வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகம்!

india-child

சென்னையில் கட்டிடம் இடிந்து ஆந்திரவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலி.

இரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்காக குடும்பத்தோடு கொத்தடிமையாக உழைக்க வந்தவர்களை, குழந்தைகளோடு சேர்த்து பலி வாங்கியிருக்கிறார்கள் கொலைக்காரர்கள்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் லட்சணம் இது.

பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்து எத்தனை தொழிலாளர்களின் குடும்பங்களை முற்றிலுமாக சீரழிக்கப் போகிறார்களோ?

பல சிவில் இன்ஜியர்களை இந்த நாட்டுக்கு அர்பணித்திருக்கிற கல்வி வள்ளல் ஜேப்பியார், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன்கல்லூரியில் தான் கட்டிக் கொண்டிருந்த கட்டடம் இடிந்து விழுந்தபோது, பல வடஇந்திய தொழிலாளர்களின் கணக்கை முடித்தார்.

பலர் இறந்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தபோது 10 பேர் இறந்ததாக வழக்கு முடிந்தது. அந்த 10 பேரின் குடும்பத்திற்காகவது என்ன நீதி கிடைத்ததோ?

‘தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்ட ஜேப்பியாரை கைது செய்து கொண்டு போகிறார்கள்’ என்று கவலைப்பட்ட ஊடகங்கள் எதுவும் இன்று வரை இறந்த தொழிலாளர்கள் நிலை குறித்து துப்பறியவே இல்லை.

தமிழகம் முழுக்க சிதறிக்கிடக்கிறார்கள் சோத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இந்தியை தாய் மொழியாகக் கொண்ட தொழிலாளர்கள்.
அவர்களின் உணவுக்கு வழி செய்ய முடியாவிடிலும் உயிருக்கு உலை வைக்காமல் இருந்தாலே போதும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இப்போது வந்தாரின் வாழ்க்கையை முடிக்கும் தமிழகமாக மாறி வருகிறது.

June 29 அன்று facebook ல் எழுதியது

அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?

எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

‘இந்திக்காரனையும் உன்னையும் விரட்டுவோம்’: என்ன உன் பிரச்சினை.. உனக்குத் தேவை அல்வாவா?

 

ஜாதி ஓதுக்கீடு ஜாதியை வளர்க்கும்; பெண்களுக்கான ஒதுக்கீடு அடிமைத்தனத்தை நீக்குமா?

how-to-draw-a-hindu-god-hindu-goddess-step-7_1_000000078077_5

மைதிலி யாருடனும் எப்போதும் பொறுப்போடு தான் பேசுவாள். அந்த பொறுப்பில் அன்பும் அக்கறையும் நிரம்பி வழியும். சில நேரங்களில் அந்த அன்பின் வடிவம் கோபமாகவும் இருக்கும். அந்தக் கோபம் நன்மையே செய்யும்.

என்னால் அவளுக்கு ஆன உதவியை விட அவளால் எனக்கான உதவிகளே அதிகம்.

அவளை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். நேரில் பேசிக் கொள்ளும்போது நீ, வா, போ என்றும் 3 வது நபர்களிடம் பேசும்போது
என்னை அவள் ‘அவன்’ என்பதும் அவளை நான் இதுபோல் ‘அவள்’ என்று சொல்வதும் தோழமையின் பொருட்டே.

இப்படி தனி மனித உணர்வுகளில் மென்மையான, அன்பான, அக்கறையான மைதிலி; சமூக விசயங்களில் அப்படியே நேர் எதிர்.
அவளின் பெண்ணியக் கருத்துக்களைத் தவிர வேறு எதுவும் அவளுக்கும் எனக்கும் ஒத்துப் போனதே இல்லை. அதிலும் சில நேரங்களில் பிரச்சினை தான்.

அதுவும் இட ஒதுக்கீடு என்றால் அவளுக்குக் கொலைவெறியே வந்துவிடும். இந்த நாட்டை கெடுப்பதே அதுதான். ஜாதி யை ஒழிப்பதற்கு அது தான் தடையாக இருக்கிறது என்று கொந்தளிப்பாள். இத்தனைக்கும் அவள் ஜாதி மறுப்புத் திருமணத்தை தீவிரமாக ஆதரிப்பவள் தான்.

நானும் எவ்வளவோ விளக்கமெல்லாம் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் அவளின் முன் முடிவு, எப்போதோ முடிவான ஒன்று. குடும்ப சூழல் அவள் வளர்ந்த முறை அதற்குக் காரணம்.

இட ஒதுக்கீட்டினால் தகுதி, திறமை போய் விடும், போய் விட்டது என்று பொங்குகிற அவள் தான். இப்போதெல்லாம் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசுகிறாள்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனே அமல் படுத்த வேண்டும். ஆணாதிக்க அரசுகள் அதை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு விடுகின்றன என்று கடுமையாக பேசுகிறாள்.

இதே நியாயம் தானே ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டிற்கும் என்றோ பெண்களுக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றோலோ துவங்கி விடும் சண்டை.

சரி. உள்ஒதுக்கீடே வேண்டாம்.
பெண்களுக்கான ஒதுக்கீட்டை 100 சதவீதம் செய்ய வேண்டும். அதை கோயில்களில் இருந்து துவங்க வேண்டும். எல்லாக் கோயில்களிலும் பெண்கள் அர்ச்சகராக வேண்டும். குறைந்த பட்சம் பெண் தெய்வங்கள் உள்ள கோயில்களிலாவது, பெண்களை மட்டும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று சொன்னால்;

குருக்களாக, அர்ச்சகர்களாக இருக்கிற ஆண்களைப் போல் செம கடுப்பாகிறாள் மைதிலி.

June 26 அன்று facebook ல் எழுதியது

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

தலித்தல்லாதவர் கூட்டணியின் யோக்கியதை..

dead-stick-figure-face-png

 கவுண்டவர் ஜாதி அமைப்பான கொமு பேரவை, ஈரோடு மாவட்டம், பவானி எலவம்பாளையம் பகுதியில் இருக்கும் பொதுசுடுகாட்டில் வன்னியர் பெண் பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு. அங்கு திவிக, பாமக , ஆதித்தமிழர் பேரவை,விசி கட்சி தோழர்கள் பேச்சு வார்த்தை (தகவல் தோழர் பரிமள ராசன்)

*
தலித்தல்லாதவர் கூட்டணியின் யோக்கியதை இதுதான்.

ஒரு வன்னியர் பிணத்தை புதைப்பதற்கு அனுமதி இல்லை. வன்னியர்களின் ஒப்பற்றத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் என்ன செய்கிறார்?

தாழ்தப்பட்டவர் வன்னியப் பெண்ணை காதலித்தால்… கொதிக்கிற ஜாதி உணர்வு, இப்போ எங்கே பதுங்கி இருக்கிறது?

தாழ்த்தப்பட்டவர்களை எதிர்ப்பதற்கு மட்டும் ஒன்று சேருவது… மற்றபடி அவர்கள் ஒருபோதும் வேறு காரணங்களுக்காக ஒன்று சேரவே முடியாது என்கிற இந்து ஜாதி படிநிலை முறையை இது வலுவாக அம்பலப்படுத்துகிறது.

நாயுடு, பிள்ளை, தேவர், முதலியார், வன்னியர் இடுகாடு மற்றும் சுடு காட்டில் பறையர் பிணத்தையும் பறையர் இடுகாட்டில் சக்கிலியர் பிணத்தையும் புதைக்க அனுமதிக்கவும் அதற்காக போராடவும் செய்கிறவர்களுக்கு மட்டுமே இதைக்கேட்பதற்கு யோக்யதை இருக்கிறது.

June 20 அன்று facebook ல் எழுதியது

தமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங்

ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி..

தெனாலிராமனா-வடிவேலா?; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது

தமிழ்த் தேசிய நாடார்கள்

704a5ac4-7fc4-4708-9454-abb56df49f94_S_secvpf 918fd6b5-df98-411c-856f-4cd9cad183ca_S_secvpf

தூய இனவாதத்தோடு தமிழ்த் தேசியம் பேசுகிற நாடார் ஜாதி உணர்வாளர்கள், ‘என்ன எப்பப் பாரு.. பார்ப்பனர்களையே குறை சொல்றீங்க..?’ என்று பெரியார் தொண்டர்களிடம் கேட்கிறார்கள்.

அவர்களின் இந்தக் கேள்விக்குப் பின் இருப்பது தமிழ் உணர்வல்ல, பார்ப்பன நிறுவனங்களின் மூலமாக லாபமும் புதிய பார்ப்பன உறவும், தனி மனித லாபங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால் தான் பெரியாருக்கு துரோகம் செய்தவர்களையே சுட்டிக் காட்டி, ‘இது தான் பெரியார் இயக்கத்தின் யோக்கியதையா?’ என்று நற்பெயர் எடுக்கிறார்கள் தங்களின் பா. நிறுவனங்களிடமும் புதிய பா. உறவுகளிடமும்.

கம்யுனிஸ்ட், திராவிட இயக்கம், பெரியார், தலித் இயக்கம் என்று பலரை விமர்சித்து ஊர் நியாயம் பேசுகிற அவர்கள், தன் ஜாதி உணர்வாளர்களைக் குறித்து கள்ள மவுனம் காக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, ஈழப் பிரச்சினையில் காங்கிரசின் துரோகம் என்ற அடிப்படையில் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ப. சிதம்பரம், நாராயணசாமி; காங்கிரஸ் அல்லாதவர்களில் கலைஞர், திருமாவளவன், வைகோ இவர்களை மிகக் கடுமையாக கண்டிக்கிற அவர்கள்,
காங்கிரசில் இருக்கிற குமரி அனந்தனையும் வசந்த குமாரையும் கண்டிப்பதே இல்லை.

இத்தனைக்கும் இவர்கள் இருவரும் ‘தலைவர் ராஜிவ் காந்தியை கொன்ற 3 தமிழர்களை தூக்கிலிடு’ என்று ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தினார்கள். அப்போது கூட இவர்கள் தமிழ் உணர்வாளர்களால் கண்டிக்கப்படவேயில்லை.

கேட்டால்.. ‘இவர்களெல்லாம் ஒரு ஆளா?’ என்கிற பாணியில் பதில் சொல்லி, மீண்டும் அவர்களை பாதுகாக்கவே செய்கிறார்கள்.

அது மட்டுமல்ல, ‘கலைஞர் தமிழரல்ல ஆனால் அவர் மகள் கனிமொழி தமிழர்’ என்று சொல்லுகிற ஆய்வாளர்களும் இருக்கிறார்கள். கனிமொழியின் தாயார் நாடாராம்.

நாடார் நிறுவனங்கள் தங்கள் ஊடகங்களில் தமிழர் விரோத கருத்துக் கொண்ட பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பதை மறைமுகமாக கூட சுட்டிக்காட்ட மறுக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்காக தன்னை தியாகம் செய்த தியாகி முத்துக்குமாரையும் தமிழன் என்று பார்ப்பதைவிட ‘நாடார்’ என்று சுருக்கிப் பார்த்து அவர் எழுச்சியை கொச்சைப் படுத்துகிறார்கள்.

டாக்டர் அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார் என்று அவரை புறக்கணிக்கிற இவர்கள், இந்திய தேசியத்தை தீவிரமாக ஆதரித்த காமராஜரை மிகத் தீவிரமாக ஆதரிக்கிறார்கள்.

சுயஜாதி உணர்வும் பார்ப்பன ஆதரவும் மட்டுமே கொண்ட இவர்கள், அதையே தமிழ்த் தேசியமாக அறிவிப்பது வேடிக்கை மட்டுமல்ல வேதனையும் கூட.

இதுபோன்ற காரணங்களுக்காக தான் கிறிஸ்த்துவ நாடார்களையும் இந்து நாடார்களையும் உறவாக இணைக்கிற ‘ஜாதி’ உணர்வு பற்றி எழுதியிருந்தேன்.
(‘‘மதமெல்லாம் பாக்காம தாயா புள்ளயா பழகுறாங்க.. இது தான் உண்மையான மத நல்லிணக்கம்’ என்று விளக்கம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.)
*
“இதையும் அதையும் படித்தால் நாடார் சமூகத்தில் இருக்கிற பெரியார் தொண்டர்களும் கோபித்துக் கொள்வார்கள்..”

என்னங்க இது.. அப்புறம் எப்படிங்க அவர்கள் பெரியார் தொண்டர்கள்?

June 19  அன்று facebook ல் எழுதியது.

இயேசு நாடார்…?

‘கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்’ என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்

இயேசு நாடார்…?

Jesus கேரளாவில் நாராயணகுருவை வழிபடுகிற வசதியான ஈழவர்கள் இந்து அமைப்பில் பங்கெடுக்கிறார்கள். வழி நடத்துகிறார்கள்.

நம்ம ஊரில் வசதியான நாடார்கள் பெருமளவில் இந்து அமைப்பில் இருப்பதைபோல். இதில் சில கிறிஸ்த்துவ நாடார்களும்.

ஒரே குடும்பத்தில் கணவர் இந்து, மனைவி கிறிஸ்த்துவர்; அண்ணன் இந்து, தம்பி கிறிஸ்த்துவர் இது போன்ற முறைகளை நாடார் சமுகத்தில் அதிகம் பார்க்க முடியும்.

மதம் வேறாக இருந்தாலும் ஜாதி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் உள்ள ‘உறுதி’யே இதை தீர்மானிக்கிறது.
இந்த முறையோடே.. இந்து அமைப்பில தீவிர ஈடுபாடு வேற.

அது மட்டுமல்ல… தமிழ்த் தேசியம் பேசுகிற கிறிஸ்த்துவர்கள்; பால்தாக்ரே, மோடி போன்ற தலைவர்களை ஆதரித்துப் பேசுவதற்குக் காரணம் அவர்களிடம் தீவிரமாக இருக்கிற ‘ஜாதி உணர்வே’

தன்னைப்போலேவே கிறிஸ்த்துவராக இருந்தாலும், ஜாதி வேறாக இருந்தால் நிச்சயம் கிறிஸ்த்துவர் கிறித்துவருக்கு பெண் தருவில்லை.

இந்துவாக இருந்தாலும் தனது ஜாதியாக இருந்தால் ஒரு கிறிஸ்த்துவர் இந்துவிற்கு பெண் தர தயங்குவதில்லை என்பதைவிட; அந்த சம்மந்தத்தை அவர்களே முன்னின்று பேசி முடிக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்த்துவிற்கே தெரியாது இப்படி ஒரு கிறிஸ்த்துவ முறை இருப்பது.

‘நாங்க யாரு..?’ இயேசுவுக்கே தண்ணி காட்டுவோம்.

June 18  அன்று facebook ல் எழுதியது.

மணிரத்தினத்தின் ‘கடல்’; கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

இந்து மதத்திற்கு ஞானஸ்நானம் செய்து கொண்ட கிறித்துவம்

‘கிறிஸ்த்துவர்கள் மீதான தாக்குதல்’ என்ற பெயரில் தலித் மக்கள் தாக்கப்படுகிறார்கள்

கேரளத்தவர்கள் தமிழர்களைப் புரட்சிக்காரர்களாக்கி விட்டார்கள்

Innocent

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியிலிருந்து புகழ் பெற்ற நடிகர் Innocent தேர்தெடுக்கப்பட்டார்.

இதுவொன்றும் புதிய செய்தியல்ல. ஆனால், அப்படி தேர்தெடுக்கப்பட்ட நடிகர் Innocent சமீபத்தில் ஒரு செய்தியை பதிவு செய்தார் என்று தோழர் தமிழ் டெனி, (அபசகுனம் பதிப்பகம்) தெரிவித்தார்.

‘டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கேரளாவில் இன்னும் வெளியாகவில்லை. அதை வெளியிட வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இத்தனைக்கும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கராக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த திரைப்படத்தையே அவர்கள் இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்.

நமக்காவது, ‘படம் வியாபாரம் ஆகவில்லை’ என்கிற பொய் காரணமாவது சொல்லிக் கொண்டோம்.

ஆனால், மம்முட்டி படம் என்றால் மலையாளத் திரைப்பட உலகில் வியாபாரத்தில் முதலிடம், அதுவும் 15 ஆண்டுகளுக்கு முன் இன்னும் அதிகம். அப்படியிருந்தும்..?

அடப்பாவிகளா, நாங்கதான் மோசமானவர்கள் என்று நினைத்தால், நம்ம ஆளுங்களையே புரட்சிக்காரர்கள் ஆக்கி விட்டார்கள் மலையாளிகள்.

*

June 17  அன்று facebook ல் எழுதியது.

தங்கர் பச்சான் சாரின் தலித் பாசம்!

தங்கர் பச்சான் சாரின் தலித் பாசம்!

Thangar-Bachan

பேராசிரியர் திருவாசகம், (Thiru Vasagam) நேற்று மதியம் தொலைபேசியிலும் கேட்டார். பிறகு கேள்வியாகவும் எழுதினார்:

இயக்குனர் தங்கர் பச்சான் 15.6.2014 தி இந்து நாளிதழில் பாபாசாஹேப் அம்பேத்கர் திரைப்படத்தை தமிழில் வெளிக் கொண்டுவர அவர் கடுமையாக முயற்சி செய்ததாகவும் அவரே களத்தில் இறங்கி போராடியதாகவும் பிறகு அம்முயற்சி தோற்று போனதாகவும் ஒரு அரிய ரகசியத்தை சொல்லியிருக்கிறார். அப்படியா தோழர்?’ என்று.

தோழர் திருவாசம் சொன்னதற்குப் பிறகு தான் அந்தப் பேட்டியை படித்தேன்.

புதிய தகவலாகவும் தங்கர் பச்சானுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகவும் இருக்கிறது; அதாவது அவர் பாபாசாஹேப் அம்பேத்கர் திரைப்படத்தை வெளி கொண்டுவர முயற்சி செய்தது, அவரைத் தவிர அல்லது அவருக்குப் பிறகு இந்த உலகத்தில் அவருக்கு மட்டும் தான் தெரியும் போல.
அதுகூட இப்போது ‘இந்து’ பேட்டியாளர் அவரிடம் கேட்டப் பிறகுதான் அவருக்கே தெரிந்திருக்கிறது.

சரி. பிரமுகர் அதுவும் திரைத்துறை பிரமுகர், இவ்வளவு தீவிரமா முயற்சி செய்து தோல்வியடைந்த பிறகு, எங்களைப் போன்ற சாமான்யர்கள் முயற்சியில் அந்தப் படம் வெளிவந்தது எப்படி?

அடுத்து, அந்தப் படத்தின் மீது இவ்வளவு அக்கறை கொண்ட அவர், படம் வெளியான பிறகு அதற்கு அவர் செய்த உதவி அல்லது விளம்பரம் அல்லது இப்போது சொல்வது போன்ற கருத்துக்களைக் கூட அப்போது ஏன் சொல்லவில்லை?

இப்படி ஒரு பதிலை அவர் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

ஒரு தீவிரமான அம்பேத்கரிஸ்டைப் போல் தலித் தலைவர்களை மிக கடுமையாக விமர்சித்து பேசுகிற அவரிடம்,
பேட்டியாளர் ஆர்.சி. ஜெயந்தன் :
இந்த இடத்தில் திரைப்படக் கலைஞன் என்ற முறையில் உங்களிடம் ஒரு கேள்வி. அம்பேத்கர் திரைப்படத்தை தமிழ் மக்களிடம் கொண்டுசேர்க்கத் தவறிவிட்டீர்களே?

எனறு குற்றச்சாட்டாகவே அந்தக் கேள்வியை கேட்கிறார். ஏன் ஜெயந்தன் அப்படி முடிவாகவே அவரிடமே கேட்கிறார் என்றால், அவருக்கு நன்றாக தெரியும்; தங்கர் பச்சான் டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக எதுவும் செய்யவில்லை என்று.
ஆர்.சி. ஜெயந்தன் பத்திரிகையாளர் மட்டுமல்ல அவர் முன்னணி இயக்குநர்களிடம் திரைத்துறையில் பணியாற்றியவரும் கூட.

அது மட்டுமல்ல, நானும் எனது நண்பர்களும் டாக்டர் அம்பேத்கர் திரைப்படத்தை வெளிகொண்டுவர முயற்சித்ததையும் அவர் அறிவார். எங்கள் பணியை குறிப்பிட்டு ஜெயந்தன் ‘ஆஸ்கர் ரவியின் சகோதரர் அம்பேத்கர் படத்தை முடக்கினாரா?’ என்ற தலைப்பில் கட்டுரையும் எழுதியிருக்கிறார்.

ஜெயந்தனின் குற்றச்சாட்டில் இருந்து தப்பிபதற்கு ஒரே வழியாக இப்படி பச்சையான ‘உண்மையை’ சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான்.

சரி அதெல்லாம் இருக்கட்டும்.
அம்பேத்கர் தத்துவங்களுக்காகவே தன் வாழ்க்கையை ஒப்படைத்ததைப்போல் தலித் தலைவர்களை மிக கடுமையாக விமர்சிக்கிற இவர், அம்பேத்கரின் கருத்துக்களுக்காக தன் திரைப்படங்களில் என்ன செய்தார் என்று நான் கேட்கப் போவதில்லை;

ஏனென்றால் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஒரு வன்னிய அய்யப்பசாமியாக மாறி எப்படி பிரச்சினையை தீர்த்துக் கொண்டார் என்பது நாம் அறிந்ததே.

ஆனால், இந்த அம்பேத்கரிஸ்டிடும் நான் கேட்க விரும்புவது,
தர்மபுரி விவகாரத்தில் மருத்துவர் அய்யா ராமதாசும் பாமகவும் தலித் மக்களுக்கு செய்த அந்த ‘பெரும்’ பணிகுறித்து என்ன சொல்கிறார்? அல்லது என்ன சொல்லியிருக்கிறார்?

*
June 16  அன்று facebook ல் எழுதியது.

சினிமாவிற்கு பாட்டுத் தேவையில்லை; தங்கர் பச்சான் சரியாதான் சொன்னாரு

தங்கர்பச்சான், பாரதிராஜாவின் இன உணர்வு அல்லது தமிழ் சினிமா இயக்குநர்களின் பெர்பாமன்ஸ்!

அம்மாவின் கைப்பேசி: ஆனந்த விகடன்-குமுதத்தின் அவதூறு

‘தங்கமீன்கள் சினிமா பற்றி எழுத வேண்டும்’; எதுக்கு எழுதணும்?

பெரியாரை விட சிறந்தவர் சுஜாதா

2
//மனுஷ்யபுத்திரனை மறுத்துவிட்டு தான் உங்களை வாசிக்கனுமா தோழர்?// – Ansari Thameemull.

என்னை வாசிப்பதை விடுங்கள்…

திராவிட இயக்க உணர்வு பொங்குகிற மனுஷ்யபுத்திரன், தனது உயிர்மை பதிப்பகத்தின் சார்பாக எழுத்தாளர்களுக்கு தருகிற விருதின் பெயர் ‘பெரியார் விருதா?’ இல்லை, அவர் அதிகம் கொண்டாடுகிற ‘கலைஞர் விருதா?’

இவர்கள் பெயரில் விருது இல்லை என்பது கூட பிரச்சினையில்லை. ஆனால், பெரியாரை விரோதியாக, திராவிட இயக்கத்தை கேவலமாகப் பார்த்த இந்து, பார்ப்பன ஜாதி வெறியர் சுஜாதா பெயரில் தான் அந்த விருது.

சரி, திராவிட இயக்க உணர்வை விடுங்கள். இலக்கியத்தில் தகுதி குறித்து அதிகம் பேசுகிற மனுஷ்யபுத்திரன்,

தனக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தகுதியற்ற எழுத்தாளர் சுஜாதா பெயரில் விருது வழங்குவதுதான் இலக்கியத்திற்கான தகுதியா?

இஸ்லாமியர்களை துரோகிகளாக சித்திரித்து கமல் எடுத்த உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் படங்களுக்கு அவர் தெரிவித்த ஆதரவு;

இந்துக் கண்ணோட்டம் கொண்ட சுந்தர ராமசாமி, கமல் போன்ற பார்ப்பன அறிவாளிகளுக்கு ஒரு இஸ்லாமிய துருப்புச் சீட்டாக தன்னை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து, அதன் மூலம் அவர் அடைந்த இலக்கிய அந்தஸ்து;

அண்ணாதுரை, கலைஞர் போன்ற திராவிட இயக்க எழுத்தாளர்கள் குறித்து ‘நவீன’ எழுத்தாளர்கள் குறிப்பாக ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் மிக, மிக, மிக இழிவாக (எத்தனை மிக, மிக வேண்டுமானலும் போட்டுக் கொள்ளலாம்.) பேசும்போது அவர் காத்த கள்ள மவுனம்;

இது குறித்தெல்லாம் தவிர்த்து விட்டு நீங்கள் அவரை வாசிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

*
June 6  அன்று facebook ல் எழுதியது.

எழுத்தாளனுக்கு மரியாதை: ஜெயமோகர்-மனுஷ்யபுத்திரர் கோபம்

சாரு நிவேதிதா:இலக்கிய உலகின் பவர்ஸ்டார் சீனிவாசன்; ஜெயமோகன்? திமுகவால் நேர்ந்த..