கண்டிப்பா அவர பாராட்டிதாங்க ஆகனும்; சாதாரண விசயமா அவுரு பண்ணது?

RAM-AWARD ஏன்னா…‘வாய்ப்பில்லாதபோது தமிழ்த் தேசியம் பேசுறது. வாய்ப்பு வந்தா வாய முடிக்கிறது’ என்கிற சினிமா உலகத்துக்குள், இப்போ பிசியா இருக்கும்போது ஈழத் தமிழர்களுக்கு தீங்கிழைத்த ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக, களமாடிய இயக்குநர் ராமை எவ்வளவு வேணுனாலும் பாராட்டலாம்.

அதுவும் ‘தங்க மீன்கள்’ இந்திய அரசின் விருதை பெற்றதற்குப் பின், இப்படி துணிந்து அவர் செயல்படுவது சாதாரண விசயமல்ல. இதனால் அவர் பட வாய்ப்புகள் கூட பாதிக்கப்படலாம்.

இதை அவர் செய்யாமல் இருந்தால் இந்நேரம் அவதூறு பேர்வழிகளுக்கு அவல் சாப்பிடுவது மாதிரி, ‘இங்க ராஜபக்சே வரும்போது அவரு அங்க, ‘தரமணி. மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் பிசி யா இருந்தாரு.. இதுதான் தமிழ் உணர்வா?’ என்று எகத்தாளம் பேசியிருப்பார்கள்.

முத்துக்குமார் தியாகத்தின்போது அவர் களமாடியதும், பிறகு யார் யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை அம்பலப்படுத்தி, ‘முத்துக் குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம்’ என்று துணிச்சலோடு எழுதியவர்; இப்ப சும்மா இருப்பாரா? அதான்…

வழக்கமா இனஉணர்வு சினிமாகாரர்களுக்கு‘ம்’ பாராட்டுவிழா நடத்துற ‘விழா வேந்தர்கள்’ இவுரு படம் தேசிய விருது வாங்குனத பாராட்டி இன்னும் விழா நடத்தக் காணோம். அப்படி நடத்துனா.. கண்டிப்பா இதுக்கும் சேத்து நடத்தனும்.

அதாங்க, மோடி பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த ராஜபக்சே வை கண்டித்து ராம், ‘நடு நடு’ங்க வைக்கும் அறிக்கை அல்லது கட்டுரை வெளியிட்டதற்காகவும்.

நடத்துவாங்களா…?

ஒருவேளை அவர்கள், ‘தமிழர்களைக் கொன்ற இந்திய அரசிடம் அதுவும் 3 தமிழர்களை தூக்கிலடச் சொன்ன பிரணாப் முகர்ஜி கையினால் விருது வாங்கிய ராம்’ என்ற கோவத்தில் இருக்கிறார்களோ?

சொல்ல முடியாது.

இருந்தாலும் இருப்பார்கள், அவர்களும் அவரையே மிஞ்சுற இன உணர்வாளர்கள் தானே!

*

May 29 cebook ல் எழுதியது.

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

நொந்த மீன்கள்: ‘இந்து’ எதிர்ப்பு – துணைக்கு பெரியார்; என்ன ஒரு பெரியார் பற்று?