தமிழ்த் தேசியவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரம்

26182
‘ஆந்திரா வைப் போல், தமிழகத்தை இரண்டாக பிரி. வட மாவட்டதைச் சேர்ந்தவர்கள், சென்னை மண்ணின் மைந்தர்கள் தமிழக அரசியலில் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
தென் மாவட்டத்தைச் சேர்ந்வர்கள்தான் தமிழக அரசியலில், வர்த்தகத்தில், சென்னயைிலும் செல்வாக்கோடு இருக்கிறார்கள்.’

என்று எவனாவது ஒரு கூமுட்டை சொன்னான் என்றால் இங்குள்ள தென் மாவாட்டத் தமிழ்த் தேசியவாதிகள் எப்படி எல்லாம் எகிறி குதிப்பார்கள்.

ஆனால், தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர் ராவ், ‘தெலுங்கான அரசு அலுவலகங்களில் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். சீமாந்திராவை (ஆந்திரா) சேர்ந்தவர்கள் உடனே வெளியேறி விடவேண்டும். இல்லாவிட்டால் நாங்களே கட்டாயப்படுத்தி வெளியேற்றுவோம்” என்று பேசியிருப்பதை கொண்டாடுகிறார்கள்.

அந்நிய நிறுவனங்களைக் கூட எதிர்க்க வேண்டாம். அந்த அளவுக்கு அவுரு ஒர்த்தில்ல…
தெலுங்கானவிலும் வட்டிக் கடை வைச்சி கொள்ளையடிக்கிறான் மார்வாடி, அவனுக்கு எதிரா.. அவ்வளவு ஏன்?

தெலுங்கை தாய் மொழியாக கொள்ளாதவர்கள்; அரசு அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள், எங்கள் மாநிலத்தில் செல்வாக்கோடு இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். அடுத்ததாக சீமாந்திராவை (தெலுங்கு தாய்மொழி) சேர்ந்தவர்கள் ’ என்ற அடிப்படையில் கூட இனவாதம் பேச முடியாத, சந்திரசேகர் ராவ்,

‘வட்டார வழக்கு எதிர்ப்பு’ என்பதாக மட்டும் இன்னும் தெலுங்கு பேசுகிற மக்களுக்கு எதிராக தெலுங்கு பேசுகிறவர்களையே கொம்பு சீவி விட்டு தன் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ளும் அற்ப முயற்சியில் ஈடுபடுவதை ஆதரிக்கிறார்கள்.

இது தமிழனுக்குள் பிளவு உண்டு பண்ணுகிற, தமிழனுக்கு எதிராக தமிழனை கொம்பு சீவி விடும் அரசியல் என்று கூட புரியாமல்..

என்னய்யா உங்க தமிழ்த் தேசியம்? பால்தாக்ரே, மோடி. சந்திரசேகர் ராவ்.. இவுங்கதான் உங்க முன்னோடியா?
அரசியல் அறிவையே வளத்துக்க மாட்டிங்களா?

இதுல பெரியார்-அம்பேத்கர்-மார்க்ஸ் என்று பேசுகிறவர்களை தமிழனத் துரோகிகள் என்று வீர வசனம் வேற…
யாரு நாங்களா?
இல்ல.. சந்திரசேகர் ராவ் அறிக்கையை ஆதரிக்கிற நீங்களா?

*

June 3  facebook ல் எழுதியது.

தமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங்

பாரதிராஜாவின் இனவாதத்திற்கு கேரள அரசின் பரிசு

தெனாலிராமனா-வடிவேலா?; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது

Leave a Reply

%d bloggers like this: