பாரத மாதாவை விற்கும் பா.ஜ.க

matha

‘இந்திய பாதுகாப்புத் துறையில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க மோடி அரசு முயற்சி.
ரயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டை 100 சதவீதம் கொண்டு வரவும் திட்டம்’

இன்னும் ஒரு வாரம் கூட ஆகல.. அதுக்குள்ள பட்டைய கிளப்புறாய்ங்க..

காங்கிரஸ்காரர்கள் ராஜபக்சேவுடன் 10 ஆண்டுகளா ‘பழகி’ தமிழர்களின் கழத்தறுத்தார்கள். இவர்கள் முதல் நாளே 10 ஆண்டுகளின் சாதனையை முறிடித்து, ராஜபக்சேவை அழைத்து கொண்டாடினார்கள்.

காங்கிரஸ்காரர்கள் 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் 50 சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டை கொண்டு வந்தால்.. இவர்கள் நாலு நாட்களிலேயே 100 சதவீதம் கொண்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு சொந்த மண்ணில் இருக்கிற முஸ்லிம்களும் கிறித்துவர்களும் அந்நியர்கள்.

வெள்ளைக்கார பெரு முதலாளிகள் இந்தியர்கள். அதுவும் நாட்டை பாதுகாக்கும் அளவிற்கு…!

இவர்களின் ‘பாரத மாதா’வை பாதுகாக்கக் கூட துப்பில்லாத இவர்களுக்குப் பெயர் ‘சுதேசி’கள்.

இந்த தேசப்பற்றாளர்கள் நம்மை தேசத்துரோகி என்கிறார்கள்.

அப்படி செய்யறதுக்கு பதில் இப்படி செய்யலாமே..

சொந்த நாட்டு அரசைவிட, அந்நிய முதலீடு பாரத மாதாவை பத்திரமா பாதுகாக்கும் என்றால்…

பேசாமா பிரதமர் பதவியையும் மந்திரி சபையையும் ஒரு நல்ல அமெரிக்க கம்பபெனிக்கு குத்தகைக்கு விட்டுட்டு..
இவுங்க நிம்மதியா காசி, ராமேஸ்வரம் ன்னு புனித பயணம் போலாமே..

அமெரிக்க கம்பெனியும் அமர்களமா ஆட்சி செஞ்சிட்டு போறான்.

பாரத் மாத்தாக்கி ஜே…

பாரதமாதா – தமிழ்த் தாய்: மூணாவது தெரு முக்குல குடியிருக்காங்க..