ராஜபக்சே வருகை; மோடி யை பாதுகாக்கும் வைகோ

narendra-modi-mahinda

உண்மையில் பாராட்டப் பட வேண்டியது, ராஜபக்சே அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க அலுவலகத்தின் மீது முற்றுகை போரட்டம் நடத்திய மாணவர் அமைப்பை.

அழைத்ததால் ராஜபக்சே வருகிறார். ஆக வெத்தலப் பாக்கு வைச்சி கூப்பிட்டவர்கள் தான் முதல் குற்றவாளி.

ஆக, முதன்மையாக கண்டிக்க வேண்டியதும் அம்பலப்படுத்த வேண்டியதும் பா.ஜ.க வைதான். அதுதான் அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். மீண்டும் இதுபோல் செய்யாமல் தடுக்கும்.

மற்றபடி ராஜபக்சே விற்கு மட்டும் கறுப்புக் கொடி காட்டுவேன் என்பதும் ராஜபக்சே வே கண்டித்து மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவதும் எந்த வகையிலும் அது ராஜபக்சேவை அசைத்துகூட பார்க்காது.

ஏனென்றால், வழக்கம்போல் இவர்கள் முயற்சிப்பதற்கு முன்பே, 3 ‘முக்குலேயே’ கைது செய்யப்படுவார்கள். மற்றபடி இந்தப் போராட்டம் இவர்களின் ஈழ கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படும். அவ்வளவே.

அது மட்டுமல்ல பா.ஜ.க கூட்டணியில் இருக்கிற விடுதலைப் புலி ஆதரவாளர்கள் . பா.ஜ.க வுடனான தங்கள் உறவை பகைத்துக் கொள்ளாமல், பா.ஜ.க வையும் மோடி யையும பாதுகாப்பதற்கான செயலே இவர்கள் அறிவித்து இருக்கிற அறிக்கை, ஆர்ப்பாட்டம்.

இப்படியாக பா.ஜ.க வை பாதுகாக்கிற வைகோ வையும், ராமதாசையும் இன்னும் கூட வைகோவை நியாயப்படுத்துகிற முற்போக்காளர்களையும் அம்பலப்படுத்த வேண்டும்.

*

நேற்று (24-05-2014)  facebook ல் எழுதியது.

‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..

‘செத்தாண்டா சேகரு….’ – ராஜபக்சே வருகை

2 thoughts on “ராஜபக்சே வருகை; மோடி யை பாதுகாக்கும் வைகோ

  1. mathimaran sir
    atleast vaigo made a demonstration at delhi
    what happened to karuna/stalin/veeramani/subavee

Leave a Reply

%d