சீமானின் ‘மக்கள் முன்னால்’ ;ஜல்லிக் கட்டு

mqdefault

சீமானின் ‘மக்கள் முன்னால்’ தந்தி டி.வி யில் இன்று (25-5-2014) தான் பார்த்தேன். ஜல்லிக் கட்டு தடைப் பற்றிய விவாதம். விவாதத்தின் போது அடிக்கடி கை தட்டிக் கொண்டார்கள்.

கோயில் யானைகள் துன்புறுத்தல் பற்றி சீமான் கேட்டக் கேள்விக்கு விலங்குகள் பாதுகாப்பு துறையைச்சேர்ந்தவர்களால் பதில் சொல்ல இயலவில்லை. தடுமாறினார்கள்.

ஆனாலும் சீமான் திரும்ப திரும்ப ஜல்லிக்கட்டுத் தடையோடு மாமிச உணவு சாப்பிடுவதை தொடர்பு படுத்தி ‘அதை ஏன் எதிர்க்கவில்லை?’ என்று கேட்டது, ‘அவர்கள் பேச வேண்டியதை இவர் பேசுவது’ போலவே இருந்தது.

இன்னொன்றையும் சீமான் தொடர்ந்து வலியுறித்தினார். ‘ஒட்டகத்தின் மீது சுமைகளை ஏற்றுவது துன்புறுத்தல் இல்லையா? கழுதை மீது ஓட்டுப் பெட்டியை ஏற்றிச் சென்றார்கள், அது துன்புறுத்தல் இல்லையா? ஏன் இதையெல்லாம் எதிர்க்கவில்லை?’ என்று.

இதற்கும் கூட அவர்கள் பதில் சொல்லாமல் சட்ட எண்களையே துணைக்கழைத்துத் திணறினார்கள்.

ஜல்லிக்கட்டுத் தடை; மாடுகளை ஏரில் பூட்டி உழக்கூடாது. வண்டி மாடாக பயன்படுத்தக் கூடாது. விவசாய வேலைகளுக்கு பயன்படுத்துவதும் தவறு, என்பதாக அல்ல.

அப்படியாக இருந்தால் சீமான் எழுப்புகிற கேள்வி பொருத்தமானதாக இருந்திருக்கும்.

பேசியவர்கள் யாரும் ஜல்லிக்கட்டில் உள்ள ஜாதிய பின்னணியைப் பற்றி பேசவே இல்லை. இந்த ‘வீர’ விளையாட்டில் தாழ்த்தப்பட்டத் தமிழர்களுக்கு அனுமதி இல்லை என்பது பேசாப் பொருளாகவே முடிந்து போனது.

*

May 25   facebook ல் எழுதியது.

‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்!

ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?

மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு

தமிழ் பண்பாடு: கலாச்சாரமா? ஆச்சாராமா?

One thought on “சீமானின் ‘மக்கள் முன்னால்’ ;ஜல்லிக் கட்டு

Leave a Reply

%d bloggers like this: