ் உணர்வோடு ஆங்கிலத்தை எதிர்க்க தெரிந்த மாவீரர்கள், சமஸ்கிருதத்தின் தமிழர், தமிழ் விரோத போக்கைப் பார்த்து வாலை சுருட்டிக் கொண்டு ஓரங்கட்டுவதை நாம் கண்கூடாக பார்த்ததே.

‘தமிழ், அரச்சனைக்கு தகுதியற்ற மொழி’ என்பதும் நாம் அறிந்ததே. அதுகுறித்து கேள்வி கேட்க, பக்தி உணர்வு கொண்ட தமிழ் உணர்வளார்களுக்கும் பலவகையான பஞ்ச் டயலாக் தமிழ்ப் பற்றாளர்களுக்கும் சூடு சொரணை கிடையாது என்பதும் நாம் நன்கு அறிந்ததே.

‘பெயர் பலகையை தமிழில் வை’ என்று போராடியவர்கள் கூட ‘தமிழில் அர்ச்சனை செய்’ என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிற அளவிற்குக் கூட தைரியம் இல்லாதவர்கள் தான் என்பதை அந்த வீரம் செறிந்த போராட்டங்களின் போதும் அதன் பிறகான அவர்களின் பல தியாகங்களின் போதும் கூடுதலாகவே அறிந்தோம்.

இந்த நிலையில் அரச்சனைக்கு மட்டுமல்ல, தமினுக்கு பெயராக வைத்துக் கொள்வதற்கும் கூட தமிழுக்குத் தகுதி கிடையாது என்பதையும் முதல்வர் ஜெயலலிதா பலமுறை குழைந்தைகளுக்கு சமஸ்கிருத பெயர் வைத்து நிரூபித்திருக்கிறார்.

சரி. தமிழனுக்குத்தான் தமிழ்ப் பெயர் வைக்க முடியவில்லை, வண்டலூரில் உள்ள விலங்குகளுக்காகவது தமிழ்ப் பெயர் வைப்பாரா என்று பார்த்தால் அதற்குக் கூட தமிழுக்குத் தகுதியில்லை என்பதைப்போல் தொடர்ந்து புலிகளுக்கு சமஸ்கிருத பெயர் வைத்து சாட்சியாக்கியிருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா ஏழு புலிக் குட்டிகளுக்கு அர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று பெயர் சூட்டினார்.

அதுபோலவே, வண்டலூரில் புதிதாக பிறந்த புலிக்குட்டிகளுக்கு நேற்று முதல்வர்; தாரா, மீரா, பீமா, ஆதித்யா கர்ணா என்று பெயர் சூட்டியுள்ளார்.

முதல்வரின் தமிழ்ப்புறக்கணிப்பையும் சமஸ்கிருத முக்கியத்துவத்தையும் கண்டித்து, தமிழ்நாட்டில் இருக்கிற புலிக் குட்டிகள் ‘மியாவ்’ என்று கூட சத்தம் எழுப்பாமல் பதுங்குகின்றன.
‘இந்தப் பதுங்கள் பாய்வதற்காகத்தான்’

ஏற்கனவே நாம பாக்கல…
அதான் தமிழ்ப்புத்தாண்டை திருவள்ளுவர் தினத்திலிருந்து மீண்டும் சமஸ்கிருத ஆண்டுக்கு மாற்றியபோதும், சமச்சீர் கல்விக்கு மூடுவிழா நடத்த முயற்சித்த போதும்.. அப்படியே பதுங்கி இருந்துவிட்டு,
பிறகு சட்டமன்றத்தில் இலங்கை பிரச்சினைக்காக தீர்மானம் போட்டபோது, புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் பாய்ந்ததை.

சொல்ல முடியாது… இப்போது கூட, முதல்வர் புலிகளுக்கு பெயர் வைத்ததை ஆதரித்து, ‘புரட்சித் தலைவி தீவிரமான புலி ஆதரவாளர்’ என்று அறிவித்து பாராட்டுவிழா நடத்தினாலும் நடத்துவார்கள்.

அது சரி.

புலிக்குட்டிகளுக்கு எப்பவுமே இந்து பெயர்களையே வைக்கிறாரே முதல்வர்; எல்லாமே இந்துப் புலிக் குட்டிகள்தானா?
முஸ்லீம், கிறித்துவ புலிக் குட்டிகள் ஒன்றே ஒன்று கூடவா கிடையாது?

நேற்று (10-5-2014)  facebook ல் எழுதியது.

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…