உன் ஜாதி மானங்கெட்ட ஜாதி.. நீ சோத்ததான் திங்கிறீயா..

cat

‘தமிழ் காட்டுமிராண்டி மொழிதான்.. இப்ப என்னங்கற அதுக்கு?’

‘பெண்ணை கற்புக்கரசி, வேசி என்கிறது’

‘பெரியார் இயக்கத்தவர்கள் தமிழ்த் தேசியவாதிகளாகிவிட்டார்கள். பெரியார் தமிழனக்கு எதிரியாகி விட்டார்.’

‘தனித்தமிழ் பூர்ஷ்வா மொழி’

‘தமிழின் சிறப்பு என்ன?’

‘ஜாதி பெருமையோடு மீசை முறுக்கிற..உன் ஜாதி மானங்கெட்ட ஜாதி.. நீ சோத்ததான் திங்கிறியா.. இல்ல…’

நான் பேசியது.. கேட்க: http://periyar.fm/player.php?audioid=637

இந்தி திணிப்பும் நெடுமாறனின் பெரியார் எதிர்ப்பும்

‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்

‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்!

73

‘ஜல்லிக்கட்டு தடை’ முதன்மையாக வரவேற்பதற்குக் காரணம், இதில் ஜாதிய பின்னணி. பிறகு மனிதர்கள் மீது குடல் சரிந்து விழும் அளவிற்கு கொடூர தாக்குதலும் மூன்றாவதாக ஈவு இரக்கமில்லாமல் மாடுகள் துன்புறுத்தலும்.

ஆனால், பார்ப்பன அறிவாளிகள் ஜல்லிக்கட்டை எதிர்ப்பதற்குக் காரணம் ‘மாடுகள்’ துன்புறுத்தப்படுகிறது என்கிற அவர்களின் வழக்கமான ‘மனிதாபிமானம்’ மட்டுமே.

சரிதான். மாடுகள் இதில் துன்புறத்தப்படுகிறது. அதை நியாயப்படுத்த ‘பண்பாடு’ என்று காரணம் சொல்லப்படுகிறது. புளுகிராஸை விட உயர்ந்த ‘விலங்காபிமானம்’ கொண்டவர்கள் மாடுகளை ஜல்லிக்கட்டிலிருந்து பாதுகாத்தார்கள். அதனால் மனிதர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி.

இதே பண்பாட்டு ரீதியாக அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாவது இந்தியாவில் யானைகள். கோயில் யானைகள்.
துன்புறுத்தலில் முதன்மையானது, அவை அதன் இயல்புக்கு மாறாக காடுகளிலிருந்து மனிதர்கள் கூட்டமாக வசிக்கும் பகுதிக்கு கொண்டு வந்தது தனிமை படுத்தியது. பிறகு கோயிலில் கால்களில் சங்கிலியிட்டும் ‘பய’பக்தியோடும் துன்புறுத்தல் நடக்கிறது.

நெரிசல் மிகுந்த கோயில் தெருக்களில் நடக்க முடியாமல் தவிக்கும் யானை யை பக்தி என்கிற பெயரில் கும்பலமாக மனிதர்கள் சூழ்ந்து கொண்டு ஈவ்டீசிங் செய்வதைப் போன்று, யானையை ஊர்வலமாக அழைத்துச் செல்வதும், தெருக்களில் பிச்சை எடுக்க வைப்பதும், 1 ரூபாயக்கு ஆசிர்வாதம் வாங்குவதும் பேரவலம்.

வான வேடிக்கைகள் வெடிகள் என்று கோயில் விழாக்களின் போது பேரோசையால் யானைகள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை. காட்டிலிருந்து வழித் தவறி ஊருக்குள் புகுந்த யானையை வேட்டு வைத்து விரட்டுவது வாடிக்கை.காரணம், அந்த சத்தம் யானையை அச்சம் கொள்ள செய்யும் என்பதினாலேயே.

ஆனால், கோயில்களில் சங்கிலியால் கட்டப்பட்டும், மனிதர்களால் சூழப்பட்டும் அதிக சத்தத்துடன் வேட்டு வைத்து பக்தர்களின் மகிழ்ச்சிக்காகவும் புண்ணியத்திற்காகவும் யானைகள் துன்புறுத்தப்படுகிறது.

அங்குசத்தால் குத்தப்பட்டு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதால், பல நேரங்களில் ஜல்லிக்கட்டில் நடக்கும் கொலைகளைவிட கொடூரமான முறையில் யானைகளால் பாகன்கள் சின்னா பின்னமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
அதனாலும் கடுப்பான யானை பொதுமக்களை விரட்டி விரட்டி கொன்றிருக்கிறது. அவ்வளவு ஏன்?

தமிழ் நாட்டின் மகாகவி என்று சொல்லப்படுகிற பாரதியார்கூட திருவல்லிக்கேணி யானையால் தூக்கி வீசப்பட்டதால் தான் இறந்தார் என்ற செய்தியும் உண்டு.

ஆகையால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததைப்போல் கோயில் யானைகள் அல்லது அவர்கள் உச்சரிப்பிலேயே சொல்வதானால் கோ‘வி’ல் யானைகள் பக்தர்களால் சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுவதையும் தடை செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டை எதிர்த்து அதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த ப்ளுகிராஸை சேர்ந்தவர்கள் அல்லது பார்ப்பன அறிவாளிகள் இதற்கும் ஒரு முடிவை கொண்டு வரவேண்டும்.
நாமும் அவர்களுக்கு நம்மால் ஆனா எல்லா உதவிகளையும் செய்யவெண்டும்.

*

மே8, 2014  facebook ல் எழுதியது.

ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?

மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு

அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு

அன்பு காரல்..

???????????

“அன்பு காரல், தங்களுடனிருந்த அந்தப் பத்து நாட்களும் நான் கொண்டிருந்த மகிழ்ச்சி, நான் அனுபவித்த அந்த மகோன்னதமான மனிதத்துவ உணர்வு இப்போது என்னிடமில்லை”
-எங்கல்ஸ்
5-5-1818 மாமேதை காரல் மார்க்சின் பிறந்த நாள்.

இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் வல்லமைக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் ஜாதிகளுக்கு அடித்தளமாக விளங்கும் பரம்பரைத் குலத்தொழில் பிரிவினைகளை ரயில்வே அமைப்பின் விளைவாகத் தோன்றும் நவீனத் தொழில் துறை கலைந்துவிடும்.
-காரல் மார்க்ஸ், 1853 – ஜுலை 22. New york Daily Tribune இதழில்.

இந்தியர்களுக்குப் பொன்னால் செய்த அணிகளில் ஆசை அதிகம். மிகவும் ஏழைகளாயும் கட்டத் துணி இன்றியும் இருப்பவர்கள்கூட பொன்னால் செய்த காதணிகளையும் கழுத்துநகையையும் போட்டுக் கொள்வது சகஜம்.

கைகளில் மோதிரம் கால்களில் மெட்டியும் அணிவதுகூட வழக்கம். பெண்களும் குழந்தைகளும் தங்கம் அல்லது வெள்ளியில் செய்த கனமான கைவளையல்களும் காற்சிலம்புகளும் வழக்கமாக அணிந்திருந்தனர், வீடுகளில் தங்கம் மற்றும் வெள்ளியாலான தெய்வ விக்ரகங்கள் காணப்பட்டன.
-காரல் மார்க்ஸ், 1853 – ஜுலை 22. New york Daily Tribune இதழில்.

May 5

காரல் மார்க்ஸ் தமிழரில்லை அதனால் மார்க்சியம் தீர்வாகாது

திருவள்ளுவரின் சர்வதேசியமும், காரல் மார்க்சின் தமிழ்த் தேசியமும்

கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்

தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை

தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்

பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

பணமா? பாசமா?

ஆப்கனிஸ்தானில் ‘விஸ்வரூபம்’

Afghan-villagers-gather-011

ஆப்கானிஸ்தானில் ஒரு கிராமமே நேற்று புதைந்துவிட்டது. 1000 கணக்கான மக்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள். ஆப்கான் ‘தீவிரவாதத்திற்காக’ ஒட்டு மொத்த ஊரையும் குண்டு போட்டு அழித்த நம்ம அமெரிக்க தேசபற்றாளன், ‘விஸ்வரூப’ நாயகனுக்கு இப்ப சந்தோஷமா?

ஒரு சின்ன தோட்டா கூட செலவில்லாமல், முடிந்திருக்கிறது மக்களின் வாழ்க்கை. சிக்கனமான சாவு. செலவே இல்லாமல் அடக்கம்.

தன் வீட்டை அடகு வைக்காமல், ஒரு கூடாரம் கூட செட் போடாமல் ‘பிரம்மாண்ட காடசி’ அரங்கேறி அழிந்திருக்கிறது. அமெரிக்கருக்கு மகிழ்ச்சியிருக்காதா என்ன..?

அதை live வா பாக்க முடியலியே என்பதைத் தவிர வேற என்ன கவலை இருக்கப் போகிறது அமெரிக்க மனிதாபிமானிகளுக்கு?

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

காதலர் தினமும் தொழிலாளர் தினமும்

Roots(350x431)

முதலாளித்துவ கவர்ச்சி திட்டமான காதலர் தின பூக்களால் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டது தொழிலாளர் தினம்.

தொழிலாளர்களையே மே தினத்தை விட காதலர் தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அமெரிக்க தொழிலாளர்கள் பெற்றுத் தந்த 8 மணிநேர வேலை திட்டத்தை, அதே அமெரிக்காவிலிருந்தே உலகம் முழுவதும் 12 மணி நேர வேலை திட்டமாக மாற்றப்பட்டு வருகிறது.

ராப் பகலாக 12 – 14 மணி நேரம் வேலை செய்யுது, Week End கொண்டாடும் அடிமைகளே, மே தினத்திற்கு பதில் காதலர் தினத்தை கொண்டாடுகிறா்கள், பரிந்துரைக்கிறார்கள்.

தொழிலாளர்கள் வளமாக இல்லாத எந்த நாட்டிலும் காதலர்கள் நலமாக இருக்க முடியாது.

பூக்கள் நறுமணம் தரும் அழகிய உணர்வுகள் தான். ஆனால் அதை ரசிப்பதற்கு நீ மனிதனாக இருக்க வேண்டும்.
தன் மீது மலர்களை குவியல் குவியலாக குவிக்கப்பட்டாலும் பிணங்கள் நுகருமா பூக்களின் நறுமணம்??

அழுகிய பிணத்தின் நாற்றத்தை மறைபதற்கே மலர் மாலைகள் பயன்படுவதைப் போல், வர்த்தக லாபத்தை மறைப்பதற்கே மே தினத்திற்கு மாற்றாக காதலர் தினம். இன்னும் புதிய புதிய பொழுதுபோக்கும் நாட்களும் கொண்டாடப் படுகிறது.

பூக்கள் அழகானவை தான்.
உன் தாயின்.. மகளின்.. காதலியின்.. மனைவியின்.. பிணங்களின் மீது சூடப்பட்ட பூக்களை ரசிக்க முடியுமா உன்னால்.?

மலர்களின் நறுமணத்திற்குள் மறைந்திருக்கிறது விவசாயத் தொழிலாளர்களின் வியர்வை வாசம். அந்த ‘வியர்வை நீர்’ பாய்ச்சப்பட வில்லையென்றால் ‘மணம்’ மட்டுமல்ல, மலர்களே இருக்காது.

தொழிலாளர்களின் துயரங்களை புரிந்து கொண்டவர்களுக்கே பூ க்களின் நறுமணத்தை நுகர யோக்கியதை இருக்கிறது.

ஏப்ரல் 1 உனது நாளாக இருந்தால்
பிப்ரவரி 14 தான்
மே 1 நாளை விட
உனக்கு சிறப்பானதாக இருக்கும்.

மே1, 2014 எழுதியது.

ஜனவரி 1 பிப்பரவரி 14 மே 1

காதலர் தின எதிர்ப்பு; கள்ளக் காதலர் தினம் கொண்டாட வேண்டிய அளவிற்கு பண்பாடு