மோடி யை சுப்பிரமணியண் சுவாமி ஆக்கும் சு. சுவாமி

04_02_2013-jayant

மோடி யிடம் இல்லாத ஒரே பொருத்தம் அவர் பார்ப்பனராக இல்லாததுதான். ஆனால், பார்ப்பனராகும் தகுதி மோடிக்கு இருக்கிறது. அவரை பார்ப்பனராக்கும் பார்ப்பன சுப்பிரமணிய சுவாமியே அதற்கு உதாரணம்.

இதற்கு முன் சு சுவாமி, தன்னை தேவர் என்று சொல்லிக் கொண்டார். ‘நீ பிராமணனே கிடையாதுடா… தேவர்..’ என்று சு சுவாமியிடம் அவர் அம்மா குறிப்பிட்டதாக பெருமையோடு தேவர் ஜாதி மேடையில் அறிவித்தார்.

சு. சுவாமிக்கு ஒரு வேண்டுகோள்; பலபேர் பார்ப்பனராவதற்கு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய அடிமைப் புத்தி பார்ப்பனியத்திற்கு சேவகம் செய்து நக்கி பிழைப்பதிலேயே அதிக நாட்டம் கொள்கிறது.

ஆக, மோடி மட்டுமல்ல பல ‘கேடி’ பேர் ‘அது முடியலையே’ என்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘பஞ்ச்’ டயலாக் பேசுகிற பலபேர் பார்ப்பனியத்தைப் பார்த்தால் பம்முவதும் பல் இளிப்பதும் அதனாலேயேதான்.
ஆக, அவர்களும் மோடி யைப் போலவே முழுத் தகுதியோடு இருக்கிறார்கள், பார்ப்பனராவதற்கு.

தயவு செய்து அந்த மாவீர்களையும் பார்ப்பனராக்கி ஜெயேந்திரனின் பல்லைப்போல் மாத்திவிட்டுரு. எங்களுக்கு வேலை மிச்சம்.

*

இத்தனை நூற்றாண்டுகளாக பார்ப்பனியத்தை வாழவைப்பது. பார்ப்பனரல்லாதவர்களே. பார்ப்பனர்களின் ஆயுதங்களும் அவர்களே.

பார்ப்பனர்களிடமிருக்கும் பார்ப்பனியத்தைவிட, பார்ப்பனரல்லாத அடிமைகளின் பார்ப்பனியம் பேராபத்து நிறைந்தது. அதற்கு ‘மோடி’ யே ஒரு இந்திய உதாரணம்.

*

பார்ப்பனியத்திற்காக சமணர்களை பவுத்தர்களை கொன்று குவித்தது நேரடியாக பார்ப்பனர்கள் அல்ல; அவர்களின் அடியாட்களான பார்ப்பனரல்லாத சேர, சோழ, பாண்டிய பச்சைத் தமிழ் மன்னர்களே.
அதனால்தான் மன்னர்களை பார்ப்பனர்களுக்கு அதிகம் பிடிக்கிறது.

இந்து மதத்தின் பெயரில் இஸ்லாமியர்களை கொன்று குவித்தது பார்ப்பனர்கள் அல்ல; அவர்களின் அடியாளான மோடி யே.
அதனால்தான் பார்ப்பனர்களுக்கு மோடி யை அதிகம் பிடிக்கிறது.

*

இன்று காலையும் மாலையும் facebook ல் எழுதியது.

‘அழுகிய முட்டையே அதிகபயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்

பா.ஜ.க. அலுவலகம் மீதான தாக்குதலும் சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலும்

7 thoughts on “மோடி யை சுப்பிரமணியண் சுவாமி ஆக்கும் சு. சுவாமி

  1. # இந்து மதத்தின் பெயரில் இஸ்லாமியர்களை கொன்று குவித்தது பார்ப்பனர்கள் அல்ல; அவர்களின் அடியாளான மோடி யே.
    அதனால்தான் பார்ப்பனர்களுக்கு மோடி யை அதிகம் பிடிக்கிறது.##

    ஆனால் ஈழத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள ராணுவத்தோடு சேர்ந்து தமிழ் மக்களை கருவறுத்த முஸ்லிம்களுக்கு ஆப்படித்த பிரபாகரனை பார்ப்பனர்களுக்கு கடைசி வரை பிடிக்கவில்லையே ஏன் ?

  2. சௌதி அண்மையில் நாத்திகர்களை எல்லாம் பயங்கரவாதிகள் என சட்டத்தை இயற்றியதுதாம். நிங்க ஏன் அங்க போகக்கூடாது

  3. /////சேர, சோழ, பாண்டிய பச்சைத் தமிழ் மன்னர்களே……//// இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்களே இப்புண்ணிய பூமியில் இல்லையே… பின்பு ஏன் இந்த வாதம்?

  4. /////சேர, சோழ, பாண்டிய பச்சைத் தமிழ் மன்னர்களே……//// இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்களே இப்புண்ணிய பூமியில் இல்லையே… பின்பு ஏன் இந்த வாதம்? தாங்கள் அறியாத ஒன்று குறித்து கருத்திடவேண்டாம், சவூதிக்கே செல்லுங்கள் நீங்கள் அனைவரும்.

  5. ஆஹா… யவனர்கள் குதிரைகள், சுல்தான் பாண்டியன் மதுரை …. என வெட்டி விவாதம் வேண்டாம், இஸ்லாமியர்கள் இங்கே வாழ்ந்தார்களா என்பதே கேள்வி

  6. /////சேர, சோழ, பாண்டிய பச்சைத் தமிழ் மன்னர்களே……//// இக்காலகட்டத்தில் இஸ்லாமியர்களே இப்புண்ணிய பூமியில் இல்லையே… பின்பு ஏன் இந்த வாதம்? தாங்கள் அறியாத ஒன்று குறித்து கருத்திடவேண்டாம், சவூதிக்கே செல்லுங்கள் நீங்கள் அனைவரும். ஆஹா… யவனர்கள் குதிரைகள், சுல்தான் பாண்டியன் மதுரை …. என வெட்டி விவாதம் வேண்டாம், இஸ்லாமியர்கள் இங்கே வாழ்ந்தார்களா என்பதே கேள்வி

Leave a Reply

%d bloggers like this: