‘செத்தாண்டா சேகரு….’ – ராஜபக்சே வருகை

nagaram-movie-stills056
‘மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு ராஜபக்சேவிற்கு அழைப்பு’ 
வாய்யா.. வா.. என் தலைவர் வைகோ விடம் நீ வசமா மாட்டப் போற.. எப்படி இலங்கை திரும்புற பாத்துடுறோம். போன முறை மத்திய பிரதேசம் வரை உன்னை விரட்டிக் கிட்டு வந்தார் என் தலைவன். அப்ப நீ தப்பிச்சிட்டே.. இப்ப முடியாது.

ஏன்னா… மத்திய மந்திரியா மேடையிலேயே தலைவன்… இருக்கும்போது உன்ன தப்ப விடுவாரா..? தலைவனை மீறி அப்படியே நீ தப்ப முயற்சி பண்ணாலும், எங்க சின்ன அய்யா அன்புமணியின் உடும்பு பிடியிலிருந்து உன்னய கடவுளாலகூட காப்பாத்த முடியாது.

“சரியான ஆம்பளயா இருந்தா எங்க ஏரியாவுக்கு வாயா..”

21 இரவு facebook ல் எழுதியது.

இந்திய உளவுத்துறையின் செயல்பாடு உண்மையில் சரியில்லை. விடுதலைப் புலி ஆதரவாளர்களான தமிழ் நாட்டு கோபக்காரத் தலைவர்களைப் பற்றி சரியா மதிப்பீடு செய்யாமல் ஏனோ தானோ என்று அறிக்கை கொடுத்திருப்பார்கள் போலும். அதான் ராஜபக்சேவிற்கு அழைப்பு.

எங்க வி.பு. ஆதரவுத் தலைவர்களைப் பற்றி,
‘அவர்கள் அந்த அளவுக்கு ஒர்த்தில்ல.. ஏதோ எதுகை மோனைக்கு எடுப்பா இருக்குமேன்னு பேசிகிட்டு இருக்காய்ங்க..’ என்று உளவுத்துறை, மோடிக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கும் போல.. 

வம்ப வீணா விலை கொடுத்து வாங்குது மோடி அரசு. பெரிய பிரச்சினை ஆகப்போகுது.
யாருக்கு? யாருக்கோ.

*

‘ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அம்மா ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக அமைதியா இருக்கேன். இல்லன்னா… டெல்லிக்கு வர ராஜபக்சேவை களமாடி கந்தல் பண்ணிடுவேன்.’

*

பதவி ஏற்பை வந்து பார்க்குமாறு, இந்திய ராஜபக்சே இலங்கை மோடி யை அழைத்திருக்கிறார் இதில் என்ன ஆச்சர்யம்?

*

இன்று காலை facebook ல் எழுதியது.

‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..

பெரியார் கருத்துகள் வேகமா பரவ..

16-1379323550-vaiko3-600

அப்பாடா… ஒருவழியா தேர்தல் முடிஞ்சி முடிவும் வந்துடுச்சி. வைகோவும் Free ஆயிட்டாரு. மோடி ய பிரதமர் ஆக்குற அவரு லட்சியத்தையும் நிறைவேத்திட்டாரு.

இனிமே அவர் கரம் கோத்து… இன்னும் தீவிரமா விடுதலைப் புலி ஆதரவு, ஈழ ஆதரவு போராட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டியதுதான்.

நெடுமாறன், சீமான் போன்றவர்களையும் விட்றகூடாது.. அவுங்கெல்லாம் எவ்வளவு பெரிய தியாகிகள்.. அப்படியே ‘டச்’ ல இருந்திகிட்டே இருக்கனும்.

அப்பதான் பெரியார் கருத்துகள் இந்த மண்ணில் வேகமா பரவும்…

*

 17-5-2014  facebook ல் எழுதியது.

வைகோ வின்.. தொகுதி

‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!

காத்திருக்கிறார் கலைஞர்; கையில் மலர் வளையங்களோடு…

kalதேர்தல் தோல்விக்குப் பிறகு, கலைஞரின் மரணம் குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. அதில் விவாதிப்பவர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கிறது.
அது இப்போதைக்கு நடக்காது.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நம்பியாரின் மகனாக வரும் கல்யாணகுமார் தேவிகாவை காதலிப்பார். எதிர்ப்பின் காரணமாக இருவரும் இறந்து விடுவார்கள். பிறகு அவர்கள் மறு ஜென்மம் எடுத்து வந்து மீண்டும் காதலிப்பார்கள்.

ஆனால், போன ஜென்மத்தில் கல்யாணகுமாரின் தந்தையாக இருந்த நம்பியார், இருவரின் இரண்டாவது பிறப்பிலும் அவர்களின் வருகையை எதிர்நோக்கி உயிரோடு காத்திருப்பார்.

அதுபோல் கலைஞர், கையில் மலர் வளையங்களுடன் அதே வீல் சேரில் தன் அன்பான எதிரிகளுக்காக காத்திருக்கிறார்.
இதுவரை கலைஞருக்கு மலர் வளையம் வைப்பதாக சொன்ன பலருக்கு அவர்தான் மலர் வளையம் வைத்திருக்கிறார்.

அன்பான தமிழருவி மணியனுக்கெல்லாம் கண்ணீர் மல்க மலர் வளையம் வைக்காமல் கலைஞர் பயணம் முடியாது.

தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?

ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..

வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு …

திமுக வாக்குகள்..

2006032507370401

‘திமுக விற்கு மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை?’ என்பதை பற்றி ஆய்வது இருக்கட்டும்.

திமுக விற்கு திமுக காரங்களே பல தொகுதிகளில் வாக்களிக்கவில்லையே; அதுக்கு யார் காரணம், என்ன காரணம் என்பதை முதலில் கண்டறிந்து
அப்படியே கமுக்கமா ‘வைச்சிகாதீங்க..’

*

நேற்று (17-5-2014)  facebook ல் எழுதியது.

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த..

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

காங்கிரசை முற்றிலுமாக ஒழிக்க எளிய வழி

congress_260720131_thumb

நேற்று காலை தஞ்சையிலிருந்து தோழர் நா.இரவிச் சந்திரன் தேர்தல் முடிவுகள் பற்றி பேசினார். அவர் பெரியார் பற்றாளர். ஆசிரியர்.

மோடி வெற்றி பெற்றதை குறித்து தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். தருமபுரி, கன்னியாகுமரி குறித்தும் அவர் வருத்தம் இருந்தது. திமுக முற்றிலும் தோற்றுப்போனதற்காகவும் வருத்தப்பட்டார்.
இருந்தாலும் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது அவருக்கு ஒர் ஆறுதல்.

“ஆனா.. தஞ்சையில் காங்கிரஸை விட கம்யுனிஸ்டுகள் குறைவான ஓட்டு வாங்கியுள்ளனர். இத்தனைக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் தஞ்சையில் தான் இருக்கிறது. அதை விட முக்கியம் காங்கிரசுக்கு எதிராக, கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக நெடுமாறன் பிரச்சாரம் செய்தார். அப்படியிருந்தும் கம்யுனிஸ்ட், காங்கிரசிடம் பின் தங்கி விட்டது” என்றார்.

நான் சொன்னேன்: இதுல இருந்து என்ன தெரியது.. இன்னும் காங்கிரசை முற்றிலுமாக ஒழிக்கணும் என்றால் அதற்கு ஒரே வழி, எப்பபாடு பட்டாவது நெடுமாறனை காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வைக்க வேண்டும், என்றேன்.

நேற்று (18-5-2014)  facebook ல் எழுதியது.

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…

சத்தியஜித்ரே vs மிருணாள் சென்

satyajit-ray-vs-mrinal-sen

சத்தியஜித்ரே வாழ்ந்த காலத்தில் இந்தியா அரசியலையே தலைகீழாக புரட்டிய நக்சல்பாரி அமைப்பு அவர் சொந்த மண்ணில்தான் தோன்றியது.

மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் தோன்றியதால்தான் ‘நக்சலைட்’ என்ற பெயரும் ஏற்பட்டது.
அது குறித்து சின்னதாக ஒரு சினிமா அல்ல, டாக்குமெண்டரி கூட எடுக்காத அவர் எப்படி ஒரு யதார்த்தமான படைப்பாளி?

தன் சொந்த மண்ணில் எழுந்த அரசியலை ஆதரவாகவோ எதிராகவோ பதிவு செய்யாத, ‘ரே’ எப்படி இந்தியாவை அடையாளப்படுத்தியவர் ஆவார்?

ஆனால், அதே மண்ணில் பிறந்த மிருணாள் சென் என்கிற மக்கள் கலைஞன், நக்சல்பாரி அமைப்பு பற்றி ‘கல்கத்தா 71’ என்ற உலகின் சிறந்த படத்தை எடுத்தார்.

அதனால்தான் மிருணாள் சென் மறக்கடிக்கப்படுகிறார். அதை செய்யாத காரணத்திற்காக தான் சத்யஜித்ரே இந்திய அரசால் கொண்டாடப்படுகிறார். அமெரிக்கர்களால் ‘ஆஸ்கர்’ விருது கொடுத்தும் கவுரவிக்கப்பட்டார்.

*

 நேற்று இரவு facebook ல் எழுதியது.

சினிமா மொழியின் இலக்கணம் Battleship potemkin

‘பேராண்மை’ அசலும் நகலும்

World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் அமெரிக்க மூடத்தனமும்

ஓரே உலக நாயகன்

ஆ. ராசா வெற்றிபெற வேண்டும்..

a_raja_dmk_1349433472_1349433505_460x460

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மரியாதைக்குரிய ஆ. ராசா வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறேன்.

‘அவர் மட்டும் தோல்வியுற வேண்டும்’ என்று கிரிமினல்கள் உட்பட பலரும் தீவிரமாக வேலை செய்தார்கள். விரும்புகிறார்கள்.
‘காங்கிரஸ், பி.ஜே.பி அதிமுக உட்பட எல்லோரும் ஓர் அணி; ஆ. ராசா தனி’ என்பதாகவே இந்த தேர்தல் இருந்தது.

பார்ப்பனர்களும் பார்ப்பன மனோபாவம் கொண்டவர்களும் பார்ப்பனர்களிடம் நற்பெயர் வாங்கி; வாங்கி.. வாங்கி.. வாழ்க்கை நடத்துபவர்களும்
மோடி வெற்றி பெற வெண்டும் என்று பேசிய நடுநிலையாளர்களும்; ராசா தோற்க வேண்டும் என்று ஆவேசம் கொண்டார்கள்.

ஆ.ராசா விற்கு எதிரான இந்த ஆவேசமும் வெறுப்பும் ஊழலுக்கு எதிரான மனோபாவம் அல்ல; அதையும் தாண்டி காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்டது.

ஜெயேந்திரன் விடுதலைக் குறித்து கருத்து சொல்லாதவர்களும், மத்தவன் காறி துப்பப் போறான் என்பதற்காக பெயரளவில் ஒப்புக்கு ஜெயேந்திரனுக்கு வலிக்காத அளவுக்கு கண்டித்தவர்களும் ‘பார்ப்பனியம்’ என்றுகூட சொல்ல முடியாத பார்ப்பன எதிர்ப்புப் போராளிகளும்
ஆ.ராசா தோல்வியடைய வேண்டும் என்று வெட்கமில்லாமல் வெகுண்டெழுகிறார்கள்.

ஸ்பெக்டரம் ஊழல் குற்றச்சாட்டு குறித்து தன் மீது வீசப்பட்ட கேள்விகளுக்கு பலமுறை விரிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த விளக்கம் குறித்து குறுக்குக் கேள்வி கேட்க அறிவற்றவர்கள், மீண்டும் ஊழலுக்கு எதிரான போராளிகளாக வேசம் போடுகிறார்கள்.

ஆ.ராசா விற்கு எதிராக நேரடியாகவும் உள்குத்துகளுடனும் அவர் தோற்க வேண்டும் என்று நடந்த சதியை முறியடித்து, அவர் வெற்றி பெறுவர் என்று நம்புகிறேன். தோல்வியுற்றாலும் பிரச்சினையில்லை. அவர் ஒரு சமூக நீதி அரசியலின் ஆய்வாளர். தனது நேரத்தை அதற்காக அதிகம் செலவழிப்பார்.

எனக்குத் தெரிந்து; பெரியார் – டாக்டர் அம்பேத்கரை ஆழமாக படித்து, ஒப்பிட்டு விரிவான விளக்கங்களோடு பேசக்கூடடிய ஆற்றல் உள்ள அறிவாளி ஆ.ராசா.

அப்படி பேசக்கூடியவர்கள் எனக்குத் தெரிந்து இவருவர் மட்டும்தான். ஒன்று அவர். இன்னொன்று நான்.
இதை கர்வத்தோடும் பெருமையோடும் தெரிவித்துக்கொள்கிறேன்.

*

 நேற்று இரவு facebook ல் எழுதியது.

உன் ஜாதி மானங்கெட்ட ஜாதி.. நீ சோத்ததான் திங்கிறீயா..

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

தலித் ‘ஞானப்பழம்’

மோடி யை சுப்பிரமணியண் சுவாமி ஆக்கும் சு. சுவாமி

04_02_2013-jayant

மோடி யிடம் இல்லாத ஒரே பொருத்தம் அவர் பார்ப்பனராக இல்லாததுதான். ஆனால், பார்ப்பனராகும் தகுதி மோடிக்கு இருக்கிறது. அவரை பார்ப்பனராக்கும் பார்ப்பன சுப்பிரமணிய சுவாமியே அதற்கு உதாரணம்.

இதற்கு முன் சு சுவாமி, தன்னை தேவர் என்று சொல்லிக் கொண்டார். ‘நீ பிராமணனே கிடையாதுடா… தேவர்..’ என்று சு சுவாமியிடம் அவர் அம்மா குறிப்பிட்டதாக பெருமையோடு தேவர் ஜாதி மேடையில் அறிவித்தார்.

சு. சுவாமிக்கு ஒரு வேண்டுகோள்; பலபேர் பார்ப்பனராவதற்கு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய அடிமைப் புத்தி பார்ப்பனியத்திற்கு சேவகம் செய்து நக்கி பிழைப்பதிலேயே அதிக நாட்டம் கொள்கிறது.

ஆக, மோடி மட்டுமல்ல பல ‘கேடி’ பேர் ‘அது முடியலையே’ என்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘பஞ்ச்’ டயலாக் பேசுகிற பலபேர் பார்ப்பனியத்தைப் பார்த்தால் பம்முவதும் பல் இளிப்பதும் அதனாலேயேதான்.
ஆக, அவர்களும் மோடி யைப் போலவே முழுத் தகுதியோடு இருக்கிறார்கள், பார்ப்பனராவதற்கு.

தயவு செய்து அந்த மாவீர்களையும் பார்ப்பனராக்கி ஜெயேந்திரனின் பல்லைப்போல் மாத்திவிட்டுரு. எங்களுக்கு வேலை மிச்சம்.

*

இத்தனை நூற்றாண்டுகளாக பார்ப்பனியத்தை வாழவைப்பது. பார்ப்பனரல்லாதவர்களே. பார்ப்பனர்களின் ஆயுதங்களும் அவர்களே.

பார்ப்பனர்களிடமிருக்கும் பார்ப்பனியத்தைவிட, பார்ப்பனரல்லாத அடிமைகளின் பார்ப்பனியம் பேராபத்து நிறைந்தது. அதற்கு ‘மோடி’ யே ஒரு இந்திய உதாரணம்.

*

பார்ப்பனியத்திற்காக சமணர்களை பவுத்தர்களை கொன்று குவித்தது நேரடியாக பார்ப்பனர்கள் அல்ல; அவர்களின் அடியாட்களான பார்ப்பனரல்லாத சேர, சோழ, பாண்டிய பச்சைத் தமிழ் மன்னர்களே.
அதனால்தான் மன்னர்களை பார்ப்பனர்களுக்கு அதிகம் பிடிக்கிறது.

இந்து மதத்தின் பெயரில் இஸ்லாமியர்களை கொன்று குவித்தது பார்ப்பனர்கள் அல்ல; அவர்களின் அடியாளான மோடி யே.
அதனால்தான் பார்ப்பனர்களுக்கு மோடி யை அதிகம் பிடிக்கிறது.

*

இன்று காலையும் மாலையும் facebook ல் எழுதியது.

‘அழுகிய முட்டையே அதிகபயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

சுப்பிரமணிய சுவாமியும் ‘நவீன’ இலக்கிய சு. சுவாமிகளும்

பா.ஜ.க. அலுவலகம் மீதான தாக்குதலும் சுப்பிரமணிய சுவாமி மீதான தாக்குதலும்

நாயும் வாழ்க்கையும் இலக்கியமும்

homer-the-odyssey-granger

Ram Chinnappayal: //ஒடிஸி காவியத்தில் 20 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியேறிச் சுற்றியலைந்து திரும்பிய ஒதிசியஸ் பிச்சைகாரனைப் போல வீடு திரும்புகிறான், அவனை அடையாளம் கண்டுகொள்வது அவனது நாய்மட்டுமே, அது தான் வாழ்க்கை. – எஸ்.ராமகிருஷ்ணன்//

வே. மதிமாறன்: //அது தான் வாழ்க்கை.// 
அது வாழ்க்கையல்ல, அது தான் நாய்.

*

November 28, 2012 facebook எழுதியது.

எஸ். ராமகிருஷ்ணன் என்பவருக்கு நன்றி

பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்

பூனக்குட்டி தம்பி புலிக்குட்டியும்…

maxresdefaultதமிழ் உணர்வோடு ஆங்கிலத்தை எதிர்க்க தெரிந்த மாவீரர்கள், சமஸ்கிருதத்தின் தமிழர், தமிழ் விரோத போக்கைப் பார்த்து வாலை சுருட்டிக் கொண்டு ஓரங்கட்டுவதை நாம் கண்கூடாக பார்த்ததே.

‘தமிழ், அரச்சனைக்கு தகுதியற்ற மொழி’ என்பதும் நாம் அறிந்ததே. அதுகுறித்து கேள்வி கேட்க, பக்தி உணர்வு கொண்ட தமிழ் உணர்வளார்களுக்கும் பலவகையான பஞ்ச் டயலாக் தமிழ்ப் பற்றாளர்களுக்கும் சூடு சொரணை கிடையாது என்பதும் நாம் நன்கு அறிந்ததே.

‘பெயர் பலகையை தமிழில் வை’ என்று போராடியவர்கள் கூட ‘தமிழில் அர்ச்சனை செய்’ என்று கெஞ்சி கேட்டுக் கொள்கிற அளவிற்குக் கூட தைரியம் இல்லாதவர்கள் தான் என்பதை அந்த வீரம் செறிந்த போராட்டங்களின் போதும் அதன் பிறகான அவர்களின் பல தியாகங்களின் போதும் கூடுதலாகவே அறிந்தோம்.

இந்த நிலையில் அரச்சனைக்கு மட்டுமல்ல, தமினுக்கு பெயராக வைத்துக் கொள்வதற்கும் கூட தமிழுக்குத் தகுதி கிடையாது என்பதையும் முதல்வர் ஜெயலலிதா பலமுறை குழைந்தைகளுக்கு சமஸ்கிருத பெயர் வைத்து நிரூபித்திருக்கிறார்.

சரி. தமிழனுக்குத்தான் தமிழ்ப் பெயர் வைக்க முடியவில்லை, வண்டலூரில் உள்ள விலங்குகளுக்காகவது தமிழ்ப் பெயர் வைப்பாரா என்று பார்த்தால் அதற்குக் கூட தமிழுக்குத் தகுதியில்லை என்பதைப்போல் தொடர்ந்து புலிகளுக்கு சமஸ்கிருத பெயர் வைத்து சாட்சியாக்கியிருக்கிறார்.

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா ஏழு புலிக் குட்டிகளுக்கு அர்ஜுனா, ஆத்ரேயா, காவேரி, சித்ரா, நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்று பெயர் சூட்டினார்.

அதுபோலவே, வண்டலூரில் புதிதாக பிறந்த புலிக்குட்டிகளுக்கு நேற்று முதல்வர்; தாரா, மீரா, பீமா, ஆதித்யா கர்ணா என்று பெயர் சூட்டியுள்ளார்.

முதல்வரின் தமிழ்ப்புறக்கணிப்பையும் சமஸ்கிருத முக்கியத்துவத்தையும் கண்டித்து, தமிழ்நாட்டில் இருக்கிற புலிக் குட்டிகள் ‘மியாவ்’ என்று கூட சத்தம் எழுப்பாமல் பதுங்குகின்றன.
‘இந்தப் பதுங்கள் பாய்வதற்காகத்தான்’

ஏற்கனவே நாம பாக்கல…
அதான் தமிழ்ப்புத்தாண்டை திருவள்ளுவர் தினத்திலிருந்து மீண்டும் சமஸ்கிருத ஆண்டுக்கு மாற்றியபோதும், சமச்சீர் கல்விக்கு மூடுவிழா நடத்த முயற்சித்த போதும்.. அப்படியே பதுங்கி இருந்துவிட்டு,
பிறகு சட்டமன்றத்தில் இலங்கை பிரச்சினைக்காக தீர்மானம் போட்டபோது, புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் பாய்ந்ததை.

சொல்ல முடியாது… இப்போது கூட, முதல்வர் புலிகளுக்கு பெயர் வைத்ததை ஆதரித்து, ‘புரட்சித் தலைவி தீவிரமான புலி ஆதரவாளர்’ என்று அறிவித்து பாராட்டுவிழா நடத்தினாலும் நடத்துவார்கள்.

அது சரி.

புலிக்குட்டிகளுக்கு எப்பவுமே இந்து பெயர்களையே வைக்கிறாரே முதல்வர்; எல்லாமே இந்துப் புலிக் குட்டிகள்தானா?
முஸ்லீம், கிறித்துவ புலிக் குட்டிகள் ஒன்றே ஒன்று கூடவா கிடையாது?

நேற்று (10-5-2014)  facebook ல் எழுதியது.

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

தலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…