ஆ. ராசா வெற்றிபெற வேண்டும்..

a_raja_dmk_1349433472_1349433505_460x460

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மரியாதைக்குரிய ஆ. ராசா வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.

‘அவர் மட்டும் தோல்வியுற வேண்டும்’ என்று கிரிமினல்கள் உட்பட பலரும் தீவிரமாக வேலை செய்தார்கள். விரும்புகிறார்கள்.
‘காங்கிரஸ், பி.ஜே.பி அதிமுக உட்பட எல்லோரும் ஓர் அணி; ஆ. ராசா தனி’ என்பதாகவே இந்த தேர்தல் இருந்தது.

பார்ப்பனர்களும் பார்ப்பன மனோபாவம் கொண்டவர்களும் பார்ப்பனர்களிடம் நற்பெயர் வாங்கி; வாங்கி.. வாங்கி.. வாழ்க்கை நடத்துபவர்களும்
மோடி வெற்றி பெற வெண்டும் என்று பேசிய நடுநிலையாளர்களும்; ராசா தோற்க வேண்டும் என்று ஆவேசம் கொண்டார்கள்.

ஆ.ராசா விற்கு எதிரான இந்த ஆவேசமும் வெறுப்பும் ஊழலுக்கு எதிரான மனோபாவம் அல்ல; அதையும் தாண்டி காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்டது.

ஜெயேந்திரன் விடுதலைக் குறித்து கருத்து சொல்லாதவர்களும், மத்தவன் காறி துப்பப் போறான் என்பதற்காக பெயரளவில் ஒப்புக்கு ஜெயேந்திரனுக்கு வலிக்காத அளவுக்கு கண்டித்தவர்களும் ‘பார்ப்பனியம்’ என்றுகூட சொல்ல முடியாத பார்ப்பன எதிர்ப்புப் போராளிகளும்
ஆ.ராசா தோல்வியடைய வேண்டும் என்று வெட்கமில்லாமல் வெகுண்டெழுகிறார்கள்.

ஸ்பெக்டரம் ஊழல் குற்றச்சாட்டு குறித்து தன் மீது வீசப்பட்ட கேள்விகளுக்கு பலமுறை விரிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த விளக்கம் குறித்து குறுக்குக் கேள்வி கேட்க அறிவற்றவர்கள், மீண்டும் ஊழலுக்கு எதிரான போராளிகளாக வேசம் போடுகிறார்கள்.

ஆ.ராசா விற்கு எதிராக நேரடியாகவும் உள்குத்துகளுடனும் அவர் தோற்க வேண்டும் என்று நடந்த சதியை முறியடித்து, அவர் வெற்றி பெறுவர் என்று நம்புகிறேன். தோல்வியுற்றாலும் பிரச்சினையில்லை. அவர் ஒரு சமூக நீதி அரசியலின் ஆய்வாளர். தனது நேரத்தை அதற்காக அதிகம் செலவழிப்பார்.

எனக்குத் தெரிந்து; பெரியார் – டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படித்து, ஒப்பிட்டு விரிவான விளக்கங்களோடு பேசக்கூடடிய ஆற்றல் உள்ள அறிவாளி ஆ.ராசா.

அப்படி பேசக்கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இவருவர் மட்டும்தான். ஒன்று அவர். இன்னொன்று நான்.
இதை கர்வத்தோடும் பெருமையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்.

*

 நேற்று இரவு facebook ல் எழுதியது.

உன் ஜாதி மானங்கெட்ட ஜாதி.. நீ சோத்ததான் திங்கிறீயா..

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

தலித் ‘ஞானப்பழம்’